இலங்கையைச் சேர்ந்த டான் டிவி உரிமையாளர் குகநாதன் என்பவரை கடத்தி, சென்னை போலீசுடன் கூட்டு சேர்ந்து கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்த்தாக சபா.நாவலன் (“இனியொரு” இணைய இதழ்), சென்னையைச் சேர்ந்த பத்திரிகையாளர் அருள் செழியன் மற்றும் அவரது சகோதரர் அருள் எழிலன் ஆகியோர் மீது இரயாகரன் குற்றம் சாட்டி, தமிழரங்கம் தளத்தில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தார். அதனை மீள்பிரசுரம் செய்ததுடன், குகநாதனின் பேட்டியையும் வெளியிட்டு தமிழரங்கத்தின் குற்றச்சாட்டினை லண்டனிலிருந்து இயங்கும் தேசம் நெற் என்ற இணையத் தளம் தனக்கேயுரிய பாணியில் வழிமொழிந்திருந்தது.
இதனைத் தொடர்ந்து “இனியொரு” தளத்தில் சபா.நாவலன் தனது மறுப்பினை வெளியிட்டிருந்தார். அருள் செழியன், அருள் எழிலன் ஆகியோரும் இனியொரு தளத்தில் தமது மறுப்பை வெளியிட்டதுடன் இக்குற்றச்சாட்டுகளை அவதூறு என்றும் கூறி மறுத்திருந்தனர். இரயாகரன் இக்கட்டுரைகள் மீது குறுக்கு விசாரணை நடத்தி, தீர்ப்பு வழங்கி இன்னொரு கட்டுரையை வெளியிட்டார். பிறகு தேசம் நெற், தமிழரங்கம் தளங்களில் இவை தொடர்பான கட்டுரைகள், பின்னூட்டங்கள், விவாதங்கள் தொடர்ந்தன.
“அருள் எழிலன் வினவு தளத்தில் எழுதுகிறார். சபா.நாவலன் பங்கேற்கும் புதிய திசைகள் அமைப்புடன் இணைந்து ம.க.இ.க ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறது. எனவே வினவு தளம் மற்றும் ம.க.இ.க இது பற்றிக் கருத்து தெரிவிக்க வேண்டும்” என்று கோரும் பின்னூட்டங்களும், “இதுவரை ம.க.இ.க கருத்து தெரிவிக்காத மர்மம் என்ன” என்று கேள்வி எழுப்பி மகஇகவின் மீது சேறடிக்கின்ற பின்னூட்டங்களும் தமிழரங்கம் மற்றும் தேசம் நெற் ஆகிய இரு தளங்களிலும் பிரசுரமாகின. இலங்கை புதிய ஜனநாயக கட்சியையும் பின்னூட்டக்காரர்கள் விட்டுவைக்கவில்லை. இத்தகைய பின்னூட்டங்களைப் பிரசுரித்த இரயாகரனோ, அல்லது தேசம் நெற் ஜெயபாலனோ அவை பற்றி கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. அவர்களுடைய மவுனம் தற்செயலானதல்ல என்றே கருதுகிறோம்.
இப்பிரச்சினையில் குற்றச்சாட்டை முன்வைக்கும் இரயாகரன், குற்றம் சாட்டப்படும் நாவலன் மற்றும அருள் எழிலன் ஆகியோர் எம்முடன் தொடர்பில் உள்ளவர்கள். குற்றச்சாட்டோ அருள் எழிலனின் சகோதரர், அருள் செழியனுக்கும் குகநாதனுக்கும் இடையிலான பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரம் குறித்த குற்றச்சாட்டு. இது பற்றி இரயாகரன் ஒரு பதிவு எழுதி, தேசம் நெற் அதனை வழிமொழிந்த மறுகணமே, “ம.க.இ.க என்ற அமைப்பு அது பற்றி முடிவு சொல்லவேண்டும்” என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம் அல்லது வரம்பு மீறிய ஆணவம் என்று கருதுகிறோம்.
“நானே ராஜா நானே மந்திரி” என்ற வகையிலான அமைப்பாக ம.க.இ.க இருக்கும் பட்சத்தில் ஒரு வேளை இக்கோரிக்கையை நாங்கள் நிறைவேற்றிருக்க முடியும். துரதிருஷ்டவசமாக நாங்கள் ஜனநாயக பூர்வமாக இயங்கும் ஒரு அமைப்பாக இருக்கிறோம். மேலும், ஜனநாயக பூர்வமான பரிசீலனையோ ஆய்வோ தேவைப்படாத, அறுதி உண்மையாகவும் இரயாகரனின் “தீர்ப்பை” நாங்கள் கருதவில்லை.
இப்பிரச்சினையில் குகநாதனின் தரப்பில் நியாயம் இருப்பதாகக் கூறும் இரயாகரனும் சரி, அதனை வழிமொழிகின்ற பெரும்பான்மையான பின்னூட்டக்காரர்களும் சரி, அனைவருமே “குகநாதன் என்பவர் ஒரு பிழைப்புவாதி, அன்று புலிகள் முதல் இன்று ராஜபக்சே, டக்ளஸ் வரை யாருடனும் தனது ஆதாயத்துக்காக கூட்டு சேரக்கூடிய ஒரு நேர்மையற்ற மனிதர், பல பேரை நம்ப வைத்து ஏமாற்றிய மோசடிப்பேர்வழி” என்பதை வெவ்வேறு அளவுகளில் ஒப்புக் கொள்கிறார்கள். “நான் யாரையும் ஏமாற்றியதில்லை” என்று குகநாதனே கூட சொல்லிக்கொள்ளவில்லை. “அவ்வாறு மற்றவர்களை ஏமாற்ற வேண்டிய சூழ்நிலைக்குத தான் தள்ளப்பட்டதை”த் தான் விவரிக்கிறார்.
தங்களாலேயே மோசடிப்பேர்வழி என்று மதிப்பிடப்படும் ஒரு நபர், “சென்னையில் வைத்து தன்னைக் கடத்திப் பணம் பறித்து விட்டதாக” செழியன், நாவலன், அருள் எழிலன் ஆகியோர் மீது குற்றம் சாட்டுகிறார். அதில் உண்மை இருக்கக் கூடுமோ என்ற ஐயம்கூட இரயாகரனுக்கு ஏற்பட்டதாக தெரியவில்லை. சென்னையில் நடைபெற்றதாக கூறப்படும் இந்த சம்பவத்தில், குற்றம் சாட்டப்படுபவர்கள் ம.க.இ.க மற்றும் வினவு தளத்துடன் தொடர்பில் உள்ளவர்கள் என்பது இரயாகரனுக்கு தெரிந்ததுதான். எனினும் இச்சம்பவம் குறித்து எழுதுவதற்கு முன்னால் அவர் எங்களிடம் தொடர்பு கொள்ளவோ, விசாரிக்கவோ இல்லை. இரயாகரன் நீண்ட நாட்களாக எம்முடன் தொடர்பில் உள்ளவர் என்பதால், அவர் இவ்வாறு எங்களிடம் விசாரித்திருக்க கூடும் என்று வாசகர்கள் யாரேனும் தவறாக கருதிக்கொண்டிருந்தால் அதனைத் தெளிவு படுத்த வேண்டும் என்பதற்காகவே இதனை குறிப்பிடுகிறோம்.
எங்களைப் பொருத்தவரை, வினவு தளம் தொடங்கிய பின்னர்தான் எமக்கு சபா.நாவலன் அறிமுகம். புதிய திசைகள் குழுவினருடன் பொது முழக்கங்களின் அடிப்படையில் ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பாக நாங்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் – சமீபத்திய நிகழ்வு. அதற்கு முன் மகஇக செயலரின் பேட்டி இனியொரு தளத்தில் வெளிவந்திருக்கிறது. புதிய திசைகள் சார்பில் லண்டன் வானொலிப் பேட்டி ஒலிபரப்பானது. ஆபரேசன் கிரீன் ஹன்ட் மற்றும் நேபாளப் புரட்சியில் இந்தியத் தலையீட்டுக்கு எதிராக நாவலன் மற்றும் தோழர்கள் இலண்டனில் ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்கின்றனர்.
புதிய திசைகள் குழுவினருடன் மகஇக இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டத்தை சீர்குலைப்பதற்கு தான் முயற்சிப்பதாக நாவலன் பிரச்சாரம் செய்தார் என்று இரயாகரன் எழுதியிருக்கிறார். அத்தகைய கருத்து எதையும் நாவலன் எம்மிடம் கூறியதில்லை. இதற்கு மேல் நாவலனுடன் எமக்கு உள்ள தொடர்பு பற்றிய விளக்கங்கள் இங்கே அவசியமற்றவை என்று கருதுகிறோம்.
அருள் எழிலனைப் பொருத்தவரை எம்மைப் போன்ற புரட்சிகர அமைப்புகள் மற்றும் ஜனநாயக இயக்கங்களின் மீது மதிப்பு கொண்ட வெகு சில தமிழ்ப்பத்திரிகையாளர்களில் அவரும் ஒருவர். தமிழகத்தில் உள்ள பல இளைஞர்களைப் போலவே அவரும் புலிகள் இயக்கத்தின் மீது மதிப்பு கொண்டிருந்தவர். அது விமரிசனமற்ற வழிபாடு அல்ல. சமீப காலமாக தனது கருத்துகளை மீளாய்வு செய்து மாற்றிக் கொண்டு வருபவர். புலிகள் பற்றிய அவரது அபிப்ராயத்துக்கும் அவரது நேர்மைக்கும் முடிச்சு போடும் விமரிசனங்கள் அவதூறானவை. அவருடன் தீவிர கருத்து வேறுபாடு கொண்ட பத்திரிகையாளர்கள் கூட அவரது நேர்மையை கேள்விக்குள்ளாக்கியதில்லை. அவருடைய சகோதரரான அருள் செழியனுடன் எங்களுக்கு தொடர்பிருந்த்தில்லை.
இக்குற்றச்சாட்டை இரயாகரன் தனது இணையதளத்தில் எழுப்பி, அதனைத் தொடர்ந்து இதில் வினவு, மற்றும் ம.க.இ.க வை தொடர்பு படுத்தும் பின்னூட்டங்கள் வரத் தொடங்குவதற்கு முன்னமேயே, நாவலன், அருள் எழிலன், பிறகு அருள் செழியன் ஆகியோர் எங்களது தோழர்களைத் தொடர்பு கொண்டு நடந்த விசயங்கள் குறித்த தமது விளக்கத்தை அளித்தனர். அவர்களது விளக்கங்கள் மற்றும் தமிழரங்கம், தேசம் நெற்றில் வெளியாகியிருக்கும் கட்டுரைகள் ஆகியவற்றை பரிசீலித்ததன் அடிப்படையில், நாவலன், அருள் எழிலன் ஆகியோர் மீது கூறப்படும் குற்றச்சாட்டுளை நாங்கள் நிராகரிக்கிறோம்.
இப்பிரச்சினையில் எது உண்மை என்ற முடிவுக்கு வருவதில், ஆவணங்கள், சாட்சியங்கள், சத்தியப் பிரமாணங்கள் ஆகியவை ஒரு அளவுக்குத்தான் பயன்படுகின்றன. சத்தியம் செய்பவனின் யோக்கியதை என்ன என்பது பற்றிய நமது மதிப்பீடு, அவர்களது வாயிலிருந்து வரும் சொல்லை உரைத்துப் பார்க்கும் உரைகல்லாக இருக்கிறது. குறிப்பிட்ட நபர்களுடைய சமூக செயல்பாடு, நடைமுறை ஆகியவற்றிலிருந்தே இத்தகைய மதிப்பீட்டை நாம் வந்தடைகிறோம். குகநாதன் இந்தப் புறம். நாவலன், அருள் எழிலன் அந்தப்புறம் – இவர்களது கூற்றுகள் நடந்த நிகழ்ச்சி பற்றி இரு வேறு சித்திரங்களை வழங்கும் நிலையில் நாங்கள் எழிலனையும் நாவலனையும் நம்புகிறோம். செழியனுடன் இத்தனை காலம் எங்களுக்கு நேரடித் தொடர்பு இருந்ததில்லையெனினும், அவர் குறித்த எழிலனின் மதிப்பீட்டை நம்புகிறோம். இது எங்களது கருத்து மட்டுமே. தீர்ப்பு அல்ல.
இரயாகரனும் ஜெயபாலனும் குகநாதனை நம்புகின்றனர். “குகநாதன் தவறான நபராகவே இருந்தாலும், இந்தக் குறிப்பிட்ட பிரச்சினையில் அவர் கூறுவது உண்மையாக இருக்க முடியாதா?” என்ற கேள்வி எழலாம். அந்த சாத்தியக்கூறை நாங்கள் நிராகரிக்கவில்லை.
அதே நேரத்தில், இந்தக் குறிப்பிட்ட பிரச்சினையில் இரயாகரனுடைய கட்டுரை, அவருடைய விசாரணை முறை, விவாத முறை, தீர்ப்பு வழங்கும் முறை, குகநாதனுக்கு அவர் வக்காலத்து வாங்கும் முறை ஆகியவை பற்றியெல்லாம் எங்களுக்கு விமரிசனங்களோ கேள்விகளோ இல்லை என்று கருதிவிடவேண்டாம். இப்பிரச்சினையை பொதுத் தளத்துக்கு அவர் கொண்டு வந்துவிட்டதால், அவை குறித்து அவருடன் தனிப்பட்ட முறையில் பேசவோ, விவாதிக்கவோ நாங்கள் விரும்பவில்லை. அது சரியும் அல்ல.
குகநாதனிடம் கேட்பதற்கும், குகநாதனின் பேட்டியை வெளியிட்ட தேசம் நெற் ஜெயபாலனிடம் கேட்பதற்கும் கூட எங்களிடம் கேள்விகள் உள்ளன.
அத்தகைய கேள்விகளை நாங்கள் இணையத்தில் எழுப்புவதும் விவாதிப்பதும், கொசிப்புக்கும் அரட்டைக்கும் மட்டுமே பயன்படும். குற்றம் என்ன, குற்றவாளிகள் யார் என்பதைக் கண்டறிய அந்த வழிமுறை ஒருபோதும் பயன்படாது என்று கருதுகிறோம்.
ஆகவே, இத்தகையதொரு பிரச்சினையில் இணையத் தளத்திலேயே குறுக்கு விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்குவது, பெயர் தெரியாத நபர்களின் கட்டுரையை வெளியிட்டு, முகவரியை வெளியிட விரும்பாத பின்னூட்டக்காரர்களின் மூலம் சேறடிப்பது என்ற வழிமுறைகளை உண்மையை அறிய விரும்பும் யாரும் ஏற்க மாட்டார்கள் என்றே கருதுகிறோம்.
நாவலன், எழிலன், செழியன் ஆகியோர் மீது இரயாகரன் வைத்திருப்பது ஒரு கிரிமினல் குற்றச்சாட்டு. அதற்கு அவர் நாவலனிடம் கோரியிருப்பது சுயவிமரிசனம். “ஆள் கடத்தல், பணம் பறித்தல், மஃபியா வேலை, மாமா வேலை” என்று அவர் முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு சுயவிமரிசனம் எப்படி தீர்வாகும்? இது என்ன வகை மார்க்சிய லெனினிய நடைமுறை என்று எங்களுக்கு விளங்கவில்லை. இரயாகரன் கூறும் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவை அனைத்தும் தண்டனைக்குரிய குற்றங்கள் என்பதே எம் கருத்து.
ஏற்கெனவே குறிப்பிட்டிருப்பதைப் போல இப்பிரச்சினையில் நாவலன், எழிலன் ஆகியோர் பற்றி நாங்கள் தெரிவித்திருப்பது எங்களது கருத்து மட்டுமே. தீர்ப்பு அல்ல. முழுமையானதொரு விசாரணை இப்பிரச்சினையில் நடந்துவிட்டதாக நாங்கள் கருதவில்லை. யாரும் அவ்வாறு கருதவும் இடமில்லை.
நடந்திருக்கும் பிரச்சினையின் அடிப்படை ஒரு பணப்பரிவர்த்தனை விவகாரம். இதில் நியாயம் பேச வருபவர்கள் என்ன நடந்தது என்று இரு தரப்பினரையும் முழுமையாக கேட்கவேண்டும். தீர்ப்பு கூற வருபவர்கள் அந்த தீர்ப்பின் அமலாக்கத்துக்குப் பொறுப்பேற்க வேண்டும். குற்றம் சாட்டப்படுபவர்களும், குற்றம் சாட்டுபவர்களும் விசாரணையின் முடிவுக்கு கட்டுப்படுவதாக உறுதி அளிக்க வேண்டும்.
எமது தரப்பில் நாவலன், அருள் எழிலன், அருள் செழியன் ஆகியோரிடம் இதனைக் கூறிவிட்டோம். குற்றம் நடைபெற்றதாகக் கூறப்படும் சென்னை நகரத்தில் ஒரு பகிரங்க விசாரணைக்கு அவர்கள் சம்மதம் தெரிவித்திருக்கின்றனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் பகிரங்க விசாரணைக்குத் தயார். தங்களது குற்றச்சாட்டுகளை நிரூபிக்க வேண்டியது குற்றம் சாட்டுபவர்களின் கடமை.
இப்பிரச்சினையில் எந்த விதத்திலும் மகஇக விற்கு தொடர்பில்லை என்ற போதிலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் உண்மையிலேயே நிரபராதிகள்தானா என்று அறிந்து கொள்வதில் இரயாகரனை விடவும், ஜெயபாலனை விடவும் நாங்கள் அக்கறை உள்ளவர்களாக இருக்கிறோம். ஏனென்றால், உங்களது இணையத்தளங்களில் நாங்கள் சேறடிப்புக்கு உள்ளாகியிருக்கிறோம்.
குற்றம் சாட்டுகின்ற இரயாகரன், குகநாதன், ஜெயபாலன் ஆகியோர் சென்னைக்கு வரட்டும். அவர்களது நம்பிக்கைக்கு உரிய பொதுவான நபர்கள் மற்றும் நாவலன், செழியன், எழிலன் ஆகியோரின் நம்பிக்கைக்கு உரிய பொதுவான நபர்கள் ஆகியோரின் முன்னிலையில் ஒரு பகிரங்க விசாரணையை ஏற்பாடு செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்.
அந்த விசாரணையை நாங்கள் நடத்தவில்லை. வழக்குரைஞர்களோ, நடுநிலையாளர்களோ விசாரணையை நடத்தட்டும். கேள்விகள், பதில்கள், குறுக்கு விசாரணைகள் ஆகிய அனைத்தும் வெளிப்படையாகப் பார்வையாளர் முன்னிலையில் நடக்கட்டும். புனை பெயர்களில் பின்னூட்டம் போட்டவர்கள், மகஇக வின் மீது சேறடித்தவர்கள், தம் கையில் ஆதாரம் இருப்பதாக மார்தட்டுபவர்கள் என யாராக இருந்தாலும் நேரில் வரலாம். தமது குற்றச்சாட்டுகளை கூறலாம். முறையாக விசாரணை நடப்பதை உறுதி செய்து கொள்ள அவை அனைத்தையும் ஒளிப்பதிவும் செய்து கொள்வோம்.
குகநாதன் சட்டப்படி கைது செய்யப்பட்டாரா- கடத்தப்பட்டாரா, தற்போது “கட்டப் பஞ்சாயத்து” என்று கூறும் ஏற்பாட்டுக்கு அவர் அன்று உடன்படக் காரணம் என்ன, எவ்வளவு பணம் கொடுத்தார், யாரிடம் வாங்கிக் கொடுத்தார், இதில் நாவலனின் பாத்திரம் என்ன, குகநாதனுக்கும் செழியனுக்கும் இடையிலான வணிக உறவில் நடைபெற்ற கொடுக்கல் வாங்கல்கள் என்ன, அவற்றில் ஏமாற்றியது யார்-ஏமாந்தது யார், குகநாதன்-புலிகள், குகநாதன்-டக்ளஸ், குகநாதன்-ராஜபக்சே அரசு இவர்களுக்கிடையிலான உறவு என்ன, 2008 நவம்பரில் நாவலனை அவதூறு செய்த தேசம் நெற்றை மறுத்து, நாவலனின் நடத்தைக்கு நற்சான்றிதழ் வழங்கிய இரயாகரன் தற்போது அவரைக் “கிரிமினல்” என்றும் குகநாதனை “சூழ்நிலையின் கைதி” என்றும் மதிப்பிடுவதற்கான பின்புலம் என்ன.. என்பன போன்ற எல்லாக் கேள்விகளுக்கான விடையையும் அனைவர் முன்னிலையிலும் சம்மந்தப் பட்டவர்கள் கூறட்டும்.
இறுதியில் விசாரணைக்குப் பொறுப்பேற்கும் நடுநிலையாளர்கள் தமது முடிவைச் சொல்லட்டும். “ஆள் கடத்திப் பணம் பறித்தார்கள்” என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில், நாவலன், அருள் எழிலன், அருள் செழியன் ஆகியோர் மீது கிரிமினல் குற்ற வழக்கு பதிவு செய்ய நாங்களே முன் நின்று ஏற்பாடு செய்கிறோம். அவ்வாறு நிரூபிக்கத் தவறும் பட்சத்தில், அவதூறு பரப்பியவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பதை பாதிக்கப் பட்டவர்கள் கூறட்டும்.
விசாரணையின் முடிவில் ஒத்த கருத்து எட்டப்படாமலும் போகலாம். ஆனால் விசாரணையின் ஒளிப்பதிவைப் பார்க்கின்றவர்கள், உண்மை யாரிடம் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள இயலும். இரு தரப்பும் ஒருவர் மீது ஒருவர் புகார் கொடுத்து நீதிமன்றத்தில் பிரச்சினையை தீர்த்துக் கொள்ள விரும்பினால், அதற்குத் தேவையான வழக்குரைஞர்களையும் நாங்களே ஏற்பாடு செய்து தருகிறோம்.
தான் சென்னைக்கு வந்து போய்க் கொண்டிருப்பதாகவும், சென்னை வருவதில் தனக்கு எந்தவித சிக்கலும் இல்லை என்றும் தேசம் நெற்றில் குகநாதன் கூறியிருக்கிறார். ஒரு வேளை அவருக்கு வேறு வழக்குகளோ சிக்கல்களோ இருந்தாலும் அவற்றை சமாளிக்க வேண்டியது குற்றம் சாட்டியவரது தனிப்பட்ட பொறுப்பு. குகநாதனை அழைத்து வரவேண்டியது, அவரது குற்றச்சாட்டை அங்கீகரித்து தீர்ப்பு வழங்கிய இரயாகரனின் பொறுப்பு.
இது போகிறபோக்கில் ஒருவர் மீது மேலோட்டமாகத் தெரிவிக்கப்பட்ட விமரிசனம் அல்ல. அழுத்தம் திருத்தமாக கூறப்பட்டிருக்கும் ஒரு கிரிமினல் குற்றச்சாட்டு. எனவே, குற்றத்தை நிரூபிக்க வேண்டியது குற்றம் சாட்டுபவர்களின் பொறுப்பு. அந்தப் பொறுப்பிலிருந்து வழுவும் உரிமை அவர்களுக்கு கிடையாது.
“குற்றம் சாட்டப்படுபவன்தான் தன்னை நிரபராதி என்று நிரூபித்துக் கொள்ளவேண்டும்” என்பது இந்தியாவில் அமலில் இருந்த பொடா சட்டத்தின் அணுகுமுறை. இந்து பாசிஸ்டுகள்தான் இச்சட்டத்தின் தீவிர ஆதரவாளர்கள். எனவே இத்தகைய நீதி வழங்கும் முறையை பாசிஸ்டுகளின் அணுகுமுறை என்றும் கூறலாம். புலிப்பாசிசத்தை எதிர்ப்பதாக கூறுபவர்களின் விசாரணை முறை ஜனநாயக பூர்வமானதாக இருக்கவேண்டும்.
பிறக்கும்போதே கருச்சிதைவு செய்யப்பட்ட ஈழப்போராட்டம் புலிகள் என்றொரு பாசிச இயக்கத்தை மட்டுமல்ல, அதற்கு சற்றும் குறைவில்லாத பிற இயக்கங்களையும், ஜனநாயக முகமூடி அணிந்த பல வண்ணப் பிழைப்புவாதிகளையும், தன்னை மையப்படுத்தி அனைவர் மீதும் சேறடிக்கும் புலம்பெயர் அறிவுஜீவிகளையும் பெற்றெடுத்திருக்கிறது. “எது தனிப்பட்ட வன்மம்-எது அரசியல் விமரிசனம், எது அம்பலப்படுத்தல்-எது ஆள்காட்டி வேலை, எது புத்தாக்கம்-எது சீர்குலைவு” என்று பிரித்தறிய முடியாத அளவுக்கு சீர்கெட்டிருக்கும் இந்தச் சூழலைக் காட்டிலும் எதிரிகளுக்கு உவப்பளிக்கக் கூடியது வேறு எதுவும் இல்லை. இப்பிரச்சினை விவாதிக்கப்படும் முறையையும், இதற்கு வரும் பின்னூட்டங்களையும் பார்க்கும்போது, அம்சா தன்னுடைய பணியை இலண்டனில் திறம்பட செய்து வருகிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
நாவலன், அருள் எழிலன் மீது முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளினால் எங்கள் மீது விழுந்திருக்கும் களங்கத்தை துடைப்பதற்காகத்தான் இப்படி ஒரு விசாரணையை முன்மொழிகிறோம் என்று யாரும் தவறாக கருதிக் கொள்ளவேண்டாம். மகஇக வின் நேர்மையின் மீது எமது அரசியல் எதிரிகள் கூட கேள்வி எழுப்பியதில்லை. மக்கள் மத்தியில் நாங்கள் பெற்றிருக்கும் மதிப்பை ஐரோப்பிய தளங்களில் அனானிப் பெயர்களில் போட்டுக் கொள்ளப்படும் பின்னூட்டங்களால் எதுவும் செய்து விட முடியாது.
இந்தக் குற்றச்சாட்டு தவறு என்று நாங்கள் கருதுகிறோம். அவ்வாறு கூறிவிட்டு ஒதுங்கி நிற்பது சரியல்ல. எனவே, தலையிடுகிறோம். ஒருவேளை எங்கள் மதிப்பீடு தவறு என்று விசாரணையில் தெரிய வருமானால், எங்கள் கருத்தை மாற்றிக் கொள்வதில் எங்களுக்குத் தயக்கமில்லை. எனவேதான், தைரியமாகத் தலையிடுகிறோம். எல்லோர் மீதும் எல்லோரும் காறி உமிழ்ந்து கொள்ளும் இத்தகைய விசாரணை முறையிலிருந்து புலம்பெயர் தமிழ் மக்களின் இணைய உலகத்தை விடுவிப்பதற்கான சிறிய முயற்சியாகவும் நாங்கள் தலையிடுகிறோம். அங்கே காறி உமிழ்ந்த எச்சில் எங்கள் மீதும் பட்டுத் தெறிக்கின்ற காரணத்தினாலும் தலையிடுகிறோம்.
இதுதான் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு நாங்கள் முன்வைக்கும் வழிமுறை. குற்றச்சாட்டை முன்வைத்திருக்கும் இரயாகரன், குகநாதன், ஜெயபாலன் ஆகியோர் இந்த விசாரணையில் பங்கு பெறுவது குறித்த தங்களது பதிலை தம் இணையதளத்தின் மூலம் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இது தொடர்பாக தனிப்பட்ட முறையில் தொலைபேசியிலோ, மின் அஞ்சலிலோ தொடர்பு கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.
இணையத்தில் புழங்கும் மகஇக வின் ஆதரவாளர்கள், பதிவர்கள் யாரும் “நல்லெண்ண முயற்சி” என்று கருதிக் கொண்டு, இரயாகரன், ஜெயபாலன், நாவலன் போன்ற இப்பிரச்சினையில் தொடர்புள்ள யாருடனும் இது குறித்துத் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று அறிவுருத்துகிறோம்.
இவண்
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தமிழ்நாடு
நன்றி- vinavu.com
சபாஷ்!இது தான் வேண்டும்!நேருக்கு நேர் பேசித் தீர்க்க வேண்டிய பிரச்சினையை இணையத்தில் பேசித் தீர்க்க முடியாது!குகநாதனின் “புனிதமும்” இரயாகரனின் “புனிதமும் “நிரூபிக்கப்படவே வேண்டும் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
சென்னைக்கு அவர்கள் போகும்போது சொல்லுங்கள். நாங்களும் பார்வையாளர்களாக வருகிறோம்.
பல்லி பாம்பு எல்லாம் வருவது கச்டமாக இருந்தால் பார்சல் பண்ணி அனுப்பவும்
குகநாதனை நேர்மையாளராகச் சித்தரிக்கும் ரயாகரன் அந்த நேர்மையாளரை அழைத்துக் கொண்டு சென்னை வரட்டும். ரயா, அம்சா, தேசம் நெட் குழுவினரால் குற்றவாளிகள் என்று பிரச்சாரம் செய்யப்பட்ட நாவலன், அருள் எழிலன், அருள் செழியனும் வரட்டும் வெளிப்படையான விசாரணைக்கு. இதுதான் நல்ல திர்வு. இதற்கு அருள் சகோதரர்கள் சம்மதித்திருக்கும் நிலையில் ரயாகரன் குழுவினர் உடனடியாக சென்னை வந்து விசாரணையில் பங்கேற்பது அவருக்கு நல்லது.
தனிப்பட்ட தங்களது கட்டப்பஞ்சாயத்தை தீர்வுக்கு கொண்டுவரமுடியாத பட்சத்தில் தேவையில்லாமல் அப்பாவியான முகம் தெரியாதவர்களையும் உள்வாங்கி, ஒருபகுதி நிரபராதியாகவோ வேறு ஒருபிரிவை குற்றவாளியக்கவோ ஆக்க இணையத்தளங்களை பாவிப்பது ஆரோக்கியமானதாகவோ நாகரீகமானதாகவோ எக்காரணங்கொண்டும் ஒத்துக்கொள்ள முடியாது, தயவுசெய்து அரசியல் கலை இலக்கியம் தவிர்ந்தவற்றை தவிர்த்துவிடுங்கள் நியாயமானவர்களானால் சட்டப்படி பிரச்சினையை முடித்தபின் முடிவை செய்தியாக விரும்பினால் இணையத்தில் வெளியிடலாம், எங்கள் சனத்தின் வக்கிரம் எந்தளவுக்கு எங்குபோய்க்கொண்டிருக்கிறதென்று புரியவே முடியவில்லை,
பொழுதுபோக்கு மற்றும் வாசிப்பு அறிதல் ஆகியவற்றின்பால் இந்தத்தளத்திலிருந்து நான் வெளியேர்றும் முடிவுக்கு வ்ந்துவிட்டேன் இனியொருவின் நடத்தையைப்பொறுத்து ,
யாராவது இனியொருவைப் பயன்படுத்தி வேறெவர் மீதும் சேறடிக்க முற்பட்டிருந்த்ல் மட்டுமே இனியொரு பற்றி “நியாயவாதி” சொல்லுவது பொருந்தும்.
இனியொரு யார் மீது சேறடிப்பில் இறங்கியது? பெருமளவான சேறு, வீசியவர்கள் தம் மீது அப்பிக் கொண்டது தான்.
ரயாகரன் விடயத்தில் இனியொரு இதற்கு முன் ஒரு முறை பதில் சொல்லக் கட்டாயப் பட்டது.
அதன் பின், ஒரு கவிதைக்கு “அப்பன் குதிருக்குள் இல்லை” என்ற விதமான பின்னூட்டங்கள் வந்த போது தான் ரயாகரன் பற்றிய பேச்சு எழுந்தது. அனைத்தும் வாசகர்கள் நடுவிலிருந்து வந்த விடயங்கள்.
முழு உலகமும் தனக்கு எதிராகச் சதி செய்கிறது என்று எண்ணி எல்லார் மீதும் கல்லெறியும் தனிமனிதர்கள் பற்றி இரங்கலாமேயொழிய நம்மால் அதிகம் இயலாது.
இனியொரு பற்றி முறைப்படப் பல உண்டு. நானும் குற்றங் கூறியிருக்கிறேன். ஆனால் இனியொருவில் வக்கிரமாக என்ன உள்ளது? நியாயவாதி சொல்லிவிட்டு வெளியேறினால், அவரது அறிவூட்டல்களால் இனியொரு பயனடையலாம் அல்லவா.
xxx நன்றி உங்கள் வாதம் புரிகிறது , பல இடங்களில் உங்கள் பின்னோட்டங்கள் என்னை வெறுப்பேற்றவில்லை, நியாயமாக நாகரீகமாக நீங்கள் நழுவுவதும்கூட என்னைக்கவர்ந்திருந்தன அதனால்த்தான் இனியொருவிடம் நான் கேட்ட கேள்விக்கு , பொதுவில் வந்து பதிலளிக்கும் உங்களுக்கு பதில் எழுதுகின்றேன்,
1 நான் இனியொருவுக்கு புதியவன், நான்கு ஐந்து மாதங்களாகத்தான் இனியொருவில் அதிகமாக உலாவியதுண்டு, எனவே சம்பந்தப்பட்ட பிரச்சினையும் அதிகம் தெரியாது. இந்தியாவில் நடந்தசம்பவம் ஏதோ ஒரு இணையத்தில் படித்தறிந்திருந்தேன், 2, என்ன இருந்தாலும் தெருச்சண்டைபோல எழுத்து மூலம் மாறி மாறி தூற்றிக்கொண்டிருப்பது எனக்கு உடன்பாடில்லை, சட்டப்படி சிலவற்றிற்று முடிவு செய்யலாம் அப்படிச்செய்வதுதான் நியாயம் என்றும் நினைப்பதுண்டு. தவிர கொள்கரீதியாக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து உண்டு. உங்கள் கருத்து சில என்னால் ஏற்றுக்கொள்ள முடியாமலிருப்பதுமுண்டு அல்லது எனதுகருத்து உங்களுக்கு ஒத்துப்போகாமலிருப்பதையும் நான் கண்டிருக்கிறேன். இருந்தும் நீங்கள் விதண்டா வாதம் புரிவதில்லை என்பதில் ஒரு நியாயமான மதிப்புண்டு, இருந்தும் தனிமனித காழ்ப்பு சண்டைகள் தவிர்க்கலாமே என்பது எனது சொந்தக்கருத்து.
வித்தியாசமான அபிப்ராயங்கள் ஓரே கட்சியில் வேலை செய்யும்போது இடைஜ்சலானதே,வேறூ,வேறூ தளங்களீல் வரும் விவாதங்கள் தனிப்பட்டோரது அபிப்பிராயங்கள்.சம்பந்தமில்லாது குற்றம் சாட்டுவது திட்டமிட்ட சேறடிப்பு இதனைச் சட்டம் மான் நஸ்ட வழக்குத் தொடர அனுமதிக்கிறது.மீடியாக்காரர் எதையும் நினைத்தபடி எழுத முடியாது,சட்டங்கள் தனிமனித சுதந்திரத்தை பாதுகாக்கிறது.ஆக ரஜாகரன் தன் தவறூக்கு மன்னிப்பு கேட் க் வேண்டியவராகிறார்.
நியாயவாதி, உங்கள் பண்பான சொற்களுக்கு நன்றி.
‘தெருச் சண்டை போல’ என்று சொல்லும் போது ஏதோ இரு தரப்புக்கள் மாறி மாறி வைது கொண்டிருப்பது என்ற எண்ணம் ஏற்படுகிறதல்லவா.
இரயாகரன் பிறரைத் தூற்றுவது இது தான் முதல் முறையல்ல. அவரது நிந்தனைகள் திரும்ம்பத் திரும்பப் பல இடங்கட்குப் பெயர்க்கப் படுகின்றன. யார் செய்கிறர்கள் என்ற விசாரணைக்குள் நான் போகவில்லை.
சில வாரங்களாக ஒருவர் மீது பொய்க் கிறிமினல் குற்றச் சாட்டு முன்வைக்கப் படுகிறது. அதன் பின் சம்பந்தப் பட்டவர் உடனே பதில் சொல்லாததை வைத்து மேலும் சீண்டல்கள். அதற்குப் பின் நிதானமான ஒரு பதில் இந்த இணையத் தளத்தில்.
அதன் பின்னூட்டங்கள் நீளத் தொடர விடப்படவில்லை.
பின்பு பாதிக்கப்பட்ட ஒருவர் சம்பவத்தை விளக்கினார்.
இப்போது வலிந்து இதற்குள் இழுக்கப் பட்ட ம.க.இ.கு. தன்நிலைப்பாட்டை யார் மீதும் பழி கூறமல் முன்வைத்துள்ளது.
இதை நான் தெருச் சண்டை என்று சொல்ல மாட்டேன்.
பதில் எழுதிய மூவரும் இரயாகரனைத் தாக்கி அவரது கடந்தகாலம் பற்றியோ அவரது யோக்கியம் பற்றியோ பேசி அவரை வம்புக்கிழுத்திருந்தால் அது தெருச்சண்டையாகி இருக்கும்.
அப்படிநடந்ததாக எண்ணுகிறீர்களா?
தெருவெல்லாம் கூவித், திட்டித் திரிகிற ஒருவருக்கு நிதானமான பதில்கள் இவை. இதற்கும் மேல் பதில் தேவை இல்லை என்பதே என் எண்ணம்.
பதில் கூறும் உரிமை தவறாகப் பயன்பட்டுள்ளதா என்பதையும் இரயாகரனுடன் நிற்போரின் மொழியையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.
இது இங்கு தெருச் சண்டை போலத் தொடரப் போவதில்லை என்பது என் நம்பிக்கை.
பின்னணியை அறியாமல் பார்க்கும் எவருக்கும் தவறன மதிப்பீடு ஏர்படலாம்.
உங்கள் மனத்தில் எழுந்ததைச் சொன்னீர்கள். குறைபாடாகத் தெரிந்ததைச் சுட்டிக் காட்டினேன்.
இவ் விளக்கம் போதுமானதென நினைக்கிறேன்.
நான் இனியொருவில் உங்களை விடச் சில மாதங்களே கூடுதலாகத் தொடர்புடனுள்ளேன்.
அகதியின் கடித்த்தை வைத்துக் கொண்டு உதவி செய்வதாய் போக்குக் காட்டாமல் உதவினால் அது தமிழபிமானம்.அதை வைத்து அரசியல் செய்தால் அவமானம்.சண்டித்தனம் செய்கிறார் ஒருவர் அவரை ஏண்டா நாயே எனக் கேட்டதும் பல்லியையும்,பாம்பையும் கூட்டி வைத்துக் காமடி செய்யாமல் கேட்ட கேள்விக்கு பதிலைக் கூற வேண்டாமோ??ராஜாகரன் இன்னும் கிணற்றூக்கள் கிடக்கிற தவள மாதிரிக் கத்துறவர், தேசம் அறீந்த நீங்கள் அவற்ற வாலாக வேண்டுமா?ஜெயம்.பாலம் என்றேல்லாம் பெயரை வைத்துக் கொண்டால் ஆகுமா?சத்தியம் வேண்டும்.தர்மம் வேண்டும்.ஏதோ யோசியுங்கள் பெரியோரே?
ரயாகரன் மிகுந்த உண்மை எதையோ கூறிவிட்டார் என்று நினைக்கின்றேன். நான் கண்ட அனுபவத்தில் தமிழர்கள் பலர் யாரையேனும் து|ற்றுவார்களாயின் அவர் மிகவும் நல்லவராகவும் உண்மையானவராகவும் இருப்பார். தமிழர்கள் பலர் யாரையேனும் தலையில் வைத்துக் கொண்டாடுவார்களாயின் அவர் கடைந்தெடுத்த மகா அயோக்கியனாக இருப்பார்.
இராவணன்
நான் தொடர்ந்து இனியொரு வாசித்து வருகிறேன். ரயாகரன், தேசம்நெற் போன்ற ஏராளமான குப்பை கூளங்கள் உலா வருகின்றன. நீங்கள் ஏன் அவர்களை கண்டுகொள்ள வேண்டும்? மக்கள் அரசியல், கலை, இலக்கியம், அறிவியல் என்று நீங்கள் தொடர்ந்து செய்வதை செய்யாமல் நீங்களும் குப்பைக்குள் விழுந்து அழிந்து போகப்போகிறீங்கள்.
இனிமேலாவது இதை எல்லாம் விட்டுத்தள்ளிவிட்டு உங்களுடைய நோக்கத்தில் கவனம் செலுத்துங்கள். அவதூறு செய்கிறவர்களை நியாயமான மக்கள் கண்டுகொள்ள மாட்டார்கள்.
“அவதூறு செய்கிறவர்களை நியாயமான மக்கள் கண்டுகொள்ள மாட்டார்கள்.” — உண்மை. ஆனால் அவர்கள் திட்டமிட்டுச் செய்கிற சதிகளை வெளிப்படுத்தும் தேவை இடையிடை ஏற்படுகிறதல்லவா.
கிரிமினல் குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுப் பரப்பப் படும் போது பதில் சொல்லத் தேவை உண்டு.
ஆவணப்படுத்திய அடுக்கடுக்கான பொய்களிடம் ஆவணப் படுத்தாத உண்மை தோற்கலாம்.
அவ் வகையில் இனியொரு இதுவரை தந்த விளக்கங்கள் போதுமானவை.
ரயாகரன் ம.க.இ.கவின் சவாலை ஏற்கட்டுமே.
அது விவாதத்தை முடிக்காவிடின் அவதூறு செய்கிறவர்களை நியாயமான மக்கள் அறிந்து கொள்வார்கள்.
சொதப்பிட்டதா தோணுது. அம்சா , லண்டன் வர்றதுக்கு முன்னாடியே, புலிகளுக்கு எதிரான இணையங்கள் இருந்து வந்துச்சு.. அதை நீங்க யாரும் காணல்ல. இலங்கை பிரச்சனையில , வயிறு வளர்த்த ரொம்ப பேரில் , இந்திய அரசியல்வாதிகள் அதிகம். ஊடகவியளார்களும் அதிகம். ஊடகங்களும் அதிகம். உண்மையை எழுதாம, யார் யாரோ சொன்னதையெல்லாம் எழுதி படத்துக்கு கதை பண்ணுறது மாதிரி , காசு பார்த்தீங்க. உங்க பக்கங்களை பார்க்க ஆள் தேடிக்கிட்டீங்க. வேற எதுவும் தெரியாது. நீங்க யாரும் அங்க ( ஈழத்தில) என்ன நடக்குதென்ணே புரிஞ்சுக்கல்ல. இந்தியாவை மதிக்கிறோம். இந்திய மக்களை மதிக்கிறோம். அதுக்காக தவறான ஒரு செயலுக்காக தூபம் போட்டவர்களை மன்னிக்கவே முடியாது. பொய்களை எழுதி , எழுதி , அந்த மக்களை படு குழியில தள்ளீட்டீங்க. இதை நீங்க உணர, இன்னும் பல வருசம் ஆகும்.
உதாரணத்துக்கு இந்த கட்டுரை சற்று கண் திறக்க வைக்கலாம். அப்படி உங்க கண் திறக்குமானால்……….மேலே படிங்க. உங்க ஊர்க்காரர் எழுதியிருக்கார்: –
//கடைசி 3 மாத காலக்கட்டத்தில் ரொம்ப கஷ்டப்படுவிட்டோம். முல்லைத் தீவில் இருந்தோம். அரசு எச்சரிக்கை விட்டு சரணடையச் சொல்கிறது. இயக்கமோ எங்களை சரணடைய அனுமதிக்கவில்லை. மீறிச் சென்றால் இயக்கமே எங்களைக் கொன்றுவிடுமோ என்ற அச்சம் நிலவியது. மட்டகளப்பு, சண்டை நடக்கும் பகுதி, அதைத் தாண்டி அந்தப் பக்கத்தில் கேம்ப். நாங்கள் இங்கிருந்து கேம்புக்குச் செல்லவேண்டும். கேம்ப்பில் இருந்து சண்டை நடக்கும் பகுதிக்கு அரணாக பல தடைகளை இயக்கம் ஏற்படுத்தியிருந்தது. சிறுவர்களை பணிக்கு அமர்த்தியிருந்தது. அவர்களும் சரியாகப் பயிற்சி அளிக்கப்படாதவர்கள். இயக்கத்தின் வசம் ஆளே இல்லை என்னும் நிலையில் சிறுவர்களை பணிக்கு கட்டாயமாக அமர்த்தவேண்டியது தவிர வேறு வழியில்லாமல் போய்விட்டது. இயக்கத்தைச் சேர்ந்த பலர் போரில் ஈடுபட மனமில்லாமல் ராணுவத்திடம் சரண்டைந்துகொண்டிருந்தார்கள். நம் நண்பர் முல்லைத்தீவிலிருந்து தன் மனைவி, மூன்று குழந்தைகளிடமிருந்து இயக்கத்திடமிருந்து தப்பித்து கேம்ப் சொல்ல முடிவெடுத்தார். இடையில் சிறிய சாக்கடை போன்ற ஒன்றைக் கடக்கவேண்டியிருக்கும். அங்கே இருப்பதெல்லாம் மல மூத்திரம்தான். வேறு வழியில்லை, அதனைக் கடக்கவேண்டும். நண்பர் தன் இரு மகன்களைக் கூட்டிக்கொண்டு அதில் இறங்கிவிட்டார். அவருடன் பல தமிழர்கள் அப்படிக் கடந்தார்கள். ஆனால் பாதியில் இயக்கம் தப்பிக்க நினைத்தவர்களை வளைத்து, அழைத்துக்கொண்டு சென்றுவிட்டது. நண்பரின் மனைவியும், மூன்றாவது கைக்குழந்தையும் (ஒன்றரை வருடம்) அந்தப் பக்கம் இயக்கத்தின் பக்கத்தில். எப்படியோ தப்பிய நமது நண்பரும் அவரது இரண்டு மகன்களும் இந்தப் பக்கம். ராணுவம் தப்பி வந்தவர்களையெல்லாம் வண்டி வைத்து கேம்புக்கு அழைத்துச் சென்றது. அங்கு, தப்பி வந்தவர்களிடம், இயக்கத்தவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றெல்லாம் கேட்டிருக்கிறார்கள். தப்பி வந்தவர்களில் பலரது குடும்பம் அங்கேயே இருந்ததால், பலரும் தாங்களாகவே முன் வந்து இயக்கம் எப்படியெல்லாம் அரண் அமைத்திருக்கிறது, எந்த வழியில் சென்றால் பிடிக்கலாம் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்கள்.
அடுத்த இரண்டு நாள்களில் ராணுவம் அப்பகுதியை நோக்கி முன்னேறியது. இயக்கம் தன் பிடியில் உள்ளவர்களை இனி சமாளிக்க முடியாது என்று சொல்லி, தான் தப்பிக்க நினைத்து ஓடியிருக்கிறது. அப்போது நடந்த கடும் சண்டையில் உயிரிழந்த பொது மக்கள் பலர். நண்பரின் மனைவி தன் கைக்குழந்தையை எடுத்துக்கொண்டு, தான் தப்பிக்கவேண்டிய பகுதியில் சண்டை நடப்பதால், அதன் எதிர்வழியாகச் சென்று கேம்ப்புக்குப் போய்விடலாம் என நினைத்து, எதிர்ப்பக்கமாக ஓடியிருக்கிறார். வழியெங்கும் பொது மக்களின் பிணங்கள், தலைகள், கைகள், ரத்தம். அதற்குமேல் அந்த வழிச் செல்ல முடியாது எனக் கருதி, வேறு வழியின்றி, முதலில் நண்பர் தப்பித்த அதே வழியிலேயே சென்றிருக்கிறார். அதே முத்திர மலக் குளத்தின் வழிச் செல்லும்போது, தன் முதுகில் சுமத்திக்கொண்டு வந்த கைக்குழந்தை அந்த நீரில் விழுந்துவிட, இவருக்கும் மயக்கம் வர, என்ன நடந்தது என்றே தெரியவில்லை. யாரோ ஒரு பெண் கைக்குழந்தையைக் கைப்பற்றித் தூக்கி எதிர்ப்புறம் விட்டிருக்கிறார். அவரே இவரது தலைமுடியைப் பிடித்துக்கொண்டு இழுத்துவந்து அக்கரையில் போட்டுவிட்டுப் போயிருக்கிறார். விழித்துப் பார்த்தவருக்கு பெரிய ஆச்சரியம். எப்படியோ தப்பித்து குழந்தையுடன் கேம்ப் சென்றிருக்கிறார். நமது நண்பர் ஒரு கிறித்துவர். மரியாள்தான் தன் குழந்தையைக் காப்பாற்றியது என்றும், யேசுவே தன் மனுஷி ஜீவித்திருக்கக் காரணம் என்றும் கூறினார். இப்படி தப்பித்து வந்தவர்களுள், கேம்ப் பக்கம் ஓர் ஆணும் அவரது ஒன்றரை மாத சிசுவும் மாட்டிக்கொண்டு விட்டது. மனைவியோ இயக்கத்தின் பிடியில். பசிக்கு அழும் குழந்தைக்கு, ஒரு பெண்ணைப் பிடித்து பால் புகட்டச் சொன்னதாம் ராணுவம். அன்று சமைந்த பெண்கள் பற்றியெல்லாம் பல கதைகளைச் சொன்னார் நண்பர். – http://idlyvadai.blogspot.com/2010/09/3.html//
சந்தர்ப்பவாதம் எது தெரியுமா மாயா அவர்களே . கண்னை திறக்க வேண்டிய நேரத்தில் மூடி வைத்திருத்தல்,எதையாவது பேசி ஒன்றூம் தெரியாதது போல நடித்தல் இப்படி இருத்தலுக்கு நல்லபிள்ள என் தமிழில் பெயர் ஆங்கிலத்தில் fபேக்.நீங்கள் சில விடயங்களீல் பேசாமல் இருப்பது நல்லது.இராமருக்கு அனுமனின் வால்தான் சீதையை மீட்டுத் தந்தது ஆனால் உங்களது வால், மாயா உங்கள அசிங்கமாக்குகிறது.எதிலும் ஒரு பிரின்சிபல் வேண்டும் அதற்காக நீங்கள் பிரின்சிபலாக இருக்க வேண்டுமென்பதில்லை.நோமலாக இருந்தாலே போதும்.நன்றீ.
“பிறக்கும்போதே கருச்சிதைவு செய்யப்பட்ட ஈழப்போராட்டம் புலிகள் என்றொரு பாசிச இயக்கத்தை மட்டுமல்ல, அதற்கு சற்றும் குறைவில்லாத பிற இயக்கங்களையும், ஜனநாயக முகமூடி அணிந்த பல வண்ணப் பிழைப்புவாதிகளையும், தன்னை மையப்படுத்தி அனைவர் மீதும் சேறடிக்கும் புலம்பெயர் அறிவுஜீவிகளையும் பெற்றெடுத்திருக்கிறது. “எது தனிப்பட்ட வன்மம்-எது அரசியல் விமரிசனம், எது அம்பலப்படுத்தல்-எது ஆள்காட்டி வேலை, எது புத்தாக்கம்-எது சீர்குலைவு” என்று பிரித்தறிய முடியாத அளவுக்கு சீர்கெட்டிருக்கும் இந்தச் சூழலைக் காட்டிலும் எதிரிகளுக்கு உவப்பளிக்கக் கூடியது வேறு எதுவும் இல்லை. இப்பிரச்சினை விவாதிக்கப்படும் முறையையும், இதற்கு வரும் பின்னூட்டங்களையும் பார்க்கும்போது, அம்சா தன்னுடைய பணியை இலண்டனில் திறம்பட செய்து வருகிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.”
சரியாக மதிப்பிடபட்ட கருத்து.நாகரீகம் இல்லாத செயல்களை கண்டிக்கவே வேண்டும். இதில் மக்கள் கலை இலக்கிய கழகத்தை இழுத்து விட்டதற்கு உரியவர்கள் வருந்தியே ஆக வேண்டும் .
நியாயவாதி மற்றும் ரஞ்சனியின் கருத்துக்களுடன் எனக்கு நிறைய உடன்பாடு உள்ளது.
இராயகரன் ‘மார்க்சியத்தின்’ கேரால் தனது விருப்பு வெறுப்புக்களையும் தனிமனித தாக்குதல்களையும் மேற்கொள்ளும் போதெல்லாம் ம.க.இ.க விலிருந்து நாவலன் வரை சிறிரங்கன் ஈறாக அதனைக்கண்டு கொள்ளாமல் அனைவரும் அது குறித்து மெளனம் சாதித்தே வந்திருக்கிறார்கள்.
அதற்கு அடிப்படையான காரணம் ர யாகரனின் அவ்வாறான தாக்குதல் இவர்களுக்கும் குளிர்காய உதவி இருக்கிறது என்பது தான்.
இப்போது அது இவர்களுக்கு எதிராகத் திரும்பியவுடன் தான் வரட்டு வாதம் ப கிரங்க விசாரணை என்று குத்தி முறிகிறார்கள்.
அதேபோல் தேசம் நெற்றில் நாவலன் எழுதி வந்த காலங்களில் தேசம் நெற் தனிப்பட எவ்வளவு தாக்குதல்களை மேற்கொண்டது. அதெல்லாம் நாவலனின் கண்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனால் இப்போது தான் ஜெயபாலன் அம்சாவின் ஆள் என்று தெரிந்திருக்கிறது.
ஆனால் இந்த இடதுசாரிகளுக்கு எல்லாம் தெரியுமுன்னரே ஜெயபாலனுக்கும் இலங்கைத் தூதரகத்திற்கும் அம்சாவுக்கும் உள்ள உறவு பற்றி மற்றைய எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது.
பொ துவில் இங்கு எவர் பேசும் மக்கள் நலனும் அவரவர் சுயநலன் ஆகவே இருக்கிறது.
ஒருவகையில் அருவருப்பைத் தருகிறது.
குறைந்த பட்சம் அறிதலுக்கும் கற்றலுக்கும் ஆக இருக்க வேண்டிய இணையத் தளங்கள் குழாயடிச் சண்டையில் வந்து நிற்கின்றன.
இடதுசரரிகள் என்று சொல்ல வெட்கப்பட வேண்டிய தருணமிது.
//இராயகரன் ‘மார்க்சியத்தின்’ கேரால் தனது விருப்பு வெறுப்புக்களையும் தனிமனித தாக்குதல்களையும் மேற்கொள்ளும் போதெல்லாம் ம.க.இ.க விலிருந்து நாவலன் வரை சிறிரங்கன் ஈறாக அதனைக்கண்டு கொள்ளாமல் அனைவரும் அது குறித்து மெளனம் சாதித்தே வந்திருக்கிறார்கள். அதற்கு அடிப்படையான காரணம் ர யாகரனின் அவ்வாறான தாக்குதல் இவர்களுக்கும் குளிர்காய உதவி இருக்கிறது என்பது தான்.
இப்போது அது இவர்களுக்கு எதிராகத் திரும்பியவுடன் தான் வரட்டு வாதம் ப கிரங்க விசாரணை என்று குத்தி முறிகிறார்கள். //
18 வருடங்களுக்கு முன்பிருந்து, குறிப்பாக கடந்த ஒன்றரை வருடங்களாக ரயாகரன் என்மீதான தாக்குதல்களை ஏனையவர்களைவிட மிக அதிகமாகவே நடத்தி வந்திருக்கிறார். இதில் எதற்குமே நான் பதில் கூற விரும்பவில்லை. அது குறித்தி வினவு இணையப் பின்னூட்டம் ஒன்றில் நான் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் பொதுவாக இந்தத் தாக்குதல்களுக்கு எதிராக நான் எப்போதும் கருத்துக் கூறியிருக்கிறேன். என் மீதான தாக்குதல்களையே நான் கண்டுகொள்ளாத நிலையில் மற்றவர்களுக்கு வேறு நான் பதில் கூற வேண்டும் என்று எதிர்பார்கிறீர்களா?
இவ்வாறான தனிமனித அவர்தூறுகளுக்குப் பதில் சொன்னால் ஊடக உலகம் குழாயடிச் சண்டைக்கான களமாகத் தான் மாற்றமடையும். இனியொரு அவ்வாறு அருவருக்கத்தக்க வகையில் இதுவரை நடந்துகொண்டதில்லை. பிரச்சனைகளை அரசியல்ரீதியாக எதிர்கொள்ள வேண்டும் என்பதிலும், சமூகச் செயற்பாடுகளின் அடிப்படையிலான ஐக்கிய முன்னணி என்பதையுமே நான் வலியுறுத்தியுள்ளேன்.
நான் கடத்திக் கப்பம் கேட்டேன் என்ற கிரிமினல் குற்றச்சாட்டை ரயாகரன் முன்வைத்த போது தோழமை அமைப்புக்களிடம் என்ன செய்யலாம் என்று கேட்ட போது அவர்கள் பதில் சொல்லாமல் விட்டால் சந்தேகங்கள் வளரும் என்பதையும் இவ்வாறான தாக்குதல்கள் இலங்கை அரசின் வேலைகளுக்குத் துணைபோகும் என்பதையும் வலியுறுத்தினர். ஆக, நான் எனது முடிவை மாற்றிக்கொண்டு இதற்கு மட்டும் பதில் எழுதினேன். அதில் தவறிருப்பதாக நான் கருதவில்லை.
மற்றப்படி ம.க,இ.க தமிழகத்தில் சி.பி.எம், சி.பிஐ போன்ற அமைப்புக்களைவிட பெரியதான பாரிய அமைப்பு அவர்கள் ஒவ்வொரு அவதூறுகளையும் எதிர்கொண்டு எழுத வேண்டிய தேவை இல்லை என்றே கருதுகிறேன். அரச அடக்குமுறையிலிருந்து ஆயிரம் சமூகப்பிரச்சனைகளை அவர்கள் எதிர்கொண்டாகவேண்டும்.
சிறீ ரங்கனைப் பொறுத்தவரை அவர் தனது குறைந்தபட்ச சுயவிமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
//அதேபோல் தேசம் நெற்றில் நாவலன் எழுதி வந்த காலங்களில் தேசம் நெற் தனிப்பட எவ்வளவு தாக்குதல்களை மேற்கொண்டது. அதெல்லாம் நாவலனின் கண்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. //
தனிப்பட்ட அவதூறுகளுக்கு எதிரான பொதுவான அரசியல் தேவை என்பதே எனது கருத்தாக இருந்தது. “அவதூறுகளுக்கு அப்பால் விமர்சனக் கலாச்சாரத்தைப் படைப்போம்” என்ற கட்டுரையைத் தேசம்னெட்டில் எழுதியிருக்கிறேன். இதைவிட தேசம்னெட்டில் நான் அவதூறுகளால் தாக்கப்பட்ட அளவிற்கு வேறுயரும் தாக்கப்படவில்லை. அதுவும் தேசம்னெட் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு மாதத்திற்கு உள்ளாக நான் எழுதிய க்ட்டுரைக்கு எழுதப்பட்ட பின்னூட்டங்கள் எல்லாமே தனிப்பட்ட தாக்குதல்கள்தான். அதற்கு ரயாகரன் “தேசம்னெட்டில் நாவலன் ஏன் தாக்கப்படுகிறார்” என்று கட்டுரை எழுதியது இன்றும் ஆதராமாக உள்ளது.
அதே வேளை தேசம்னெட்டிற்கு எதிரான விமர்சனத்தை ஆரம்பத்திலேயே – குறைந்தபட்சம் எனக்கு எதிரான தாக்குதல்களை முன்னிறுத்தியாவது- முன்வைக்காமையை இணைய அனுபவக் குறைவான சுயவிமர்சனமாக ஏற்கிறேன்.
//ஆனால் இப்போது தான் ஜெயபாலன் அம்சாவின் ஆள் என்று தெரிந்திருக்கிறது.
ஆனால் இந்த இடதுசாரிகளுக்கு எல்லாம் தெரியுமுன்னரே ஜெயபாலனுக்கும் இலங்கைத் தூதரகத்திற்கும் அம்சாவுக்கும் உள்ள உறவு பற்றி மற்றைய எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது.//
நான் எப்போது ஜெயபாலன் அம்சாவின் ஆள் என்று கூறினேன்? நீங்கள் சொல்வதற்கு என்ன ஆதாரம், ஆதாரம் இல்லையெனின் நீங்கள் இன்னொரு அவதூறை ஆரம்பித்துள்ளீர்களா? தயவுசெய்து இவைகளை நிறுத்துவோம். எனக்கு பரபரப்பு மற்றும் புலனாய்வு ஊடகவியலில் நம்பிக்கை இல்லை. அரசியலை முன்வைத்து எதையும் எதிர்கொள்ளமுடியும்.
தேசம்னெட் ஆரம்பித்த வேளையில் அவர்கள் இடதுசாரி அரசிலை ஆதரிப்போம் என்றும், குறிப்பான அரசியல் நோக்கங்கள் அற்றவர்கள் என்றும் இணையத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் கோரிக்கை வைத்தபோது நான் அந்த இணையத்தில் எழுத ஆரம்பித்தேன், அதற்கு முன்னதாக தேசம் சஞ்சிகையிலும் எழுதியிருக்கிறேன்.
முதலில் தேசம்னெட் ஆசிரியர்களில் ஒருவர் பசில் ராஜபக்சவை சென்று சந்தித்த போது அதற்கு எதிரான கட்டுரையை நான் தான் எழுதினேன். பல தடவை ஜெயபாலனுடன் இவை எல்லாம் குறித்து விவாதித்துள்ளேன். தவிர, கிங்ஸ்டனில் இலங்கை அரசின் அனுசரணையோடு உதவி நிறுவனம் ஒன்றை ஆரம்பிப்பதற்கான தேசம்னெட் கூட்டம் ஒன்று நடந்த வேளையில் அவர்களுடன் ஏற்பட்ட விவாத முரண்பாட்டின் பின்னர் அவர்களுடன் தொடர்புகளைத் துண்டித்துக்கொண்டேன்.
விஸ்வன், இடது சாரிகள் என்பதால் நீங்கள் பெருமைப்பட்டுக்கொள்ளாலாம். சரி, நீங்கள் ஏன் உங்கள் சொந்தப்பெயரில் எழுதியிருக்க முடியாது?
இடதுசாரியோ , வலதுசாரியோ தனிப்பட்ட முறையில் குறி வைக்கப்படும்போது எத்தனை நாள்தான் பொறுத்திருப்பது. இனியொரு இணைய தள நிர்வாகம் மீதும் இராயாகரன் , தேசம் நெற் தாக்குதல் மேற்கொண்டது அதனால் அவர்கள் அத்தளத்தினூடே அதற்கு விளக்கமளிக்க கடமை பட்டவர்கள். இராயாகரனும் பிரபாகரனும் ஒரே மாதிரியான குணத்தை கொண்டவர்கள் அவர் பிடிக்காதவரை ஆயுதத்தால் கொல்வார் இவர் எழுத்தால் கொல்வார். தேசம் நெற் இலங்கை அரசின் கைக்கூலியென்பது ஊரறிந்த விடயம் அவர்கள் புதிய திசைகள் சரியான திசையில் பயணித்து விடுவார்களோ என்ற தமது எசமானர்களின் உணர்வை பிரதிபலிக்கிறார்கள்.
இராயாகரனும் பிரபாகரனும் ஒரே மாதிரியான குணத்தை கொண்டவர்கள் அவர் பிடிக்காதவரை ஆயுதத்தால் கொல்வார் இவர் எழுத்தால் கொல்வார்.
ரஜாகரன் ஆயுதத்தால் கொல்லாததிற்குக் காரணம் சந்தர்ப்பம் கிடைக்காதது தானா?
ரஜாகரனது ராகிங் இற்கு எதிரான போராட்டத்தின் போது (விஜிதரன் கடத்தப்பட்டதன் பின் ஏற்பட்ட போராட்டத்தின் போது அல்ல)ஒரு தடவை இவர் பேச முடியாதவாறு மாணவர்களால் தடுக்கப்பட்டார். அதன் பின் இவர் துப்பாக்கியுடன் பல்கலைக் கழக பகுதியில் திரிந்ததாக ஒரு கதை உலாவியது.
அக்காலத்தில் எந்த இயக்கமும் இவரை தேடித்திரிந்திருக்கவில்லை. இவர் ஆயுதத்துடன் திரிந்தது உண்மையா? அப்படியானால் யாருக்கு எதிராக.
பல்கலைக் கழக மாணவர்கள் ரயாகரனுக்கு எதிராகக் கிளர்ந்தது உண்மை தான் ஆனால் துப்பாக்கியோடு உலாவியதாகக் கருத்து உலாவியது வெறும் கட்டுக்கதை.
உங்கள் இரண்டு பேரிற்கும் தெரிந்த ஒருவர் (இவர் பல்கலைக் கழகத்தில் உங்களுடன் சம வகுப்பிலோ வேறு வகுப்பிலோ படித்திருக்கலாம்) தான் ரஜாகரனை அன்று மாலை பல்கலைக் கழகத்திற்கு வெளியே கைத்துப்பாக்கியுடன் கண்டதாக தெரிவித்துள்ளார். இதற்கு நாவலன் அல்ல ரஜாகரன் தான் பதில் சொல்ல வேண்டும்.
குகநாதன் லண்டனில் தலைமையகமாக கொண்ட டான் ரீவியை நிறுவப் போகிறார். அதற்கு எதிராக வரக்கூடியவர்களை கையாள்வது தான் இப்போதைய இவர்களின் நோக்கம். இந்த அவதூறுகளின் பின்னால் இலங்க அரசு உள்ளது என்பது எனக்கு சந்தேகமில்லாமல் நிரூபிக்கத் தெரியும். இவர்கள் இன்னும் துள்ளினால் நான் சொல்லத் தயாராக இருக்கிறேன்.
தூள்ளும் வரை காத்திராதீர்கள்.
மறுக்க இயலாத ஆதாரங்களுடன், தனிப்பட்ட நிந்தனைச் சொற்களின்றித் தகவல்களை வழங்குங்கள்.
காலங் கடக்க முன்பே உண்மைகள் வெளிக்க் கொணரப்படல் நன்று.
அதைச் செய்ய இந்த இணையத்தளம் தான் தேவை என்றும் இல்லை.
இரயாகரனின் தாக்குதல்கட்கு ஆளான மார்க்சிச லெனினிச அமைப்புக்களில் புதிய ஜனநாயகக் கட்சி முக்கியமானதாய் இருந்துள்ளது. அதன் தலைவர்கள் மட்டுமன்றி நண்பர்களும் கொச்சைப் படுத்தப் பட்டுள்ளனர். இணையத் தளத்துக்கு வெளியிலும் பிரசாரம் நடந்ததைத் தமிழகத்துக்குப் போயிருந்த போதே அக் கட்சியினர் சிலர் அறிந்தனர். எனினும் யாரும் இரயாகரனுக்குப் பதில் எழுதிக் காலத்தை வீணக்கவில்லை.
அண்மைய கடுந் தாக்குதலின் போதும் அவர்கள் ரயாகரனை அலட்சியம் செய்தனர். ஏனெனில் அவர்களது இயங்குதளத்தில் இரயாகரனுக்கு ஒரு முக்கியத்துவமும் இல்லை.
இரயாகரன் இப்போது செய்வது, அரசியல் வறுமையின் நிமித்தம் தனிமனிதர் மீது அவதூறு பரப்புவது. கிறிமினல் குற்றஞ் சுமத்தியுள்ள போது அதற்குப் பதில் சொல்லும் தேவையை யாரும் மறுப்பார்களா? அந்த எல்லையைத் தாண்டி இரயாகரன் மீது பதில் அவதூறுகள் பொழிப்பட்டோ அவரது கடந்தகாலம் ‘ஆராயப்பட்டோ’ இருந்தால் கதை வேறு.
ம.க.இ.பே. மீது இரயாகரன் பாய்ந்த்த நிலையிற் கூட ம.க.இ.பே. இரயாகரனைத் தாக்கவில்லை.
இரயாகரனை யாரும் சகித்துக் கொண்டது அவரதுநெருப்பில் குளிர் காய அல்ல. ஒரு நிலையில் ஐரோப்பாவில் தமிழரிடையே அவர் தொடர்ந்தும் இடதுசாரித் தகவல்களைப் பரிமாறி வந்தவர் என்றதால் அவர் மீதான பகிரங்க விமர்சனம் தவிர்க்கப் பட்டே வந்தது. அதே வேளை தனிப்பட அவரிடம் வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டே வந்தன.
இரயாகரனுடன் பலருக்கும் உள்ள பகைமையை நீக்க ஏதாவது செய்ய இயலுமா என்று ம.க.இ.பே., நானறியப், பலரிடமும் கோரி வந்தது.
ம.க.இ.பே. தனிப்பட்ட முரண்பாடுகளில் தலையிடவில்லை. தன் மீதான தாக்குதலைக் கூடப் பொறுமையுடனேயே எதிர்கொண்டுள்ளது.
தயவு செய்து நிதானமான பதில்களை இராயகரன் போன்றோரின் குப்பை கொட்டலுடன் ஒப்பிடாதிருப்போமாக.
//பிறக்கும்போதே கருச்சிதைவு செய்யப்பட்ட ஈழப்போராட்டம் புலிகள் என்றொரு பாசிச இயக்கத்தை மட்டுமல்ல, அதற்கு சற்றும் குறைவில்லாத பிற இயக்கங்களையும், ஜனநாயக முகமூடி அணிந்த பல வண்ணப் பிழைப்புவாதிகளையும், தன்னை மையப்படுத்தி அனைவர் மீதும் சேறடிக்கும் புலம்பெயர் அறிவுஜீவிகளையும் பெற்றெடுத்திருக்கிறது. “எது தனிப்பட்ட வன்மம்-எது அரசியல் விமரிசனம், எது அம்பலப்படுத்தல்-எது ஆள்காட்டி வேலை, எது புத்தாக்கம்-எது சீர்குலைவு” என்று பிரித்தறிய முடியாத அளவுக்கு சீர்கெட்டிருக்கும் இந்தச் சூழலைக் காட்டிலும் எதிரிகளுக்கு உவப்பளிக்கக் கூடியது வேறு எதுவும் இல்லை.//
புலிகளுக்கும் புலிகளை எதிர்ப்பவர்களுக்கும் இடையில் அடிப்படையான வேறுபாடெதுவும் இல்லை என்பது எனது அபிப்பிராயம்.
அதுவும் இரயாகரனுடைய சிந்தனை முறைமைக்கும் புலிகளுடைய சிந்தனை முறைமைக்கும் அதிக வேறுபாடேதும் இல்லை.
புலிகளுக்கு தமது தலைமையின் மீதான விசுவாசம் ஊக்கியாக இருப்பது போல இரயாகரனுக்கு மார்க்சியத்தின் மீதான விசுவாசம் ஊக்கியாக இருக்கிறது. அவ்வளவு தான். இரண்டு தரப்பினருமே அர்ப்பணிப்புடன் பணியாற்றுபவர்கள். அதில் யாரும் குறை கண்டு விட முடியாது.
புலிகள் செய்ததையும் நியாயப்படுத்தியதையும் இரயாகரன் மார்க்சியத்தின் பேரால் செய்தார். இரயாகரன் இருந்த இயக்கம் பெருவளர்ச்சி அடையாததும் அவரிடம் துப்பாக்கிகள் இல்லாதிருப்பதும் நாம் செய்த பாக்கியம். மாறாக அவ்வாறு ஆயுதங்களும் இருந்து இயக்கமும் வளர்ச்சி அடைந்திருந்தால் இன்று இப்படி அங்கங்கிருந்து கொண்டு யாரும் தட்டச்சுச் செய்து கொண்டிருந்திருக்க முடியாது.
இரயாகரன் மீதான வெறுப்பினாலோ அல்லது கோபத்தனாலோ நான் இப்படிச் சொல்லவில்லை. மார்க்சியம் குறித்த அவர் கொண்டுள்ள புரிதல் அவரை அங்கு தான் கொண்டு சென்று நிறுத்தும். பொல்பொட் ஒரு நல்ல உதாரணம் இதற்கு.
ஆனால் இது ரயாகரனுக்கு மாத்திரம் பொருத்தமானதல்ல. மகஇகவுக்கும் இனியொருவுக்கும் கூட இது பொருந்தும். கொஞ்சம் வீதாசாரம் வேறுபடும் அவ்வளவு தான்.
இன்னொரு வகையில் இரயாகரனின் இத்தகைய நிலைமைக்கு மகஇகவும் ஒரு காரணம். அவரே சொல்கிறார் “ம.க.இ.க மீது அதன் மையமான அரசியல் மீது உடன்பாடு கொண்டு நாங்கள் இணையத்தளம் உருவாவதற்கு நீண்ட காலம் முன்பாகவே புதிய ஜனநாயகம், புதிய கலாச்சார ஆக்கங்களை புலத்தில் கட்டுரைகளாகவும் முழு இதழ்களாகவும் எடுத்துச் சென்றோம். பல திடீர் மார்க்சியவாதிகளின் வருகைக்கு முன்பாகவே இவ்விதழ்களை குறிப்பிட்டளவு அறிமுகப்படுத்தியிருந்தோம்.இணையம் ஆரம்பித்ததன் மறுகணமே ம.க.இ.க வின் ஒலி ஒளி கலை நிகழ்வுகளையும் நாங்கள் வலையேற்றுவதற்கும் வெளிக்கொணரவும் உழைத்ததன் பயனாய் அவைகள் இணையத்தில் பார்வைக்கு கிடைத்தன. புலிகள், அரசு மற்றும் ஏனைய இயக்கங்கள், குழுக்கள் மத்தியில் தனியே நின்று மேற்கொண்ட இவ்வேலைகளுக்கு மத்தியிலும் சர்வதேச கடப்பாடுகளை நாம் மறக்கவில்லை.ம.க.இ.க எமது தோழமை அமைப்பு அதனது கருத்துக்களின் வீச்சுக்களுக்கு இணையத்தில் நாம் முதன்முதலாக களம் அமைத்தோம். இதன் பின்னரே வினவு தளம் வெளிவந்தது. அதன் வரவானது மேலும் எங்களுக்கு இணையத்தில் தோழமையான இன்னுமொரு வலைப்பதிவு என்ற வகையில் உற்சாகம் தந்தது.” (hவவி:ஃஃவயஅடைஉசைஉடந.நெவஃiனெநஒ.pரி?ழிவழைnஸ்ரீஉழஅ_உழவெநவெரூஎநைறஸ்ரீயசவiஉடநரூனைஸ்ரீ7502:2010-10-03-21-11-01ரூஉயவனைஸ்ரீ338:கநயவரசநனயசவiஉடநள)
இரயாகரன் நீண்டகாலமாகத் தங்களுடன் தொடர்பில் இருந்தவர் என்று மகஇகவே வாக்குமூலம் அளித்திருக்கிறது.
நாவலன் குறிப்பிடுவது போல தமிழகத்தில் சி.பி.எம், சி.பிஐ போன்ற அமைப்புக்களைவிட பெரியதான பாரிய அமைப்பு இரயாகரனுடைய மைமான அரசியலில் உடன்பாடு கொண்டிருந்துவிட்டு இப்போது திடீரென சேறடிப்பு பகிரங்க விசாரணை என்றவுடன் அவர் முழிக்கிறார். அதனால் தான் ‘தாங்கள் குறிப்பிடும் சேறடிப்பு என்பது என்ன’ என அவர் அப்பாவித்தனமாகக் கேள்வியெழுப்புகிறார்.
தவறு அவரிலல்ல. “எது தனிப்பட்ட வன்மம்-எது அரசியல் விமரிசனம், எது அம்பலப்படுத்தல்-எது ஆள்காட்டி வேலை, எது புத்தாக்கம்-எது சீர்குலைவு” என்று பிரித்தறிய முடியாத அளவுக்கு அவரும் இருந்தார். அவருடன் தொடர்பில் இருந்த மகஇகவும் இருந்தது. அதனால் தான் இரயாகரனின் பார்வையில் உள்ள கோளாறு குறித்து மகஇக வெளிப்படையான விமர்சனத்தைத் தவிர்த்து வந்துள்ளது.
அதைத் தான் வினவுவின் ஆதரவாளரான xxx இப்படிக் கூறுகிறார்: ஒரு நிலையில் ஐரோப்பாவில் தமிழரிடையே அவர் தொடர்ந்தும் இடதுசாரித் தகவல்களைப் பரிமாறி வந்தவர் என்றதால் அவர் மீதான பகிரங்க விமர்சனம் தவிர்க்கப் பட்டே வந்தது.
புலிகளும் இதே மாதிரித் தான் கையாண்டார்கள். தங்களுக்காக வேலை செய்பவர்கள் பற்றிய விமர்சனங்கள் பகிரங்கத்தில் வருவதைத் தவிர்த்தார்கள். கேட்டால் தலைமை அவரைக் விசாரிக்கக் கூப்பிட்டிருக்கு என்று சொல்வார்கள். அவ்வளவு தான். இதனால் தான் நான் சொல்கிறேன். புலிகளுடைய பார்வைக்கும் மகஇகவின் பார்வைக்கும் இரயாவின் பார்வைக்கும் அதிக வேறுபாடில்லை என்று.
இதில் இன்னொரு விடயம் இரயாகரன் மற்றவர்கள் மீதான விமர்சனத்தை(?) அவதூறுகளை தனிப்பட்ட காழ்ப்புக்களை ஒன்றும் இரகசியமாக வைக்கவில்லை. உறுப்பினர்கள் மட்டுமன்றி எல்லோரும் பார்வையிடுகிற பகிரங்க இணையத்தளத்தில் தான் வைத்தார். ஆனால் அது பிழை என்று நீங்கள் இரகசியமாக அவரிடம் குசுகுசுத்திருக்கிறீர்கள். இது என்ன தர்க்கம்? அப்போ பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன நீதி?
அப்போது நீதி தேவையில்லாதிருந்தது. ஏனெனில் இரயா மார்க்சியத்தின் பேரால் அதனைச் செய்தார் என்பது. மற்றது இரயாவினால் தாக்குதலுக்கு அவதூறுக்கு உள்ளானவர்கள் குறித்து உங்களுக்கும் அதே அபிப்பிராயம் தான் இருந்து வந்துள்ளது என்பது. இதைத் தவிர வேறேதாவது இருந்திருக்க முடியுமா?
இடதுசாரிக்கருத்துக்களில் கேள்விகள் உள்ள எவரோ அல்லது ஒரு வலது சாரியாகவேனும் இருக்கட்டும் ஏதாவது எழுதிவிட்டாலோ சொல்லிவிட்டாலோ அவர்களை நார்நாராகக் கிழித்துப் போடும் வினவு இரயாகரன் தமிழரங்கம் தொடங்கி இவ்வளவு காலங்களாக செய்து வந்தவை குறித்து ஒரு பகிரங்க விமர்சனமும் வைக்காத வினவு இப்போது தான் அவரைப் பகிரங்க விசாரணைக்கு அழைத்திருக்கிறது.
ஆக, வினவு இம்முறை இதற்குள் சிக்கியிருக்காவிட்டால் இரயாகரன் தொடர்ந்தும் அவதூறுகளையும் தனிப்பட்ட தாக்குதல்களையும் மார்க்சியத்தின் பேரால் செய்து கொண்டிருப்பார் வினவும் அது பற்றி அலட்டிக் கொண்டிருக்காது.
இதனால் தான் சொன்னேன் குளிர்காய்ந்தீர்கள் என்று. குளிர்காய்ந்த நெருப்பே சுட்டவிட்டதும் குய்யோ முறையோ என்று கத்துகிறீர்கள் என்று. இதில் என்ன தவறு கண்டீர்கள்?
இங்கே இரயாகரன் தனிப்பட ஒவ்வொருத்தர் மீதும் அவதூறு பொழிய அது ஒவ்வொன்றுக்கும் பதில் எழுதுவது பற்றி நான் பேசவில்லை. அத்தகைய அவருடைய அணுகுமுறை தவறு என்று அரசியல் ரீதியான விமர்சனம் பகிரங்கத்தில் வைக்கப்பட வேண்டியது அல்லவா?
அதற்கு என்ன நடந்தது தோழர்களே என்பது தான் எனது கேள்வி. அதனால் தான்; மகஇகவுக்கும் “எது தனிப்பட்ட வன்மம்-எது அரசியல் விமரிசனம், எது அம்பலப்படுத்தல்-எது ஆள்காட்டி வேலை, எது புத்தாக்கம்-எது சீர்குலைவு” என்பதில் போதுமான புரிதல் இருக்கிறதா என்கிற சந்தேகம் எழுகிறது.
அடுத்து நாவலனுடைய குறிப்பு குறித்து
//இதில் எதற்குமே நான் பதில் கூற விரும்பவில்லை. அது குறித்து வினவு இணையப் பின்னூட்டம் ஒன்றில் நான் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் பொதுவாக இந்தத் தாக்குதல்களுக்கு எதிராக நான் எப்போதும் கருத்துக் கூறியிருக்கிறேன். என் மீதான தாக்குதல்களையே நான் கண்டுகொள்ளாத நிலையில் மற்றவர்களுக்கு வேறு நான் பதில் கூற வேண்டும் என்று எதிர்பார்கிறீர்களா?//
நாவலன் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள். இரயாகரனின் ஏனையவர்கள் மீதான தாக்குதல் குறித்து நீங்கள் கருத்து கூறியிரக்கிறீர்களா இல்லையா? எனது மொழியறிவுக்கு இது புலப்பட மாட்டேன் என்கிறது.
இத்தகைய இரயாகரனின் பார்வை குறித்து அரசியல் ரீதியாக நீங்கள் பதிவு செய்த விமர்சனம் என்ன? எது?
//அதே வேளை தேசம்னெட்டிற்கு எதிரான விமர்சனத்தை ஆரம்பத்திலேயே – குறைந்தபட்சம் எனக்கு எதிரான தாக்குதல்களை முன்னிறுத்தியாவது- முன்வைக்காமையை இணைய அனுபவக் குறைவான சுயவிமர்சனமாக ஏற்கிறேன்.//
விமர்சனத்தை முன்வைக்காமைக்கும் இணைய அனுபவக்குறைவுக்குமான காரணத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை. //
// எப்போது ஜெயபாலன் அம்சாவின் ஆள் என்று கூறினேன்? நீங்கள் சொல்வதற்கு என்ன ஆதாரம், ஆதாரம் இல்லையெனின் நீங்கள் இன்னொரு அவதூறை ஆரம்பித்துள்ளீர்களா?”//
நீங்கள் சொன்னதாக நான் எங்கே சொன்னேன். “இப்பிரச்சினை விவாதிக்கப்படும் முறையையும், இதற்கு வரும் பின்னூட்டங்களையும் பார்க்கும்போது, அம்சா தன்னுடைய பணியை இலண்டனில் திறம்பட செய்து வருகிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது” என்று மகஇக தான் எழுதி இருக்கிறது. இதனை மகஇகவிடமே கேளுங்கள் அவர்கள் சொல்வார்கள்.
//முதலில் தேசம்னெட் ஆசிரியர்களில் ஒருவர் பசில் ராஜபக்சவை சென்று சந்தித்த போது அதற்கு எதிரான கட்டுரையை நான் தான் எழுதினேன். பல தடவை ஜெயபாலனுடன் இவை எல்லாம் குறித்து விவாதித்துள்ளேன். தவிர, கிங்ஸ்டனில் இலங்கை அரசின் அனுசரணையோடு உதவி நிறுவனம் ஒன்றை ஆரம்பிப்பதற்கான தேசம்னெட் கூட்டம் ஒன்று நடந்த வேளையில் அவர்களுடன் ஏற்பட்ட விவாத முரண்பாட்டின் பின்னர் அவர்களுடன் தொடர்புகளைத் துண்டித்துக் கொண்டேன்.// இது உங்களுடைய வாக்குமூலம் தானே. நான் எழுதியது அவதூறு என்றால் அதற்கு நீங்களே கால்கோளா?
இதுவரையான எனது எந்த பின்னூட்டங்களிலும் அவதுறை நான் எழுதியதில்லை. அதற்கான தேவையும் எனக்கில்லை. ஜெயபாலனுடனும்சரி, இரயாகரனுடனும் சரி இனியயொருவுடனும் சரி மகஇகவுடனும் சரி எனது முரண்பாடு அரசியல் ரீதியானது. அரசியல் பார்வை ரீதியானது. இறுதியாக புனைபெயர் பற்றிக் கேட்டிருக்கிறீர்கள். சொல்பவரைவிட சொல்லப்படும் விடயம் முக்கியம் என்பதை நீங்கள் மறுக்கப் போவதில்லை. இது ஒரு காரணம்.
இதனை விடவும் ஏன் புனை பெயர்களில் எழுதுகிறீர்கள் என்ற கேள்வியை மகஇக தோழர்களிடம் அல்லது கவிஞர் சிவசேகரத்திடம் கேட்டால் உங்களுக்குப் புரிகிற மாதிரி பதில் கிடைக்கும்.
“இதனை விடவும் ஏன் புனை பெயர்களில் எழுதுகிறீர்கள் என்ற கேள்வியை மகஇக தோழர்களிடம் அல்லது கவிஞர் சிவசேகரத்திடம் கேட்டால் உங்களுக்குப் புரிகிற மாதிரி பதில் கிடைக்கும்”. — விஸ்வா
எத்தனையோ பேரிருக்க நீங்கள் என்னைத் தெரிவு செய்ய என்ன தவம் செய்தேனோ!
நீங்கள் யார் என்று அறிய முயலாமலே நான் எதிர்வினையாற்றி வந்துள்ளேன். பல வழக்குக்கள் இதற்குள் பின்னப் பட்டுள்ளன. சம்பந்தப் படாத விடயங்கள் வலிந்து இழுக்கப் பட்டுள்ளன.
உங்கள் வழக்கைத்த் தீர்க்க வல்ல நடுவர் நானல்ல.
//புலிகளுக்கும் புலிகளை எதிர்ப்பவர்களுக்கும் இடையில் அடிப்படையான வேறுபாடெதுவும் இல்லை என்பது எனது அபிப்பிராயம். //
புலி எதிர்ப்பென்பது ஒரு அரசியல் அல்ல. புலிகளை கோட்பாட்டு ரீதியில் எதிர்கொண்டு அதற்கு எதிரான அரசியலை முன்வைத்தவர்களை புலிகள் அழிக்க முற்பட்ட போது, அவர்களுக்கு எதிரான போராட்டம் பல வடிவங்களில் தேவைப்பட்டது. இன்று அதன் தேவை புலிகளின் அரசியலுகு எதிரான மாற்றை முன்வைப்பதிலிருந்தே உருவாக முடியும். அதனைப் பலர் செய்கிறார்கள்.
புலிகளுக்கும் ரயாவிற்கும் அரசியலில் ஒற்றுமை ஒரே விடயத்தில் தான் உண்டு, தனது தலைமைக்கு எதிராக வருபவர்களை போட்டுத்தள்ளுவது என்பதே அது. ஆனால் ரயாகரனுக்கு நாலு சுவர்கள் தான் களமுனை வேண்டுமானல் ஒரு கம்யூட்டர் கூட இருக்கும். பிரபாகரனிற்கு ஒரு போராடும் களம் இருந்திருக்கிறது. ஒரு இயக்கம். மக்கள் ஆதரவு. முழு நேரப் போராளி எல்லாமே இருந்திருக்கிறது.
ம.க.இ.க ஒரு சனநாயக அமைப்பு அவர்கள் தாம் சரியென்று எண்ணும் அரசியலுக்காக இறுதிவரை போராடியுள்ளார்கள். அடிமட்டத் தோழர்கள் வரை கருத்துச்சொல்ல உரிமையுண்டு. ரதி வினவில் எழுதிய போது அதன் தோழர்களே வினவோடு பகிரங்கமாக முரண்பட்டனர்.
இனியொரு வெறும் அரசியல் தளம். கட்டுரைகள் விவாதங்களை ஏற்றுக்கொள்கிறது. அருவருப்பான அவதூறுகள் வந்தாக யாரும் சுட்டிக்காட்ட முடியாது என்றே எண்ணுகிறேன்.
புலிகள் அரசாண்ட காலத்தில் ரயா போன்றோரை பலவீனப் படுத்த ம.க.இ.க விரும்பியிருக்க நியாயமில்லை. அது ஒரு சமநிலையைக் கூடப் பேணியிருந்தது. இப்போ ரயாவின் கூக்குரல், நான் தான் தலைவன் பாட்டு, நம்புங்கள் நான் நேர்மையானவன் என்ற விளம்பரம் அவரைச் சீரழிவு வாதியாக்கியிருக்கிறது. அதன் உச்ச வடிவம் ஏனையோர் மீது கடத்தல், கப்பம் குற்றச்சாட்டுகளை போட்டு பிதற்றுகிறது. அவர் போல ஏராளாமான புலம் பெயர் மத்தியதர வர்க்க மனோ பலம் இழந்தோர்கள் உருவாகியுள்ளனர்.
இவைகளை ஒரே தராசில் வைத்து நிறுத்து விலை பேச முடியாது.
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7464:2010-09-15-12-30-48&catid=322:2010
-இந்த சேறடிப்புகளுக்கு பெயர் பின்னூட்டம் என்றால் இதனை அனுமதிக்கும் தளம் தனது தோழமை அமைப்பை பொதுவெளியில் பதில் சொல்ல அழைப்பதாகத்தான் அர்த்தம். அதைவிடுத்து நாங்கள் எப்போதுமே பதில் எழுதுவது இல்லை என்பது அதிகார வர்க்கத்தின் மொழி. கேள்விகள் உங்களை நோக்கி வருகையில் ரதி பிரச்சினையில் நீங்களே முன்வந்து பதில் சொல்லியும் உள்ளீர்கள். பொய்யை மறைக்க இன்னொரு பொய் சொல்கிறீர்கள் ரயா
(copy to: வினவு, தேசம் நெட், தமிழரங்கம், இனியொரு)
தமிழரங்கத்திற்கு,
ஒரு வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதாக ஒத்துக்கொள்வதாலே அவர்தான் குற்றவாளி என முடிவுசெய்து சேறடிக்கும் ஜனநாயகத்தை ஆளும்வர்க்கம்தான் செய்கிறது. இதனை அறிவுஜீவிகள் செய்தால் அவதூறு என சுட்டிக்காட்டுவதுதானே சரியானது.
மையமான கேள்வி கட்டப்பஞ்சாயத்து சரியா தவறா என்பதுதானே. கட்டப்பஞ்சாயத்துக்கு நீங்கள் வைத்திருக்கும் இலக்கணம் போலீசு ஸ்டேசனுக்கு போயும் வழக்கு பதிவு செய்யாமல் கோர்ட்டுக்கு போகாமல் தீரும் அனைத்துப் பிரச்சினைகளுமே கட்டப்பஞ்சாயத்துதான் அல்லது ஆள் கடத்தல்தான் உங்கள் மொழியில் இல்லையா ரயா. இதில் உள்ள அபத்தம் புரியவில்லையா..
பணத்தை பறிகொடுத்தவன் கேஸ் கொடுக்காமல் பணத்த உடனடியா கேக்குறான்னா அவனோட நிதிநெருக்கடி வெளிப்படையா தெரியுது. எனக்கு கூட 3 ஆண்டுக்கு முன் வேல போச்சு. லே ஆப் கொடுத்தாங்க கம்பெனில• கடசி இரண்டு மாத சம்பளம் தரல• நான் லேபர் ஆபீசர்ட்ட போய் புகார் பண்ணிணேன். அவங்ககிட்ட உடனே பணம் தேவன்னு என் மனுல சொன்னேன். அவங்க உடனடியா கம்பெனிக்கு போன் பண்ணி (உங்க மொழில மிரட்டி) சம்பளத்த செட்டில் பண்ண வச்சாங்க• அத வச்சு அடுத்த இரண்டு மூனு மாசம் வண்டி ஓடிச்சு. அந்த கம்பெனி காரங்க உங்க பார்வல குகநாதன் மாதிரி இருப்பதால் அவங்களுக்காகவும் கொஞ்சம் பேசுங்க•நானும் ஒரு மாலெ ஆதவரவாளன்னு நெனச்சுக்கிட்டு இருக்கேன். கோர்ட்டுக்கு போகாம அதிகாரிய வச்சு எங்க கம்பெனி எச்ஆர் அ மிரட்டியதால எனக்கும் அந்த தகுதி மேல சந்தேகம் வந்திருச்சு. ப்ளீஸ் உதவ முடியுமா ரயா
(copy to: வினவு, தேசம் நெட், தமிழரங்கம், இனியொரு)
தமிழரங்கத்திற்கு,
குற்றம் செய்பவர் யாருடன் தொடர்பில் இருக்கிறார் என்பது அவ்வளவு முக்கியம் இல்லைதான் உங்களுக்கு. இப்படித்தான் தொடர்ந்து பேசுகிறீர்களா.. அரசியலை கூட யாருடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்பதற்காக சொந்த அரசியலை தூக்கியெறிந்த மிகச்சமீபத்திய தங்களது நடவடிக்கைகள் எதுவும் தங்களுக்கு ஞாபகத்தில் இல்லையா..நட்பு முரண்பாடு பற்றி மார்க்சிய ஆர்வலர்களுக்கு வேறு யாரும் பாடம் எடுக்க வேண்டியிருக்காது அல்லவா.. நீங்கள் தீர்மானித்த ஆள்கடத்தல் குற்றவாளிகளிடம் கட்டுரை அல்லது பேட்டி வழியாக தொடர்பில் இருக்கும் அமைப்பை ஏன் நேரடியாக விமர்சித்து ஒரு பதிவும் எழுதவில்லை. மாறாக உங்களை சற்று ஒத்த மனநிலையில் உள்ள பின்னூட்டங்களை பிரசுரித்து அதன் மூலம் விமர்சித்தீர்கள்..
நாவலன் அவதூறு பிரச்சாரம் செய்தார் அல்லது கட்டப்பஞ்சாயத்து செய்தார் என எந்த வித குற்றச்சாட்டையும் நீங்கள் முன்வைக்கலாம். அவ்வளவு ஏன் ஒரு அமைப்பின் மீது கூட முன்வைக்கலாம். குற்றச்சாட்டை முன்வைப்பவர்தான் அதற்கான ஆதாரத்தை தர வேண்டும். மாறா ஆளும் வர்க்கம்தான் தான் இயற்றும் பொடா போன்ற சட்டங்களில் குற்றம்சாட்டப்பட்டவர்தான் தன்னை நிராபராதி என நிரூபிக்க வேண்டும் என்கின்றன• தமிழரங்கமும் அதைத்தான் கோருகிறது.
(copy to: வினவு, தேசம் நெட், தமிழரங்கம், இனியொரு)
தமிழரங்கத்திற்கு,
புலிகளை அன்று ஆதரித்தால் அவர்களது நேர்மையின்மையையும் ஆதரித்த்தாகத்தான் அர்த்தம் என்கிறீர்கள். சில பொழுதுகளில் அவர்களை மக்கள் கலை இலக்கிய கழகமும் சில நடவடிக்கைகளில் ஆதரித்துதான் உள்ளது. நீங்கள் கூட குகநாதன் என்ற தவறான நபரின் சரியான நடவடிக்கைக்குதானே (அதாவது அவரது மனித உரிமை பாதுகாப்பு, அவர் நீதிமன்றத்துக்கு வெளியே ஒரு தீர்வுக்கு முன்வந்த நியாயத்தன்மை உள்ளிட்ட) இவ்வளவு பதிவுகளையும் இடுகிறீர்கள். பதில் அளிக்கின்றீர்கள். குகநாதனை நீங்கள் ஏன் இந்தக் கட்டப்பஞ்சாயத்திற்காக இந்திய நீதிமன்றத்தை அணுகவில்லை என்றெல்லாம் நீங்கள் பேட்டியில் கூட கேட்டீர்களா? சரி இந்திய போலீசுதான் மக்களை ஒடுக்குகிறது. உங்கள ஒருத்தன் பிக் பாக்கட் அடிச்சா கூட ஒரு கம்யூனிச ஆதரவாளன் போலீசுல புகார் கொடுக்க கூடாது. ஏன் என்றால் போலீசு அரசின் ஏவல் நாய். என என்னமா யோசிக்கிறீங்க ரயா.. புலியை சில தருணங்களில் ஆதரித்தால் எல்லா தருணங்களிலும் ஆதரித்த்தாக அர்த்தமா.. அப்படியானால் மாற்றம் என்ற ஒன்றே மாறாத ஒன்று என்பதெல்லாம் உங்களை பொருத்தா சும்மா வா..
ஒரு செயல்முறை தோல்வி அடைகிறது. அதன்பிறகு அச்செயலை இயக்கிய த்த்துவத்தை ஒருவன் மறு ஆய்வு செய்கிறான். கடந்த காலத்தின் தப்பெண்ணங்களில் இருந்து மெதுவாக விடுபட முயல்கிறான். இது சரியான அறிவுப்பூர்வமான அறிவியல்பூர்வமான மார்க்சிய பூர்வமான இயக்கியவியல்தானே.. நடைமுறையில் தங்களை மாற்றிக்கொண்ட எல்லா மார்க்சிய ஆதரவாளர்களும் இப்படித்தானே மாறி உள்ளார்கள் அல்லது சிலர் சொல்வது போல அவங்க குடும்பமே கம்யூனிஸ்டு குடும்பம் அதுனால மட்டும்தான் ஒருத்தர் கம்யூனிஸ்டா ஆக முடியும் என நீங்கள் நம்புவது போல படுகிறது.
(copy to: வினவு, தேசம் நெட், தமிழரங்கம், இனியொரு)
ம க இ க மத்திய குழுவினருக்கு ஒரு பகிரங்கக் கடிதம்
ம.க.இ.க மத்திய குழு தோழர்கட்கும், ம.க.இ.க தோழர்கட்கும்
சீலனின் (இது எனது இயற்பெயரே) தோழமை வணக்கங்கள்.
வினவுதளத்தில் உங்களின் கட்டுரையைப் பார்த்து அதிர்ந்து போனேன். முதலில் முதிர்ச்சியும் செயற்பாட்டுத்திறனும் கொண்ட அமைப்புகளில் ஒன்றாக விளங்கும் தங்களின் கட்டுரையா இது என என்னால் நம்பமுடியவில்லை. புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் போன்ற காத்திரமான சஞ்சிகைகளை வெளியிடும் உங்களின் ஆய்வுமுறை இந்த விடையத்தில் மாத்திரம் ஏன் மழுங்கடிக்கப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை. உங்கள் கட்டுரையில் இருந்து எனது கேள்விகளை உங்கள் முன் வைக்கின்றேன். புதிய திசைகள் குழுவினருடன் ம.க.இ.க இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டத்தை சீர்குலைப்பதற்கு தான் முயற்சிப்பதாக நாவலன் பிரச்சாரம் செய்தார் என றயாகரன் குறிப்பிட்டிருந்தார் இதில் நாவலன் எங்கு பிரச்சாரம் செய்தார் என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ளவில்லை. றயாகரன் கூறியது லண்டனில் அவர்சார் நண்பாகளிடம் இவ்வாறு பிரச்சாரத்தை மேற்கொணடடிருந்தார் என்பதே. இதை அறியாது உங்களிடம் அதைப்பற்றி நாவலன் ஒன்றும் கூறவில்லை என எழுதியுள்ளீர்களே என்ன வேடிக்கையிது.
அருள் எழிலன் அருள் செழியன் நாவலன் போன்றோர் கூறும் கதைகளை நம்புகின்றோம் என அறிவித்துள்ளீர்கள். நல்லது. அருள் சகோதரர்கள் குகநாதனை கடத்தி பணம் பறித்தது சரி என்று மறைமுகமாக இதனுடாக ஏற்றுக் கொள்கின்றீர்கள். காரணம் அருள் எழிலன் றயாகரனின் கட்டுரையின் பின்னூட்டத்தில் தாம் ஒரு நாடகமாடி குகனாதனிடம் இழந்த பணத்தை பெற்றதாக சுயமாகவே ஒப்புக் கொண்டுள்ளார் அவ்வாறிருக்கையில் நீங்களும் ஆட்கடத்தல் கட்டைப்பஞ்சாயத்து போன்றவற்றினை ஆதரிப்பதாக மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளீர்கள்.
றயாகரன், தேசம் நெற் குகநாதனின் வாக்குமூலத்தை நம்புகின்றது என்று குறிப்பிட்டுள்ளீர்களே. குகநாதன் இலங்கை அரசு சார்பானவர் என்பதற்காக அவர் கூறுவதெல்லாம் பொய்யாக இருக்க வேண்டிய அவசியம் உண்டா. அல்லது மார்க்கிசம் பாட்டாளி வர்க்கம் என்று கூறினால் அவர்கள் சொல்வதெல்லாம் உண்மையா? இங்கு நடந்த சம்பவத்தில் நாவலன் பங்குபற்றியதே றயாகரனின் கட்டுரையில் குறிப்பிடப்பட்டது. இதில் குகநாதன் உண்மை சொல்கிறாரா அருள் எழிலன் உண்மை சொல்கிறாரா என்றதல்ல மார்க்;சியம் பாட்டாளி வர்க்கம் என்று பீலா விட்டபடி மக்களை ஏமாற்ற புறப்பட்ட மக்களைக் காவுகொடுத்தவர்கள் சொல்வது எல்லாம் சரியா? இங்கு பார்க்க வேண்டியது இச் சம்பவத்துடன் தொடர்பான பகுப்பாய்வே.
மீண்டும் ஒருமுறை நீங்கள் எல்லோரும் தமிழரங்கத்தில் றயாகரனால் எழுதப்பட்ட இரு கட்டுரைகளையும் வாசிக்கவும். அடுத்து றயாகரன் குகநாதனை அழைத்து வரவேண்டும் என்று சின்னப்பிள்ளைத்தனமாக கூறியுள்ளீர்களே. றயாகரன் குகநாதனுக்காக வக்காலத்து வாங்கியிருந்தால் அப்படிச் செய்யக் கோருவது சரி மாறாக நடந்த ஒரு சம்பவத்தை வெளிக்கொண்டு வந்தால் அதற்காக குகநாதனை அழைத்து வரச் சொல்வது மூன்றாந்தர அரசியலிலும் கேவலமானது.
இந்த விடையம் தொடர்பாக றயாகரன் பகிரங்கமாக விவாதிக்க வேண்டாம் என்று கூறியுள்ளீர்கள். இதுவரை றயாகரன் ஏதாவது ஒரு விடையத்தை தனிமையில் உங்களுடன் பேசி மற்றவர்களை போட்டுக் கொடுத்ததுண்டா? அப்படி இருக்க இது என்ன புதிதாக எதையும் இணையத்திலேயே பகிரங்கமாக விவாதியுங்கள் எனக் குறிப்பிட்டுள்ளீர்கள். இவ்விடையம் பற்றி உங்கள் மற்றைய தோழர்களை விவாதிக்க வேண்டாம் என அறை கூவியுள்ளீர்களே. இதுவா ஜனநாயக சக்தியின் முறை இதிலிருந்து உங்கள் அமைப்பினுள்ளேயே இரட்டைப்போக்கு உள்ளது என்பது தென்படுகின்றது.
தமிழ் தேசியத்தை உயர்த்திப்பிடித்து அதனுடாக ஆட்சேர்க்க புறப்பட்டுள்ளீர்கள் என என்னால் உணர முடிகிறது.
தோழர்களே உங்களின் போக்கில் தற்போது மாற்றம் உள்ளதை நான் அவதானிக்கின்றேன் ஏன் என்பது மட்டும் புரியவி;ல்லை.
தோழமையுடன்
சீலன்
தமிழரங்கத்திற்கு,
எல்லாவற்றையும் அரசியலுக்கு கீழ் கொண்டு வந்து பரிசீலிக்கும் தங்களது உயர்ந்த தன்மை தமிழக மா.லெ இயக்கங்களுக்கு அவ்வளவாக வாய்த்திருக்காது போலும் என நீங்கள் கருதுவது புரிகிறது. ஒரு சம்பவத்தை கட்டப்பஞ்சாயத்தாக பார்க்க வேண்டும் என்பது அதன் தன்மையால் புரியப்பட வேண்டுமா அல்லது அதில் சம்பந்த்ப்பட்டவர்களால் புரியப்பட வேண்டுமா என்பதற்கு நீங்கள் பின்னதைத்தான் தெரிவு செய்கிறீர்கள். தீபன் துர்கா மீதான கொடுந்தாக்குதலின் போது கூட தீபன் தாங்களை கடத்தியதை விவரித்து விட்டு கடைசி வரிகளில் நடந்த சம்பவத்தின் எதிரிகளையும் கண்டித்தீர்கள். இந்த தன்மைதான் உங்களை இன்றும் அரசியலற்ற ஒரு பிரச்சினைக்கு அரசியல் சாயம் அடித்தாவது சில முன்முடிவுகளை நியாயப்படுத்த வைக்கிறது.
செழியனுக்கு தர வேண்டிய பணத்தைத்தானே செழியன் கோரினார். அல்லது மிரட்டி பிடுங்கினாரா? பெறப்பட்ட பணத்தில் 75 சதவீத்த்திற்கும் மேல் அவரது 2.5 ஆண்டு கால ஊதிய பணம் என்பதும் ஆதாரத்துடன் உள்ளது. ஒரு நடுத்தர சம்பளம் வாங்கும் ஒருவனது ஊதிய நிலுவையை அவன் பெற்ற முறை தவறு என்பதற்காக வாதாட வந்திருக்கின்றீர்கள். நடுத்தர வர்க்கத்தின் மீது காழ்ப்புணர்ச்சி கொள்வதா மார்க்சியவாதிகளுக்கு அழகு. அணி சேர்க்கை பற்றி தெரிந்தும் தாங்கள் இம்முடிவுக்கு வர காரணம் என்ன? இவரை விடவும் அதிக சம்பளம் பெறும் அதிகார வர்க்கமாகவே இருக்கும் உமா சங்கருக்கு ஆதரவாக வினவு இணையதளத்தில் கட்டுரை வந்த்தே.. அதனை நீங்கள் ஏன் அரசியல் ரீதியாக எதிர்க்கவில்லை
(copy to: வினவு, தேசம் நெட், தமிழரங்கம், இனியொரு)
தமிழரங்கத்திற்கு,
அன்றைய குகநாதனுக்கும் இன்றைய குகநாதனுக்கும் உள்ள வித்தியாசங்களையும் அல்லது இன்ன பிறருக்கு உள்ள வித்தியாசங்களையும் வித்தியாசம் இல்லாமல் இருப்பின் அவற்றையும் எப்படி மதிப்பிட வேண்டும். நபர்கள் வழியாகவா அல்லது கொள்கை வழியாகவா. அந்த கொள்கைக்கு நேர்மையாக இருக்கிறார்களா என்பதை பொறுத்தா..
நேற்று வரை நல்லவனாக நடிப்பவனுக்கெல்லாமோ அல்லது நல்லவனாகவே இருந்து இன்று சூழ்நிலை மீது பழியை போட்டு தற்செயலாக கெட்டவனாக மாறுபவர்களையோ அவர்களது வளர்ச்சி வீழ்ச்சியிலிருந்து அளவிடுவதுதானே மார்க்சிய அணுகுமுறை. நேற்று வரை நடுத்தர வர்க்கத்தின் வசதிகளை அனுபவித்து விட்டு இன்று பாட்டாளி வர்க்க பண்பாட்டுமுறைக்கு மாறிய தோழரை அந்த நாளின் அவரது அற்பவாத சிந்தனையை குத்திக் கொண்டே இருந்தால் தோழர்கள் எப்படி அமைப்பை விரும்பி வருவார்கள். அல்லது மீதம் விமர்சனம் செய்யும் அந்த ஒரு தோழரை தவிர யார் மிஞ்சுவார்கள்.
ஊசாலாடும் வர்க்கம் என்ற வரலாற்று பாத்திரத்தில் இருந்து தானே எல்லா தோழர்களும வருகிறார்கள். இயக்கவியல் ரீதியாக மாறும் மனிதர்களை ஒன்றிணைத்துதானே புரட்சியை வழிநடத்த முடியும். இனி மாற விரும்பும் ஒவ்வொருவரும் அங்கே ஒருத்தர் இருக்கிறார். அவரிடம் நேற்று ஏன் நான் கள்ள டிக்கட்டில் படம் பார்த்தேன் என்று விளக்கம சொல்லி விட்டுதான் போக வேண்டும் என்றால் யார்தான் இந்த வீட்டுப் பக்கம் வர முடியும். இதற்கு பெயர் மார்க்சிய வரையறையில் என்ன தெரியுமா?
(copy to: வினவு, தேசம் நெட், தமிழரங்கம், இனியொரு)
தமிழரங்கத்திற்கு,
நான் ஒரு கம்பெனில வேல செய்கிறேன். என் முதலாளி ஒரு பொறுக்கி. உமனைசரும் கூட• என்னோட வேலய பாத்து தொழில் ஆர்வத்துல என்னய ஒர்க்கிங் பாட்னரா சேத்துக்குறான். ஆனா மூணு வருசன் என்ன காசு போட்டு கம்பெனி நடத்த வச்சுட்டு காச தராமா எஸ்கேப் ஆயிடுறான். இதுக்கு என்னோட சேமிப்பு மனைவியோட நகை குடும்ப சொத்து எல்லாம செலவாயிருது. இப்போ பணத்த அவன் ஏமாத்துனத பத்தி நான் பேசுறன்னு வச்சுக்கங்க•. நீங்க என்ன சொல்றீங்க• எதுனாலும் சரி சட்டப்படி செய்யுங்க ங்குறீங்க•.வீட்டுல வர்ற குடும்ப பொருளாதார பிரச்சினைல வீடு ரெண்டாகி இருக்கு..எனக்கு மார்க்சியம் எல்லாம் வழிகாட்டி இல்லனு வச்சுக்குங்க•.. இருந்தாலும் மனச்சாட்சினு ஒன்னு எல்லாருக்கும்தானே இருக்கு. அதுக்கு பயந்த நானே என்னோட மொத்த இருப்பும் காலியான உடனே எவன் காலியாக்குனானோ அவன கொல்ல்லாம் னு நினைக்கிறேன். இது மிருக நிலைன்னு வச்சுக்கங்க• என் மனைவி நகை என்னோட சேமிப்பு இதெல்லாம் அந்த களவாணிப்பயட்ட இருந்து வாங்க போலீச நாடுறன்.
வந்த இடத்துல அவன் வெளிநாடு போக முடியாதுன்னு நிலம இருக்கு. என் வீட்டு நெலமலயும் காசு தேவ இருக்கு. கேசு போட்டா ரெண்டு பேருக்கும்தான் பாதிப்பு. அதுனால நீதிமன்றம் போகாமலே ஒரு தீர்வுக்கு வர்றோம். இதுல அரசியல் எங்க வருதுன்னு எனக்கோ என் மனைவிக்கோ தெரியல• இது சம்பந்தமா ஒருத்தரு இதுக்கு அரசியல் சாயம் பூச முயற்சிக்கிறாரு. அவரு என் தம்பி எழுத்து தொடர்பு வைத்திருக்கும் நண்பர்கள் என தெரிகிறது. அதுனால அவங்க்கிட்ட போறேன். இத பத்தி விளக்கம் தர்றேன். இல்ல அவங்களே கேக்குறாங்கன்னு வச்சுக்குவம் அதுனால என்ன பிரச்சினை.. அவன் உமனைசரு ன்னு இன்னைக்கு சொன்னா .. அது அவன் கம்பெனில வேலக்கு சேரும் போது தெரில•. சம்பளம் நல்லா வாங்குறப்ப தெரியல என்கிறீர்கள். என்ன செய்ய முதலாளிகள் கூட சொல்லக் கூசும் வார்த்தை இது.. பாட்டாளி வர்க்கம் என கருதிக்கொள்ளப்படும் ஒரு இடத்தில் இருந்து வருகிறது.
ரிசஸசன் வந்து வேலை போன ஐடி தொழிலாளியை பார்த்து இப்பிடி பேசினால், பசுமை புரட்சியில் வாழ்ந்த விவசாயிகளை காட்டி இன்று தற்கொலை செய்யும் விவசாயிகளை காரணம் காட்டினால், அதிகார வர்க்க திமிரை சுட்டிக்காட்டி இன்றைய அரசுத்துறைகளில் நிலைநாட்டும் தனியார்மயத்தை நியாயப்படுத்தினால், .. என இந்த வளர்ச்சி சென்றடையும் இடம் ரியாக்சனரி செட் ஆகத்தான் இருக்கும் ரயா.
(copy to: வினவு, தேசம் நெட், தமிழரங்கம், இனியொரு)
தமிழரங்கத்திற்கு,
தீர்ப்புகளில் இருந்து அணுகும் உங்களது போக்கால் நடந்த விசயத்தில் உள்ள அரசியல் தன்மை இன்னது என வரையறுக்க இயலாமல், அந்த இயலாமையே கோபாமாக உருவெடுத்து மக்கள் கலை இலக்கிய கழகம் நாவலனுக்கு வக்கலாத்து வாங்குவதாக கூறுகிறீர்கள். ஆனால் நடந்த சம்பவத்தில் நான்காவது நபராகத்தான் அவரை இருத்த முடியும் அல்லவா.. இதுதான் அருள் எழிலன் அல்லது செழியனை விடவும் அவரை இப்பிரச்சினையில் முன்னுக்கு வரவழைக்குமாறு தங்களையும் தூண்டுகிறது. அடக்குமுறைக் காலத்தில் அமைதி காத்தார்கள் என்பதற்காக இன்னும் பிறரையும் நோக்கி வன்மத்துடன் உரையாடவும் வைக்கிறது. அந்த காரணத்தாலேயே இன்றும் அன்றைய பயந்தாங்கொள்ளிகளிடம் இணைய முடியாது என முடிவு செய்து, அந்த முடிவுக்கேற்ப உரையாட முன்வருகின்றீர்கள்.
இணையத்தில் விசாரணை சாத்தியம் இல்லை என்பதை விளக்கினால் அது உங்களது கண்ணிற்கு மாத்திரம் உங்களை நோக்கியதாக படவே இதனை இனியொரு தான் செய்கிறது என பள்ளிப் பிள்ளைகள் கிள்ளி விளையாடுவதைப் போல பதிலளிக்கின்றீர்கள். அதனால்தான் நீங்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் உரையாடிய பிறகு முடிவு எடுத்தீர்களா என பகடி செய்கின்றீர்கள். உங்களால் தமிழகத்திற்கு வருவது சாத்தியமில்லை என்பது சப்பைக்கட்டு.
மார்க்சியவாதிகளில் சீனியாரிட்டி போய்விடும் என அஞ்சும் ஒரு தோழனாக எனக்கு தெரிந்த சிலர் இருந்துள்ளனர். அவர்கள்தான் புதிய தோழர்களின் கடந்த காலத்தை பற்றி மாத்திரமே பேசி அதே நேரத்தில் தங்களது கடந்த காலத்தை சிந்திக்க மாத்திரமே செய்து அதன் பலனாக பெற்ற புதிய அரசியல் ஒளியில் மார்க்சியத்தை உரசிப்பார்த்து தங்களது பார்வைக்கு உகந்த வழிமுறையை தேர்வு செய்கிறார்கள். அது பின்நவீனத்துவ்வாதமா, அல்லது கலைப்புவாதமா என்றெல்லாம் எனக்கு சத்தியமாக உடனே தெரிந்து விடுவதில்லை. ஆனால் போகப் போகும் திசை புரிந்து விடுகிறது
(copy to: வினவு, தேசம் நெட், தமிழரங்கம், இனியொரு)
ரயாகரன், தேசம்னெட் கூட்டு இனி தலை தூக்க முடியாத அளவுக்கு அடிவாங்கி உள்ளது. ம.க.இ.க உடன் தொடர்பு ரயாவை கொலை செய்யாத அளவுக்கு வைத்திருந்தது. இனிமேல் இருந்த கொஞ்ச நஞ்ச அரசியலும் இருக்காது. நூறு வீதம் அவதூறு குழு தான் நடத்தப் போகிறார்கள். அது அடிதடி சண்டை கொலை என்று எங்கே போய் முடியுமோ தெரியவில்லை. அதுதான் எனது கவலை. அதுவும் சீலன் போன்ற இந்த விசயங்களில் ஏற்கனவே பரிட்சயம் உள்ள நபர்களும் சேர்ந்து கொண்டால், ஆர்.எஸ்.எசஸ் , அல்கயிதா மாதிரி தான் ஆகிப் போகும்.
அம்சா மிக்கக மகிழ்ச்சியாக் இருக்கிறாராமே?
தமிழரங்கத்திற்கு,
பத்தி பிரித்து பதில் சொல்லுவது அல்ல திறமை. அதன் மையமான விசயம் எதிரில உள்ளவன் இதயத்துக்கு அருகில் இருக்க வேண்டும். நாவலனுக்கு கொடுத்த சான்றிதழை இப்போது ஏன் திரும்ப பெருகின்றீர்கள். ஏற்கெனவே அவர் பற்றி தெரிந்த்தாக சொல்லும் தாங்கள் எதற்காக அப்போது சான்றிதழ் அளித்தீர்கள். சூழ்நிலையின் கைதி மற்றும் கட்டப் பஞ்சாயத்து என்ற சொற்களை மேற்கோளிட்டு சொல்லியிருப்பது நகைமுரணுக்காக என்பது எழுதும் தங்களுக்கு புரியாத ஒன்றா? புரிந்தும் புரியாதவர்களுக்கு ஒன்றுமே செய்ய முடியாதுதான். புரிந்திருக்க வாய்ப்பில்லை என்றுதான் நான் கருதுகிறேன்.
அறவிட்ட முறை பற்றிய விசாரணை மட்டும்தான் என்பது கூட ஜனநாயகம் போலத்தான் தங்களுக்கு படுகிறது. உண்மையில் நடந்த்து என்ன என்பதை தெரிந்து கொள்ள முதலில் இருந்தே துவங்குவோம். கருத்துக்களை முன்வைத்த தோழர்கள் மீது மீண்டும் தீர்ப்புகளை மாத்திரமே அதுவும் நியாயபடுத்தலின் கூரையின் கீழ் செய்கிறோம் என்ற குற்ற உணர்வு இல்லாமல் பேசுவதுதான் சேறடிப்பு பின்னூட்டங்களை பிரசுரிக்க வைக்கிறது. அதுதான் தன்னை நோக்கி வரும் விமர்சனங்களை பலமுறை மட்டறுக்கிறது. இரண்டும் வேறு வேறு அல்ல• இந்த விமர்சன முறையின் வர்க்கத்தன்மை என்ன என உங்களுக்கு தெரியும்தானே.
ஏற்கெனவே இருக்கும் பதிவுகளையும் ஒரு சாட்சியமாக எடுத்துக் கொள்ள முடியாதா என்ன• குகநாதன் கடத்தப்பட்டார் என்ற தீர்ப்பும், பணம் வசூலித்த்தே தவறு அல்லது அம்முறை தவறு என்ற தங்களது வழிகாட்டலும், தரவேண்டிய பணத்திற்கு ஒரு நபர் பொறுப்பு ஏற்பது மூலம் தற்காலிக விடுபடல் சாத்தியம் என்பதை கருத்தாக தெரிவித்த ஒருவரது ஜனநாயக பண்பு மாசுற்று இருப்பதை நுண்ணி நுணுகி பார்க்கும் தங்களது பக்குவத்தையும் பெறுவதற்கு எனக்கு இந்தியாவில் பிறந்த்தால் கொடுப்பினை இல்லையோ என்னவோ ரயா
(copy to: வினவு, தேசம் நெட், தமிழரங்கம், இனியொரு)
தமிழரங்கத்திற்கு,
உங்கள் மீது சேறடிப்பு என ஆதாரத்துடன் ஒரு அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. அதனை மறுத்து ஆதாரத்துடன் பேசலாம். ஆனால் உங்களது அரசியிலின் அடிப்படையில் அரசியலற்ற ஒரு விசயத்திற்கு அரசியல் சாயம் பூசி மகிழும் அற்பத்தனத்திற்கு புத்திஜீவிகளின் போக்கு என வரையறுத்து சொன்னதற்காக மீண்டும் தப்பிக்க பார்க்கிறார்கள் என சேறடிக்கிறீர்கள்.
ஏன் சேறடிப்பு என்கிறேன என்றால், அந்த கட்டுரையின் முழு தன்மையிலும் தாங்கள் முன்னிறுத்தும் நாவலன் மற்றும் அருள் சகோதர்ர்கள் மீது தவறு நிரூபிக்கப்படும் பட்சத்தில் தங்களது புரிதலின் தவறுக்கு சுயபரிசீலனை செய்து மாற்றிக் கொள்வதாக மட்டுமே பல இடங்களில் சொல்லி உள்ளார்கள். ஆனால் மறந்தும் அருள் சகோதர்ர்களின் பக்கம் நியாயம் இருந்தால் என்ற நிலையை தங்களது எந்த கட்டுரையிலும் காணவில்லை. இந்த விசயத்தில் ஒரு தரப்பை மாத்திரம் அறிந்த இருவரில் ஒருவர் (மக்கள் கலை இலக்கிய கழகம் என்ற அமைப்பு) தனது தற்போதைய முடிவு மாறுதலுக்கு உள்ளாக வாய்ப்பு இருப்பதை கோடிட்டு பல முறை காட்டியும், தனது முயலுக்கு மூன்று கால் என்பதில் இருந்து விசாரணையை துவக்க தீர்ப்புடன் காத்திருக்கின்றீர்கள்.
மார்க்சியம் போல பேசுவதற்கும் மார்க்சிய இயக்கவியலை அதன் வரலாற்று பொருத்தப்பாட்டில் வைத்து பேசுவதற்கும் நிரம்பவே வித்தியாசம் உள்ளது. முன்னர் திருடர்களாக இருந்தவர்கள் பின்னாட்களில் கம்யூனிஸ்டுகளாகவோ அல்லது அவர்களை ஆதரிப்போராகவோ மாறவே முடியாது என்ற தங்களது தூய பரிசுத்தவாதம் முயன்றால் ஒரு பெந்தேகோஸ்தே சபையை உருவாக்கலாம்
(copy to: வினவு, தேசம் நெட், தமிழரங்கம், இனியொரு)
என்னைப் பலருக்குத் தொரிந்திருக்கும் என்று நம்புகின்றேன். இதுவரை நான் எழு திய இணையத்தள ஆக்கங்கள் யார் மீதும் தனிப்பட்ட முறையில் சேறு பூசுவதாக அமைந்திருக்கவில்லை என்பது அதை வாசித்த அனைவருக்கும் புரியும்.
ஆனால் குகநாதன் விடயத்தில் நான் அந்த கொள்கையை கடைப்பிடிக்கத் தயாராக இல்லை. அவர் தான் வாழ்வதற்காக அடுத்தவரை உயிருடன் புதைக்க முயல்பவர். ஒரு காலத்தில் புலிகளுடன் கூட்டாக இயங்கிய அவர் பின்வந்த காலத்தில் தன்னுடன் இயங்கிய தனது நெருங்கிய நண்பர்களையே கூட அரசாங்க புலனாய்வாளர்களிடம் காட்டிக் கொடுத்தவர். ஏன் தீபம் தொலைக்காட்சியின் வேண்டுகோள் ஒன்றை அரசாங்கம் சாதகமாகப் பரிசீலிக்க முற்பட்ட போது அவர்களை புலிகளின் வால்கள் என்று போட்டுக் கொடுத்தவர் அவர் தான்.
கடைசியாக தமிழ் நாட்டில் நடைபெற்ற விடயத்தை வைத்து தான் ஏதோ புலிகளுக்கு எதிராக இயங்கியதால் தான் அப்படி நடைபெற்றதாக அரசாங்கத்திடம் காட்டிக் கொண்டு அதற்குச் சன்மானமாக பல மில்லியன் டாலர்களை உதவியாகப் பெற்றுக் கொண்டுள்ளார். அந்தப் பணத்தில் தான் விரைவில் டான் டீவியின் தலைமை அலுவலகம் இலண்டனில் திறக்கப்பட உள்ளது.
அதற்கு மேலதிகமாக குகநாதன் அல்லது அவரது அலுவலகத்தில் பணியாற்றும் சர்தார் ஆகிய இருவரில் ஒருவர் வெளிவிவகார அமைச்சின் மூலமாக வெளிநாட்டுத் தூதுவராலயமொன்றின் பதவிக்கும் மற்றவர் இலங்கையில் அரச பதவியொன்று க்கும் நியமிக்கப்பட உள்ளனர். இப்படியாக நடைபெறும் அனைத்து சம்பவங்களையும் தனக்கு வசதியாக திசை திருப்பிக் கொள்ளக் கூடியவர் குகநாதன் என்பது அவரைப் பற்றி தெரிந்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.
மேலதிக தகவல்கள் தேவையென்றால் இந்த விடயங்களை மறுத்து குகநாதன் தனிப்பட்ட முறையில் மறுப்பறிக்கை விடட்டும். அதன் பின் அடுத்த கட்ட ஆதாரங்களை நான் சமர்ப்பிக்கின்றேன்.
சேறு பூசுவது என்பது பொதுவாகப் பொய்க் குற்றம் சுமத்துவதோடும் இழிவு படுத்துவதோடும் தொடர்புடையது.
ஊங்கள் நோக்கம் அதுவல்ல என நினைக்கிறேன்.
ஏற்கெனவே சொல்லப் பட்ட தகவல்கள் போதுமானவை.
பதில் சொல்லும் பொறுப்பு குற்றஞ் சாட்டியவர்களது.
இந்த இணையத்தளத்தில் இராயகரனையும், குகநாதனையும் விடப் பயனுள்ள விடயங்கள் உள்ளன.
தமிழரங்கத்திற்கு,
நடைமுறைக்கு சாத்தியமற்ற ஒன்று என்பது தாங்கள் இந்தியா வருவது. புரட்சி கூட நடைமுறைக்கு சாத்தியமற்ற ஒன்றுதான் என பல முதலாளித்துவ ஆதரவாளர்கள் மட்டுமின்றி அல்ல்ல்படும் நடுத்தர வர்க்கமும் நம்பிக் கொண்டிருக்கிறது. இந்திய ஆளும் வர்க்கம் அனுமதிக்கும் பட்சத்தில் அந்த நாட்டு ஆளும் வர்க்கம் இலங்கை பாசிசத்தை ஆதரிப்பதால் நீங்கள் இந்தியா வர மாட்டீர்கள் என எனக்கு தெரியும். இந்திய அரசு உங்களை கைது செய்யவோ அல்லது நாடு கடத்தவோ மாட்டோம் என உறுதிமொழி பெற்றோ அல்லது அவற்றுக்கு தடையாணை பெற்றோ கூட உங்களுக்கு பாதுகாப்புக்கு உறுதி தரலாம்.
ஆனாலும் நீதிமன்றம் என்பது அந்த அரசின் அங்கம்தானே. அது இலங்கை ஆளும்வர்க்கத்தை எதிர்த்த ஒன்று இல்லைதானே.. அதுதான் சமீபத்திய டக்ளஸ் தேவானந்தா இந்திய வருகையில் தெரிந்த ஒன்று என்பதற்காக அது வழங்கும் ஆளும் வர்க்க உறுதிமொழி உங்களைப் போறுத்தவரையில் பகைவனுடன் படுத்து உறங்குதல் என்பதால் அதனையும் மறுத்து விடுவீர்கள் என தெரிகிறது. எல்லா தோழர்களும் பிரான்சுக்கோ அல்லது இங்கிலாந்துக்கோ வரும் அளவு வசதியும் இல்லை. காரிய சாத்தியமற்ற ஒன்றுதான்.
ஆனால் தவறான சர்வதேசிய நிலைப்பாடு எடுக்கும் அபாயத்தில் இருந்து உங்களது உயிரை தியாகம் செய்வதாவது காப்பாற்றும் வாய்ப்பு இன்னமும் எஞ்சியபடியே நீடிக்கிறது. இந்த நாட்டின் ஜனநாயக சக்திகள் அல்லது உளுத்துப் போன தமிழ்தேசியவாதிகள் உங்களை இலங்கை அரசிடம் கையளிக்கையில் அல்லது கைது செய்கையில் வாளாது இருப்பார்கள் என்ற முன்முடிவுக்கு முடிவு கட்டுங்கள். வரலாற்றில் உங்களது இந்த பாத்திரம் மென்மேலும் மெருகேற நல்ல வாய்ப்பு இது. அவசியம் கலந்து கொண்டு இந்த வழக்கில் மாத்திரமல்ல இந்திய மாக்சிய லெனிய இயக்கத்தின் புதிய திசைவிலகலை அதன் அணிகளிடமும் அம்பலப்படுத்த அரிய வாய்ப்பு உள்ளது. அவசியம் வரவும்
(copy to: வினவு, தேசம் நெட், தமிழரங்கம், இனியொரு)
//எத்தனையோ பேரிருக்க நீங்கள் என்னைத் தெரிவு செய்ய என்ன தவம் செய்தேனோ!//
//பல வழக்குக்கள் இதற்குள் பின்னப் பட்டுள்ளன. உங்கள் வழக்கைத்த் தீர்க்க வல்ல நடுவர் நானல்ல//
இது ஒன்றும் பெரிய தெரிவு அல்ல. எனது பெயர் புனைபெயரா உண்மைப் பெயரா ஏன் நான் சொந்தப் பெயரில் எழுதாமல் புனை பெயரில் எழுதுகிறேன் என்கிற நாவலனின் கேள்வி அர்த்தமேதுமற்றது. அதுவும் எனது குறிப்புகள் தனிப்பட யாரையும் அவதூறு செய்யும் வகையிலல்லாமல் குறித்த அரசியல் மீதேயானதாக இருக்கும் போது.
பு னைபெயர் தொடர்பாக இரண்டு வகைமாதிரி உதாரணங்கள் தேவையாக இருந்தது. ஒன்று அதிகாரத்திற்கு எதிராகப் போராடும் இயக்கத்தில் ஏன் புனை பெயரைப் பாவிக்கிறார்கள் என்று சொல்ல. அதற்கு உடனே ஞாபகத்திற்கு வந்தது மக.இக தான்.
மற்றையது புத்திஜீவியாக தொழிற்படும் ஒருவர் புனைபெயரைப்பாவிப்பது பற்றி சொல்ல. அதற்கு உடனடியாக தங்களின் பெயர் தான் ஞாபகம் வந்தது. நேசிக்கும் கவிஞர் ஒருவர் ஞாபகத்திற்கு வந்ததில் ஒன்றும் தப்பில்லையே.
உங்களோடு உடன்படும் பல விடயங்களில் உடன்பட்டுக் கொள்கிறேன். உடன்படா விடயங்களில் எனது அபிப்பிராயத்தைத் தெரிவிக்கிறேன். இது தவிர வேறேதுமில்லை.
தவிரவும் இந்த வழக்கு தீர்க்கப்படும் என்று நான் நம்பவுமில்லை. ஒருவரும் தமது கடந்தகால நடத்தைகளைத் திரும்பிப்பார்க்கத் தயாரற்ற ஒரு சூழலே நிலவுகிறது. தவறுகளைஒத்துக் கொள்ளும் மனப்பக்குவமும் இருப்பதாகத் தெரியவில்லை. இ ந்த இலட்சணத்தில் தான் மற்றவர்களை தவறுகளை ஒத்துக் கொள்ளவும் கடந்தகாலத்தைத் திரும்பிப் பார்க்கவும் சுயவிமர்சனம் செய்யவும் வேண்டும் என்றும் எழுதிக் கிழித்தார்கள்.
தாம் மட்டுமே சரியானவர்கள் என நிறுவும் முனைப்பே மேலோங்கியிருக்கும் போது .
எப்படி இது தீரும்?
இது நேசிக்கும் கவிஞர் ஒருவர் மீது பாசத்தைக் காட்டுவதற்குரிய சூழ்நிலையாகத் தெரியவில்லை. (சொந்தப் பேர் பாறிய விவாதம் இனியொருவில் நீண்டகாலமாகத்த் தொடர்ந்தது. எனவே அத் தொடர்பில் தனிப்பட எவரையுங் குறிப்பிடத் தேவை இல்லை என்றே நினைக்கிறேன்).
இணையத் தள விவாதங்களில் தனிப்பட்ட தாக்குதல்களால் விவாதங்கள் திசை திரும்பச் சொந்தப் பேர் வழி செய்வதால், சொந்தப் பேர் அவசியமற்ற போது அது தவிர்த்தற்பாலது என்பதில் உங்களுடன் கருத்து வேறுபாடில்லை.
தமிழரங்கத்திற்கு,
கட்டைப் பஞ்சாயத்து செய்தவர்களையும், அதனை நியாயப்படுத்துபவர்களையும் இனம் கண்டு கொள்ள முடியாமல் அவர்களை தனது அரசியலின் வழியே வர அனுமதிக்கும் மக்கள் கலை இலக்கிய கழகம் மற்றும் அதன் தோழர்கள், மகிந்த ராஜபக்சே உடன் ஒப்பிடப்பட்டிருக்கிறார்கள் உங்களது கட்டுரையில். நடந்த்து ஒரு ஆள்கடத்தல் கட்டைப்பஞ்சாயத்து என இரு தரப்பையும் கேட்காது மன்னர்களின் மனநிலையில் இருந்து தீர்ப்பளிக்கும் தாங்கள் சில சமயங்களில் ஒரு கம்யூனிஸ்டு என்றும் கருதுவதால் அதுவும் ஜனநாயத்தை போராட்டத்தின் வழியே பெற்ற ஒரு தேசத்தில் தரித்திருக்கும் பெருமித்த்தால் ஜனநாயகத்தை உங்களுக்கு பிடித்தவர்கள் பாதிக்கப்படும் போதும் பேசுகின்றீர்கள். ராஜபக்சே நடத்திய பாசிச தர்பாரைத்தான் தங்களை இந்தியாவுக்கு அழைத்த்தன் மூலம் மக்கள் கலை இலக்கிய கழகம் நடத்துவதாக நீங்கள் கூறுவது அவதூறு அல்து எந்திரகதியில் அரசியலை பிரயோகிப்பது.
ரதிக்கு அன்று நீங்கள் அளிக்க மறுத்த ஜனநாயகத்தை இன்று அமைப்பிற்கும் வழங்க மறுத்திருக்கின்றீர்கள். கடந்த சில மாதங்களாகவே உங்களது தோழர்கள் ம•க.இ.க செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்திருந்தார்கள் என்பதை பிரச்சினை ஆனவுடன் வெளியில் சொல்வதும், அதற்கு முன்னும் தற்போதும் கூட சேறடிப்புகளை வக்கிரமான அனைத்து பெயர்களிலும் வெளியிடும் தங்களது அரசியல் யோக்யதைக்கு குகநாதன் கூட சான்றழிப்பாரா என தெரியவில்லை.
இப்படி ஒரு சம்பவத்தை கேள்விப்பட்டவுடன் நீங்கள் வினவு தளத்திற்கு தொடர்பு கொண்டு இத்தகைய கயவர்களை எழுதவோ அல்லது பேட்டி எடுத்து ஒலிபரப்பவோ அனுமதிப்பது எந்த வகையில் அரசியல் மற்றும் ஊடக தர்மத்தின் அடிப்படையில் தவறு என விளக்கவோ அல்லது இவற்றை நேரடியான விமர்சனமாகவோ முன்வைத்து இருந்தால் உங்களது அரசியல் நேர்மை பாராட்ட தக்கதுதான். மாறாக தோழர்களை விட தற்போது தோழர்களுடன் தொடர்பில் உள்ள முன்னாள் பயந்தாங்கொள்ளிகள் அல்லது ஏமாற்று பேர்வழிகள் என்று தான் நம்பும் சிலர் அதில் வருகிறார்கள் என்பதற்காக என்ன ஏது என்று தெரியாமலே அவருக்கு எதிரானவர்களை அணுகி அவரிடம் பேட்டியை கோரி பெறுகின்றீர்கள். அந்த பேட்டியில் கூட அவர் அமைப்பு பற்றிய கொசிப்பை பற்ற வைத்தும், அதனை அறிந்தும் அறியாமலும் தாங்கள் பிரசுரிக்கின்றீர்கள். பாதிக்கப்பட்டவராக தங்களால் கருதப்படும் குகநாதனும் தங்களை அணுகி தனக்கு நிகழ்ந்த மனித உரிமை மீறலை வெளியிட வேண்டும் என கோரவில்லை. மாறாக நீங்கள்தான் அணுகி இருக்கின்றீர்கள். உங்களை பார்க்கிலும் உங்களது தோழர்களின் உண்மைதன்மை கொஞ்சம் சரியாக இருக்க வாய்ப்புள்ளது
(copy to: வினவு, தேசம் நெட், தமிழரங்கம், இனியொரு)
விஸ்வன்,
என்மீது ரயாகரன் என்பவரால் கிரிமினல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட போது அதற்கான மறுப்பைத் தெளிவாக நான் எழுத்தில் முன்வைத்துள்ளேன். இதற்கு மேல் இது குறித்து என்ன எழுதுவது? அருள் எழிலன் தனது மறுப்பை முன்வைத்துள்ளார். இதற்குப் பின்னரும் குற்றம் சாட்டியவர்கள் பல்வேறு நோக்கங்களுக்காகத் தொடர்ந்த போது இணையத் தள “நிழல் உலக” அவதூறுகளை முடிவுகட்டும் நல்லெண்ண முயற்சியாக ம.க.இ.க ஒரு முன்மொழிவை வைத்திருக்கின்றது. இனிமேல் இதில் சொல்வதற்கு ஏதும் எஞ்சியிருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
தேவையானால் நானும், எழிலனும், ம.க.இ.க வும் எழுதியதை மீளப்படித்துப்பார்கலாம்.
தவிர, தனிப்பட்ட முறையில் இங்கிலாந்து அரச துறையில் வேலை பார்ப்பதால் சட்டரீதியான பிரச்சனைகளை எதிர்க்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதால், நான் “CRB check centre” இற்கும் தெரிவிக்க வேண்டிய நிலையிலிருந்தேன். அதே வேளை சட்டரீதியான அணுகுமுறையும் எனக்குத் தேவைப்பட்டது.
அதனைத் தொடரவேண்டியது எனக்குக் கட்டாயமானதும் கூட.
25 வருடங்களுக்கு முன்னர் ஈழத்திலிருந்து பெயர்த்தெடுக்கப்பட்ட அதே சிந்தனை முறையோடு வாழ்ந்துகொண்டிருக்கும் எமது சிந்தனை முறையின் வளர்ச்சியில் இப்போது 50 ஐ எட்டுகிற வயது, ஆக, திண்ணைச் சண்டை நடத்தியே ஆகவேண்டும் என்று பலர் நம்புகிறார்கள் போலும்.!
ஆக, இந்தப் பிரச்சனை என்னைப் பொறுத்தவரைக்கும் எனது தோழர்களைப் பொறுத்தவரைக்கும் முடிபிற்கு வந்துவிட்டது. இதில் மேலதிகமாக ஏதும் இல்லை.
இதனூடு சொல்லப்பட்ட அரசியல் குறித்த விடயங்களை வேண்டுமானால் மறு விவாதத்திற்கு உட்படுத்தலாம்.
இதைவிடுத்து திட்டமிட்டே அவதூறு செய்கின்றவர்களின் ஒவ்வொரு வார்த்தைகளுக்கு இடையிலும் காரணங்களைக் கண்டுபிடித்து இணையத்தளங்களைக் “குழாயடிச் சண்டைக் களமாக” மாற்ற விரும்பவில்லை. அதனை நீங்கள் விரும்பமாட்டீர்கள் என்பது எனது நம்பிக்கை.
இதற்கென்றே இணையத்தளங்களும், சஞ்சிகைகளும் உள்ளன அவதூறுகளில் ஆர்வமுள்ளவர்கள் அங்கு சென்று தாராளமாக உலாவரலாம். இனியொருவில் ஏராளமாக வெளியாகும் கட்டுரைகளுக்கு உங்கள் ஆக்கபூர்வமான பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழரங்கத்திற்கு,
அரசியலற்ற வாதம் ஒன்றிற்கு விளக்குமாற்றுக்கு பட்டு குஞ்சம் கட்டுவது போல
கட்டுவதை ஒரு மா.லெ இயக்கம் அரசியலின்மையை திரைகிழித்து அதனுள் இருக்கும் ஆள்காட்டி வேலை மற்றும் தனி மனித வன்மத்தால் கிடைத்த இப்பேறு இவற்றை அம்பலப்படுத்துவது அரசியல் ரீதியாக மிகச்சரியான நடவடிக்கைதானே.. மேலும் இவற்றுக்கு ஒரு ஜனநாயக பூர்வமான விசாரணையை பொதுவானவர்கள் முன்னிலையில் தாங்கள் தலைமை தாங்காமலும் நடத்த முன்வந்து இருக்கிறார்கள். அரசியலற்ற தன்மையில் சில மார்க்சிய வார்த்தைகளை பிரயோகிக்க தெரிவதால் மாத்திரமே தங்களை மார்க்சியவாதியாக கருதும் சிலருக்கு அரசியலை விட அரசியலை சொன்ன விதம்தான் புரியாமல் போகிறது. என்ன செய்ய•.குகநாதன் பணத்தை திருடி விட்டு ஓடி டிமிக்கி கொடுத்த ஏமாற்றுக்காரனா என்பதை விட அவனிடம் பணத்தை பறிகொடுத்தவன் திருப்பி பறிமுதல் செய்ததில் முறைதானே உங்களுக்கு மையமான அரசியல் போல படுகிறது.
அமைப்பின் செயல்பாட்டை அரசியல் ரீதியாக அணுக வேண்டும் என அதிருப்தியுற்ற உங்களது தோழர்களுக்கு நீங்கள் அறிவுறுத்தியதாக சொல்லி உள்ளீர்கள். ஒன்று ம•க•இ.க அரசியலற்ற போராட்டங்களை அரசியலை முன்னெடுப்பதாக இருக்க வேண்டும். அல்லது இவை பற்றிய அறிவு உங்களுக்கு மாத்திரம்தான் (உங்கள் நண்பர்களுக்கெல்லாம் அல்ல, அதற்கான தகுதி இல்லை என்பது அவர்களது விமர்சனத்தின் அரசியலற்ற
தன்மையில் உள்ளதாக நீங்களே சொல்லி இருப்பதால்) அறவே இல்லாமல் இருக்க வேண்டும். உண்மை ஒன்றுதானே இருக்க முடியும். இதுவும் தீர்ப்பு என்று எழுத வந்து விட மாட்டீர்கள் என நினைக்கிறேன்.
என்ன விமர்சனங்களை அரசியல் ரீதியாக முன்வைத்தீர்கள் ? அதனை உங்களது எந்த அரசியலுக்காக சகித்துக் கொண்டு வாளாதிருந்தீர்கள். ? சில முகங்களுக்காக என நீங்கள் கருதினால் இந்த தன்மை குகநாதனின் முகத்துக்காகவும் நடந்திருக்கலாம் என குற்றச்சாட்டை முன்வைக்கலாமா? அப்படி முன்வைக்கும் பட்சத்தில் நீங்கள் உங்களை குற்றமற்றவர் என நிரூபிக்குமாறு குற்றம் சாட்டுபவர்கள் சொன்னால் நீங்களே முன்வந்து நிரூபிப்பீர்களா? உங்களது பல நடவடிக்கைகள் கூடத்தான் சந்தேகத்திற்குரியதாக இருக்கிறது. அதற்காக உங்கள் மீது விமர்சனம் வைப்பது சரியா அல்லது உங்களது அரசியல் நிலைப்பாடும் சமூகத்தில் உங்களது பாத்திரமும் நடைமுறையில் விரைவில் வெளியே மக்களுக்கு தெரிந்துவிடும் என்ற அறிவியல்பூர்வமான கண்ணோட்டம் தவறா? தங்களுடன் தொடர்பில் வருபவர் என்ன செய்கிறார் அல்லது எதிரி என்ன செய்கிறார் என்பதை ஒற்றரிந்து கொண்டே இருக்கும் அளவுக்கு அமைப்பிற்கு அரசியல் சித்தாந்த நடைமுறை வேலைகளில் வெற்றிடம் இருக்காது என நம்புகிறேன். தளபதிகளுக்கு இருப்பதற்கு சிவசேகரத்தின் கவிதை காரணம் என்றும் சொல்ல மாட்டேன்.
(copy to: வினவு, தேசம் நெட், தமிழரங்கம், இனியொரு)
தமிழரங்கத்திற்கு,
தமிழ் தேசியத்திற்கு இடையில் உள்ள வேறுபாட்டின் குறிப்பான அம்சம் என்ன என்று கேட்பதோ அல்லது புலிகளின் உங்களது எந்த விமர்சனத்தை யாரும் மறுத்து பேச முடியாது என கேட்பதோ அரசியல் ரீதியான கொள்கை பிரச்சினை ப்ற்றியதுதான். ஆனால் அவற்றை நீங்கள் இரண்டு மூன்று வரிகளில் நறுக்கு தெரித்தாற் போல சொல்லி விட முடியும். சந்த்தியார் இதையெல்லாம் சொல்லித் தரவில்லையா என்றெல்லாம் நான் நக்கலடிக்க மாட்டேன். உங்களது கடந்தகால ரொமாண்டிச அரசியல் உட்புகுதல் மற்றும் பிற நோஸ்டால்ஜியாக்களை வைத்து உங்களை மதிப்பிடவும் மாட்டேன்.
புலிகளை பற்றிய உங்களது விமர்சனம் தன்னளவில் எந்த வகையிலும் விமர்சனத்திற்கே தகுதியற்றது. இது ஒரு மனநோய். இந்த மனநோயின் அறிகுறி என்னவென்றால் நடுத்தரவர்க்க தடுமாற்றங்களும் சிந்தனையும்தான். உடனே நான் தட்டு கழுவிதான் பிழைக்கிறேன் என்று சோபா சக்தி போல ஒப்பாரி வைக்க மாட்டீர்கள் என்பதும் எனக்கு தெரியும். ஏனெனில் நான் கூறுவதன் உள்ளே பொதிந்து கிடக்கும் அரசியலை நுண்மையாக புரிந்துகொள்ளும் வல்லமை கொண்டவர் தாங்கள்.
இலங்கை தமிழ்தேசிய அரசியலில் கடந்த இரு ஆண்டுகளாக அவர்கள் அணுகுமுறையில்தான் முரண்பட்டு இருக்கின்றீர்கள். உங்களது வார்த்தைதான் அணுகுமுறை, மறந்தும் அரசியல் ரீதியில் என சொல்லவில்லை. குகநாதனை கடத்திய பணம்பறித்த அணுகுமுறைதான் உங்களுக்கு அரசியலாக படுகிறது. மக்கள் கலை இலக்கிய கழகம் நான் அறிந்த வரையில் சுயநிர்ணய உரிமையை ஆதரிக்கும் அதே நேரம் புலிகளின் பாசிச தலைமையையும் விமர்சிக்கின்றது. ராஜீவ், பத்மநாபா கொலை போன்ற இன்னும் சில சரியான நிலைப்பாடுகளில் அவர்களை ஆதரித்தும், பல சந்தர்ப்பங்களில் விமர்சித்தும் இருக்கிறது. ரதி விசயத்தில் வந்த கடைசி வினவு கட்டுரையிலும் பல புஜ இதழ்களிலும் இதற்கு ஆதாரங்களை பல முறை தமிழ் தேசிய வாதிகளின் அவதூறுகளுக்காக அவர்கள் எடுத்துக் காட்டினார்கள். நீங்களும் அதனை படித்திருப்பீர்கள் என நம்புகிறேன். எனவே திடீரென சூழ்நிலையின் கைதியாக மாறிய குகநாதனை போலவே ம•க•இ.க வும் தமிழ்தேசியத்திற்கு வால் பிடித்து விட்டதாக நீங்கள் கருதினால் அப்போதே சொல்லி விவாதித்து இருக்கலாம். இப்போதும் முரண்பாடு என்ன என தெரிவிப்பதை விட கொசிப்புகள் முக்கியமான அரசியலாக உங்களால் முன்னிறுத்த படுவதால் அரசியலற்ற வாதம் அரசியல் போன்ற பம்மாத்துடன் முன்னுக்கு வருகிறது.
(copy to: வினவு, தேசம் நெட், தமிழரங்கம், இனியொரு)
தமிழரங்கத்திற்கு,
புலிகளை நீங்கள் விமர்சனம் செய்யும் முறை (அதாவது வடிவம்) மற்றும் திடீர் மார்க்சியவாதிகள் அதாவது முன்னாள் திருடர்கள் மற்றும் பொறுக்கிகள் அல்லது பயம் கொண்டவர்கள் இணைந்துதான் ஒரு மாலெ அமைப்பின் அரசியலை தீர்மானிக்கின்றார்கள் என நீங்கள் கருதுகிறீர்கள். வடிவம் உள்ளடக்கத்தை விட பெரியது யாருக்கு என மார்க்சிய அரிச்சுவடி தெரியாதவன் கூட சொல்லி விடுவான். புலிகளை விமர்சிப்பது இயக்கத்தின் சிந்தாந்தம் நடைமுறை ஜனநாயகபண்பு மக்களிடேயேயான பணிகள் அதன் திட்டம் நேச அணி தந்திர அரசியல்கின் தொகுப்பு என பல அம்சங்களை மனிதர்கள் அடங்கிய குழுவின் சமூக செயல்பாட்டில் இருந்து அளவிடுவது. உதாரணமாக கருணா ஒரு பெண் போராளியுடன் கள்ள உறவு வைத்திருந்தான் என்பது உண்மையாக இருந்தாலும் அவன் அரச படைகளுக்கு இயக்கத்தின் செயல்பாடுகளை காட்டிக் கொடுத்தான் என்று பார்ப்பது சரியானது. இதற்காக கருணாவை விமர்சிப்பவர்கள் பிரபாவை ஆதரிப்பவர்கள் என்றெல்லாம் மேத்ஸ் வாத்தியார் மாதிரி பேச மாட்டீர்கள் என நினைக்கிறேன்.
உங்களுக்கு விசா கிடைக்காத்து அல்லது பாதுகாப்பு இல்லாமல் இருப்பது உண்மையாக கூட இருக்கலாம். அன்று உமா மகேசுவரனை நம்பி தோணி ஏறியபோது இதனை விட மோசமான பாதுகாப்பின்மை உங்களுக்கு இருக்கவில்லையா.. பிளாட் இயக்கத்தின் தோற்றத்திலே இருக்கும் துரோகத்தை பற்றி நான் கதைக்க விரும்பவில்லை. அப்படியானால் உங்கள் மனதுக்கு பிடித்தால் மாத்திரம் ரிஸக் எடுப்பீர்களா? ஒரு அமைப்பின் அரசியலை சேறடித்து அவதூறு செய்துவிட்டு இதனை எதிர்கொள்ள இயலாமல் சாக்கு போக்கு சொல்கின்றீர்கள். ஏலாதவன் இடுப்ப சுத்தி பதினெட்டு சுருக்கருவாள் என்பார்கள் எங்க ஊர்ப்பக்கம்.. அது சரியா போச்சே
(copy to: வினவு, தேசம் நெட், தமிழரங்கம், இனியொரு)
ரயா தான் பிடித்த முயலுக்கு மூன்றூ கால் என்று நிற்கிறார். அருள் சகோதரர்கள் தாங்கள் கட்டப்பஞ்சாயத்து செய்ததை ஒத்துக் கொண்டதாக எழுதுகிறார் இந்த மன நோயாளி. அருள் செழியனோ, எழிலனோ எல்லா இடத்திலுமே குகநாதனை பிடித்ததை மறுக்க வில்லை. சட்ட ரீதியாகவே எப்.ஆர் போட்டு நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் என்றே பேசி வருகின்ற நிலையில், இவர் ஏதோ அவர்கள் கட்டப்பஞ்சாயத்து செய்ததை ஒத்துக் கொண்டது போல பொய்யாய எழுதுகிறார். தவிறவும் குக்நாதன் அருள்செழியனை 2005 கட்டப்பஞ்சாயத்து செய்தது பற்றி தனக்கு கவலை இல்லை என்று சொல்லும் ரயா குகநாதன் மீது சட்ட ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கையை கட்டப்பஞ்சாயத்து என்று கதையளக்கிறார். இதுதான் மன நோய் மார்க்ஸியம்.
மக்கள் கலை இலக்கியக் கழகம் என்பது ரயாகரன் போன்று ஒரு தனி நபரல்ல அது ஒரு மார்க்ஸிய சமூக இயக்கம் அது ரயாகரன் அளவிற்கு குழாயடிச் சணடையில் இறங்காது. ரயாகரனுக்கு நவாலனும் இனியொருவும், புதிய திசைகள்தான் பிரச்சனை, நாவலன் மீது சேற்றை வாரி இறைக்கக் காத்திருந்தவருக்கு கிடைத்தது. குகநாதன் என்ற மோசடி மன்னனின் கதை. பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள் தரப்பில் இழந்த பணத்தை மீடக எடுத்த நடவடிக்கையை ரயா நாவலனுக்கு எதிராக திருப்புகிறார். நல்ல மார்க்சியம்தான் ரயா. இப்படியே இருங்கள் எழுதுங்கள்.
தமிழரங்கத்திற்கு,
சம்பவம் நடந்த்து உண்மை. சம்பந்தப்பட்டவர்களும் உண்மை. ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் யார் என்பதில்தான் வேறுபாடு. உங்களுக்கும் குகநாதனுக்கும் உள்ள ஒற்றுமை ஒன்று உள்ளது. அதனை தன்மைரீதியில் அணுகி அதன் அரசியலை வெளிக்கொணர்தல்தான் சரியானதும் கூட• குகநாதன் மீது கடத்தல் கட்டப்பஞ்சாயத்து போன்ற தாக்குதல் நடந்து உள்ளது. ஆனால் அந்த நபர் எதாவது வக்கீல்களை அணுகி தன் மீது நடந்த தாக்குதலை நீங்கள் இருவரும் நம்பும் நீதிமன்றத்திற்கு கொண்டு போயிருக்கலாம்தானே. சரி அதுதான் வேலைக்கு ஆகல•எத்தன மனித உரிமை அமைப்புகள் இருக்கு. அதுக்கு கொண்டு போயிருக்கலாம். வர்க்கம் தடுத்திருந்தா கூட ஹென்ரி திபேன் இடம் கூட போயிருக்கலாம். இல்ல இருக்கவே இருக்காங்க உண்மை அறியும் குழு என்ற பெயரில் புத்தகம் போட்டே போராடும் பேராசிரிய பெருந்தகைகள் இருக்கிறார்கள். மார்க்சிய இயக்கங்கள் பற்றிய கொசிப்பு என்றால் முண்டியடித்து கொண்டு அரங்க கூட்டங்களை கூட ஏற்பாடு செய்து தருவார்கள். அப்படி அவர் செய்யவில்லை. ஒரு பத்திரிகையாளர் சந்திப்ப நடத்தி இருக்கலாம். இத அவரு செய்யாத்து மாத்திரம் பிரச்சின இல்ல• ஏன் இப்படி செய்யல என தாங்களும் பேட்டியில் கேட்கவில்லை. பிரான்சு கற்றுத் தந்த ஜனநாயகம் இதுதானா
சுயவாக்குமூலத்தையும் உங்களது கட்டுரையையும் மாத்திரமே ஏற்று அவற்றையை வரம்பாக தாங்களே வரையறுத்து விவாதிக்க முனைவது எந்த மார்க்சியவகைப்பட்ட வாதம் ரயா. ஒரே ஒரு பொதுவிசாரணை தங்களது அரசியலை கேலிக்குள்ளாக்கி விடும் என்றால் பொதுவிசாரணை என்ற வடிவம் கட்டப்பஞ்சாயத்தாக இருக்கும் என்பது உங்களது கருத்து. இல்லை எனில் உங்களது ஜனநாயகத்திற்கு எதிரான இந்த அரசியலை கேலிக்குள்ளாகிவிடும் என்ற பரிதாபத்தில் இருந்து விடுதலை அடைய தூக்கி எறியுங்கள்.
அத்வானி கும்பலாக அருள் எழிலன் மற்றும் செழியன் போன்றோரை ஒப்பிடும் தாங்கள், அமைப்பினை எப்படி மதிப்பிடுகிறீர்கள் என்பதும் புரிகிறது. இந்தியாவுக்கு வரச்சொல்வது பாபர் காலத்துக்கு கூப்பிடுவது போல நடக்க முடியாத ஒன்றாக உங்களுக்கு படுகிறது. இடத்தை காலத்துக்கு எதிர் நிறுத்தும் கோழைத்தனத்துடன் ஒப்பிடுகையில் கமிசார்கள் சரியாகத்தான் இருக்கிறார்கள்.
(copy to: வினவு, தேசம் நெட், தமிழரங்கம், இனியொரு)
ரயா ஒரு தீர்ப்பெழுதி விட்டார். அந்த தீர்ப்புக்கு ஏற்ற மாதிரி நியாங்களை உருவாக்குகிறார். அருள் செழியன் குகநாதனிடம் இழந்த பணத்தை மீட்டது தொடர்பாக நடந்தது என்ன? எதற்காக குகநாதனை சென்னையில் எப்.ஐ.ஆர் போட்டு போலீஸ் பிடித்தது. இதே போலீசால் 2005-ல் குகநாதன் ஆட்களால் செழியன் கடத்தி கட்டப்பஞ்சாயத்து செய்யபப்ட்டது உள்ளிட்ட எந்த விசாரணைக்கும் ரயா தயாரில்லை. அவரைப் பொறுத்தவரையில் இலங்கை அரசோடு சேர்ந்தியங்கும் குகநாதனும், அவரது மனைவி சொல்வதுவுமே வேத வாக்கு. எவ்வித முன் முடிவுகளும் அல்லாமல் இந்தப் பிரச்சனையை முழுவதுமாக விசாரிப்போம் என்று சொல்லும் ம.க.இ.க வையும் இப்போது குற்றம் சொல்லத் தோன்றுகிறது அவருகு. இத்தான் எங்கள் ஊரில் நாட்டாமை செய்யும் கட்டப்பஞ்சாயத்து என்பார்கள்.
தமிழரங்கத்திற்கு,
புஜ வாசகன் நீங்கள் என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன். அப்படி எப்போதும் எதிரியை கற்பிதம் செய்து அதற்காகவே அவரை பின்தொடர்ந்து அவர் விடும் வெளிக்காற்றை நாடி பிடித்து மாத்திரமே அவர்தம் அரசியலை புரிந்து கொள்ள வேண்டிய அவலத்தில் இந்தியாவில் யாரும் இருப்பதாக தெரியவில்லை. எனவே எக்ஸ் அல்லது ஒய் இன்னார் என அம்பலப்படுத்த வேண்டிய அரசியல் வெறுமையும் இங்கு இல்லை என கருதுகிறேன்.
அப்புறம் புஜ வாசகன் என்ற பெயரில் ஒரு பின்னூட்டத்தை அனுமதித்து இருக்கின்றீர்கள். காலச்சுவட்டுக்கு நாவலன் லிங்க் கொடுத்திருக்கிறார். அவரை அரசியல்படுத்தி எடுக்க வைக்க சொல்லி உள்ளார். இதைத்தான் வேறு தன்மையில் ரதியை எழுத அனுமதித்த வினவுக்கும் சொன்னீர்கள். மாற்றுக் கருத்தாளர்களுடன் பேச மறுக்கும் இந்தப் போக்கின் இறுதியில் மக்களுடன் பேச மறுக்கும் பெரிய அண்ணன் தனம் நமக்கு வந்துவிடும் என்று கூட புரியவில்லை. காலச்சுவடை விரும்பி படித்தால் உங்கள் தோழர்களை கூட வர்க்க எதிரியாக்கி விடுவீர்களோ ? கொள்கை முக்கியம் ரயா ! காலச்சுவடு படிக்கும் போர்டு பவுண்டேசன் ஆதரவாளர்களால் பாட்டாளி வர்க்கம் தன்னை கறைபடுத்த கூடாதுதானே! அம்சாவின் சென்னை பாதிப்பு என்ற தங்களது குற்றச்சாட்டை புஜ வாசகன் நிரூபிக்க வேண்டும். பெயரை வைத்து அரசியல் பண்ண வேண்டாம் என்பதால் இதனை இத்துடன் மட்டறுத்து பதிலுக்கு வருகிறேன்.
அம்பலப்படுத்தியதறகாக விசாரணைக்கு கூப்பிடுவது என்ன நியாயம் என்பதுதான் உங்கள் வாதம். எழுதுவது கிசுகிசு பத்திரிகை என்றால் கூட பத்திரிகை தர்மத்தின் அடிப்படையில் தான் உண்மை என கருதும் ஒன்றைத்தானே எழுதுபவன் எழுத வேண்டும். தான் எழுதியதற்கு தான் நேர்மையுடன் இல்லாத எத்தனை புத்தி ஜீவிகளை பாரதி உள்ளிட்டு விமர்சிக்கிறோம். எழுதியவுடன் ஆசிரியன் செத்துப் போகிறான். இனி படைப்புடன்தான் வாசகன் பேச வேண்டும் என்பதுதானே கலை கலைக்காகவே தரப்பு முன்வைக்கும் வாதம். அதைத்தானே விசாரணை என்றவுடன் மறுத்து நீங்களும் முன்வைக்கிறீர்கள் ரயா. மார்க்சியவாதியாக இருப்பதை விட முக்கியம் சொல்லுக்கும் செயலுக்கும் ஒற்றுமை இருக்க வேண்டும். இப்படி இருந்தால் எளிதாக நீங்கள் மார்க்சியத்தை நோக்கி வர ஆரம்பித்து விடுவீர்கள். இது முடியாத போது யார் யாரெல்லாம் வருகிறார்களோ அவர்களை ஆள்காட்டவும் அவதூறு செய்யவும் கிளம்பி விடுகிறீர்கள்.
(copy to: வினவு, தேசம் நெட், தமிழரங்கம், இனியொரு)
தமிழரங்கத்திற்கு,
பணத்தை பறிகொடுத்த எவரும் பறித்தவனை ஏமாற்றி வரவழைப்பதற்கு ஒரு அரசியல் ரீதியாக சரி என நிரூபித்துதான் பறிக்க வேண்டும் என்றால் இதைத்தான் சிபிஎம் இன் தொழிற்சங்க நடவடிக்கைகளே அரசியல் போல இருக்கும் அரசியல் சொல்கிறது. உரிமையை நிலைநாட்ட வழிமுறை முக்கியம் என்கிறார்கள். தொழிலாளி வர்க்கத்தின் அவலத்தை படம் பிடிக்க போகும் ஒரு புகைப்பட கலைஞன் கூட முதலாளியை ஏமாற்றி எடுத்துவிடக் கூடாது என்பதுதான் ஆளும் வர்க்கத்தின் வாதம். லஞ்ச ஊழலை அம்பல படுத்தும் தெகல்காவிற்கு அதற்கு பயன்படுத்திய முறையின் நியாயமின்மையை எடுத்து அதனை முதன்மை படுத்துகிறீர்கள்.
குறிப்பாக பேசியது நாவலனை பற்றித்தான் என்று வாக்குமூலம் அளித்துள்ளீர்கள். அதுதான் உங்களது அரசியல் உள்ளடக்கமும் கூட• புதைபொருட்களை நோண்டி நுங்கு எடுத்து வளர வேண்டிய அளவில் மாலெ அரசியல் சிறுபிள்ளைத்தனமானது அல்ல என்பதால் சாயங்களால் சிங்கமாக முயலும் நரிகளுக்கு பாரிய அளவில் புரிந்து விடுவதில்லை. நாவலனது பதற்றம் என்ற வடிவம்தான் அவரது சுய அம்பலமாதல் என்ற தங்களது கணிப்பு அரசியலை பின்னுக்கு வைத்திருக்கிறதுதானே.. அரசியலுக்குள் செல்ல என்ன இருக்கிறது அதில். சரி நியாயமாக இச்சம்பவத்தில் நேர்மறையில் சொல்லுங்கள். ஒருவேளை ரயா நாவலனின் பாத்திரத்தை ஏற்க வேண்டியிருந்தால் என்ன செய்திருப்பார் என்பதை தமிழரங்கம் முன்வைக்குமா ? அப்படி முன்வைக்கையில் எந்த எந்த இடத்தில் எந்த எந்த அரசியல் உள்ளடக்கத்தில் தான் மார்க்சியத்தை பின்பற்றுகிறேன் நாவலன் தவறுகிறார் என்பது பற்றி சொல்ல வேண்டும். அதுதான் நியாயமானவர்கள் செய்யும் செயல்.
மார்க்சியத்தை ஏமாற்றி தேசியம் அவர்களை கையில் போட்டுக் கொண்டு குகநாதனின் சூழ்நிலைக்கைதி என்ற அவலத்தை அவருக்கு வழங்க மறுத்த தன்மையை தேசியத்தின் பெயரால் விமர்சிக்க வந்த்தாகவும் இதனுடன் தாங்கள் கருதுவதை எல்லாம் ஒரு விசேட கவனத்திற்கு தங்களுக்கு வந்த்தும் தற்செயலானது அல்லதான்.
(copy to: வினவு, தேசம் நெட், தமிழரங்கம், இனியொரு)
தமிழரங்கத்திற்கு,
பாசிச கூறுகளுடன் நீங்கள் குற்றம் சாட்டுபவர்கள் நடந்து கொண்டார்கள் என நிரூபிக்க வேண்டும். நிரூபிக்கும் வரை அவை குற்றமல்ல, குற்றச்சாட்டுதான் என்பதும் நீதிமன்றங்களின் வழியே ஜனநாயக புரட்சியை நிறுவ விரும்பும் தங்களுக்கு தெரியாத ஒன்று இல்லை. ஆனால் இப்படித்தான் நாடாளுமன்ற வழியில் புரட்சியை நடத்த இங்கு பலரும் முயன்று வருகிறார்கள் என்பதையும் தங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். குற்றச்சாட்டை நிரூபிக்க முன்வராத பட்சத்தில் அவை அவதூறுகள்தான். குகநாதனை சரத் பொன்சேகா உடனும் மாலெ அமைப்பினர் அறிந்த நபர்களை மகிந்த உடனும் நிறுத்தி நியாயம் கற்பிப்பதற்காக ஆள் முக்கியமல்ல கொள்கை முக்கியம் என்று வாதாடும் நீங்கள்தான் மையப்புள்ளியே நாவலன்தான் உங்களது அரசியலுக்கு என்பதையும் இதே கட்டுரையில் ஒப்புக் கொண்டிருக்கின்றீர்கள். இந்த முரண்பாடு உடைய கட்டுரையை உங்களது தோழர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. உங்களுக்கு புரியாது என்பதை தனியாக சொல்ல வேண்டியது இல்லை.
பின்னூட்டங்களை கையாளும் தங்களது இரட்டை நிலை பற்றி ஏற்கென்வே சொல்லி விட்டேன். மேலும் வாசகரின் அமைப்பு நிலை அறிவதற்கான ஆவல் என்ற ஜனநாயக உரிமைக்காக சரியாக சொன்னால் ஒரு பண கொடுக்கல் வாங்கல் இன்னும் சரியாக சொன்னால் ஒரு ஏமாற்றிய முதலாளியின் ஏமாற்றுவதற்கான உரிமை மறுக்கப்பட்ட ஒரு அவலத்தின் முன் அமைப்பின் நிலைப்பாட்டை கோருகிறீர்கள். சம்பளம் தராமல் ஏமாற்றிய முதலாளி அவனிடம் வேலை பார்த்த தொழிலாளியால் கடத்தியோ அல்லது மிரட்டியோ பணம் பறிகொடுத்து இருந்தால் கூட நீங்கள் வகுத்த மார்க்சிய முறையில் அதாவது மிகவும் நாசூக்கான முறையில் மாத்திரம்தான் வசூலிக்க வேண்டும் என்கிறீர்கள். எங்களது தேசத்தில் இதற்கு முன் இப்படி பேசியவன் கரம்சந்த காந்தி. ஒத்துழையாமை இயக்கம் முன்னணிக்கு வந்தபோது போலீசாரின் தாக்குதலில் இருந்து தப்ப எதிர்தாக்குதல் நடத்திய மக்களை அகிம்சைக்கு பக்குவப்படாத மக்களால் போராட்டத்தை தள்ளி வைப்பதாக சொல்லி போராட்டத்திற்கு துரோகம் செய்தான்,
தற்செயலானது அல்ல என்ற சொல்லுக்கு நீங்கள் அளித்துள்ள பதில் எனக்கு மிகுந்த மன வேதனை அளித்த்து. முரண்பாடுகளுக்கு பதில் அளிக்கவில்லை என்பதை எங்குமே இதுவரை குறிப்பிடாத தாங்கள் தற்போது பொதுவெளியில் அதை பேசுகின்றீர்கள். நீங்கள் குறிப்பிட்ட முரண்பாடுகள் அரசியல் சிந்தாந்த நடைமுறை யில் அமைந்திருந்து அவர்கள் உங்களுக்கு பதில் தர மறுத்தார்களா ? அல்லது புறக்கணிக்கத்தக்க அளவில் தற்போது முன்வைக்கும் ஏதாவது சிறுபிள்ளை அரசியல் வேறுபாடுகளை முன்வைத்தீர்களா. இதையெல்லாம் விட முக்கியமானது உங்களது அவல இறைஞ்சுதல்கள்தான்.
(copy to: வினவு, தேசம் நெட், தமிழரங்கம், இனியொரு)
தமிழரங்கத்திற்கு,
உங்களுடன் பாராட்டிய உறவு, பதில் கிடைக்காமல் பாதிக்கப்பட்ட எமது சர்வதேசியநிலை இதனால் பாதிக்கப்பட்ட யாம் என தொடரும் தங்களது கழிவிரக்க புலம்பலில் ஒழிந்திருக்கும் விமர்சனம் தன்னளவில் நேர்மையற்ற ஒன்று எனக் கூட தெரியாமலா நீங்கள் எழுதி இருப்பீர்கள். பெரியண்ணன் வேலை தொடர்ந்து நடப்பது போன்ற தோற்றத்தை உருவாக்க முனைகிறீர்கள். ஆனால் நாவலனுடன் உங்களது உறவை புரிந்த பிறகுதான் அரசியல் ரீதியாக பார்ப்பேன் என்ற அடுத்த வரியில் அம்மணமாக நிற்பது தெரியவில்லையா
கடந்த காலத்தில் ஒருவர் என்ன செய்தார் என்பது ஒரு பாயிண்டுதான். அதனை விட முக்கியமானது தற்போது எப்படி புரிந்து கொள்கிறார் எவ்வாறு சமூகத்தில் செய்ல்படுகிறார் என்பதுதான். நாவலனோ அல்லது அருள் சகோதர்ர்களோ எப்போதுமே சரியாக இருந்தார்கள் என சொல்லவில்லை. ஆனால் வினவு துவங்கிய காலத்திற்கு பிறகுதான் அறிமுகமாகி அறிமுகமான காலம் தொட்டு தவறுகள் எதுவும் காணப்படாது இருக்கிறது. தொடர்ச்சியாக ஒருவர் தன்னை தனதியல்பை மறைத்து புரட்சிகர அமைப்புகளுடன் நட்பை பேண முடியும் என்ற கொள்கை முடிவு தங்களுக்குள்ளது. தவிர்க்க இயலாமல் நடைமுறை என்றவுடன் அது உங்களை குத்திக்காட்டியது போலவும் பட்டிருக்கும். தனக்கு தெரிந்த தவறானவர்கள் தோழர்களுடன் கலந்து உறவாட துவங்கினார்கள் என்றால் அத்தவறுகள் யாது அதன் அரசியல் தொடர்பும் அத்தவறின் தொடர்ச்சியும் பற்றி குறிப்பாக விளக்க வேண்டும். 2 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள் ரயா
இந்த நிலைப்பாடு மாறுதலுக்குட்பட்டது என்பதை விசாரணையின் ஊடாக மாற்ற வாய்ப்பிருப்பதையும் மறுக்காத நீங்கள், நீங்களிருக்க நாவலனை தோழமையாக புரிந்து கொண்டதால் கொதிப்பேறி, நாவலனே நல்லவன் என்றதன் மூலம் நீங்கள் கெட்டவராகி விட்டீர்கள் நான் மட்டும்தான் விடாது போராடும் நேர்மையானவன் என உங்களுக்கு நீங்களே சான்றிதழ் கொடுத்துக் கொள்ளவும் தயங்கவில்லை. சுயமோகிகள் பற்றிய கட்டுரை தவிர்க்க இயலாமல் ஞாபகத்திற்கு வந்த்து. கடந்த காலத்தை இருவருக்கும் பரிசீலித்து இருவரையும் மதிப்பிட வேண்டும் இல்லை என்றால் உங்களது அரசியல் கடந்த காலத்திலும் தவறானது என்பது உங்களது வாதம். இந்த அழுத்த அரசியலை ரதிக்கு அமல்படுத்த முனைந்த போதே சுட்டிக்காட்டப்பட்ட தாங்கள் ஒரு முதலாளித்துவ பயங்கரவாதிக்கு, சம்பளத்தை சொத்தை ஏமாற்றி தின்பதற்கு உகந்த முறையில் அவனே நினைத்துப் பார்க்க முடியாத ஜனநாயகத்தின் போர்வையில் உதவிக்கு வந்திருக்கின்றீர்கள்.
(copy to: வினவு, தேசம் நெட், தமிழரங்கம், இனியொரு)
தமிழரங்கத்திற்கு,
இந்த சம்பவத்தில் தற்செயலாக அருள் எழிலனுக்கு நாவலன் போன் செய்திருக்கா விடில் குகநாதனுக்கு உங்களை போன்ற மார்க்சிய வக்கீல் கிடைத்திருக்க மாட்டார். குகநாதனும் உங்களது பலவீனங்களை அறிந்துதான் உங்களிடம் மார்க்சிய லெனிய அமைப்பு ஒன்றுதான் என்னை கடத்தியது என்றெல்லாம் பீலா விடுகிறார். இதனை நீங்கள் ஏற்றால் கூட மார்க்சிய லெனிய அமைப்பு ஒன்று உங்களுக்கு தொடர்பில் இருக்கையில் அவர்கள்தானா என ஏன் விசாரிக்கவில்லை. காலம் எல்லாவற்றுக்கும்தான் பதில் சொல்வதாக எல்லோரும் கருதுவது போல படுகிறது. நீங்கள் இப்படி இல்பொருள் பாடிட காலம் என்ன தவறு செய்த்தது.
அருள் எழிலன் நியாயப்படுத்தும் வாதங்களை முன்வைத்திருப்தாக சொல்லுவதற்கு ஆதாரம் என்ன? எந்த சம்பவத்தை நியாயப்படுத்தினார். நியாயப்படுத்துவோர் யாராக இருந்தாலும் அவருடனான அதனை மீறிய நட்பு அயோக்கியத்தனமானது தானே? ஆதாரம் கேட்பது உங்களை பொன்சேகா போல உணர வைத்தால் நான் பொறுப்பல்ல• ஆதாரங்களை முன்வைக்காது பேசினால் அதுதான் நியாயப்படுத்துவது. நியாயப்படுத்தல் என்ற சொல்லே தன்னளவில் நேர்மையற்றதுதானே
குற்றச்சாட்டுகளை உங்களது கட்டுரை வழியில்தான் நிராகரித்து உள்ளார்கள். உடனே ஏன் எனது குற்றச்சாட்டு என முரண்பாடுகளை விளக்குவதுதானே சரியானது. அவர்களை பாதுகாக்க குற்றச்சாட்டை நிராகரிக்கிறார்கள் என்கிறீர்கள். எதிரிகள் கூட மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மீது வைக்க கூசும் அவதூறு. சில ஆதாரங்கள் தர முடியவில்லை. மற்றபடி அந்த அமைப்பில் எவ்வளவு பெரிய தோழராக இருந்தாலும் குற்றச்சாட்டில் இருந்து தவறான முறையில் பாதுகாப்பது என்பதே கிடையாது என்பதை ஆளும்வர்க்கம் கூட மறுக்காது. ரயா வழக்கம் போல சேறடிக்கிறார்
(copy to: வினவு, தேசம் நெட், தமிழரங்கம், இனியொரு)
தமிழரங்கத்திற்கு,
நீங்கள் கூறிய கருத்துக்கு ஒருவரோ அல்லது ஒரு அமைப்போ கருத்து கூறாமல் இருப்பதற்கான அவ்வளவு முகாந்திரமும் இருக்கிறது உங்களது கருத்துக்கு அகவயமாகவே. கருத்து என்ற தரத்திற்கு இருக்கும்பட்சத்தில் எதிரி கூட பதில் சொல்லி விட்டுதான் போவான். சுயவிமர்சனம் செய்யாமல் இருப்பது போதும் எவரது நேர்மையையும் அளக்க என்பதும், எம்மால் தனிநபர் தாக்குதலில் தாக்கப்பட்ட யாராவது யோக்கியனா என இயேசு போல கோருவதும் மார்க்சியவாதிகளின் வாயில் இருந்து வரும் வார்த்தைகளா.. கொஞ்சம் யோசிங்க ரயா..மார்க்சிய வகைப்பட்ட அணுகுமுறைக்கும் உங்களுக்கும் உள்ள தூரமும், தான் திட்டிய எல்லாருமே கெட்டவங்க என்பதால் தான் நல்லவனாகும் அபத்தமும் யாருக்குமே பொறுக்க முடியாது ரயா…
2008 இல் அரசியல் நிலைப்பாட்டுக்காக ஆதரித்திருக்கிறீர்கள். அதில் விமர்சனம் வைத்த்தாக நீங்களே சொல்லவில்லை. இந்த இரண்டாண்டு காலத்தில் நாவலன் தொடர்பில்தான் இருக்கிறார் என்பதும் உங்களுக்கு தெரிந்த்தே. இதில் எதில் தவறினார் என்பதை அரசியல் ரீதியாக முன்வைப்பதுதானே சரி. கருச்சிதைவை காலம் பின்தள்ளி உள்ளது. ஆனால் புத்தாக்கம் என்ற தங்களது போராட்ட முறைதான் சீர்குலைவின் துவக்கம் என்ற புரிதல் இல்லாமல் புத்தாக்கத்தை நாவலனுக்கு பொருத்தும் அணுகுமுறையில் உள்ள சுயவிமர்சனமின்மைதான் ஆக கேடாதனது.
நாவலன் மீதான தனிப்பட்ட வன்மத்தால், அமைப்பு வரம்புக்குள் யார் யாரை ஆள்காட்ட முனைந்திருக்கிறோம் என்ற புரிதல் இல்லாமல் நீங்கள் மொத்த்த்தில் எதுவும் நடக்க கூடாது என்ற தூய பரிசுத்தவாத கண்ணோட்டத்துடன் சீர்குலைவு வேலையை பழைய வரலாற்று பிழைகள் என்ற பெயரில் முன்வைத்து தொடர்ந்து நடத்துகிறீர்கள். இதற்காக எதிர் வர்க்கத்தின் எதிரி வர்க்க நடவடிக்கையான குகநாதனின் ஏமாற்றுத்தனத்திற்கு ஜனநாயகத்தின் சாயம் பூசி பேச வருகிறீர்கள். ரதி என்ற நடுத்தரவர்க்க பெண்ணின் கருத்து சுதந்திரத்தை விடவும் குகநாத்தன் என்ற பொறுக்கி முதலாளி தனது தொழிலாளியிடம் ஏமாற்றுவதற்கான ஜனநாயகம் உங்களது வர்க்க நிலை அரசியலுக்கு உகந்த்தாக படுகிறது. அதுதான் இதனை கட்டப்பஞ்சாயத்து என்றும் சொல்ல வைக்கிறது. தொழிற்சங்க அனுபவத்தில் இதுபோன்ற பல கட்டைப்ஞ்சாயத்துகள் வரும்போதெல்லாம் தளபதிகள் போல சிந்திக்காமல் தோழர்கள் போல சிந்தித்துதான் அரசியலை தொழிலாளி வர்க்கத்திற்கு புரிய வைக்கிறார்கள் தோழர்கள்.
(copy to: வினவு, தேசம் நெட், தமிழரங்கம், இனியொரு)
தமிழரங்கத்திற்கு,
எங்களது புத்தாக்க நடவடிக்கை அரசியில் விமர்சனம் எல்லாம் சரியாக உள்ளது. மிகச்சரியாக அம்பலப்படுத்துகிறோம் என்ற தீர்ப்புகளைத்தான் ஆதாரங்களாக ராமன் பிறந்த இடம் போல முன் வைக்கிறீர்கள். ஆனால் தனது மதிப்பீடு விசாரணையால் தவறு என தெரிய வந்தால் மாற்றிக் கொள்கிறோம் என்கிறது மக்கள் கலை இலக்கிய கழகம். இரு தரப்புக்கும்தான் எத்தனை வேறுபாடு. எம்மை பொறுத்தவரையில் என்றுதான் இவற்றை சொல்லி உள்ளீர்கள். சமூகத்தை பொறுத்தவரை என்று இதுவரை சொல்லவில்லை. தனிப்பட்ட பாராட்டோ அல்லது வன்ம்மோ இந்த மூளையில் இருந்துதானே வரும்.
தனிநபர்களை மையப்படுத்திதான் எதார்த்தம் இயங்குவதாக எல்லா புத்திஜீவிகளும் கருதுகிறார்கள். கருத மட்டும்தான் செய்கிறார்கள். அதனை மையமாக வைத்து கம்யூனிச அவதூறை மந்தைகள் சோ அண்டு சோ என பேச துவங்குகிறார்கள். கம்யூனிச போர்வையில் தொடர்ந்து நீடிப்பதால் உங்கள் வாயால் இதனை சொல்ல வைத்திருக்கிறார்கள். அம்சா வந்துதான் இதனை செய்ய வேண்டுமா என்ன வாழ்நிலைதான் சிந்தனையை தீர்மானிக்கிறது இல்லையா ரயாகரன்.
இதுபோன்ற சில்லறை விசயங்களுக்கு மாபெரும் மகிந்தா சரத்பொன்சேகா மோதல் என்றெல்லாம் பிலட்ப் கொடுப்பதால்தான் பல சமயங்களில் மார்க்சியவாதிகளை மற்றவர்கள் காமடியன்களாக பார்க்க துவங்குகிறார்கள். பொறுப்பின்மையோடு கூடிய வார்த்தைகளை பாவிக்கும் சக தோழராக இருந்தாலும் சுயவிமர்சன் தருதல் என்பதை வலியுறுத்திதான் நடைமுறை உள்ளது. உங்களுக்கோ சுவீப்பிங்காக பேசுவதற்கு அரசியல் உள்ளது என கருதுகிறேன்.
(copy to: வினவு, தேசம் நெட், தமிழரங்கம், இனியொரு)
தமிழரங்கத்திற்கு,
முக்கியமற்ற ஒன்றை முக்கியமானதாக மாற்ற அரசியல் சாயம் அடிப்பது அதனுடன் சில கழிவுகளையும் உடன் அழைத்து வருகிறது அதுதான் நீங்கள் எழுதிய மற்றும் சில குறிப்புகள். நான் எழுதிய கருத்துக்களின் அடிப்படையில் என்னை ரயாவின் மறுபக்கமாக சிரீ ரங்கன் குறிப்பிட்டு உள்ளார். எனக்கு அதில் வருத்தமில்லை. இல்லை என மறுத்து வாதாடவும் முன்வர மாட்டேன். மறுபக்கம் என்ற தீர்ப்பை எழுதும்போது அதற்கான சான்றாவணங்களை சமர்ப்பிக்கும் போதுதான் அந்த குற்றச்சாட்டுக்கு மதிப்பளிக்க முடியும். மற்றபடி தங்களது சொந்த அவதானிப்பின்படி கட்டப்பஞ்சாயத்து ஆள்கடத்தல் போல ரயா வின் மறுபக்கம் என சொல்வதெல்லாவற்றையும் நானும் நிராகரிக்கிறேன்.
1. குகநாதனை போலீசுடன் சேர்ந்து கடத்தி அல்லது கடத்தி பிறகு சேர்ந்து இதனால் ஏற்படும் பாரிய அரசியல் திசைவிலகல் என்ன? முதல் பாயிண்டாக இதனை வைக்குமளவுக்கு இதில் உள்ள பாசிசம் என்ன?
2. மீள்பிரசுமும் அத்தகைய கேள்வியை உள்ளடக்கியதே. தேசம் நெற் இல் உள்ள சேறடிப்புகளுக்கு சக தோழர் என்ற முறையில் ஒரு பின்னூட்டம் கூட போடாத காரணம் என்ன ரயா? மௌனத்தை சம்மதம் என்றுதானே எடுக்க முடியும்
3. நியாயம் யார் பக்கம் என தெரியாது. ஆனா கையாண்ட முறைதான் சரியா என்பது விமரிசனம் என்றீர்கள். மார்க்சியவாதிகள் பங்களிப்பு சரியா என்றீர்கள். நியாயத்தை விட வழிமுறை முக்கியம். சிபிஎம் கூட ஆயுதப்போராட்டத்த இப்படிதான் விமர்சிக்கிறான்
4. பணம் பறித்தல் என்ற சொல்லில்தான் அழுத்தமே உள்ளது. நடந்த சம்பவம் பணம் பறித்தலா? உரிமையான பணத்தை திருப்பி வாங்கியதா? அதனை ஆராயாமல் இல்லாத அரசியலை தேடி திணிப்பதற்கு நாவலன் அப்போது போன் பேசியது வாய்ப்பாக போய்விட்டது இல்லையா
4அ) தொழிலாளி வர்க்கத்தின் உயர் வருவாய் பிரிவு பாதிக்கப்பட்ட இச்சம்பவத்தில் இவர்கள் மனுவின் புஜதொமு தலையிட்டு லேபர் ஆபிசரிடம் போய் டிரிபூனல் க்கு போகாமல் பணம் செட்டில் செய்ய்ப்பட்டிருந்தால் நாவலனின் இடத்தில் நீங்கள் அமைப்பைத்தானே நிறுத்தி இருப்பீர்கள்
5. உங்கள பத்திய பிரச்சின என்றவுடன் பேச ஏற்பாடு செய்து தருகிறேன் என்று முன்வரும் தாங்கள் மற்றவரை அரசியல் சொல்லாடல்கள் மூலம் விமர்சித்து விட்டு, நிரூபிக்க வர சொன்னால் சப்பை கட்டு கட்டுவது என்ன ஜனநாயகம் ரயா
6. இந்த பாயிண்டில்தான் சமூக செயல்பாடு மற்றும் அணுகுமுறையில் உங்களதும் அமைப்பினதும் நடைமுறை வேறு என்று சொல்லி விட்டீர்கள். அப்படியானால் இதில் எது மார்க்சிய வகைப்பட்டது அல்ல என்பதை காரணத்துடன் முன்வைக்கலாமே
7. ஒரு தரப்பை வைத்து மற்ற தரப்பை படபடப்படைய வைத்து வாக்குமூலம் வாங்கி தீர்ப்பெழுதி வருகின்றீர்கள். இதனையும் இன்றைய ஆளும்வர்க்கம்தான் செய்கிறது. நடந்த்து என்ன என்பதை நேருக்கு நேர் நிறுத்து யாருக்கும் பயமற்ற சூழலில் நடத்தினால் சில தனிப்பட்ட வன்மங்களும், ஆள்காட்டலின் சூத்ரதாரிகளும், பொறுக்கிக்கு துணைபோக நேர்ந்த நேரமும் நமக்கு வெள்ளிடை மலையாக தெரிய வரலாம்
8. விவாதிக்க மாத்திரம்தான் அழைக்கிறார்கள் என நினைக்கிறேன். உங்களது கட்டுரையின் விளிம்பை அது தாண்டுமா என்பதை பார்வையாளர்களும் கூடத்தான் முடிவு செய்வார்கள். ஆனால் ஜனநாயகத்தின் நிழலில் மாத்திரம்தானே இது நடக்க முடியும். ஜனநாயகம் இருக்கிறது என்பதற்காக இணையத்தில் எதை வேண்டுமானாலும் எழுதும் பொறுக்கிகள் இதனை வைத்து வாழ்ந்து விட அனுமதிக்க முடியாதுதானே.
9. நீங்கள் குற்றம் சாட்டியவர்களை உரசிப் பார்க்க அவர்கள் தயாராக இருக்கிறார்கள். உங்கள் பற்றி இணையத்தில் உலவும் புரளிகள் என்றே நான் இன்னமும் நம்பும் பிரச்சினைகளுக்கு நீங்களாக முன்வந்து தன்னிலை விளக்கம் தர மாட்டீர்களோ? தளபதிகள் தவறு செய்ய மாட்டார்கள்தான் என்பது ஒருவேளை சரிதானோ .. திருட்டு ஆடியோ என்ற முடிவு அபத்தமாக படவில்லையா
10. சந்தர்ப்பவாதிகளையும் பிழைப்புவாதிகளையும் பாதுகாக்க அதுவும் ஒரு சம்பந்தமே இல்லாத பணவிவகாரத்தில் ஒரு அமைப்பு முனைந்த்தாக இதுவரை யாரும் துணிவுடன் கூறியதில்லை. இப்படி தங்களை முன்னாள் தோழர்களாக சரியாக சொன்னால் முன்னாள் மார்க்சிய வாதிகளாக மாற்றிக் கொள்ள விரும்பும் பலரும் இதனைத்தான் சொல்லி செல்கிறார்கள். சொந்த வாழ்க்கைக்கு போகும் அரசியலை சரியாக புரியாத தோழர்கள் தங்களது புரிதலின் தரத்தை அறிந்திருப்பதால் சொந்த வாழ்க்கையில் தடுமாறிய தருணங்களை நேர்மையுட்ன ஒத்துக்கொண்டு போய் விடுகிறார்கள். ஆனால் சரியாக புரியாத அரசியலை வைத்துக்கொண்டே அதனை அரசியல் போல நினைப்பவர்கள் விமர்சனங்களை காறி உமிழ்வதாக மாத்திரமே நினைக்கின்றனர். காறி உழிழ்ந்தாலும் செருப்பால் அடித்தாலும் பண்ணைப்புரம் தேநீர் கடை தனிக்குவளை உடைப்பு போராட்டத்தில் எந்த ஆதிக்க சாதி தோழரும் உடைந்து போகவில்லை. முன்னிலும் உரமேறி ஜொலிக்கிறார்கள். அதுதான் அரசியலால் வழிநடத்தப்படுபவர்களின் நிலைமை.
(copy to: வினவு, தேசம் நெட், தமிழரங்கம், இனியொரு)
ரயாகரன் மீது பலரும் விமர்சனங்களை தவிர்தே வந்துள்ளனர். அதற்கான சந்தர்ப்பங்கள் பல வாய்க்கப்பட்ட போதும், அது தவிர்க்கப்பட்டது. விரல்விட்டு எண்ணக்கூடிய அரசியல் ஆர்வமுள்லவர்களை அதிலும் வரட்டு தேசியத்தை மறுக்கும் நிலையிலிருப்பவர்கள் அருகிப்போயுள்ள சூழலில் முரண்பாடுகளை தவிர்த்து நட்பு முரண்பாடுகளை பேசி தீர்த்துக்கொள்ள வேண்டிய சூழலை ஏற்படுத்தவே அவ்வாறு நடந்து கொண்டார்கள். 6 கோடி ரூபாய் வங்கிக் கொள்ளைப் பணத்திற்கு ரயா பொறுப்பாக இருந்ததை அவரே ஒத்துக்கொள்கிறார். அதெல்லாம் தீப்பொறு என்ற புலோட் என்ற இயக்கதிலிருந்து பிரிந்த தீப்பொயிடம் ஒப்படைத்துவிட்டதாக ரயா சொன்னபோது 25 வருடமாக நம்பித்தான் இருந்தார்கள். சில மாதங்களுக்கு முன்னாக அந்த பணம் பாதிக்கப்பட்ட பல்கலைகளக மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டதாக கூறியதும் சந்தேகம் பலருக்கும் வளர தொடங்கியது.
அதற்கு பிறகு சில வாரங்களின் முன்னால் பணத்தை இயக்கத்தில் சிலருக்கு ஒப்படைத்து விட்டு வந்ததாகக் எழுதியிருக்கிறார்.எதற்காக இப்படி மாறி மாறி சொல்ல வேண்டும் என்று கேட்டால், அவதூறு தான் மிஞ்சும்.மக்களின் பணம் எங்கே என்பது அவதூறு அல்ல., நியாயமான கேள்வி. அதும் சந்தேகம் வந்ததும் தான் கேட்கிறார்கள்.
அவரது இயக்கதில் இருந்த நான் எனது பேரி எழுத விரும்பவில்லை. எனக்கு அவர் தாக்குதல்களை எதிர்கொள்ள பலமில்லை. ஆனால் ஒரு கருத்தைச் சொல்கிறேன். பணத்திற்கு கணக்குக் காட்டப்பட வேண்டும்.எப்போ வரும்? அதற்கு அரசியல் முன்வைக்கப்பட்டால் அவர் செய்கிற அவதூறுகளுக்கு கொஞ்சமாவது பெறுமதி இருக்கும்.
copied to : தமிழரங்கம், வினவு, இனியொரு
வோட்டர், xxx,
ரயாகரனைத் துப்பாக்கியோடு கண்டால் என்ன? அவர் ஒரு தலைமறைவு இயக்கத்திற்கு வேலைசெய்தவர். துப்பாக்கியோடு சென்றிந்தாலும் தவறில்லை என்பது தான் எனது நிலப்பாடு.
அவதூறுகள் குறித்த வாதப் பிரதிவாதங்கள் முடிவிற்கு வந்துவிட்டன. இனிமேல் இவை தொடர்பான கருத்துக்களை நிறுத்திக்கொள்வது ஏனைய ஆரோக்கியமான அரசியல் விவாதங்களை முன்னெடுக்க வாய்ப்பளிக்கும்.
போகிற போக்கில் தேசம்னெட்டை மறந்துவிட்டு செல்கிறீர்கள். இப்போது ஆபத்து , இடதுசாரிகளின் ஆபத்து தேசம்னெட் தான். அவர்களின் அரசியல் பின்னணி, அதன் பின்னால் புதைந்திருக்கும் மேட்டுக்குடி நச்சுக்கள் – இப்படி பலப்பல. அவதூறுகளுக்கு அவர்களை கேட்டுத்தான் ரயாபோன்றவர்கள். தவக்களை போல கத்தும் ரயா வேறு நல்ல பாம்பு போல படமெடுக்கும் தேசம்னெட் வெறு.
நல்ல பாம்பு போல படமெடுக்கும் பாம்புகள் எப்போது கொத்தும் எனப் பயந்து கொண்டிருப்பதை விட கொத்தும் முன்னே கொன்றீட வேண்டும்.கொசப்புக்கள் சந்தியில் நின்றால் நாம் வேறூ பாதை பார்ப்பதில்லையா அதைப் போல திசைகள மாற்றீ இனியாவது பயணீக்க நினைப்போம்.
ரயா பொல பலர் உள்ளனர். இவர்கள் இப்படி இருந்தால் உலக அழிவுதான். இவர்களை அம்பலப்படுத்தியெ ஆக வெனும்.
நாவலன் – ரயா பிரச்சினை அரசியல் ரீதியானதுதான். அதில் ஒரு சிறுதொழில் செய்தவனிடம் அவனிடம் வேலை தரும் பெரிய முதலாளி மோசடி செய்துள்ளான். அவனிடம் நியாயமாக அவன் தர வேண்டிய பணத்தை வாங்க வேண்டிய முறையில் வாங்கி உள்ளார்கள். இதைத்தான் ஒரு தொழிற்சங்கமும் தன் தொழிலாள தோழர்களுக்கு செய்யக் கூடியது. பணத்தாசை இல்லாத புத்தர்களுக்காக மாத்திரமே வாதாட ஒரு கம்யூனிச அமைப்பு வர வேண்டுமா என்ன? அவ்வளவு ஏன் இன்று சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடுகளை எதிர்ப்பது என்ற போராட்டத்தில் கம்யூனிஸ்டுகள் சிறுகடை முதலாளிகளுடன் இணைந்துதான் போராடுகிறார்கள். அதற்காக அந்த அண்ணாச்சிகளிடம் பணத்தாசை இல்லையென பத்திரம் எழுதி வாங்கி விட்டுதான் போராட்டம் நடத்த வேண்டுமா? அருள் செழியன்-குகா விசயத்தில் நாவலன் தற்செயலாக வந்திருந்தாலும் திட்டமிட்டே வந்திருந்தாலும் அதுதான் சரியான நடைமுறை.
நீண்டகாலம் தொடர்பில் இருப்பவர் என்பதற்காக விட்டுத்தராமல் இருப்பது என்பது ஒருவகை செண்டிமெண்ட்டுதான். (பிடிக்காத கணவர் அல்லது மனைவியுடன் தொடர்ந்து வாழச்சொல்லிதான் மதம் கூட பிரச்சினைக்குள் வராமலே அறிவுரை கூறுகிறது) அதற்கு உயிர்வாழும் காலமும் குறைவுதானே. மாறாக தோழமை என்பது அரசியல் சித்தாந்த மற்றும் நடைமுறை வேலைகளின் சமூக பங்களிப்பில்தான் அதிகம் நிலைகொண்டிருக்கிறது என நினைக்கிறேன். கடந்த காலத்தை சுயவிமர்சனம் செய்ய முன்வராதவர்கள் நீண்ட காலம் ஒரு மாலெ அமைப்பில் அதன்பின்னும் தொடர்ச்சியாக நீடிக்க முடியாது என்பது அறிவியல்.
ரயா விசயத்தில் நடுநிலைமை வகிக்க எவராலும் முடியாது. பாட்டாளிவர்க்கத்தின் மிகச்சரியான இந்த நடைமுறைக்கு மக்களை ஒடுக்கும் போலீசு, மனித உரிமை, கட்டைப்பஞ்சாயத்து என திசைதிருப்பி தனது சொந்தப்பகையை அரசியல் மொழியில் பழிதீர்க்கும் இந்த சமூகவிரோத நடவடிக்கையை ஏதோ ஒரு அறுவை என்றெல்லாம் ஒதுக்கமுடியாது. அரசியல் சித்தாந்த நடைமுறையை தன் சொந்த தேவைக்காக பலியிட்டவன் மற்றவர்களையும் அவ்வாறே நோக்கி இயக்கத்தை இழிவுபடுத்துகிறான். குற்றம் சாட்ட முன்வருவதாக நினைத்த ரயா தனது தொடர் கட்டுரைகளால் தானே அம்பலமாகி தனது தன்னை முன்னிறுத்திய இச்செயல்பாட்டின் உக்கிரத்தால் தனிமனித வாத சேறில் வீழ்ந்து அதனை நியாயப்படுத்த பாட்டும் பாடத் துவங்கி விட்டார்.
மற்றபடி அம்பேத்கர் பெயர் வைத்தவுடன் நடந்த சாதிவெறி மோதலை தவிர்க்க எல்லா பேருந்துக்கும் அரசு பெயரை வைத்த நடுநிலைமை போல, பொருளாதார அளவுகோலை மாத்திரம் நாகரீக சாதி பார்க்கா காலத்தில் பார்த்துதான் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற நடுநிலைமையும், உமர் அப்துல்லாவின் காசுமீரத்துக்கான திடீர் போராளி வேச நடுநிலையும் உங்களது நடுநிலையும் ஒத்து இருக்கிறது.