போராளிகளே .. ..
வையத்துள் வாழ்வாங்கு
வாழ்ந்தவர் மட்டுமல்ல
நாம் வாழ
தம் வாழ்வழித்த நீரும்
தியாகத்துள் தான் வைக்கப்பட்டீர்
உம்மை எதிரி அழித்ததைவிட
எம் ஈனச்செயல் அழித்ததே அதிகம்
இப்போதும் திருந்தாத நாம் – இனி
எப்போதும் திருந்தத் தேவையில்லை
ஏனெனில் தமிழரில்லா ஈழத்தில்
தமிழர் எமக்கென்ன வேலை?
அனைத்துப் போராளிகளையும்
அணைத்துத்தான் போக முடியவில்லை
இணைத்து விளக்கேற்றவுமா
எம்மால் முடியாது?
மாவீரர் தம்புகழ் நீட்டவல்ல
நாவீரர் எம்புகழ் நாட்டநல்ல
வழியது என்பதனால்
விழியுருக வேண்டுவதாய்
பாவனை செய்கிறோம்
மண்மீட்புக்காய்
மண்மீண்ட போராளிகளுக்குத்
தனியாய்த் தீபமேற்றித் தரம்பிரிப்பதை
இனியாவது தவிர்ப்போமா?
தியாகிகள் தினமென்றும்
மாவீரர் நாளென்றும்
மண்ணில் இனிவேண்டாம்
அடக்குமுறைக் கெதிராய்த்
தடம்பதித்துச் சென்றோர்க்கும்
தமிழர் என்பதனால் தானழிந்து போனோர்க்கும்
ஒன்றாய் நாம் மலர்தூவின்
நன்றாம், இல்லையெனில் ..
Really a great poem by a tamil woman. Is there anyone out there can listen to her? Specially those who say that `thalaivar irukkiraar` should read this.
யாரும் இல்லை இப்போது தனித்திருக்கும் தமிழ் மண் தன்னை யாராவது ஆறூதல் படுத்த மாட்டார்களா என அழுகிறது.தலைவர் வருவாரா எனத் தேடும் புலிச் சிந்தனையாளன் போட்டவனும் போராளீதான்,போனவனும் போராளீதான் ஆனால் மாவீரர் புலிகள் என்பதாகவே இருந்து வருகிறது இனியாவது நம் மனம் மாறாதா கேட் கிறது கவிதை…………புலிகள் எம்மை போட வந்தபோது நாம் மதில் குதித்து ஓடினோம் இருப்போமா எனும் சந்தேகம் வந்தபோது நம்மை பெற்றவரை நினைத்த கணம் நினைவுக்கு வரும் போதெல்லாம் உறயும் மனம் ஆனாலும் புலிகள் அழிக்கப்பட்டபோது நாமும் அழுதோம் ஏனெனில் அவர்களூம் போராளீகளே அப்படி இருக்கும் போது உமா மகேஸ்வரனும் மாவீரனே அவனையும் நினைக்கும் நாளூம் நாளூம் இந்த மாவீரர் நாள்தான்.