Tuesday, March 10, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

இம்சை அரசி செல்வி 24-ஆம் புலிகேசி : குப்பன்

இனியொரு... by இனியொரு...
08/09/2011
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
1
Home பிரதான பதிவுகள் | Principle posts

“ஜெயாவின் ஆட்சி என்றாலே நிர்வாகத் திறமைமிக்க ஆட்சி; சட்டம்ஒழுங்கைக் கண்டிப்புடன் பேணக்கூடிய ஆட்சி. தி.மு.க.வின் ஆட்சியோ இதற்கு நேர்மாறானதுசு என்றொரு கருத்தைப் பார்ப்பன ஊடகங்கள் திட்டமிட்டே நீண்டகாலமாகப் பரப்பி வருகின்றன.

அ.தி.மு.க., சட்டசபைத் தேர்தல்களில் அறுதிப் பெரும்பான்மை பெற்று அமைச்சரவையை அமைத்தவுடன், ஜெயாவின் சாணக்கியனான சோ ராமஸ்வாமி, “தடம் புரண்டுவிட்ட நிர்வாகத்தை மீண்டும் நிமர்த்துவது லேசான காரியம் அல்ல. அதைச் செய்து காட்டுகிற திறமை இவரிடம் உண்டு என்ற மக்களின் எதிர்பார்ப்பை உணர்ந்த முதல்வர், அதை நிறைவேற்றி வைக்க முழுமையாக முனைந்திருக்கிறார்சு என “பில்ட்அப்சு கொடுத்து எழுதினார்.

முன்னாள் அரசுத் தலைவர் அப்துல் கலாமின் ஆலோசகர் பொன்ராஜை அழைத்துவந்து, “புரட்ச்ச்சி தலைவிசு நடத்திய அமைச்சரவை ஆலோசனைக் கூட்டத்தில், விவசாயத்தை மேம்படுத்துவது, மின் தட்டுப்பாட்டை மூன்று மாதங்களில் சரி செய்வது, மாணவர்களின் புத்தகச் சுமையைக் குறைப்பது என்றெல்லாம் தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ள ஜூனியர் விகடன், “ஆட்சி நிர்வாகத்தில் முக்கியமான மாற்றத்தைக் கொண்டுவரும் அறிகுறி இதுசு என அக்கூட்டத்தைப் புகழ்ந்து தள்ளியது.

பாடச் சுமையைக் குறைக்க வேண்டும் எனக் கல்வியாளர்கள் கூறிவருவதை, மாணவர்களிடமிருந்து புத்தகங்களைப் பறித்துவிட வேண்டும் என ஜெயா புரிந்து கொண்டிருக்கிறார் போலும். தமிழகத்தில் பள்ளிக்கூட மாணவர்கள் கடந்த இரண்டு மாதங்களாக புத்தகங்களே இல்லாமல் பள்ளிக்கூடத்திற்குப் போய் பொழுதைக் கழித்துவிட்டுவருவதே, ஒரு அசாதாரணமான நிர்வாகியிடம் தமிழகம் மாட்டிக் கொண்டிருப்பதைப் புரிய வைத்துவிடுகிறது. பள்ளிக்கூடத்திற்குப் போக மாட்டேன் என அடம் பிடிக்கும் மாணவர்களைப் பார்த்திருக்கும் தமிழகம், பள்ளிக்கூட மாணவர்கள் புத்தகம் கொடுக்கக் கோரி சாலையில் மறியல் போராட்டம் நடத்துவதை இன்று பார்க்கிறது. ஒரு சட்டத்திருத்தத்தின் மூலம் மாணவர்கள் மத்தியில் இந்த ‘மாற்றத்தை’க் கொண்டு வந்திருக்கும் செல்வி ஜெயாவின் நிர்வாகத் திறமையை, அவரது துதிபாடிகள் கின்னஸ் சாதனைக்குப் பரிந்துரைக்கலாம்.

மாணவர்கள் வீதியில் இறங்கிப் புத்தகம் கேட்டுப் போராடும்பொழுது, ஜெயாவோ 200 கோடி ரூபாய் செலவில் அச்சடிக்கப்பட்டுத் தயார் நிலையில் உள்ள சமச்சீர் கல்வி நூல்களைக் கரையான் தின்ன விடுகிறார். இப்புதிய பாடநூல்களுக்குப் பதிலாக, காலாவதியாகிப் போன பழைய பாடத் திட்டத்தின் கீழ் அச்சடிக்கப்பட்ட பாடநூல்களைக் கொடுத்துத் தமிழக மாணவர்களின் கல்வித் தகுதியை உயர்த்தப் போகிறாராம், இத்திறமைசாலி.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை எதிர்த்துத் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருப்பதால், அத்தீர்ப்பை அரசிதழில் வெளியிட முடியாது என்ற நிலையிலும், அதனை அரசிதழில் வெளியிட வேண்டும் என அறிக்கைவிடுத்துத் தனது அதிபுத்திசாலித்தனத்தை வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறார், ஜெயா.
தமிழகத்தின் விவசாயத்தை மேம்படுத்த ஜெயாவிடம் சொந்த சரக்கு எதுவும் கிடையாது; குஜராத் பாணியை காப்பியடிப்பது என்பதுதான் அவரது திட்டம். இந்த குஜராத் பாணி மேம்பாடு என்பது சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளை நிலங்களிலிருந்து சிறுகச்சிறுக அப்புறப்படுத்திவிட்டு அல்லது அவர்களை ஐ.டி.சி., ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களின் குத்தகை விவசாயிகளாக மாற்றிவிட்டு விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்குவதுதான். விவசாயத்திலும் தனியார்மயம் தாரளமயத்தைப் புகுத்த வேண்டும் என்ற உலக வங்கியின் கட்டளையை நடைமுறைப்படுத்துவதுதான். எனவே, அமைச்சரவை ஆலோசனை கூட்டத்தில் விவசாய மேம்பாடு குறித்து ஜெயா கும்பல் நடத்திய ஆலோசனைகளை, தமிழக விவசாயிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட சதி என்றுதான் கூற முடியும்.

மின் பற்றாக்குறையைச் சமாளிக்க மின்வெட்டை அமல்படுத்துவது என்ற புளித்துப்போன சூத்திரத்தைதான் இந்தத் திறமைசாலியும் பின்பற்றி வருகிறார். கடந்த இரண்டு மாதங்களாகத் தமிழகமெங்கும் அறிவிக்கப்பட்ட மின்வெட்டோடு, திடீர் திடீரென மின்சாரத்தை நிறுத்திவிடும் அறிவிக்கப்படாத மின்வெட்டும் நடைமுறையில் இருந்து வருகிறது. கடந்த தி.மு.க. ஆட்சியில் குறிப்பிட்ட நேரம் மின் தடை அமல்படுத்தப்பட்டு வந்த நடைமுறை போய், ஜெயாவின் ஆட்சியில் மின்சாரம் எப்பொழுது வரும், எப்பொழுது போகும் என்ற நிச்சயமற்ற நிலை உருவாகிவிட்டதாகப் பொதுமக்களும், சிறுவீத உற்பத்தியாளர்களும் புலம்பும் அளவிற்கு மின்வெட்டு தீவிரமாகியிருக்கிறது.

மூன்று மாதங்களில் மின் பற்றாக்குறையைச் சமாளித்துவிடுவேன் என ஜெயா அடித்த சவடால் புஸ்வானமாகிப் போய்விட்டதால், புதிய திட்டங்களின் மூலம் அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்குள் நிலைமை சீராகி விடும் என இப்பொழுது பீற்றி வருகிறார். இந்தப் புதிய திட்டங்கள் தனது ஆட்சியின் பொழுது தீட்டப்பட்டு, அவற்றின் கட்டுமானப் பணிகள் அப்பொழுதே தொடங்கப்பட்டதாக உரிமை பாராட்டுகிறார், கருணாநிதி.

தமிழகத்தின் மின் பற்றாக்குறைக்கு யார் காரணம்? யார் அதனைத் தீர்க்கப் போகிறார்கள்? என்பது குறித்து அய்யாவும், அம்மாவும் எதிரும் புதிருமாக நின்று அடித்துக் கொள்ளும் அதே சமயம், இவ்வளவு மின் பற்றாக்குறை நிலவும் சமயத்திலும் தமிழகத்தில் செயல்பட்டு வரும் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தடையில்லாத மின்சாரம் வழங்குவதில் மட்டும் முன்னாள் தி.மு.க. ஆட்சிக்கும், இந்நாள் அ.தி.மு.க. ஆட்சிக்கும் இடையே எந்தவிதமான வேறுபாடும் இல்லை.

“கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தால் தனியார் மருத்துவமனைகளும் தனியார் காப்பீடு நிறுவனமும்தான் பயன் பெறுகின்றன. காப்பீடு திட்டத்தைச் செயல்படுத்த தனியார் நிறுவனங்களுக்குத் தருகின்ற நிதியில் அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தலாம்சு என கவர்னர் உரையிலேயே அறிவித்தார் ‘புரட்ச்சித் தலைவி’. தான் அறிவித்ததைத் தானே ஓரம் கட்டிவிட்டு, பழைய கள்ளு புதிய மொந்தை என்ற கணக்காய், புதிய காப்பீடு திட்டத்தை அறிவித்திருக்கிறது, ஜெயா அரசு. தி.மு.க. அரசு தனியார் காப்பீடு நிறுவனத்திற்குக் கொட்டிக் கொடுத்ததைவிட நான்கு மடங்கு அதிகமாகக் கொட்டிக் கொடுக்கப் போகிறது, இப்புதிய காப்பீடு திட்டம்.

கடந்த இரண்டு ஆண்டுகளாகச் செயல்படுத்தப்பட்டு வந்த கலைஞர் காப்பீடு திட்டத்தின் மூலம் ஸ்டார் ஹெல்த் இன்ஸ்யூரன்ஸ் என்ற தனியார் காப்பீடு நிறுவனம் 400 கோடி ரூபாய் இலாபம் அடைந்ததாகவும், அதிலொரு பங்கு கருணாநிதி குடும்பத்திற்குப் போய்ச் சேர்ந்ததாகவும் குற்றஞ்சாட்டி வந்தார், ஜெயா. இன்னும் ஓரிரு மாதங்கள் போனால், புதிய காப்பீடு திட்டத்தின் மூலம் எந்த கார்ப்பரேட் நிறுவனம் இலாபத்தைச் சுருட்டப் போகிறது, அதிலொரு பங்கு அ.தி.மு.க.வைக் கட்டுப்படுத்தும் எந்தக் குடும்பத்திற்குப் போய்ச் சேரப் போகிறது என்பதும் தெரிந்துவிடும்.

ஜெயா அறிவித்திருக்கும் மற்ற இலவசத் திட்டங்களும்கூடக் குளறுபடிகளும், சர்ச்சைகளும் நிறைந்ததாகதான் தீட்டப்பட்டுள்ளன.“மாதமொன்றுக்கு 1 இலட்சம் கிரைண்டர்கள்தான் தயாரித்து வழங்க முடியும்சுஎன கோவையைச் சேர்ந்த கிரைண்டர் உற்பத்தியாளர்கள் அரசுக்குத் தெளிவுபடுத்தியிருந்த பிறகும், இந்த டெண்டரைக் கோரும் நிறுவனங்கள் ஆண்டொன்றுக்கு 25 இலட்சம் கிரைண்டர்கள் வழங்க வேண்டும் என்ற நிபந்தனையை விதித்திருக்கிறது, ஜெயா அரசு. சீன நாட்டு கிரைண்டர்களை இறக்குமதி செய்து விற்கும் வட இந்திய வியாபாரிகளிடம் டெண்டரை ஒப்படைக்கும் நோக்கம் இந்த நிபந்தனையின் பின் மறைந்திருக்கலாம் என்ற சந்தேகத்தைத் தமிழகத்தைச் சேர்ந்த உற்பத்தியாளர்கள் தற்பொழுது எழுப்பியுள்ளனர்.

இலவச கலர் டி.வி. வழங்கும் திட்டத்தைச் செயற்படுத்திய தி.மு.க. அரசு, அதற்காக டெண்டர்களைக் கோரியபொழுது, வெளிப்படைத் தன்மையோடு நடந்து கொண்டதாகவும், அ.தி.மு.க. அரசு இலவச மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் வழங்கும் திட்டங்களுக்காக டெண்டர் கோரும் விஷயத்தில் முந்தைய ஆட்சியைப் போல வெளிப்படைத் தன்மையோடு நடக்கவில்லை என்றும் அ.தி.மு.க.வின் தோழமைக் கட்சிகள்கூட குற்றஞ்சுமத்தி வருகின்றன. இதன் பொருள் இந்த இலவசத் திட்டங்களில் கமிசன் என்ற பெயரில் கொள்ளையடிப்பதற்கான வாய்ப்புகளை அ.தி.மு.க. திறந்துவிட்டுள்ளது என்பதுதான்.

கிராமப்புற ஏழை மக்களுக்கு இலவச ஆடு, மாடு வழங்கும் திட்டத்தைத் தனது தேர்தல் அறிக்கையில் ஜெயா அறிவித்தபொழுதே, மலிவான விலையில் மாட்டுத் தீவனம் கிடைப்பதை உத்திரவாதப்படுத்தாமல் மாடு வழங்குவது, கிராமப்புற ஏழை மக்களை மேலும் கடனில் மாட்டிவிடுவதில் முடிந்துவிடும் எனப் பலரும் சுட்டிக்காட்டினர். “அதனாலென்ன, மாடு வழங்கும் திட்டத்தோடு, மாட்டுத்தீவன உற்பத்தியைப் பெருக்கும் திட்டத்தையும் சேர்த்து அறிவித்தால் தீர்ந்தது பிரச்சினைசு எனக் கோமாளித்தனமாக முடிவெடுத்து இத்திட்டத்தை ஜெயா அரசு அறிவித்திருக்கிறது.

தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்திற்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளைப் பார்த்தால், அத்திட்டம் ஏழைக் குடும்பங்களை மனதில் வைத்துக் கொண்டு உருவாக்கப்பட்ட திட்டமாகத் தெரியவில்லை. வெறும் விளம்பரத்திற்காகவோ அல்லது ஏழைகளின் பெயரைச் சொல்லி அ.தி.மு.க. கும்பலும் அதிகார வர்க்கமும் சேர்ந்து சுருட்டிக் கொள்வதற்காகவோ உருவாக்கப்பட்ட திட்டம் போல தெரிகிறது.

பட்ஜெட்டைத் தாக்கல் செய்வதற்கு முன்னதாகவே 4,000 கோடி ரூபாய் அளவிற்கு கூடுதல் வரிகள் விதிக்கப்பட்டதோடு, 1,400 கோடி ரூபாய் அளவிற்கு டாஸ்மாக் சரக்குகளின் கட்டணங்களும் உயர்த்தப்பட்டன. இக்கூடுதல் வரிகள் விதிக்கப்பட்ட ஒரு சில நாட்களிலேயே, ஜவுளி பொருட்களின் மீது விதிக்கப்பட்ட வரியை ரத்து செய்வதாக அறிவிக்கிறார், ஜெயா. “நினைத்தால் வரி விதிப்பதும், நினைப்பை மாற்றிக் கொண்டால் வரியை நீக்குவதும் ஜெயாவின் பொழுதுபோக்குசு என இதனை நக்கலடித்தார், கருணாநிதி.

ஒரு பக்கம் இலவசம், இன்னொருபுறம் வரிக் கொள்ளை; நினைத்தால் வரி விதிப்பது, நினைப்பை மாற்றிக் கொண்டால் வரியை நீக்குவது; வரி விதிப்பு தமிழக அரசு செய்தது; ஆனால், வரி உயர்வை ரத்து செய்தது ஜெயலலிதா என்ற இந்த நடவடிக்கைகள் எல்லாம் நமக்கு துக்ளக் தர்பாரை, இம்சை அரசன் 23ஆம் புலிகேசியைப் போல கோமாளித்தனமான, வக்கிரமான ராஜாவாக ஜெயா ஆட்சி நடத்தி வருவதைதான் எடுத்துக் காட்டுகின்றன.
“தான் பதவியேற்றவுடனேயே சங்கிலி பறிக்கும் திருடர்கள் ஆந்திராவுக்கு ஓடிவிட்டதாகசு தனக்கேயுரிய மமதையோடு புளுகித் தள்ளினார் ஜெயா. அவர் இப்படிச் சொல்லி வாயை மூடும்முன்பே ஆளுங்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா வீட்டிற்குள் திருடன் புகுந்து தனது கைவரிசையைக் காட்டிச் சென்றான். கடந்த இரண்டு மாதங்களாகத் தமிழகமெங்கும் நடந்துவரும் கொலை, கொள்ளை, சங்கிலி பறிப்பு சம்பவங்கள் ஜெயாவின் நிர்வாகத் திறமையைச் சந்தி சிரிக்க வைத்துவிட்டன. குறிப்பாக, சென்னையில் நடந்த வழக்குரைஞர் சங்கர சுப்புவின் மகன் சதீஷ்குமாரின் கொலை, ஜெயாவின் போலீசு தமிழகத்தின் சட்டம் ஒழுங்குக்குச் சவால்விட்டிருப்பதைத் தெளிவுபடுத்தியது.

ஆட்சி மாற்றம் நிகழ்ந்தவுடனேயே பெரும்பாலான டாஸ்மாக் பார்களின் ஏலக் குத்தகை அ.தி.மு.க. பிரமுகர்களுக்கு மாறிவிட்டதாகவும், பார்களுக்கான ஏலமே குறிப்பிட்ட சில அ.தி.மு.க. பிரமுகர்கள் மட்டுமே கலந்துகொள்ளும்விதத்தில்தான் நடத்தப்பட்டதாகவும், பார்களுக்கான ஏலத்தொகை அடிமாட்டு விலைக்கு நிர்ணயிக்கப்பட்டு அ.தி.மு.க. பிரமுகர்களுக்குத் தாரை வார்க்கப்பட்டதாகவும் ஜூனியர் விகடன் இதழ் அம்பலப்படுத்தி எழுதியிருக்கிறது.

மணல் கொள்ளையைப் பொருத்தவரை, “ஆட்சி மாறியது; காட்சி மாறவில்லைசு என்றும் குறிப்பிடுகிறது, ஜெயாவின் விசுவாசியான ஜூ.வி. “கடந்த ஆட்சியில் கோவையைச் சேர்ந்த தொழில் அதிபர் ஆறுமுகசாமியும், தென்மாவட்டத்து காங்கிரசு பிரமுகரான படிக்காசுவும்தான் மணல் விற்பனையில் பெரும் இலாபமடைந்தார்கள். இந்த ஆட்சியிலும் மணல் விற்பனை அவர்களின் கைகளுக்குதான் போயிருக்கிறது. கடந்த ஆட்சியில் இவர்கள் அழகிரியின் நிழல் நபராக இருந்தவருக்கு மாதமொன்றுக்கு 50 இலட்சம் கப்பம் கட்டினார்கள். இப்போது கப்பம் திசை திரும்பி மன்னார்குடிக்குச் செல்கிறது. அவ்வளவுதான் வித்தியாசம்சு என ஜூ.வி. குறிப்பிடுகிறது. (ஜூ.வி. 31.7.2011, பக்.34)
கல் குவாரி அதிபர்களைக் கோட்டைக்கு வரவழைத்து கப்பம் கட்டுவது தொடர்பாக நடத்தப்பட்ட பேரம் அம்பலமானதால்தான், தொழில்துறை அமைச்சராக இருந்த சண்முகவேலு ஊரகத் துறைக்கு மாற்றப்பட்டார். இது தவறுக்குக் கிடைத்த தண்டனையல்ல. மாறாக, கப்பத்தை யாரிடம் செலுத்த வேண்டும் என்பது முடிவாகும் முன்பே, சண்முகவேலு பேரத்தைத் தொடங்கி நடத்தியதுதான் பிசகாகிவிட்டது.

சிறுதாவூரில் தாழ்த்தப்பட்டோருக்கு வழங்கப்பட்ட நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டு தனது சொகுசு பங்களாவைக் கட்டியுள்ள ஜெயா; கொடநாட்டில் மக்களின் புழக்கத்திற்குப் பயன்பட்டுவந்த பொது வழித்தடத்தை ஆக்கிரமித்துக் கொண்டுவிட்டு, உச்ச நீதிமன்றம் அந்தப் பொதுப்பாதையைத் திறந்துவிட வேண்டும் என உத்தரவிட்ட பிறகும், அதனை விட்டுத் தர மறுக்கும் ஜெயா, நில அபகரிப்புக்கு எதிராகத் தனி போலீசு பிரிவை உருவாக்கியிருப்பது குரூரமான நகைச்சுவை. இப்போலீசார் 2006 தொடங்கி 2011 முடிய நடந்துள்ள நில ஆக்கிரமிப்புகளை விசாரிப்பார்கள் என வரையறுக்கப்பட்டிருப்பதே, இது தி.மு.க.வை அரசியல்ரீதியாக முடக்குவதற்கான முயற்சி என்பதை அம்பலப்படுத்திவிட்டது.

எனினும், கிணறு தோண்ட பூதம் கிளம்பிய கதையாக, வணிக வரித்துறை அமைச்சர் அக்ரி. கிருஷ்ணமூர்த்தி, சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா, சட்டத்துறை அமைச்சராக்கப்பட்டுப் பின் பதவி பறிக்கப்பட்ட அம்பாசமுத்திரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா உள்ளிட்டு பல அ.தி.மு.க. பிரமுகர்கள் மீதும் நில அபகரிப்பு புகார்கள் போலீசிடம் அளிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, அக்ரி.கிருஷ்ணமூர்த்தி மீது புகார் கொடுத்த அ.தி.மு.க.வின் திருவண்ணாமலை மாவட்டப் பிரதிநிதியான மூர்த்தியை மிரட்டி, அப்புகாரைத் திரும்பப் பெறச் செய்துவிட்டது அ.தி.மு.க. தலைமை. அக்ரி. கிருஷ்ணமூர்த்தி மீது முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி கொடுத்த புகாரை கடந்த ஆட்சியின்பொழுதே போலீசு வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டதால், அவர் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார்; அமைச்சர் மீது புகார் கொடுக்க முயன்றுவரும் திருவண்ணாமலையைச் சேர்ந்த அரவிந்த் தனலெட்சுமி தம்பதியினர் போலீசாரால் அங்குமிங்குமாக அலைக்கழிக்கப்படுகின்றனர். இசக்கி சுப்பையா மீது ஏற்கெனவே நில அபகரிப்பு தொடர்பாக மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அமைச்சர் பதவி மட்டும் அவரிடமிருந்து பறிக்கப்பட்டது.

ஊழலற்ற, யாருடைய தலையீடும் இல்லாத, நேர்மையான ஆட்சியை ஜெயா வழங்குவார் எனப் பார்ப்பன ஊடகங்கள் உருவாக்கிய பிம்பம், ஜெயா ஆட்சியைப் பிடித்த மறுநொடியே உடைந்து நொறுங்கிவிட்டது என்பதைத்தான் இவையெல்லாம் எடுத்துக் காட்டுகின்றன. தி.மு.க. என்ற கொள்ளைக் கும்பலுக்குப் பதில் அ.தி.மு.க.என்ற கொள்ளைக் கும்பல், மு.க.விற்குப் பதில் ஜெயா, கருணாநிதியின் குடும்ப ஆதிக்கத்திற்குப் பதில் சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம் என்ற மாற்றத்தைத் தவிர, வேறு எதையும் இந்த ஆட்சி மாற்றம் சாதித்துவிடவில்லை என்பதே உண்மை.
இலவசங்கள் மூலம் மக்களைச் சாதுர்யமாக மயக்கி, கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சேவை செய்யும் ஆட்சியைதான் மு.க. நடத்திவந்தார். அய்யா போன அதே பாதையில்தான் அம்மாவும் தனது ஆட்சித் தேரை உருட்டிச் செல்கிறார். இது மட்டுமா, ஈழத் தமிழர் விவகாரம், தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால் தாக்கப்படும் பிரச்சினைகளில் மைய அரசுக்குக் கடிதம் எழுதுவது என்ற மு.க.வின் தந்திரத்தைதான் ஜெயாவும் பின்பற்றி வருகிறார். தமிழ், தமிழினம், நாத்திகம் என முற்போக்கு வேடம் போடுவார் மு.க. பார்ப்பன பாசிஸ்டான ஜெயாவிடம் இந்த வேடத்தைக்கூட எதிர்பார்க்க முடியாது என்பதைத் தவிர, அய்யாவின் ஆட்சிக்கும், அம்மாவின் ஆட்சிக்கும் இடையே அடிப்படையில் எந்த வேறுபாடும் கிடையாது.

எனினும், சில விஷயங்களில் அய்யாவைவிட, அம்மா ‘திறமையானவர்’ என்பதை நாம் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து குவித்த வழக்கு, பிறந்த நாள் பரிசு வழக்கு ஆகிய கிரிமனல் வழக்குகளில் முதல் குற்றவாளியான ஜெயா, சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்திக் கொண்டு, கிரிமினல்தனமான முறையில் இந்த வழக்குகளின் விசாரணையை 14 ஆண்டுகளுக்கும் மேலாக இழுத்தடித்து வருகிறார். தேர்தல் ஆணையத்திற்குத் தவறான தகவல்களைக் கொடுத்ததற்காக ஜெயா மீது தொடரப்பட்ட வழக்கு, 37ஆவது முறையாகத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், தனது கிரிமினல் குற்றங்களுக்காக நீதிமன்றம் தன்னை நெருங்கிவிடாதபடி, தனக்குள்ள சாதி மற்றும் அரசியல் செல்வாக்கு, தொடர்புகளைப் பயன்படுத்திக்கொண்டு திறமையாகத் தன்னைத் தற்காத்துக் கொண்டு வருகிறார், பார்ப்பன பாசிச ஜெயா.

இப்படிபட்ட கிரிமினல் பேர்வழியை, அவர் மாறிவிட்டாரென்றும், பக்குவப்பட்டுவிட்டாரென்றும், திறமையான நிர்வாகியென்றும் ஒளிவட்டம் கட்டி, ஊடகங்கள் மக்கள் முன் நிறுத்துவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் தவிர வேறென்ன?

நன்றி : புதியஜனநாயகம்

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

பிரித்தானியாவில் ஏனைய நகரங்களுக்கும் பரவிய வன்முறை

Comments 1

  1. thurai ilamurugu says:
    15 years ago

    “கொடுங்கோல் மன்னன் வாழும் நாட்டின் கரும்புலி வாழும் காடு நன்றே”:-

    மேற்கண்ட பாடலுக்கு இன்றைய தமிழர் நிலைக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறது. என்று யாராவது நினைத்தால் அதற்கும் நாம் பொறுப்பு அல்ல. கருணாநிதி தமிழர் இல்லை என்றே கூக்குரலிட்டு இணையதளத்தில் எழுதித் தெரிவித்த தமிழ்த் தேசியர் போலி பெரியார் வாதிகள் கைகட்டி மெய்பொத்தி தூயத் தமிழ் பெண்ணாகிய தமிழ் முதல்வருக்கு பணிவிடை செய்து வருகிறார்கள். சமச்சீர் கல்வியைக் கொண்டு வரவில்லை. என்று சாலையில் இறங்கிப்போராடவேண்டிய…………….வலது இடது பொது உடமைவாதிகள் (அவர்களுடைய மாணவர் இயக்கங்களின் செயல்பாடுகளில் வேறு செய்தி) “அம்மா தயவு செய்து சமச்சீர் கல்வி பிச்சை போடுங்கள். உச்ச நீதி மன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துங்கள்”. என்று இரந்தும் பணிந்தும் கேட்கிறார்கள். உரிமையைக் கேட்பதற்கு அஞ்சுகின்ற பெரியார் வாதிகள் வெகு எச்சரிக்கையுடன் திமுகவும் ஒன்றும் சும்மா கொண்டு வரவில்லை. போராடித்தான் வாங்கினோம். என்று பழம் பெருமை (3 மாதத்திற்கு
    முந்தைய) நிலைமையை நினைவு படுத்தத்தவறுவதில்லை. தங்களுடைய இதழ்களில் சமச்சீர் கல்வியைப் பற்றிய கட்டுரைகளை எழுதும் போதும் இணையத்தில் எழுதும் போதும் அம்மாவின் மனம் புண்பட்டு விடாதபடி பார்த்துக் கொள்கிறார்கள். வாயைக் கொடுத்து பின்புறத்தை பழுக்க வைத்துக் கொள்ள யாருக்கும் விருப்பம் இல்லை. கிலி பிடித்துக் கிடக்கிறார்கள். சட்ட மன்றத்தின் ஈழத்தமிழர் பற்றி. ஒரு தீர்மானம் நிறைவேற்றியதில் செந்தமிழன் சீமான் செயல் மறந்துஅகம் மகிழ்ந்து போய் செயலலிதாவை நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து விட்டார். விசய லட்சுமி பற்றிய செய்திகளையும் பேசி முடித்திருப்பார். என்று நம்பலாம். பழ. நெடுமாறன் மற்றும் இணையத்தில் மட்டும்வீரம் பேசும் ஈழத்தமிழர்கள் இன்னும் மகிழ்ச்சிக்கடலில் இருந்து மீளவே இல்லை. போயஸ் தோட்டத்தில் இருந்து சரியான சைகை கிடைக்காதா என்று .ஏங்கிக் கிடக்கிறார் பழ. நெடுமாறன்…… அவர்களுடைய பணிவும் அடக்கமும்!! அடடா!!! இவர்களா 6 மாதங்களுக்கு முன்பு துள்ளிக் குதித்தவர்கள் என்று நம்மை வியப்படைய வைக்கிறது. மாமியின் ஆட்சியில் உள்ள குறைகளை கண்டிக்கத் தெரியாதவர்களாகிய ராமதாசு திருமா கூ திராவிடக் கட்சிகளினால் தான் எல்லாம் கெட்டுவிட்டது. இனி எக்காலத்திற்கும் அவர்களுடன் கூட்டு கிடையாது. அவர்களுடன் தேர்தல் உடன்பாடும் கூட்டணியும் வைத்ததற்கு மன்னிப்புக் கோருகிறேன். என்ற அச்சத்தில் நடுக்கு சுரம்..வந்தவன் போல் பிதற்ற ஆரம்பித்துவிட்டார்கள். அம்மாவா கொக்கா?

    காவல் துறையின் அதிகாரம் கட்டவிழ்த்து விடப்பட்டு உள்ளது. நிறம் மாறும் பூக்களைப் போல் குடிமை இயல் வழக்குகள் (சிவில்) குற்றவியல் வழக்குகளாக (கிரிமினல்) மாறுகின்றன. காவல்துறை நினைத்தால் யாரையும் எவ்வளவு நாளைக்கும் கைது செய்யலாம். பேய்கள் அரசாண்டால் பினம் தின்னும் சாத்திரங்கள் என்பது பாரதி வாக்கு. இதை மெய்பித்தவர்கள் உலக அளவில் இட்லர். இந்திய அளவில் இ ந்திரா கா ந்தி. தமிழ் நாட்டில் செயலலிதா. (மூன்றில் இருவர் பெண்கள் என்பதில் ஏதேனும் செய்தி அடங்கி உள்ளதா. என்பது தெளிவாகத் தெரியவில்லை.) இதன் வாயிலாக பறிக்கப்பட்ட சொத்துக்களில் தானே மீட்கப்படுகின்றன. இழ ந்தவர்களுக்கு நல்லது தானே நடக்கிறது. விரைவாக நீதி கிடைக்கிறது. என்று எல்லாம் மனித உரிமை ஆர்வலர்களும் அறிவு சீவிக்கும் தங்களையும் மற்றவர்களையும் ஏமாற்றி வருகின்றனர். அதில் உள்ள சட்ட மீறலையும் மனித உரிமை மீறலையும் யாரும் கண்டிக்க முடியவில்லை. செம்மொழி மா நாடு தமிழ் அளித்த செய்திகள் யாவும் குப்பையில் தூக்கி வீசப்பட்டுள்ளன. தமிழ் எமது மூச்சு. முழங்கும் தமிழ் சான்றோர்கள். பிழைப்பதற்கு வடமொழி படிக்கலாமா என்று ஆலோசனை நடத்துவதாக எல்லாம் தெரிகிறது. மதுரையில் அச்சமின்றி நடமாட இயலவில்லை/ என்று முனுமுனுத்தவர்கள் எல்லாம் தமிழ் நாட்டின் எந்த மூலையில் விடுதலை காற்றும் உரிமை ஒளியும் திகழ்வதாக எண்ணிக் கொண்டு இருக்கின்றனர்?. இவையெல்லாம் திமுகவிற்கு எதிராகத்தானே பயன்படுத்தப்படுகின்றன. நமக்கு என்ன போச்சு என்று ஒருவித மகிழ்ச்சியில் திளைத்து இருக்கின்றனர். பெரியார் பெயரில் கட்சி நடத்தும் பெருந்தலைவர்கள் நிரந்தர ஓய்வு அல்லது அரைகுறை. அறிக்கைகள் என்ற அளவிற்கு தங்களுடைய செயல்பாட்டினைக் குறுக்கிக் கொண்டுள்ளன. ஆனால் சோ .ராமசாமி ஞா நி…. போன்ற பார்ப்பனர்களும் அவர்களின் கொள்கையைப் பின்பற்றும் புதிய பார்ப்பன பார்ப்பனியர்களும் சமச்சீர் என்ற சொல்லையே எதிர்க்கின்றன. அதில் வியப்பதற்கு ஒன்றும் இல்லை. அவர்களுடைய வாழ்வியல் அடிப்படை வர்ணாஸ்ரம தர்மம்…. எனப்படும் நால் வகை ..பகுப்பு முறை. தம்முடைய வேதத்தின் அடிப்படையாக உள்ள மனு நீதியை/ சாதியின் கட்டளையை நிறைவேற்றி வருகின்றனர். தினமணி வைத்தியநாதப்பார்ப்பனரும் குமுதம் உள்பட்ட புதிய பார்ப்பனர்களும் தம்முடைய முதல் கடமையாக.. சமச்சீர் கல்விக்கு எதிராக நஞ்சை கக்கி வருகின்றனர். தமிழை வளர்ப்பதாகக் கூறி செய்தித்தாள் நடத்தும் தினமணி குமுதம் செம்மொழியில் புகழும் பதவியும் பெற்ற வைத்தியநாதன் மதி …. சமச்சீர் கல்விக்கு எதிராக கருத்துப் பரப்புவதை தங்களுடைய பிறவிக் கடமையாக செய்து வருகின்றனர். கருத்து ஓவியம்…வழியாக சூத்திரர்களுக்கு எதிராக பரப்புரை செய்யும் ” மதி” சமச்சீர் கல்வி மட்டும் போதுமா சமச்சீர் பள்ளி வேண்டாமா .சமச்சீர் சாலை. வேண்டாமா? சமச்சீர் பெற்றோர் வேண்டாமா? என்று கருத்துரையில் நக்கல் அடிக்கிறார். ஆனால் மாற்று (சமச்சீர் கோவில் வேண்டாமா சமச்சீர் கருவறை வேண்டாமா சமச்சீர் அர்ச்சகர் வேண்டாமா என்ற கேள்வியை எழுப்புவது இல்லை.) இவையெல்லாம் கிடைத்த பின்னர்தான் சமச்சீர் கல்வி வேண்டும். அரசுப் பள்ளிகளின் நிலை ஆசிரியர்களின் நிலை இவையெல்லாம் உயர வேண்டும் அதன்பின்தான் சமச்சீர் கல்வி வேண்டும் என்று மாற்றுக் கருத்துகள் சொல்லுவது மறைமுகமாக சமச்சீர் கல்வி வேண்டாம் என்று சொல்லுவதற்கு ஒப்பானது. சமச்சீர் கல்வியை நடைமுறைப் படுத்திக் கொண்டே இவற்றையெல்லாம் செய் என்று உயர் நீதி மன்றம் ஆணையிட்ட பின்பும் அதை நிறைவேற்ற மறுக்கும் அரசின் அராஜகப்போக்கை எதிர்ப்பவர் இல்லை. பயிர் விதைக்க உதவ வேண்டிய அரசு காவல் துறையின் மூலம் நாட்டில் பயத்தை விதைத்து வருகிறது. அதன் இலக்கு இன்றைக்கு தங்களுடைய தெரியாத திமுக தானே என்று மனித உரிமை ஆதரவாளரும் மற்ற கட்சியினரும் மகிழ்ந்து கொண்டு இருக்கின்றன. அண்ணன் செத்தால் திண்ணை காலியாகும் அதில் நாம் அமர்ந்து கொள்ளலாம். என்று மனப்பால் குடித்து வருகின்றன. அதில் உள்ள மனித உரிமை மீறல் சட்ட மீறல் இவற்றைப் பற்றி சிறிதும் கவலைப்படுவதில்லை. கட்டவிழ்த்து விடப்பட்ட காவல்துறை உள்ளாட்சி தேர்த்தலுக்குப் பிறகு மற்ற கட்சியினர் மீதும் (விசயகாந்த் ……… வலது இடது சாரிகள் உள்ளிட்ட) பாயும். பாயாது என்பதற்கு எந்த உறுதியும் இல்லை. அடுத்த வீட்டில் நெருப்பு பற்றிக் கொள்ளும் போது தூங்கிக் கொண்டிருப்பவனைப் போலிருக்கிறது இவர்கள் நடந்ததுகொள்ளுவது. தீ இவர்கள் வீட்டிற்கும் பரவும் நாள் வரக்கூடும். இ ந்திய அளவில் நெருக்கடி நிலையை அறிவித்த இந்திரா காந்தி வலதுசாரிகளுக்கு எதிராகவும் முற்போக்கு சக்திகளுக்கு ஆதரவாகவும் அது செயல்படும் என்று அறிவித்தார் கடைசியில் நாட்டின்.கடைசி..குடி. மகன் வரை அனைவரையும் அது கடித்து காயப்படுத்தி விட்டது. இன்றைய தமிழகத்திலும் அது நிகழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம்

    பாசிச இட்லர் காலத்தில் வழங்கி வந்த பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது.

    “அடுத்த தெருவில் யாரையோ கைது செய்தனர்.
    யூதனைத்தானே கைது செய்கிறார்கள் என்று இருந்து விட்டேன்
    . பக்கத்து வீட்டில் யாரையோ கைது செய்தனர். .
    கம்யூனிஸ்டைத்தானே கைது செய்கிறார்கள் என்று இருந்து விட்டேன்.
    இன்று என்னை கைது செய்ய வருகிறார்கள்
    . எதிர்த்து குரல் கொடுக்க யாரும் இல்லை.
    திருவாளர் பொதுக் குடிமகன்

    தினமும் விடுதலைப் புலிகளின் தலைவர் பெயரை ஒரு நாளைக்கு மூன்று தடவையாவது சொல்வதில் இன்பம் காணும் தமிழ்த் தேசியர்களும் பழ.நெடுமாறனும் அவருடைய உருவப் படத்தை தங்களுடைய பனியன் சட்டையில் அணிந்து கொண்டும் அலைந்த பெரும் வீரர்களும் இன்றைக்கு .பிரபாகரன்……பெயரைச் சொல்லக்கூட அஞ்சி எம் சி யார் கனவு தமிழ் ஈழம் என்று கூட்டங்களில் பேசி வருகின்றனர். இது இரண்டு வகையில் துரோகத்தனமானது.

    1. உண்மையில் தமிழ் ஈழத்திற்கு உழைத்த உயிர் நீத்த தியாகிகளின் நினைவுகள் அவமதிப்பானது.

    2. நடுவண் அரசின் கட்டளையை அணுவளவும் மீறாதவர் மன்னொத்து கொபாலன் மெனொன்……. இரமச்ச ந்திரன் (எம்.சி.ஆரின் முழுப்பெயர்)
    அவருக்கு சற்றும் பொருந்தாத புகழை கூட்டித் தருவது. எம்.சி.ஆர் எக்காலத்திலும் நடுவண் அரசின் ஆணையை எந்த செய்தியிலும் மீறியவர் அல்லர். தமிழ் நாட்டில் இட ஒதுக்கீட்டிற்கு பொருளாதார உச்ச …வர ம்பைக்.. கொண்டுவர முயன்ற பார்ப்பனீயர் மக்கள் ஒரு தேர்தலில் தோற்கடித்தவுடன் விரைந்து அந்த கருத்தை மாற்றிக் கொண்டார். திம்பு பேச்சுவார்த்தை முடிவில் ராசிவ்-செயவர்த்தனே.உடன்படிக்கையில் கையெழுத்திட முதலில் புலிகள் தயங்கினர். ராஜிவ் காந்தி அவர்களை சென்னையில் உள்ள விடுதி அறைகளில் சிறை வைத்தார். அந்த பொழுதில் எம் சி ஆர் ராஜிவ் காந்தியை அமைதிப்படுத்தி அவர்களை சிறை வைப்பில் இருந்து விடுதலை செய்தார். எப்படி? பிரபாகரன் உள்ளிட்ட தலைவர்களை நேரில் சந்தித்து ” பேசாமல் ராசிவ் காந்தி சொன்னது போல் திம்பு மா நாட்டு உடன்பாடில் கையெழுத்து போட்டுவிட்டு ஒழுங்காக ஊர் போய் சேருங்கள். என்னால் இதற்கு மேல் உதவ இயலாது. என்று கூறிக் கையை விரித்து விட்டு ஒதுங்கிக் கொண்டால் அதன்பின் நோய்வாய்ப்பட்டு இற ந்தும் போனார். இத்தகைய மனிதனை தமிழ் ஈழம் தனி ஈழம் பற்றிக் கனவு கண்டவர் என்று கதைப்பது வரலாற்று .குற்றம்……. ஆனால் செந்தமிழர்களும் பழ.நெடுமாறன் பழ.கருப்பையாக்களும் அதைத்தான் செய்து வருகின்றனர். மாமியிடம் நேரடியாக கேட்பதற்கு அஞ்சி இது எம்.சி.ஆர் கனவு எண்ணம் என்றெல்லாம் கூறினால் மாமி மனம் இறங்கி தமிழ் ஈழம் வாங்கி கொடுத்து விடுவார். என்பது அவர்கள் எண்ணம் பிரபாகரன் பெயரைச் சொன்னால் பொடா/தடா இல்லாவிட்டாலும் குண்டா சட்டம் கஞ்சா சட்டம் நில பறிப்புச் சட்டம் இவற்றில் ஒன்று தங்கள் மீது பாயும் என்பது இவர்களுக்கு தெரியும். ஒரு முறை கடிபட்டவன். இருமுறை அஞ்சுவது இயல்புதானே. மாமி இடப்பக்கம் பாய்வாரா வலப்பக்கம் பாய்வாரா அல்லது நேரே பாய் ந்து கடிப்பாரா என்று யாராலும் உறுதியாக சொல்ல இயலாது.
    மேலும் ஒரு செய்தி. தனித் தமிழ் நாடு கிடைத்துவிட்டால் பார்ப்பனீயம் ஒழிந்து போகும். என்று பிதற்றம் கூட்டம் ஒன்று. உள்ளது. இன்றைய தமிழகம் ஒரு தனி நாடாகவும் அதற்கு மாமி கட்டுப்பாடுகள் அற்ற தலைவராகவும் இரு ந்தால் என்னவாகும் என்ற எண்ணமே அச்சமாக உள்ளது. பெரியார் பார்ப்பனீயத்தை ஒழிப்பதற்காகதனித் தமிழ் நாடு கேட்டார் ஆனால் சிலர் அதை வளர்ப்பதற்காக, பார்ப்பனீய ராசா ராணிகளை மீண்டும் அரியணையில்அமர்த்துவதற்காக தனித் தமிழ் நாடு கேட்கின்றனர். அதை ஒரு சாதனை போல் சொல்லத் திரிகின்றனர். தமிழ்த் தேசியம் என்பது தமிழ் நாட்டு. மக்கள் தொகையில் 90%ஆக உள்ள சூத்திர. தமிழர் நலனுக்காக போராடும் தன்மை படைத்தாக இருக்க வேண்டும். அதை விடுத்து அது வெறும் ஈழத்தமிழர்களுக்காகவும் தமிழ நாட்டு பார்ப்பன பார்ப்பனீயர்களின் காலைக் கழுவுவதற்காக என்றால் அது தேவை இல்லை. எத்தனை பத்தாண்டுகள் சென்றாலும் சிறிய குழுக்களாய் இருப்பதைத் தவிர அவர்களால் வேறு எதையும் சாதிக்க இயலாது.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...