எதிர்காலத்திற்காக மரணித்துப்போன ஆயிரமாயிரம் மக்களும் போராளிகளும் ஒரு சில வியாபாரிகளின் வெறியாட்டத்திற்காக தியாகிகள் ஆனதில்லை. நாளை மரணித்தும் போகலாம் என்ற நிச்சயமற்ற வாழ்வில் மகிழ்ச்சியக் கண்டவர்கள் அவர்கள். உலகத்தின் அழகிய கொல்லைப்புறம் ஒன்றில் பேரினவாதப் பசியோடு சுற்றித்திரிந்த அரக்கனை வெற்றிகொள்வதற்காக மண்ணுக்குள் புதைந்துபோனவர்கள். மக்கள் சார்ந்து பேசுவதற்கும் எழுதுவதற்கும் உரிமை மறுக்கப்பட்ட அரச பயங்கரவாத்தை வேறறுக்க வீரம்செறிந்த போராட்டத்தை நடத்தியவர்கள்.
அனைத்தும் அவமானகரமான வியாபாரமாக்கப்பட்ட அருவருப்பான சூழலில் வாழ நிர்பந்திக்கப்பட்டுள்ளோம். நிச்சயமற்ற இச் சூழலுக்கு எதிராக எமது எல்லைக்குள் போராடுவதும், வியாபாரிகளுக்கு விலைபோகாமலிருப்பதும் மகிழ்ச்சியானதே! கொலை மிரட்டல்கள், அவதூறுகள் போன்ற அனைத்தையும் எதிர்கொண்டு மீண்டும் மீண்டும் துளிர்விடுவதற்காக இனியொரு பெருமை கொள்கிறது.
லைக்கா மோபல் நிறுவனத்தின் இலங்கை அரசுடனான உறவுகள் குறித்து எழுதிய பின்னர் லங்காநியூஸ்வெப் மற்றும் இனியொரு ஆகிய இணையங்கள் உட்பட சில இணையங்கள் தாக்குதலுக்கு உள்ளாகின.
சேவை மறுப்புத் தாக்குதல் (DDOS) என்று அழைக்கப்படும் வகையிலான தாக்குதல் கடந்த 03ம் திகதியிலிருந்து இனியொருவைக் குறிவைத்து நடத்தப்படுகின்றது. பல தடவைகள் இனியொரு முடக்கப்பட்டது. கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டன.
ஆயிரம் தடவைகள் இனியொரு முடக்கப்பட்டாலும் அது மீண்டும் முளைவிடும். இனியொரு மீது நடத்தப்படும் தாக்குதல் எமக்கு தெளிவான செய்தியொன்றைச் சொல்கிறது. ஒடுக்கப்படும் மக்களுக்ககவும் சமூகத்திற்காகவும் குரலெழுப்ப இனியொருவும் அதன் கருத்துக்களும் ஏதாவது ஒருவகையில் மக்களைச் சென்றடைந்தாக வேண்டும் என்பதே அது.
இனியொரு மக்களுக்கானது…. இனியொரு ஜனநாயகவாதிகளுக்கானது….சமூகத்தைப் பற்றிச் அக்கறைகொண்ட அனைவருக்குமானது…. இனியொரு ஒடுக்கப்படுபவர்களின் குரல்…. அதனால் மக்களின் அவலங்களை வியாபாரமாக்கும் அருவருப்பான மனிதர்களுக்கு எதிரானது. அதனால் தொடர் தாக்குதலுக்கு உட்படுத்தப்படுகிறது.
தாக்குதல்கள் எம்மை மேலும் பலப்படுத்துகின்றன. எமது ஆதரவுத் தளத்தை விரிவுபடுத்துகிறது. பங்களிப்பவர்களின் தொகையை அதிகரிக்கின்றது. பரந்த வாசகர்வட்டத்தை வழங்கிவருகின்றது. இனியொரு மீது தாக்குதல் நடத்தி இணையத்தை முடக்க முனைபவர்கள் அதன் வளர்ச்சியை விரைவுபடுத்துகின்றனர்.
இனியொரு மீது இறுதியாக நடத்தப்பட்ட தாக்குதல் ஒரு செக்கண்ட் இற்கு 12 GB அளவைக் கொண்டது. வங்கிகள் போன்ற பாரிய நிறுவனங்களை நோக்கி நடத்தப்படும் தாக்குதலுக்கு இணையாக இனியொரு குறிவைக்கப்படுகின்றது. இறுதியாக நேற்று (11.11.2.14) நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான எமது சேவை வழங்குனர் அனுப்பிவைத்த மின்னஞ்சலின் பிரதி:
Thank you for contacting us.
Our network administrators informed us that your IP address, 217.——is currently blackholed. This was do to an incoming DDOS attack. This attack was generating 12GByte/s which was causing network latency for a number of our other clients. Our administrators are going to route the IP address back to your server within the next few hours. Unfortunately DDOS attacks of this size leave us with little options when it comes to protecting our network integrity.
You may receive a short survey within the next 24-48 hours. Please take a moment to complete it so that we may continue to improve our customer experience.
If you have any further questions please do not hesitate to contact us.
—
Sincerely,
Robert Packard
Technical Support
1&1 Internet
https://www.gov.uk/whistleblowing/how-to-blow-the-whistle
all readers of Inioru to be a Inioru themself
300 Gb/s potentially brings the Internet down as it almot did in March this year bringing LINX (London Internet Exchange)
http://arstechnica.com/security/2013/03/spamhaus-ddos-grows-to-internet-threatening-size/
“When the attack started, on March 18, it measured around 10 Gb/s. On March 19, it hit 90 Gb/s, on March 22 it reached 120 Gb/s. This still wasn’t enough to knock CloudFlare or Spamhaus offline. So the attackers escalated.
Today, CloudFlare wrote that one of the Internet’s big bandwidth providers is seeing 300 gigabits per second of traffic related to this attack, making it one of the largest ever reported.
This is bad news for the Internet. 300 Gb/s is the kind of scale that threatens the core routers that join the Internet’s disparate networks”
If the above email is correct 12Gbytes/s == 96 GB/s
(1 Byte = 8 Bits)
The matter is being taken most seriously by observers.
கோளைகள், பணத்தைவைத்து எதையும் செய்யலாம் என்று நம்பும் முட்டாள்கள்.
இனியும் லைக்காவினை உபயோகிக்கப்போகிறாமா, சிந்தியுங்கள் மக்களே. ஒவ்வொரு லைக்கா அட்டையும் ஊடகப்படுகொலைக்கான நிதிவழங்கலே
உலகில் பரம்பரையாக ஏழைகளை சுரண்டி வாழ்வோர் எல்லா நாடுகளிலும் உள்ளனர் . தன சொந்த நாட்டில் பிழைக்க\வழியின்றி அகதியாக (இலங்கை அரசினை கொடுமைக்காரன் என்று )மேற்குலகில் குடியேறியவர்கள் தன இனத்தினையே ஏமாற்றியது மட்டுமல்ல
இலங்கை அரசுடன் கைகோர்த்து அவர்களின் சுரண்டளிற்கு
உதவுகின்றார்கள்.
இத்தகைய குணமுள்ளவர்கள் எந்த இனத்தினையும் சார்த்த்வர்களல்ல
இவர்கள் உலகினை சுரண்டி வாழ்வோர் வரிசையினை சேர்ந்தவர்கள்
Any better service from Lycamobile…?
If any pls let us know…
Serious…
இதையே பல மாதங்களுக்கு முன் கேட்டபோது தேசிய சேவை வரும் வரை லைக்காவை பாவியுங்கள் என பதிலளித்தார்கள். தேசிய சேவை எங்கிருந்து வரும் வன்னியில் இருந்து வருமோ….. மற்றும் பிரித்தானியாவில் லைக்காவின் வியாபார தந்திரங்களை விளக்கி அவர்களின் எதேச்சதிகாரங்கள் பற்றி சொல்லி எமக்கு தொலைதொடர்பு வசதி பன்முகப்பட்டதாக வேண்டும் என முறைப்பாடுகள் செய்ய வழிகள் இருக்கின்றன. வேறு சேவைகள் வருவதற்கு வாய்ப்புக்கள் கிடைக்கும். சட்ட ரீதியாக பல நெருக்கடிகளை லைக்காவிற்கு ஏற்படுத்த முடியும்.
இனியொரு மக்களுக்கானது…. இனியொரு ஜனநாயகவாதிகளுக்கானது….சமூகத்தைப் பற்றிச் அக்கறைகொண்ட அனைவருக்குமானது…. இனியொரு ஒடுக்கப்படுபவர்களின் குரல்…. அதனால் மக்களின் அவலங்களை வியாபாரமாக்கும் அருவருப்பான மனிதர்களுக்கு எதிரானது
இத்தகைய வியாபரிகள்தான் தமிழ் மக்களின் அவலங்களிற்கு காரணமாக
இருந்தவ்ர்கள் என்ற உண்மை வெளிவந்துவிடுமோ என்ற அச்சத்தில்தான்
இனியொருமீது தாக்குதல் என்பது புலனாகின்றத்து.