இராணுவத்தில் சேர்க்கப்பட்டு சுகவீனம் உற்று கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 15 தமிழ் பெண்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் அவர்கள் எவரும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படவில்லை என்று கூறியுள்ளார்.
அந்தப் பெண்கள் உள்மன முரண்பாடு என்னும் உள நோய்க்கு ஆளாகியிருப்பதாகவும், போருக்கு பின்னரான நிலையில் வன்னியில் பல இடங்களில் இப்படியாக பாதிக்கப்பட்டவர்களை தான் பார்த்திருப்பதாகவும் வவுனியா மருத்துவமனையின் உளநல மருத்துவரான டாக்டர் . சிவசுப்ரமணியம் சிவதாஸ் கூறுகிறார்.
இராணுவத்தினரால் அந்தப் பெண்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதற்கான எந்தவிதமான ஆதாரங்களையும் தான் அவர்களிடம் காணவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
உண்மையில் தாம் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற வகையில் அடிக்கடி ஊடகங்களில் வரும் செய்திகள் தம்மை மிகவும் மோசமாகப் பாதித்திருப்பதாகவும், உண்மையில் அப்படியான நிகழ்வுகள் எதுவும் தமக்கு ஏற்படவில்லை என்றும் அந்தப் பெண்கள் தன்னிடம் கூறியதாகவும் அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
தான் தமிழ் தேசியத்தை ஆதரிப்பவன் என்ற வகையில் இராணுவம் இவ்வளவு அவசரமாக பெண்களை பணிக்கு சேர்த்ததில் தனக்கு உடன்பாடு இல்லை என்கின்ற போதிலும், ஒரு மருத்துவன் என்ற வகையில் இந்தப் பெண்கள் எந்த வகையிலும் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படவில்லை என்பதை உலகுக்கு சொல்ல வேண்டிய கடமை தனக்கு உண்டு என்றும் டாக்டர் சிவதாஸ் தெரிவித்துள்ளார்.
இராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்ட பெண்கள் மட்டும் இவ்வகையான நோய்க்கு உள்ளாகியிருப்பதன் காரணமும், அவர்களை ஏனையோர் பார்வையிட அனுமதி க்வழங்கப்படாமை குறித்தும் இவர்கள் தகவல் வெளியிடவில்லை.
புலிகள் அன்று செய்ததனைத் தான் ராணுவம் (மகிந்தா ; ககோத்தப்பாய ) செய்கின்றது. புலிகள் கட்டாய ஆட்சோ;த்ததும் அவா;களின் குடும்பங்கள் அழுது புரண்ட போது பிள்ளைகளை பார்க்க விடாது துரத்தியதும் ஞாபகம் வருகின்றது. அந்த கடடாய ஆட்சோ;ப்பிலும் இதே போன்று மனஉளைச்சல்கள் இருந்திருக்கும் தானே.
அதிகாரத்தில் இருப்பவா;களை தட்டிக் கேட்க துடியாதது அப்பாவிகளின் நிலை…
இந்த வைத்தியர் சொல்வதை எப்படி நம்புவது? . சுயாதீன சர்வதேச ஊடகங்களும் அங்கு செல்ல முடியவில்லை. இப்படியான செய்திகளைத்தான் பி.பி.சீ தேடிக் கண்டுபிடித்துத் தரும். கோத்தபாயாவின் உள்மனமுரண்பாட்டிற்கு வைத்தியம் செய்யலாமே..அவர் வெலிக்கந்தை வதை முகாமில் பல்கலைக் கழக மாணவர்களுக்கு கவுன்சிலிங் செய்கிறார்.
இந்த வைத்தியர் சொல்வதை நம்புவது, நம்பாதது என்பதற்கு அப்பால் அந்த வைத்தியர் இன்றைய தமிழ் சமூகத்தை மிகவும் ஆழமாக உணர்ந்துள்ளார் என்பது வெளிப்பட்டு நிற்கிறது. தமிழ் குடும்பம் ஒன்றில், மேலைநாட்டுப் பெண் மருமகளாக வரும்போது அப்பெண்ணிடம் கற்புக்கும் மேலாக நடத்தையை எதிர்பார்த்து மனநிறைவுகொள்ள முயல்கிறார்கள். ஆனால் அதே தமிழ்க் குடும்பத்தில் தமிழ்ப் பெண்ணொருவர் மருமகளாக வரும் நிலை ஏற்படும்போது அந்தப் பெண்ணிடம் அதீத கற்பை எதிர்பார்கிறார்கள். கற்பை தமிழ் பெண்ணின் நடத்தைக்கும் மேலாக அவளது சதையில் எதிர்பார்கிறார்கள். வைத்தியரின் அறிக்கைக்கை மட்டுமல்ல, இதுபோன்ற செய்திகளை, இன்றைய நிலமையில் வாதமின்றி ஏற்றுக்கொள்ளுதல் நல்லது.
////உண்மையில் தாம் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற வகையில் அடிக்கடி ஊடகங்களில் வரும் செய்திகள் தம்மை மிகவும் மோசமாகப் பாதித்திருப்பதாகவும், உண்மையில் அப்படியான நிகழ்வுகள் எதுவும் தமக்கு ஏற்படவில்லை என்றும் அந்தப் பெண்கள் தன்னிடம் கூறியதாகவும் அவர் பிபிசியிடம் தெரிவித்தார்./////
காளி பிடித்து ஆடுவது போல் ஆடுகின்றார்கள் என அந்த பைத்தியர் தெரிவித்துவிட்டு , பின்னன்ர் மேலே உள்ளவாறு தெளிவாக பேசுகின்றார்கள் என தெரிவித்து உள்ளார் ,
இவருக்கு தான் இராணுவ அச்சுறுத்தலால் பைத்தியம்
மறைப்பதற்கு எதுவும் இல்லை என்றால் அந்த பெண்கள் பெற்றோரைக் கூட பார்க்க முடியாமல் ஏன் மறைத்து வைக்கப்பட்டுள்ளார்கள்
We must take each one on a case by case basis. We should not run into generalisations and level accusations. . Look like the Army is trying something new.