தமிழ்நாட்டில் 1968ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி தஞ்சை மாவட்டம் கீழ்வெண்மணியில் நிகழ்ந்த படுகொலை ஒவ்வொரு மனிதனையும் போராளியாக மாற்றும் மனித அவலம். சாதிய மேலாதிக்கமும், நிலவுடைமையாளர்களின் ஆதிக்கமும் ஒன்றிணைந்து நடத்திய இந்தப் படுகொலையில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 44 விவசாய கூறி விவசாயிக்ள எரித்துக் கொல்லப்பட்டனர். உயிரோடு ஒரே சிறிய குடிசைக்குள் வைத்து குழந்தைகளும் பெண்களும் மரண ஓலத்தின் மத்தியில் எரித்துக்கொல்லப்படுகின்றனர்.
வெள்ளையர்கள் காலனி ஆதிக்கத்திலிருந்து தமது நேரடி நிர்வாகத்தை திருப்பியழைத்துக்கொண்டு தமது அடியாட்களை அதிகாரத்தில் அமர்த்திவிட்டுச் செல்கின்றனர். தாம் விரும்பிய ஜனநாயகத்தை திணித்துவிட்டுச் செல்கின்றனர். தொழில் பிரிவினையால் தோன்றி சாதிய அமைப்பை, சமூகத்தளத்திலிருந்து அரசியல் தளத்திற்கு நகர்த்தினர்
சாதீயத்தின் வரலாற்று ஒடுக்குமுறையின் சின்னமாக கீழ் வெண்மணிப் படுகொலைகள் திகழ்கின்றன.
தெற்காசியாவில் சாதி ஒடுக்குமுறைக்கும் நிலப்பிரபுத்துவ மேலாதிக்கத்திற்கும் அடையாளச் சின்னம் இந்தப் படுகொலைகள். 44 மனித உயிர்கள் உயிரோடு கொழுத்தப்பட்ட கோரம்! தாழ்த்தப்பட்ட சாதியினர் மீதான ஒடுக்குமுறை இனப்படுகொலையாக மாற்றமடைய ஆரம்பித்த அந்த நாள் நினைவுகளிலிருந்து அழிக்கப்படக்கூடாது.
சாதிய ஒடுக்குமுறையும். நிலப்பிரபுதுவ மேலாதிக்கமும் சாதிய அரசியலினாலும், ஓட்டு சீட்டு பிழைப்புவாத த்தினாலும் எற்படுகின்ற விளைவு தான். இவ் ஒடுக்குமுறையிலிருந்து மீள, இப் பிழைப்புவாதிகளை தனிமைபடுத்தி அனைத்து மக்களையும் ஒரு புரட்சிகர வர்க்க அரசியலை நோரக்கி நகர்த்த வேண்டும்.