நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதையடுத்து 2022-23ம் ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற ஜனவரி 31-ந்தேதியிலிருந்து தொடங்க இருக்கிறது.
2022-23 ம் ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, ஜனவரி 31-ந்தேதியிலிருந்து பிப்ரவரி 11 வரை முதல் கட்டமாகவும் மார்ச் 14-ந்தேதியிலிருந்து ஏப்ரல் 8-ந்தேதி வரை இரண்டாம் கட்டமாகவும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2022-23 ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை பிப்ரவரி 1-ந்தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய இருக்கிறார்.
ஏற்கனவே நடந்த நிதியமைச்சருடனான கூட்டத்தில் தமிழ்நாடு நிதியமைச்சர் பல கோரிக்கைகளை முன் வைத்துள்ளார். தமிழ்நாடு கொடுக்கும் ஜி.எஸ்.டி க்கு நிகரான நிவாரணங்கள், தூத்துக்குடி துறைமுகத்தை ஆழப்படுத்தி முதலீடுகளை ஈர்ப்பது, தமிழ்நாட்டில் இருந்து மத்திய அரசுப்பணிகளுக்கு நிலங்களை வாங்கிக் கொடுக்க்கும் போதும் அந்த நிலம் தனியார்களுக்கு வழங்கப்ப்ட்டால் அதற்குரிய இழப்பீடுகள் தேவை என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இவைகளையும் பேரிடர் கால நிவாரணங்களையும் ஒன்றிய அரசு வழங்குமா என்பது கேள்விக்குறியே?