இடது சாரிகள் மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் இன்று அறிவித்துள்ள முழு அடைப்பை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
முழு அடைப்பை முன்னிட்டு கடைகளை அடைக்குமாறு யாரையும் கட்டாயப்படுத்தினாலும் வாகனங்களை சேதப்படுத்தினாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜூலை 5 ஆம் தேதி நடைபெற இருக்கும் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை முதலில் இடது சாரிகள் அறிவித்திருந்தனர். அதனைத்தொடர்ந்து அதே நாளில் பாரதீய ஜனதாவும் வேலை நிறுத்தப் போராட்ட அறிவிப்பை வெளியிட்டது.
இரு அணிகளின் போராட்ட அறிவிப்பினால் நாடு முழுவதும் மேற்கு வங்காளம், கேரளா, பிகார், மத்தியப் பிரதேசம், கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட பத்து மாநிலங்களில் முழு அடைப்பு தீவிரமாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.