இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை இன்று திங்கட்கிழமை ஆரம்பிக்கவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, மகிந்த ராஜபக்ச, ஜீ.எல்.பீரிஸ் போன்றோரையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கையில் சிறுபான்மை இனங்களிடையே முரண்பாடுகளைக் கூர்மைப்படுத்த பல்வேறு தளங்களில் இந்திய அரசு இலங்கைக்கு உதவிபுரிவதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
இலங்கை அரசுடன் உறவுகளை மேம்படுத்தவே அங்கு செல்வதாக கிருஷ்னா தெரிவித்திருந்தார்.
இதேவேளை, கிருஷ்ணாவின் விஜயத்தின்போது 4 உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
வீடமைப்பு, ரயில், விவசாயம், தொலைத்தொடர்பு ஆகிய துறைகளிலேயே இந்த நான்கு உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்படவுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, காலி ஆகிய இடங்களுக்கும் கிருஷ்ணா விஜயங்களை மேற்கொள்ள விருக்கிறார்.