உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து விட்டன.மாநாடு துவங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் மாநாட்டை ஊதிப்பெருக்கி கூட்டம் சேர்க்கும் வேலையும் துவங்கி விட்டது,மாநாட்டிற்காக தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகள் பள்ளிகள் அரசு அலுவலகங்கள் என அனைத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநாடு துவங்குவதற்கு 400 கோடி ரூபாய் என ஒதுக்கப்பட்ட தொகை இப்போது 600 கோடியாக உயர்ந்து விட்டது,மாநாடு முடிவதற்குள் இன்னும் எத்தனை கோடிகளை தாண்டுமோ? அதில் எத்தனை கோடிகள் உண்மையில் மாநாட்டிற்கு செலவளிக்கப்படுமோ அது உலகத் தமிழினத் தலைவருக்கு மட்டுமே தெரிந்த வெளியிடப்படாத ரகசியம் .
மாநாட்டிற்காக பல கோடி ரூபாய் செலவில் 3 ஆயிரத்திற்கும மேலான குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதிகள கோவை நகரம் மட்டுமல்ல மாவட்டம் முழுவதும் பள்ளிகள் கல்லூரிகளில் மாநாட்டிற்கு வருபவர்கள் தங்குவதற்காக ஏற்பாடுகள்.இதற்காக மாவட்டம் முழுவதும் அலைந்து திரிந்த அதிகாரிகள்.ஊடகவியலாளர்களுக்கு பயணத்தில் துவங்கி வசதியான தங்கும் இடங்கள் என முழுமையான ராஜ உபசரிப்பு. ஏனெனில் மாநாட்டின் வெற்றியே ஊடகங்களை நம்பித்தான் உள்ளது..இத்தனைக்கும்மேலாக மாநாட்டின் மைய நோக்க பாடல் என்ற பெயரில புகழ் பெற்ற இசையமைப்பாளர் ரஹமானின் இசையில் மேற்கத்திய நடனங்களுடன் தமிழ் செம்மொழியாம் என்ற ஒரு பாப் பாடல் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.அந்த பெயருக்கு சில தமிழர்களும் பாடலில் சௌடிராஸடிரா ,தெலுங்கர்கள் மலையாளிகள் என பலரும் பாடுகிறார்கள்.இதை இயக்கியது கௌதம் மேனன் என்ற( ஆங்கில படங்களை உல்டா செய்யும் )மலையாள இயக்குநர்.இந்த பாடல் தமிழகத்தின் சந்துககளிலும் தெருக்களிலும் மூலை முடுக்குகளிலும் ஒலிக்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் இப்பாடலைக்கேட்க இந்த பிறவியில் கொடுத்து வைத்தவர்கள் ஆகிறார்கள்.
மாநாட்டிற்கு வரும் உலகத் தமிழர்களுக்கு அருசுவை உணவு வேண்டாமா?அதற்கு சங்க தமிழ் வரலாற்றில் உள்ளது போல் உணவு வகைகளும் தயாராகின்றன.இதை விட மனனர் காலத்திலுள்ளது போல் தேனும் தினைமாவும் போன்று இனிப்பு வகைகள் வேறு. இதைத் தயாரிக்க தனியார் இனிப்பு தயாரிக்கும் வணிக நிறுவனத்துடன் கோடி ரூபாய் மதிப்புகளில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது .சங்க கால இனிப்புகளை பற்றி ஆராய அந்த தனியார் கம்பெனி ஆராய்ச்சியாளர்கள் குழு ஒனறையும் நியமித்துள்ளது.அக்குழுவின் ஆராய்ச்சிகளும் நாளுக்கு நாள் முன்னேறி வருவதாக கலைஞர் தொலைக்காட்சி செய்திகள் அறிவிக்கின்றன.
மாநாடு துவங்கும் பல மாதங்களுக்கு முன்னரே ஜால்ராக்களின் சத்தம் காதைப்பிளக்க துவங்கி விட்டது.கலைஞர் மானசீகமாக நேசிக்கும் இந்த ஜால்ராக்களில் பல வகைகள உள்ளன. கருணாநிதி எப்போதுமே ஜால்ராக்களையும் துதிபாடிகளையும் அவரது குடும்பத்தைப்போல மானசீகமாக நேசிப்பவர் அல்லவா?.அது அவரது தனிப்பட்ட உளவியல். இந்த உளவியலை சற்று ஆராய்வோம். முதியவர்களும் குழந்தைகளும் ஒரே மாதிரிதான் உளவியல் கொண்டிருப்பார்கள் அதாவது தன்னை இடைவிடாமல் யாராவது புகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்று குழந்தைகள் எதிர்பார்க்கும் .முதியவர்களும் அதே மாதிரி உளவியலைத்தான் கொண்டிருப்பர் எனறு உளவியல் நிபுணர்கள கூறுவார்கள். ஏறக்குறைய ஓய்வெடுக்க வேண்டிய வயதையும் தாண்டி உள்ள கலைஞர் அப்படிப்பட்ட மனநிலையில் உச்சத்தில்தான் இருந்து வருகிறார். எப்போதுமே தன்னை இராஜ ராஜ சோழனாக பாவித்துக்கொள்ளும் அவர் எல்லா விளம்பரங்களையும் அதே போல் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்துள்ளார. தனி நபர் துதியிலும் சுயமோகத்திலும் அவர் தன்னை சோழ பரம்பரையினராக சித்தரித்துக்கொள்வதும உடமை வர்ககங்களின் மாட்சிமை தாங்கிய மன்னர் மரபுகளிலும், நிலவுடமை மரபுகளிலும் ஊறித்திளைத்தபடி நாள்தோறும் நாளிதழ்களில் அளிக்கும் விளம்பரங்களே அதற்கு சான்று .மாநாட்டு முதல் அறிவிப்பு விளம்பரமே இப்படித்தான் துவங்கியது,செம்மொழியாம் தமிழ்த்தாய்க்கு முத்தமிழ் தலைமகனாம் கலைஞர் எடுக்கும் ஒரு விழா .உலகத் தமிழர் கூடும் விழா.நாள்தோறும் ஒளவையார் வாயிலாகவோ என்றோ கம்பன் வாயிலாகவோ என்று துவங்கி எம் தமிழ் எம்மொழி எம்மான் கலைஞர் தம்மால் சிறப்புற்ற செம்மொழி வாழிய வாழியவே என்று தான் முடிகின்றன.திட்டமிட்டே அரசு விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.இதற்கு மேலும உதாரணங்கள் வேண்டுவோர் தமிழகத்தின் நகரங்களில் திரும்பும் இடமெல்லாம் இந்த விளம்பரங்களில்தான் முட்டிக்கொள்ள வேண்டும் என்பதை நினைவு படுத்த விரும்புகிறோம். இந்த செம்மொழி மாநாடும் அதற்காக நடத்தப்படுகிறது என்று அவசரப்பட்டு முடிவுக்கு வந்து விடாதீர்கள்.கருணாநிதியின் அரசியல் எதிரிகளின் கணிப்பு இப்படித்தான் உள்ளது.(கருணாநிதியை பொறுத்தவரை விமர்சித்தாலே எதிரிதான் .ஏனெனில் பாராட்டுபவன்தான் நண்பன் விமர்சித்தால் எதிரி என்ற ஓட்டுக்கட்சிகளின் பண்பாட்டில் பல பத்தாண்டுகளாக ஊறித்திளைத்தவர் அல்லவா? ஆனால் அதையும் தாண்டி பல நோக்கங்கள் இந்த மாநாட்டிற்கு உள்ளன.முதலில் எதற்காக எந்த சூழ்நிலையில் செம்மொழி மாநாடு நடத்தப்படுகிறது?
15 ஆண்டுகளாக முதல்வராக இருந்த போதிலும் உலகத் தமிழ் மாநாடு நடத்துவது குறித்து எந்த அக்கறையும் எடுத்துக் கொள்ளவில்லை.தமிழ் மாநாட்டின் அதிகாரப்பூர்வமான அமைப்பான உலகத் தமிழராய்ச்சி நிறுவனம் கருணாநிதியின் மாநாட்டை அங்கீகரிக்க மறுத்ததோடு அதைப்புறக்கணிககப்போவதாக அறிவித்தும் உடனே தமிழ் செம்மொழி மாநாடு என்று மாற்றிக்கொண்டு ஏன் நடத்த துடிக்கிறார்.அது சரி தமிழ் மீது இத்தனை ஆண்டுகளாக இல்லாத அக்கறை இப்போது ஏன்? காரணம் அனைவரும் அறிந்ததுதான் .அவர் ஈழத்தமிழருக்கு செய்த மறக்கவோ மன்னிக்கவோ முடியாத துரோகத்தை மறைப்பதற்குத்தான்.
ராஜ பக்சே அரசு புலிகள் மீது போர் தொடங்கியதிலிருந்தே இந்தியாதான் போரை திட்டமிட்டு வழிநடத்தியது.இது கருணாநிதியின் தலைமையிலான தமிழக அரசின் உதவியோ ஒத்துழைப்போ இன்றி சாத்தியமே இல்லை.இந்திய அரசு ஈழத்தமிழரை ஒழிக்க முன்வந்ததற்கு ஏற்பட்ட துணிச்சல் கலைஞர் இந்தியஅரசுக்கு நூற்றுக்கு நூறு துணை நின்றதால்தான் வந்தது.
கருணாநிதியின் திசை திருப்பும் முயற்சிகளையும் அடக்குமுறைகளையும் மீறி போர் நிறுத்த கோரிக்கை வலுவடைந்தபோதும் தன்னெழுச்சியாக ஒரே சமயத்தில் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்த போதும் அதை அடக்குவதற்குஅவர் பல தந்திரங்களை கையாண்டார். போராட்டங்கள் எல்லை மீறிச் சென்ற போது அவரும் ஈழப்போர் நிறுத்ததிற்கு ஆதரவளிப்பதாகக் கூறி அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டினார்.மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தினார்.அதே சமயத்தில் இதில் கலந்து கொள்ளாத காங்கிரசாரை யாரும் அம்பலப்படுத்தாமல் பார்த்துக்கொண்டார்.அந்த நேரத்தில் ஈழப்போர் நிறுத்தப்போராட்டங்களில் தன்னெழுச்சியாகவும் அதே சமயத்தில் போர் குணமிக்கதாகவும் நடத்தப்பட்ட வழக்கறிஞர்கள் போராட்டங்கள் கட்டுக்கடங்காமல் செல்லத்துவங்கின.காங்கிரஸ் தலைவர்கள் துரோகிகள் என குற்றம் சாட்டப்பட்டு அவர்கள் இல்லங்களிலும் அலுவலகங்களிலும் வழக்கறிஞர்களினால் தாக்கப்பட்டனர். அதுவும் முத்துகுமாரின் தியாக மரணத்தின்போது அவர் எழுதிய கடிதமும் கருணாநிதியை முழுமையாக அம்பலப்படுத்தின.இதனால் வழக்கறிஞர்களை ஒடுக்குவதற்கு ஈவு இரக்கமின்றி நசுக்கிய விதம் இதுவரை வரலாறு காணாத சாணக்கியத்தனம் ஆகும் .வழக்கறிஞர்கள் எங்கு அதிகாரமுள்ளவர்களாக உணருகின்றனரோ அங்கேயே நீதிமனறத்திலேயே போலீசை அத்து மீறி நுழையச் செய்து கொடூரமாக நசுக்கினார்.போராட்டங்களின் தீவிரம் அதிகரித்த போது போரின் உச்சகட்ட நாட்களில் சாகும் வரை உண்ணாவிரதம் என்ற பெயரில் இருபுறமும் மனைவியரும் குளிரூட்டும் சாதனங்களும் இருக்க, கடற்கரையில்அண்ணா சமாதிக்கருகே போய் படுத்துக்கொண்டார்.தனது உண்ணாவிரதத்தால் போர் நிறத்தம் ஏற்பட்டதாக சிதம்பரம் கூறினார் என்று படுகேவலமான பொய்யை கூறினார்.இப்படி கூறப்பட்டதும் அது ஊடகங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதும் அதைவிடபெரிய அதிர்ச்சி.
அந்த நிலையிலும் போரை நிறுத்தாவிட்டால் கருணாநிதி காங்கிரஸ அரசுக்கு அளித்த ஆதரவை விலக்கிக் கொள்வார் தனது பதவியை துறப்பார் என்றெல்லாம் தமிழ தேசிய இயக்கங்களினால் அப்பாவித்தனமாக எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் கருணாநிதி ஈழம் மலருவதற்கு உத்திரவாதம் தந்தால் பதவி விலகுவேன் என்று அவர்களது முகத்தில் திருப்பி அடித்தார்.முதலாவதாகஅப்படிப்பட்ட தியாகம் செய்வாரென்று எந்த வித அரசியல் பார்வை இல்லாதவர்களால் மட்டுமே எதிர்பார்க்க முடியும்.தனது வாரிசுகளின் பதவிகளுக்காக எந்த அளவுக்கும் செல்வார் என்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. போர் முடிந்ததும் அழகிரியின் அமைச்சர் பதவிக்காக நேரில் டெல்லி சென்றார்.ஆனால் ஈழப்போரை நிறுத்துவதற்கு எங்கும் செல்லவில்லை.உடல் நலமில்லை என்பது காரணமாக காட்டப்பட்டது.தள்ளாத வயதிலும் தள்ளுவண்டியில ¢டெல்லியில் சென்று பதவிபிச்சைகேட்டு மன்றாடியதைக் கண்டு தமிழக தமிழர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.இந்த காரிய வாதம் மிகவும் கொடூரமானதாக வெளிபபடுத்தியது என்னவெனில் தமிழர்களை ஒழிக்க இந்தியா இலங்கை அரசுக்கு பயிற்சி கொடுத்த போது தமிழகத்தில் எழுச்சி வராமல் பார்த்து கொண்டதற்கும் ஒத்துழைப்பு கொடுத்தார் அந்த ஒத்துழைப்பிற்கான சன்மானம்தான் அழகிரிக்கு மத்திய அமைச்சர் பதவி.இதனால் இவர் போலியாக படம் காட்டி வந்த உலகத் தமிழினத் தலைவர் பிம்பம் சுக்கு நூறாகியது .
இந்த சேதமடைந்த அம்பலப்பட்ட பிம்பத்தை தான் சாவதற்குள் நிமிர்த்தி விடவேண்டும் என்பதற்காகத்தான் பல கோடி செலவில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.அது மட்டுமின்றி இன்னொரு இலவச இணைப்பாக அவர் தமிழர்களுக்கு தரக்கூடிய பரிசு அவர் வாரிசுகளை அதிகாரப்பூர்வமாக மேடையில் ஏற்றி உலகத் தமிழ் அறிஞர்களிடம் (தமிழக மக்கள் எப்போதே ஏற்றுக்கொள்ள வைக்கப்பட்டனர என்பதற்கு வேறு விடயம்) ஏற்றுக் கொள்ள வைப்பதற்குத்தான்.
ஆனால் எவ்வளவோ குலை அறுத்து உயிர் பறிக்கும் துரோகங்கள் கருணாநிதியால் இழைக்கப்பட்டிருந்தாலும் தமிழின் மீதுள்ள பற்றின் காரணமாக இம்மாநாட்டின் மூலமாக தமிழுக்கு ஏதாவது நன்மை கிடைக்கும் என்பதை சிலர் நம்புகின்றனர்.அவர்கள் தமிழகத்தில் தமிழரின் தமிழின் நிலையை அறிய சில விபரங்களை மட்டும் பரிசீலிக்க வேண்டுகிறோம்.தமிழன் வாழ்ந்தால் தான் தமிழ் வாழும் .ஆனால் தமிழன் வாழ்வதற்கு எந்த வழியும் இல்லாத நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தமிழகத்தில் வேலை இல்லாத்திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகிறது.இந்தியாவின் அதிகமான வேலையில்லாதோர் கொண்ட மாநிலமாக தமிழகம் உள்ளது.பணியில் இருப்போர் எண்ணிக்கை 1971-1981ல் 2.58விழுக்காடாக இருந்தது 1981-1991ல் 1.83ஆக குறைந்து விட்டது.ஆட்குறைப்பு அடிப்படையிலான வளர்ச்சி (jobless growth)என்ற உலகமயமாக்கல் கொள்கை அமல்படுத்தப்பட்டதிலிருந்து. இந்த நிலை ஏற்பட்டதை பார்க்கலாம்.1996-1997ல் 28.இலட்சத்து 27 ஆயிரம் பேர் வேலை இல்லாதோர் எண்ணிக்கை.இப்போது 75 இலட்சத்தை தாண்டி விட்டது.
இந்தியாவிலேயே பன்னாட்டுக்கம்பெனிகளும் தேசங்கடந்த தொழிற்கழகங்களும் அமைதியாக தொழில் நடத்தக்கூடிய இடமாக தமிழகம் இருப்பதால் இன்னும் வேலை வாய்ப்பற்றோர் எண்ணிக்கை கூடிய விரைவில் 1 கோடியை எட்டி விடும் என்பதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம்.ஏனெனில் இந்த பன்னாட்டுக்கம்பெனிகள் உற்பத்தித் துறையை அல்ல வேலை வாய்ப்பு குறைவான சேவைத்துறைகளையே வளர்த்துள்ளன. (விவசாயத்திலும் உற்பத்தித் துறையிலும் வேலை வாய்ப்பானது 1971-1981 2,58 விழுக்காடாக இருந்தது 1981-91 டல 1.83 ஆக குறைந்து விட்டது) இது இப்படி இருக்க முதலில் அடிப்படையை பரிசீலிப்போம்.தமிழகத்தில் தாய்மொழிக்கல்வி என்பது ஏழை மக்களில் மிகவும் ஏழை மக்கள் படிக்கும் பள்ளிக்கூடங்களில்தான் உள்ளது.நடுத்தர வர்க்கத்தின் சொல்லாடலில் சொல்ல வேண்டுமானால் போக்கத்தவர் படிப்பதுதான் தாய்வழிக் கல்வி.தமிழ் மொழியில் படித்தவர்கள் சேரிவாசிகள் அல்லது ஒன்றுக்கும் வழியில்லாதவர்கள் என்ற நடுத்தர மற்றும் மேட்டுக்குடியினரின் பார்வைதான் அரசின் அதிகாரவர்ககத்தின் பார்வையாகவே உள்ளது.
தமிழ்மொழியில் கல்வி கற்றவர்கள் ,தமிழ் பட்டதாரிகள் தமிழ புலவர்கள் யாருக்கும் எந்த வேலை வாய்ப்பும் இல்லை.இதில் தஞ்சையில் வேலை இல்லாத தமிழ் புலவர்களின் சங்கமே செயல் பட்டு கொண்டிருக்கிறது.தமிழப் பட்டதாரிகள் வேலைகிடைக்காததால் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வுகள் எந்த அதிர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை.இதில் தமிழிலில் முனைவர் பட்டம் படித்தவர்களின்நிலை மிகவும் பரிதாபத்திற்குரியதாகவே உள்ளது.ஆசிரியர் வேலை வாய்ப்பைத் தவிர அவர்களுக்கு எந்த வேலை வாய்ப்பும் இல்லை.கணிப்பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு அளிக்கும் மிகுந்த முக்கியத்துவத்தின் காரணமாக கோமாளிகளாகவே பார்க்கப்படுகின்றனர்.
தலை நகரில் எப்போதுமே தமிழுக்கு இடமிருந்ததில்லை.சிங்காரச் சென்னையில் மட்டுமின்றி தமிழக நகரங்களில் துவங்கி குக்கிராமங்கள் வரை மொழிக்கலப்பின்றி தூய தமிழிலில் பேசினால் வேற்று கிரகப் பிராணிகளாக அவர்கள் பார்க்கப்படுவர்.இப்போதெல்லாம் எந்த தஞ்சைத் தமிழனும் மதுரைத் தமிழனும் சாப்பிடும்போது சோறு வேண்டும் என்று கேட்பதில்லை ரைஸ் போடுங்கள் என்றுதான் கேட்கிறான்.திராவிட இயக்கங்களின் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்தும் அரசு ஆட்சி மொழியாக தமிழைக் கொண்டு வர இனனும் முடியவில்லை.மருத்துவம, பொறியியல் துவங்கி எந்த தொழில்சார்ந்த கல்வியிலும் தமிழிலில் இல்லை.அப்படி தமிழில் தேர்வு எழுதினால் அங்கீகரிக்கப்படுவதில்லை.தஞ்சையில் மருத்துவர் ஒருவரின் தேர்வு அங்கீகரிக்க மறுககப்பட்டதால் வழக்குத் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்.
தமிழர் பண்பாடோ சாகும் தருவாயில்தான் தனது இறுதி மூச்சை விட்டுக் கொண்டிருக்கிறது.வேட்டி கட்டுவதற்கும் தமிழில் பேசுவதற்கும் , தமிழர் உணவு வகைகளை சாப்பிடுவதற்கும் பலநிறுவனங்களில் அனுமதி இல்லை. அரசு அலுவலகங்களில் போலீஸ் நிலையத்தில்,அரசு மருத்துவமனைகளில் வேட்டி உடுத்தி செல்லும் சாதாரண மககள இழிவான பிறவிகளாக நடத்தப்படும் விதமே இதற்கு சான்று.
தமிழர் பண்பாடு தமிழ் ஊடகங்களில் படும் பாடு சொல்லி மாளாது.இதற்கு தனி நூலே எழுதலாம் .பெயர்தான் தமிழ் ஊடகம் தவிர மற்ற எல்லாமும் ஆங்கிலத்தில்தான்.முழுமையாக ஆங்கில கலப்புடன் எப்போதாவது தமிழுடன் தான் நிகழ்ச்சிகள் அமைகின்றன.அரைகுறை உடைகளுடன் வந்து நின்று நிகழ்ச்சி வருணனையாளர்கள் இல்லாத தமிழ் தொலைக்காட்சிகள் காண்பது அரிது.கும்பல் கும்பலாக தொப்புள் ஆட்டம் இல்லாத தொலைக்காட்சிகள் இல்லை.சினிமாதான் 99 விழுக்காடு,.மீதி ஒரு விழுக்காடு ஏதாவது செய்தி நிகழ்ச்சியாக வரும்.வெள்ளைத் தோல் சிவப்பழகுதான் தொலைக்காட்சிகளில் வருவதற்கான தகுதி. கருத்த தமிழர்களுக்கும் உழைப்பாளிகளுக்கும் கிராமத்தினருக்கும் இங்கு இடமில்லை.சுருக்கமாக கூறினால் உழைத்து நசிவடைந்த அழுக்கு முகங்களுக்கு இங்கு இடமில்லை.தொலைக்காட்சிகளின் இச்சீரழிவு ஏகாதிபத்திய பண்பாட்டிற்கு வித்திட்டவர்களும் முன்னோடிகளும் உலகத்தமிழனத் தலைவர்களின் குடும்பத்தினர் நடத்தும் தொலைக்காட்சிகளதான் .இன்றும் தமிழனத் தலைவர் அவரே ரசித்து பெயர் சூட்டிய மானாட மயிலாட என்ற முழுமையான ஆபாச நிகழ்ச்சியை பார்க்காமல் தவறவிட்டால் வருந்துவாராம்.
இன்னொரு பக்கம் ஆங்கில ஏகாதிபத்தியவாதிகள் எப்போதே நாட்டை விட்டுபோனாலும் இன்னும் ஆட்சியாளர்களில் மூளைகளில் ஆங்கிலம்தான் ஆட்சி செய்கிறது .தமிழர் மனமோ ஆங்கில மோகம்தான் இயல்பாக உள்ளது. தமிழகத்தின் சோழ சக்ரவர்த்தியின் ஆட்சியில் வாரிசுகளுக்கு பட்டாபிசேகமும் முடிசூட்டுவிழவிற்கும் செம்மொழி மாநாடு நடைபெற உள்ளது என்பது இப்போது அனைத்து குடிமக்களுக்கும் அறிந்த ஒன்று. ஒரு புறம் ஈழ நெருப்பு அணையாமல் கொதித்து எரிந்து கொண்டிருக்கிறது.ஏற்கனவே லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர்.மீதித் தமிழர்கள் வதைமுகாம்களில் மரணத்திற்காக காத்திருக்கின்றனர். தமிழுக்கும் தமிழருக்கும் வாழவுமில்லை வளமுமில்லை.இப்படி யதார்த்தத்தில் இல்லாத மரியாதையை தமிழுக்கு கனவுலகத்தின் மூலம் கட்டியமைக்க முயற்சிக்கிறார்கள். இவர்களே கனவுலகமான திரையுலயகலிருந்து வந்த இவர்களிடம் இருந்து வேறு எதையும் எப்படி எதிர்பார்க்க முடியும்?.
திருக்குவளையிலிருந்து வெறும் துண்டோடு வந்தவர் எப்படி ஆசியாவின் 23 ஆவது பணக்காரர் ஆனார்?திராவிட சித்தாந்தங்களினால் தமிழ் தேசியம் எப்படி சீர்குலைநது தோல்வி அடைந்தது? அடுத்த கட்டுரைகளில் பயணிப்போம்.
தமிழனமே உங்கள் அனைவரிடமும் ஒரு அன்பான பணிவான வேண்டு கோள் இந்த கருநா நிதியை உலகத் தமிழரின் தலைவன் என்று சொல்லி அழைப்பதனை நிறுத்திக் கொள்ளுங்கள். தமிழகத்தில் தலைவனாய் இருக்கலாம் ஆனால் உலத்துத் தமிழருக்கல்ல. இதனால் உலகத்தமிழர் அனைவருக்கும் அவமானம். ஒரு கொள்ளைக்காரனை எமது தலைவன் என்று அழைக்க மனம் ஒப்பவில்லை. இந்த செம்மறி மாகநாடு தனது திருகு தாளங்களை மறைக்கவே இந்த அரசில் வியாதி முயல்கினறார். ஈழத்தமிழரின் இரத்தத்தின் மேல் தமிழுக்கு மாநாடா? யாழ்
Sri lankan tamils should ask pirabaharan for their problems.Not kARUNANAITHY.SO AGAIN AGAIN DONT BLUFF B COZ YOUR PROBLEMS CAN BE HANDLED BY YOUR LEADER PIRABAHARAN AND NOT BY TAMIL NADU LEADERS OR INDIAN LEADERS.IN 1990 YOU ALL SEND BACK THE INDIAN TROPPS WITH THE HELP OF pRESIDENT PREMADASA SAYING WE DONT WANT INDIANS HELP TO SOLVE OUR PROBLEMS.SO WHY NOW CONDEMMNING INDIAN AND TAMIL NADU LEADRS.NONSENSE.
HI SHIVA,Iam AN INDIAN, KARUNANIDHI ONLY, MEDDLESOME IN SRILANKAN PROBLEM!.HE NEVER GUIDED HIS PARTY MEN IN THIS ISSUE EXCEPT discussing with MURASOLI MARAN!.I HAD AN OPINION,”IF THERE IS PROBLEM,INDIAN ARMY CAN PROTECT TAMIL SOVEREIGNTY”,BECAUSE TAMILS HAD NO RECOGNIZED SOVEREIGNTY.INDIA HAD A UNIQUE CASTE based GENETIC handling.HE DIDN’t GUIDED TAMILNADU PEOPLE BUT,ONLY HIS FAMILY.EVEN AFTER “KUMARAPPA,PULENDERAN” MURDER,BY BALASINGAM DELIBERATELY,”NOT EXPOSING INDIA” but OFFENSIVE AGAINST THEM(made them justified),KARUNANIDHI MET BABY SUBRAMANIAM IN CHENNAI,TRY TO MAKE POLITICAL GAIN OUT OF IT,NOT CONDEMNING THEIR MISTAKES!(like pulan peyarntha Tamils).HE MAINTAINED THIS “MEDDLING” THROUGHOUT UNTIL NOW.IF ANY BODY NEARING POWER HE ALWAYS PAVE “flower bed” like PROSTITUTES.IF THEY RECEDE FROM POWER,HE WILL KICK OFF!.FOR “SEMOZHI MAANADU” HE PAVES “ROSES” LIKE THIS…””/கோவையில் சிறப்பு வாய்ந்த ஒரு மாநாட்டை உலகம் முழுவதும் உள்ள உத்தமத் தமிழர்கள் எல்லாம் ஒருங்கிணைந்து நடத்தவுள்ளனர். வெளிநாட்டு அறிவொளி மிக்கார் வருகை தந்து நடத்துகின்ற மாநாட்டின் பெருமையும், புகழும் எதிர்காலம் பற்றிய ஆக்கமும், ஊக்கமும் இங்குள்ள தமிழர்களுக்கு ஏற்பட்டு விடக் கூடாது என்று சிலர் நினைக்கின்றனர். /—அள்ளி,அள்ளி கொடுத்தேனடி காந்தா…-துண்டு பீடி தொண்டன்.
திருநம்பி, நீங்கள் விஷயத்திற்கு வருகிறீர்கள்.நான் கலைஞர் கருணாநிதியின் குடும்பத்தை,தூற்றவில்லை!.ஆனால் நீங்கள் கூறுகின்ற யதார்த்த தமிழர் வழ்நிலையைதான் நான் கோபமாக எடுத்துரைக்கின்றேன்.
முதலில் புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழரை விட்டுவிடாதீர்கள்!.அவர்கள் கலைஞர் கருணாநிதியின் குடும்பத்திற்கு குறைந்தவர்கள் அல்ல,”இனப்படுகொலை என்ற வார்த்தையையே” உலக அரங்கில் கேலிக்குறியதாக்குவதற்கு.
இலங்கையில் சென்ற ஆண்டு,முள்ளியவாய்க்காலில் தமிழர் படுகொலை நடந்தது என்று இலங்கைத்தமிழர் கூறுகின்றனர்.ஆனால் அது சம்பந்தமான ஆதாரம் இதுவரை பொதுமக்கள் ஊடகங்களுக்கு கிடைக்கப் பெறவில்லை.என்னைப் போன்றோர் படுகொலை என்ற குற்றச்சாட்டு மிகைப் படுத்த ஒன்றகவே கருத இடமுண்டு.
உங்களைப் போன்றோர்கள் இவ்வளவு கடுமையாக முயற்சி செய்யவில்லை என்றால்,இன்னேரம் செம்மொழி? மாநட்டில் பெருமளவு இலங்கைத் தமிழர்கள் பங்கு பெற்றிருப்பார்கள்,படுகொலை ஒன்று இலங்கையில் நடைபெறவில்லை என்று ஆதாரத்துடன் தெரிவிப்பதற்கு.இதன் மூலம் தனிப்பட்ட,தங்கள் பிள்ளைகளுக்கு,”மருத்துவ கல்லூரி சீட்”,தொழில் முதலீட்டு(அபிவிருத்தி) வாய்ப்புகள்” போன்றவற்றை பெற்றிருப்பார்கள்!.இதில் வேடிக்கை என்னவென்றால் இவர்களுக்கு “ஷார்ட் சைட்” பார்வைக் கோளாறு!.மிகத் தெளிவாகவே ஒரு “புதிய உல்க ஒழுங்கு நிலை” ஆப்கானிஸ்தானத்தில் நிலைக் கொண்டுள்ளது.”அரசியல் என்றால் எனக்கு பிடிக்காது” என்று செம்மொழி பாடலில்,”நளினமாக கம்யூட்டர் டேபிளின் முன்” அமரும் இள்ம் பெண்ணைப் போன்றோர் கூறுவார்கள்.ஆனால்,நாம் விரும்பியோ விரும்பாமலோ,நம்முடைய ஒவ்வொரு அசைவுகளும்,…………
யாழ் என்ன இது அநியாயமாக இருக்கிறது. உலகத் தமிழர்களின் தலைவன் என்று இல்லை என்றால் தமிழகத்திற்கு மட்டும் இவர் தலைவனாக இருக்கட்டுமா? என்ன இது அநியாயம்…. அவரது குடும்பத்திற்கு மட்டுமே தலைவன்…..இவர் தமிழகத்திற்கு மட்டும் எப்படி தலைவனாகி விட முடியும்……….
முள்ளிவாய்க்காலில் எத்தனை சாவுகள் என்பது பற்றிய மதிப்பீடுகள் தான் வேறுபட்டுள்ளன. மிகக் குறைத்து மதிப்பிட்ட ஐ,நாவின் அதிகார பூர்வமான 10,000+ க்கும் லண்டன் டைம்ஸின் தொடக்கநிலை மதிப்பீடான 20,000+ பின்பு ஒரு ஐ,நா.ஊழியரின் 40,000+ வரையிலும் கொலைகளின் தொகை வேறு படுகின்றது.
இன்னமும் பிடிக்கப் பட்டு இருக்குமிடம் தெரியாதோரின் தொகை பல ஆயிரங்கள். உடல் ஊனமானோரின் தொகை 20,000 – 30,000. இவை மட்டுமே அழிப்பின் அளவை ஊகிக்கப் போதுமானவை
விவரங்களைச் சேகரிக்க முடியாமல் இலங்கை அரசு உண்மைகளைப் புதைக்கிறது. அதற்கு இந்தியா உட்பட உலகநாடுகள் ஒத்துழைக்கின்றன.
போரின் போது பொதுக் கட்டிடங்கள் மீது ஏவுகணை, எறிகணைத் தாக்குதல்கள் பற்றிய சாட்சியங்கள் அன்றாடம் வெளி வந்தன. புகைப்படச் சான்றுகள் ஏராளமாக உள்ளன. மேலும் வந்து கொண்டே உள்ளன. சர்வதேச ஊடகங்கட்குச் சாட்சி சொன்ன 5 மருத்துவர்கள் பிடித்து வைக்கப் பட்டு வாய் திறப்பதில்லை என்ற நிபந்தனைக் கீழ் விடுவிக்கப் பட்டு இன்னமும் கண்காணிப்பின் கீழ் உள்ளனர்.
நிச்சயமாக இவை இந்துவிலோ எக்ஸ்பிரசிலோ இந்துஸ்தான் டைம்ஸிலோ வரா.
எவ்வாறு சிலருக்கு ஜேர்மனியில் யூத இன ஒழிப்பு நடக்கவில்லையோ அதே போன்று இந்தியாவில் சிலருக்கு இலங்கையில் இன ஒழிப்பு நடக்கவில்லை.
யாரை யார் ஏமாற்றப் பர்க்கிறர்கள்?
இந்தக் கொடுமைக்கு இந்தியா ஆதரவாக மட்டுமல்ல தூண்டுதலாகவும் இருந்தது. இந்த உண்மை இன்னும் உரக்கச் சொல்லப்பட வேன்டும்.
செம்மொழி மாநாட்டை இதனுடன் குழப்ப வேன்டியதில்லை.
அந்த ஏமாற்றுக்கு வேறு நோக்கங்கள் உள்ளன.
அது தமிழ் இலக்கிய, அறிவுலகப் பொறுக்கிகளின் மாநாடாகவே தொடங்கி அவ்வாறே முடிவதில் வியக்க ஒன்றுமில்லை.
கருனானிதியே தமிழினத் தலைவர். அவரினாலேயே பார்ப்பனர்களிடம் சிக்கித் தவித்த தமிழ்கம் முன்னேரி இருக்கின்ராகல். .
இப்போ தமிழகம் டில்லிப் பார்ப்பனர்களிடம் சிக்கித் தவிக்கிற தமிழ்கமாகி உள்ளது.
பிரச்சனை பார்ப்பான் அல்ல பார்ப்பனியம்.
பார்ப்பானைத் திட்டித்திட்டிவே டில்லியையை ஆளும் பார்ப்பன-பனியாக் கூட்டத்துடன் கூடிக் கொள்ளையடிக்கத் தெரிந்த ஒருவர் உங்கள் தலைவரென்றால், அவ்வாறே ஆகுக.
mr.shiva-amir,what nonsence your talking i am also indian from tamilnadu so i should not support my brothers and sisters.do you have heart how causualy telling that there no connection between karuna dog and other congress leader to lead the war and ear crime in srilanka.
if your sister or mother hurted by other what you may feel.its my father duty i am not care them.could you say
i asham on the people who is talking rubbish
Mt tamil
Each of us is entitled to his/her nonsense.
The point that I am making is that if the conference was a regular one like tha IATR scheduled for 2011, there would not have been a problem. If it was some other function no one would have linked it to the plight of Tamils in Sri Lanka.
What is involved in the “Cemmozhi ” theatre is a far bigger issue that is sidetracked by dragging Sri Lankan issues into it.
If there is a programme to boucott Karunanithi and all other soundrels announce it and campaign for it.
செம்மொழி மாநாட்டை இதனுடன் குழப்ப வேன்டியதில்லை.
அந்த ஏமாற்றுக்கு வேறு நோக்கங்கள் உள்ளன.
அது தமிழ் இலக்கிய, அறிவுலகப் பொறுக்கிகளின் மாநாடாகவே தொடங்கி அவ்வாறே முடிவதில் வியக்க ஒன்றுமில்லை.
Read what I had to say carefully before resorting to abuse.
Mr Tamil
My apologies. I thought that you misunderstood my remarks.
தமிழைச் செம்மொழியாக்கிய் பெருமைகுரிய் தமிழ் இனத் தமிழர் க்லைஜர் மீது சேறூ எறீவதை நிறூத்துங்கள்.ஏனென்றால் அல்ஜிரியாவை ஆதரிக்கும் முஸ்லீம்களீன் முட்டாள்த்தன்ம் உங்களீடமும் இருப்பதாக் உல்கம் நினைத்துவிடும்.தமிழர் சிந்தனையாள்ர் அந்தச் சிந்தனையின் வெளீப்பாடே நாங்கள் தமிழராய் உணர்ந்து தமிழ் செம்மொழி என்ப் பெருமை கொண்டு மகாநாடு கொண்டாடுவது.
Hello Friends
Non of you need to worry about the Sri lankan Tamils.Because it is too late to talk about that matter.Whatever the these Karunathy guys doing all will vanish with their death.This program (Semmoli Mahanadu) is all useless and wasting the money of the people in Tamil Nadu. Please don’t compare Karunathi with Prabhakaran. If you bring your Karunathi’s car and just a photo beign signed by Prabhakaran and put them in auction in USA or in any western country, then you will know who is Prabhakaran and who is Karunanithy.The whole world knows one thing very clearly that the Sri lankan Tamils are not stupid and also not coward. In thirty years war, we have lost around hundred thousans people and also our assests. We know how to build up our wealth. It might take some time to increase our population and then we are ok to go back to our normal life. But Sri lanka needs another five hundred years to pay off the lost ,caused by L.T.TE.By the time the govt of Srilanka paying all these debts, we will be ten time richer than those who were trying to destroy us. Of course, we had supporters in Tamil nadu and even now we have our real supporters in many part of the country but not these political business men. You can write thousands and thousands books but you are not going to be in the history of the nation. But those names of who were born and lived like Prabhakaran will be in thousands and thousands books. Let this poor guy do something for his own satisfaction because he knows that he is going to be another few days or so. One thing to make sure that he is not the leader of the Tamils in Tamil Nadu , not to even to his own family and but for himself. In one word, if you want to say about Karunathy, he is a “dead fish” in the absence of the great man M.G.R.
///இந்தியாவின் அதிகமான வேலையில்லாதோர் கொண்ட மாநிலமாக தமிழகம் உள்ளது.பணியில் இருப்போர் எண்ணிக்கை 1971-1981ல் 2.58விழுக்காடாக இருந்தது 1981-1991ல் 1.83ஆக குறைந்து விட்டது.ஆட்குறைப்பு அடிப்படையிலான வளர்ச்சி (jobless growth)என்ற உலகமயமாக்கல் கொள்கை அமல்படுத்தப்பட்டதிலிருந்து. இந்த நிலை ஏற்பட்டதை பார்க்கலாம்.1996-1997ல் 28.இலட்சத்து 27 ஆயிரம் பேர் வேலை இல்லாதோர் எண்ணிக்கை.இப்போது 75 இலட்சத்தை தாண்டி விட்டது.////
From where was this ‘data’ producred ? All this stat does not capture the true picture. First of all the population of TN is now around 7 crores and yet unemployment percentage is lesser than in 70s. Millions of new jobs in manufacturing and services have been created in th past 2 decades and they do not come under ‘organised’ labour. but still they pay is much better than what was available until 1990. Actually there is acute labour shortage in many sectors and areas including agriculture. But for the unleahsing of entreprenuership thru the liberalisation process, things woudl have been worser than 80s. Fortunately, the ideas of marxist comrades were abandoned and their crazy oppostion to all forms of dereulation was ignored. hence this better result.
Otherwise, i agree that DMK regime is the most corrupt and unethical group ever. and Karunanidhi wastes hard earned public money in uselss freebies and has increased total TN govt debt from 66,000 crores to 90,000 crores since 2006. and this figure is still climbing. he is a cheap populist who fritters away the state resources for polictal gain. In fututre TN people will pay dearly for all this folly when the treasurey is empty…
எல்லோரும் முள்ளிவாய்க்காலை விட்டுவிட்டு வெளியே வாருங்கள். 2 கிலோ மீற்றருக்குள் ஏகாதிபத்திய ஆதரவுட ன் தான் தமிழீழக் கொடியை நாட்டிவிடுவேன் என்ற பிரபாகரனையே சேற்றுக்குள் போட்டுப் புரட்டிக் காட்டி உங்கள் மூளைக் காய்ச்சலுக்கு மருந்து கொடுத்ததிருக்கிறது இந்த மகிந்தஅரசு. இன்னும் நீங்கள் குணமாகவில்லையோ? சிலர் பைத்தியக்காரர்கள் போல நடந்துகொண்டு தங்கள் சொந்த இலாபங்களை கச்சிதமாய் பெற்றுக்கொண்டிருப்பார்கள். அவர்கள் போன்றவர்களாகவும் நீங்களெல்லாம் இருக்கலாமோ தெரியவில்லை. அ
அடுத்தது> இஙகு பிரச்சினையின் அடிப்படையே மொழி. மொழி அழிந்தாலும் இனம் நாடு கடந்து வாழும் என்பீர்களோ? தமிழ்நாட்டிலேயே தமிழ்மொழி மூலம் கல்வி கற்பவர்கள் கூட குறைந்து வருகிறார்கள்/.எப்படியிருந்தபோதும் கலைஞர் தமிழ்மொழியின் கெளரவத்தை நிலைநாட்டுவதற்காக செய்யும் வேலைகள் பாராட்டத்தக்கதே. தி.மு.க. காலத்தில் தமிழ் மொழியில் ஏற்பட்ட எழுச்சியை யாரும் மறுக்க முடியாது.
செம்மொழி மாநாட்டை இழிவுபடுத்தாதீர்கள். தயவுசெய்து.
நாங்கள் தமிழ்மொழி வேண்டாம் என்று சிங்களமொழியை ஏற்றுக்கொண்டோமென்றால் இந்த நாட்டில் இனப்பிரச்சினை இல்லாமல் போய்விடுமே.
Ashok,
நீங்கள் இன்னமும் தமிழரசுக் கட்சி வாய்ப்பாட்டையே ஒப்பிக்கிறிர்கள்.
இலங்கயின் தேசிய இனப் பிரச்சனையின் வேர் சிங்களப் பேரினவாதம்.
அதன் முதல் பெரிய இலக்கு முஸ்லிம்கள் (1915). அடுத்த பெரிய இலக்கு மலையகத் தமிழர் (1947).
தமிழ் மக்களின் நிலப்பறிப்பும் மலையகத் தமிழர் இலக்கு வைக்கப் பட்ட போதே வேர் கொண்டது.
இப்போது தமிழ் இலங்கையின் அரச கரும மொழிகள் இரண்டில் ஒன்று.
தேசிய இனப் பிரச்சனை தீர்ந்து விட்டதா?
இன்றைய இலங்கையின் அதிகார மொழியாயிருப்பது ஆங்கிலமே. (இது இந்தியாவிலும் பல மாநிலங்கட்குப் பொருந்தும்).
இன்று தமிழகத்தில் தமிழ் மூலமான கல்வியின் நிலை என்ன? தாய்மொழிக் கல்விக்காக இடதுசாரிகள் மக்கள் மத்தியில் பிரசாரம் செய்தளவுக்கு தி.மு.கவோ அ.தி.மு.கவோ பிற தமிழ்த் தேசியவாதிகளோ செய்ததாகச் சொல்ல முடியுமா?
தமிழை உயர் நீதிமன்ற மொழியாக்கக் கேட்டு ஏன் போராடி வருகிறர்கள்?
தமிழகத்தை விடக் கேரளமும் வங்கமும் கர்நாடகமும் தம் மாநிலப் பிரதான மொழிக்கு முதன்மை வழங்கி வந்துள்ளன.
கொஞ்சம் விசாரித்து விட்டுச் சான்றிதழ்களை வழங்குங்கள்.