29.12.2008.
இராணுவத்திலிருந்து இந்த வருடத்தின் முதல் 11 மாதங்களில் 11 ஆயிரம் பேர் தப்பியோடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
இலங்கையின் மொத்தப் படை பலம் தொடர்பான உண்மையான தகவல்கள் சில காரணங்களினால் வெளியில் தெரிவிக்கப்படாத போதும் அதன் பலம் 300,000 எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதில் ஊர்காவல் படையினரும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
படையினரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்த வருடத்தில் 38 ஆயிரம் பேரை படைகளில் சேர்த்துள்ளதாகப் படைத்தரப்பு தெரிவித்துள்ள போதும் இந்த வருடத்தில் ஜனவரி மாதத்திலிருந்து நவம்பர் மாதம் வரையிலான 11 மாத காலப்பகுதியில் 11 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படைகளிலிருந்து தப்பியோடியுள்ளனர்.
அரசு மேற்கொண்டு வரும் பெரும் எடுப்பிலான பிரசாரங்களைத் தொடர்ந்தே அதிகளவான இளைஞர்கள் படைகளில் இணைந்து வருகின்றனர். படையினரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது அவர்களின் ஆயுதத் தேவைகளையும் அதிகரித்துள்ளது. இதற்கு அதிக நிதி தேவை.
2009 ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு நிதி (177.1 பில்லியன் ரூபா) தற்போதைய ஆண்டை விட 11 பில்லியன் ரூபா அதிகம். முன்னைய அனுபவங்களிலிருந்து பாதுகாப்புச் செலவுகள் தொடர்ந்து அதிகரித்து செல்வதே வழமையானதொன்று என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.