இராணுவத்தினர் ஒரு போதும் சரணைடய வந்வத மக்களைச் சுடவில்லை, இராணுவத்தினர் மக்களை சரணடையுமாறே கோரினார்கள், தமிழீழ விடுதலைப் புலிகளே தமது அனுமதியின்றி மரச படையினரிடம் சரணடையச் சென்ற பொதுமக்களை சுட்டுக் கொன்றனர் என யாழ்.மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஆணைக்குழு அமர்வுகளில் இவ்வாறு அவர் சாடசியமளித்துள்ளார்.
யாழ்.மாவட்ட அரச அதிபர் தனது சாட்சியத்தில், யுத்தத்தின் போது மன்னார், கிளிநொச்சி பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் அனைவரும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கே வந்து சேர்ந்தனர். அதனால் மிகவும் கஷ்டத்திற்கு மத்தியிலேயே நிர்வாகத்தை மேற்கொண்டேன் எனவும், அரசாங்கம் மாத்திரமே உதவி செய்தது, அப்போது எந்தவொரு சர்வதேச தொண்டர் நிறுவனங்களும் முல்லைத்தீவில் இயங்கவில்லை. ஆனால் ஐ.சி.ஆர்.சி மாத்திரம் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது எனவும் தெரிவித்திருக்கிறார்.
மேலும் அரசாங்கத்தினால் அனுப்பப்பட்ட பொருட்களில் 80 சதவீதம் மகக்ளைச் சென்றடைந்தன, ஏனைய 20 சதவீதம் தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது எனவும், யுத்தத்தின் போது இராணுவத்தினர் மக்களுக்கு நிறைய உதவிகளைச் செய்திருக்கிறார்கள் எனவும் யாழ்.மாவட்ட அரச அதிபர் சாடசியத்தில் தெரிவித்திருக்கிறார்.
யாழ்.மாவட்ட அரச அதிபர் கடந்த மாத இறுதியில் யாழ்ப்பாணம சென்றிருந்த பிரித்தானிய பொதுநலவாய நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவிடம் யாழ்ப்பாணத்தில் எந்தவொரு உயர் பாதுகாப்பு வலயமும் கிடையாது. கண்ணி வெடி அபாயமுள்ள பகுதிகள் தான் இருக்கின்றன எனத் தெரிவித்திருந்தமையையும் இவ்விடத்தில் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் தேவநாயகனும் தமது மாவட்டத்தில் உயர் பாதுகாப்பு வலயம் இல்லை எனத் தெரிவித்திருக்கிறார்.
இதற்கிடையில் கடந்த வாரம் ஜேர்மன் நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று யாழ்ப்பாணத்தில் இடம் பெற்று வரும் அபிவிருத்திப் பணிகள் குறித்து அறிந்து கொள்வதற்கான மூன்று நாள் விஜயம் ஒனிறினை மேற்கொண்டிருந்த வேளையில் யாழ்.மாவட்ட அரச அதிபருடன் சந்திப்பை மேற்கொள்ள வில்லை. அதே வேளை இக்குழு யாழ்.மாநகர சபைக்கு விஜயம் செய்து கலந்துரையாடலை மேற்கொண்ட போது மேயரோ அல்லது துணை மேயரோ அதில் கலந்து கொள்ளவில்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
ஜேர்மன் நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, ஜேர்மன் நாட்டில் வரி செலுத்துபவர்களின் பணமே இலங்கைக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டதாகவும், தாம் எதிர்பார்த்த அளவிற்கு பிரயோசனமான அபிவிருத்திப் பணிகள் எதுவும் குடாநாட்டில் இடம்பெற்றிருக்கவில்லை எனவும் தெரிவித்திருகக்pறார்கள்.
இமெல்டா அன்ரியின் மகள் யாழ்.பல்கலைக்கழக மருத்தவ பீட இறுதியாண்டு மாணவி!அவரின் நலனுக்காகவே பசிலின் காலைப் பிடித்து யாழுக்கு அன்ரி வந்தா!மற்றும்படி யாழ்.மக்கள் மேலுள்ள கரிசனையாலல்ல!அன்ரி முல்லைத்தீவில் அரச அதிபராக “சும்மா”இருந்தார்!அதாவது நிர்வாகம் முழுவதும் புலிகளே பார்த்துக் கொண்டார்கள்!எந்தச் சிரமமுமின்றி இருந்தார்!முதல் தர நிர்வாக சேவை அதிகாரியாய் இருந்த போதும் அவரே நினைத்துப் பார்க்க முடியாத வகையில் முல்லையில் நிர்வாகம் நடந்தது!பாவம் அன்ரி அதனால் ஏற்பட்ட காழ்ப்பை இப்போது நிவர்த்தி செய்கிறர்!இவருக்கு முன் சாட்சியமளித்த ஆயர்கள் உண்மைகளை மக்களோடு மக்களாக இருந்து பார்த்ததை சாட்சியத்தில் கூறியிருக்கிறார்கள்!சில விடயங்களை”இடித்துரைத்திருக்கிறார்கள்!அன்ரி கூட கிறிஸ்தவர் தான்!மறை கழன்று விட்டதோ தெரியவில்லை!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அதுசரி தாங்கள் தொடா;ச்சியாக வவுனியாவில் தானே நின்றீர்கள் அப்படி இருக்க ஆமி சுடவில்லை என்று எவ்வாறு கூறமுடியும்
போதியளவு பதவி தந்தால் கட்சி மாறுவதா ?
அரசியல் இதுதான்.எல்லோராலும் எந்த நேரமும் அரிச்சந்திரனாக இருக்க முடியாது.
இமெல்டா கவனமாகப் பேசியதாகவே இலங்கைப் பத்திரிகைகள் மூலம் தெரிந்தது: “சரணடைய வந்த ‘மக்களைச்’ சுடவில்லை” என்பதே அவரது கூற்று.
முக்கியமான குற்றச்சாட்டுக்கள் சரணடைய வந்த புலிப் போராளிகளையும், இயக்கத் தலைவர்களையும் கொன்றது பற்றியன.
போக, தான் கண்ட எல்லாவற்றையும் சொல்லிவிட்டு அவர் பாதுகாப்பாக இருக்க இயலும் என்று உறுதி தர வல்லோர் அவர் மீது பழி கூறுங்கள்.
புலிகள் விழ முன்பு தகவல்களைத் தெரிவித்த வைத்தியர்களில் ஒருவர், பின்பு ஆளுங் கட்சி சார்பாகத் தேர்தலில்நின்றார். ஏன்?
அவரைப் பிழை சொல்லிப் பயனென்ன?
நாம் அவர்களின் நிலையில் இருந்தால் என்ன செய்திருப்போம் என்று யோசித்து விட்டுப் பேசுவது நியாயமானது.
புலித் தலைவர்களாக உலா வந்த பிரமுகர்களுடன் அவர்களை ஒப்பிட இயலாது.
செஞ்சோற்றக் கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து …… பாவம் விட்டு விடுவோம். எம் இனமே எம்மை விற்றுண்ணும் போது. மற்றவர்களை நாம் குறைசொல்லி என்ன பயன். காலம் பதில் சொல்லட்டும் இவர்களுக்கு.
இமேல்டா மாமிக்கு திரும்பவும் பதவி கிடைக்கவேணும் எண்டால் , அவ புலிகளுக்கு எதிராக அறிக்கை விடவேணும் என்று முன்னமே பேசிக், கதைத்துத்தான் அவ திரும்பவும் பதவையைப் பெற்றவ.எனவே அவ பதவியிலநிலைத்துநிக்க வேணும் எண்டால் , இது என்ன இதைவிட ஆச்சரியாகவும் பேசுவா… அவ முன்னம் புதுக்குடியிருப்பில் புலிகளோடுநின்று கொண்டு , சர்வதேச, இந்திய, உள்ளூர் வானொலிகளுக்கு எப்படி , என்ன மாதிரி பேட்டி குடுத்தா என்பதை , பட்டம் , பதவி, பணம் , சுகத்துக்காக அவ மறக்கலாம். மானமுள்ள தமிழன் யாரும் மறக்க மாட்டான். அவ நிச்சயமாய் இந்தப் பேட்டியை தவிர்த்து இருக்கலாம். எப்படி எண் டால் , அவ இந்தப் பதவிக்கு ஆசைப்படமால் இருந்துருந்தால். ஆனால் அவ தானும் தமிழன் 🙂 எண்டதைநிருபிச்சுவட்டா
போரின் இறுதி நாட்களில் பாதுகாப்புக் கருதி வவுனியாவிற்கு நகர்ந்திருந்த இமெல்டா சுகுமார் அங்கிருந்தவாறே நிவாரணப் பணிகளை ஒழுங்குசெய்ததாகக் கூறுகிறார்.
போரின் இறுதிநாட்களில் போது 360,000 பேர் அங்கிருந்ததாகவும் போர் முடிவுக்கு வந்துபோது அங்கிருந்த இடம்பெயர்ந்த பொதுமக்களுடன் இணைந்து புலிகளின் உறுப்பினர்களும் அரச கட்டப்பாட்டுப் பகுதிகளுக்குள் வந்ததாகவும் அவர் கூறுகிறார்.
சரி இதன்போது எத்தனை பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள் என ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இமெல்டாவிடம் திரும்பத் திரும்பக் கோரியபோதும் அவர் பதிலளிப்பதற்கு மறுத்துவிட்டார்.
இடம்பெயர்ந்து வசிக்கும் பொதுமக்கள் முழுமையாக மீள்குடியேற்றப்பட்ட பின்னர்தான் போரின் இறுதி நாட்களில் கொல்லப்பட்ட பொதுமக்களில் முழுத்தொகையினைக் கணக்கிட முடியும் என எமில்டா சுகுமார் கூறினார்.
மக்களே புலிகள் என்றும், புலிகளே மக்கள் என்றும் ஒரு காலத்தில் வக்கணையாகப் பேசியிருந்தவர் இவர் என்ற போதிலும் இடமறிந்து பேசுவதிலும்,உயிரைப் பாதுகாக்கவேண்டிய தேவையிலும் அங்குள்ளோர் இருக்கிறார்கள் என்பதை விழுந்தபாட்டிற்கு குறிசுட்டுவைக்கிற பதிவர்கள் ஒப்புக்கொண்டாக வேண்டும்.
அவர் அரச பிரதிநிதி வேறென்ன சொல்வார்.
பேராசிரியர் சிற்றம்பலம், சிங்கள கொலைகாரர்களுக்கு முன்னாலே நிருபாமாவிக்கு, சொல்லவில்லையா??? இந்தியா தமிழின படுகொலைக்கு சிங்களவனுக்க் செய்த உதவியை பற்றி, இப்பேற்பட்டவரும் தமிழர்தான், இனத்தை விற்றுதின்னுவதற்க்கு சிங்கள கொலைகார இராணுவத்தின் கையை பிடித்து பல்லைகாட்டி தங்குள்ள பதவியின் அதிகாரத்தையும் மறந்துநிற்க்கும் இமெல்டா சுகுகுமாரும், தமிழிச்சியோ?? இத்தனை ஆயிரம் மக்களை கொலை செயத சிங்கள் வெறியர் கூட்டம் வன்னியில் சரணாகதி அடைந்தவர்களை சுடவில்லையோ??? கேவலம் நீயும் ஒரு தமிழிச்சியோ??? தூ.
சரி.
அரசாங்கம் நாளையோ மறுநாளோ விடுதலை செய்கிற மறத் தமிழ்ப் புலிப் பிரமுகர்கள் என்ன சொல்வார்கள் என்று பொறுத்திருந்து பார்த்து விட்டு எங்கள் தீர்ப்புக்களை வழங்குவோமே.