குஜராத்திலே முஸ்லீம்களை இனப்படுகொலைசெய்து ஆட்சிக்குவந்த மோடி அரசாங்கம் இன்னுமொரு இனப்படுகொலை அரசுடன் இணைந்து செயற்படுகிறது என்றும் இச்செயற்பாட்டை எதிர்க்க வேண்டும் என்றும் மே 17 இயக்கம் சென்னையில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளது. பல்வேறு முழகங்களை முன்வைத்து பாசிச மோடி அரசுக்கும் கொலைகார ராஜபக்சவிற்கும் எதிரான இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாக மே 17 இயக்கம் கூறுகிறது.
ராஜபக்சவின் இருப்பும் மோடி அரசின் தோற்றமும் பல்தேசிய காப்ரட்களின் விருப்பும் தேவையும் என்பதை மே 17 இயக்கம் உட்பட அனைவரும் புரிந்துகொள்ள வேண்டிய காலம் உருவாகியுள்ளது.
கொழும்பில் டாட்டா ஹவுசிங் என்ற நிறுவனம் ராஜபக்ச அரசுடன் 430 மில்லியம் டாலர் ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கியுள்ளது. இதே போல பல நிறுவனங்களைப் பட்டியலிடலாம். பல்தேசிய வர்த்தக நிறுவனங்களால் அவற்றின் நலன்களுக்காக ஆட்சிக்குக் கொண்டுவரப்பட்ட மோடி அரசிற்கு எதிராகவும் பல்தேசிய நிறுவனங்களுக்கு எதிராகவும் போராட்டங்கள் விரிவுபடுத்தப்பட வேண்டும். வெறுமனே தமிழின உணர்வு என்ற மாயையை ஏற்படுத்தி பல்தேசிய வியாபாரக் கொள்ளைக்குத் துணைசெல்லும் பிழைப்பு வாதிகளையும் துணிச்சலுடன் மக்கள் மத்தியில் அம்ப்லப்படுத்த வேண்டும்.
தன் இனமான தமிழ் இனத்தையே அழித்த உங்களைவிடவா இவர்கள் மோசமானவர்கள்………..???????????????
Ettappan,KARUNA,Mathaian and same like others-Dont you feel shame about to say these people are Tamils