இன்று ரஷ்யப் புரட்சியில் 86 வது வருட நினைவு தினம். உலகெங்கிலுமுள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சி தினமாக இது கருதப்படுகிறது. இன்று பல்தேசிய வியாபாரிகளின் இன்னுமொரு பதுங்கு குழியாக மாற்றமடைந்து சீரழிந்து போயுள்ள சோவியத் யூனியன் 86 ஆண்டுகளின் முன்னர் உலகத்தில் அதிர்வை ஏற்படுத்தியது. உலகத்தின் மூலதனக் கொள்ளைக் காரர்கள் எல்லாம் பயத்தில் உறைந்து போன தினம் நவம்பர் 7ம் திகதி.