தமிழர்கள் வெளிப்படுத்துகின்ற நல்லிணக்கத்தை இலங்கை அரசாங்கம் மதிப்பதாக தெரியவில்லை. மாறான இராவண பலய போன்ற கட்சிகளைத் தூண்டி இனத்துவேசத்தையே விதைத்து வருகிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் குற்றஞ்சாட்டினார்.
தமிழினத்தை சகல வழிகளிலும் அழிக்கின்ற கட்டமைக்கப்பட்ட செயற்பாட்டை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. இதற்காக இராவணபலய போன்ற சிங்கள அமைப்பைப் பயன்படுத்தி அவர்களை தமிழ் மக்கள் மீது ஏவி விடுகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
என்னைக் கொழும்பு வர விடமாட்டோம் என இராவண பலய என்ற அமைப்பு எச்சரித்துள்ளது. இவர்களது அச்சுறுத்தல்களுக்கு நான் அஞ்சப்போவதில்லை எனவும் சிறீதரன் எம்.பி. கூறினார்.
நாவற்குழியில் அத்துமீறிக் குடியேற்றப்பட்டுள்ள சிங்கள மக்களை அச்சுறுத் சிங்கள அமைப்புக்கள் வெளியிட்டு வருகின்ற கருத்துக்கள் தொடர்பாக மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
நாவற்குழியில் குடியமர்ந்துள்ள தமிழ் மக்களைப் பார்வையிட நான் அங்கு சென்றவேளை அப்பகுதியில் நின்றிருந்த இராணுவத்தினர் உடனடியாகக் கலைந்து சென்றனர். இதனைத் தொடர்ந்து அங்கு நின்றிருந்த பெண்மணியுடன் நிலைமைகள் தொடர்பாக பேசினேன்.
இதனை பெரிதுபடுத்தி சிங்கள மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டுள்ளதாக சில சிங்கள அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.
இங்கு தமிழர்களின் தமிழர்களிகன் நிலங்களைப் பறித்து சிங்கள மக்களுக்கு வழங்குகின்ற செயற்பாடுகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
அத்தோடு ஆலயங்களில் இடம்பெறுகின்ற திருட்டுக்கள் மற்றும் புதிது புதிதாக இங்கு முளைக்கின்ற புத்தர்சிலைகள் என்பன தொடர்ச்சியாக திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டு வருகின்றன.
இதனையெல்லாம் அரசாங்கம் மிகவும் தீவிரமாகச் செய்து வருகின்றது. இது அரசினால் மேற்கொள்ளப்பட்டுவரும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு நடவடிக்கையின் அங்கமே.
தேர்தலை நடத்துவதன் முலம் ஐனநாயகம் ஏற்பட்டு விட்டதாக அரசு கூற முடியாது. இங்கு தற்போதும் இராணுவ அடக்குமுறைகள் கெடுபிடிகளுக்குள்ளுமே தமிழ் மக்கள் இருக்கின்றனர்.
-இலங்கை அரசோடு கைகுலுக்கிக் கொள்வது நல்லிணக்கமென சிறிதரன் போன்றவர்களும் மக்களை நம்பக் கோருக்கிறார்கள்.
“இலங்கை அரசோடு கைகுலுக்கிக் கொள்வது நல்லிணக்கமென சிறிதரன் போன்றவர்களும் மக்களை நம்பக் கோருக்கிறார்கள்”
அப்ப வேறு யாருடன் கைகுலுக்க்வேணும் என்கிறியள். ஒரு நாட்டுக்குள்ளே தீர்வை எதிர்பார்க்கும்போது இலங்கை அரசுடன் கைகுலுக்காது வேறு யாருடன் கைகுலுக்கவேண்டும் என்கிறியள்?. தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன தமிழீழம் பிடிக்கப்போகிறம் என்றா தேர்தலில் போட்டியிட்டது? நடந்துமுடிந்தது மாகாணசபை தேர்தல். மத்திய அரசிடம் இருந்துதான் அதிகாரத்தையும் பொருளாதாரத்தையும் பெறமுடியும். ஆரம்பத்திலேயே அடம்பிடித்தால் கடைசியில் ஒன்றும் கிடைக்காதுதான் போகும். மாகாண சபைக்கு அதிகாரங்களையும் வடக்கு கிழக்கிற்காக அபிவிருத்தியையும் பெற முயற்சிக்கிறதை வரவேற்காவிட்டாலும் பறவாயில்லை எதிர்க்காமலாவது இருக்கலாமே. எத்தினைபேர் சேர்ந்து மறுத்தான் அடிக்கிறியள்.
இந்த்தியாவானாலும் இலங்கை ஆனாலும் இனக் கொலையளிகளே வேண்டும் என அடம்பிடிக்கும் நீவிர் யாவர் தலிவா? நீங்க சொல்ற மத்திய அரசு தான் மனித இறைச்சி துன்னது ராசா. அப்ப இம்மளோ நாளும் போராடி செத்துப் போன போன போராளிகளை எல்லாம் விசரர் எண்டே நினைக்கிறியள். இப்ப வந்த்து ராசாபக்சட்ட கெஞ்சி பிடிக்கலாம் என்றியள். அவர் இப்ப எவ்வளோ போடுரார்?
இம்மளோ நாளும் போராடி செத்துப் போன போன போராளிகளை எல்லாம் விசரர் எண்டே நினைக்கிறியள்.
Yes Sir, what else!
Insulting dead people is what was taught to you in the Christinity that fed you ?
ராசபக்சவிடம் கெஞ்சுகிறதோ இல்லையோ> கூட்டமைப்பு இப்ப என்ன செய்யுதோ அது சரியாகத்தான் இருக்கிறது. அவர்களை நீங்கள் விமர்சிக்க எந்தவிதத்திலும் அருகதை அற்றவர்கள். இப்போது கூட்டமைப்புத்தான் மக்களின் பிரச்சனையை தங்களால் முடிந்தவரை தீர்க்க முயற்சிக்கிறார்கள். அதை விமர்சிக்கும் நீங்கள் இப்ப இலங்கைக்கு போய் தமிழரின் பிரச்சனையை தீர்த்துவையுங்கள் பார்க்கலாம்? அவங்கள் அடிவாங்கி அடிவாங்கி அரசின் மிரட்டலுக்கும் மத்தியில் அங்கே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். நீங்கள் இங்கிருந்துகொண்டு வசணம் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்.
இம்மளவுநாளும் செத்துப்போன மாவீரர்களை பற்றி இந்த பகுதியில் பேசுகிறீர்ளே… நீங்கள் உங்கள் உங்கள் தேவைக்கு ஏற்ப மாவீரர்களையும் போராளிகளையும் பயன்படுத்துகிற கேவலம் கெட்ட ஆட்கள் என்பது புரியாத ஒன்று அல்ல. யுத்தம் முடிந்து இத்தனை நாளும் நீங்கள் சொல்லும் போராளிகளிற்காக என்ன செய்துள்ளீர்கள். அவர்களின் விடுதலைக்கு முயற்சிசெய்தீர்களா இல்லை அவர்கள் விடுதலைஆன பின்னர் அவர்களின் வாழ்வுக்கு உதவினீர்களா? இதுவரை மாவீரர் குடும்பங்களிற்கு ஒரு பைசா கொடுத்திருப்பீர்களா? இன்றைக்கும் எல்லாத்தையும் இழந்துநடுத்தெருவில் உள்ளவர்களை தயவுசெய்து ஒருபோதும் உங்களின் சுயநலன்களிற்கு பயன்படுத்தாதீர்கள்.
கூட்டமைப்பு செய்வது பிழை என்றால் ‘மாவீர்களிற்காகவும் போராளிகளிற்காகவும் நீ போராடத்தயாரா? நீ சரியாக செய்துகாட்டுபார்க்கலாம். ஒன்றுமே நீங்கள் செய்யமாட்டிங்கள் அவனவன் தன்னாலை முடிந்ததை செய்ய முயற்சிக்கிறதையும் குழப்பிக்கொண்டே வாழுங்கள். நாய்ளே…..
That’s disgusting and it’s even worse Inioru chooses to publish it 🙁
மாவிரருக்கு என்ன செய்தோம் என்ற சர்ட்பிகட்டட்டோட தான அரசியல் பேச வரணுமோ முகுந்தா? உங்களை போல சர்டிபிக்கட் கேட்டே அழித்து வாயை மூடப்பண்ணி அழித்தவர்கள் ஏராளம். விக்கியின் எதற்காக அனுப்பப்பட்டாரோ அதை செய்கிறார். அவரோ கூட்டமைப்போ அடி வாங்குவதில்லை. தொண்டர்கள் தான் அடி வாங்குகிறார்கள். நாளை கொலை செய்யவும் படுவார்கள் அவர்களது ஆவி கூட்டமைப்பிற்கு வாக்கை வாங்கித் தரும். ஐந்து வருடதுக்குள் வடக்கில் சிறுபான்மை ஆகும் வரை ஆட்சி செய்வார்கள். பிறகு கிழக்கு மாதிரி வரும்.., ஆனா வராது…ரத்தப் பொட்டு வைக்காதே முகுந்தா. நாங்கள் இன்னும் அப்பவிகள் இல்லை.
முகுந்தன் கூட்டமைப்பு செய்வது எல்லாயவற்றையும்.சரியென்டு இல்லை.. அவர்களின் வாய்ப்பந்தள் பழய கூட்டனிக்கு ஒப்பனது. லோகன்
ஸ்ரீதரன் ஒன்றுக்கும் அஞ்ச மாட்டார். அப்போ ஏன் கிளிநொச்சியில் கோத்தபாயாவால் திறந்து வைக்கப்பட்ட மிகப்பெரிய பௌத்த கோவிலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.
ஒரு எம்.பி. கமராவையும் கூட்டிக் கொண்டு போய் எதிர்ப்பை அங்கே காட்டியிருக்கலாமே.