நேற்று நடைபெற்ற யுத்த வெற்றிக்கான நிகழவில் இலங்கை இராணுவத்தின் மனித் உரிமை மீறல்களையும், யுத்தக் குற்றங்களையும், இனப்படுகொலையையும் மகிந்த ராஜபக்ச நிராகரித்தார். தனது சொந்த நாட்டின் மக்கள் ஆயிரமாயிரமாகக் கொல்லப்பட்டது குறித்து ஒரு வார்த்தை கூடக் குறிப்பிடாத மகிந்த, இராணுவத்தை யாடும் குறைகூற முடியாது என்றும் அரசாங்கம் யாரையும் காட்டிக்கொடுக்காது என்றும் குறிப்பிட்டார்.
இதே வேளை, மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கென 5 பேர் கொண்ட நீதியரசர்கள் குழுவொன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் பிரியந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
////அரசாங்கம் யாரையும் காட்டிக்கொடுக்காது என்றும் குறிப்பிட்டார்///அப்போ என்ன அர்த்தம்?ஏதோ குற்றம் நடந்திருக்கிறது.அதாவது கொலையாளிக்கு ஆதரவாகவும் ஒருவர் வாதாட சட்டத்தில் இடமுண்டு,அதன்படி நாம் வாதாடுகிறோம்,வாதாடுவோம் என்று சொல்கிறார்!
அய்யே மகிந்த இதைதான் வாயை கொடுத்து ============== புண்ணாக்குவது