பொஸ்பரஸ் எரிகுண்டுகள் போன்ற இரசாயன ஆயுதங்கள் மூலம் அழிவுகளை ஏற்படுத்தியதற்கான ஆதரங்கள் வெளியாகியுள்ளன. கருகிய மனித உடல்கள், எரிந்த பிரதேசங்கள் போன்ற வெளியாகியுள்ளன. பதுங்கு குழிகளில் பாதுகாப்பு தேடி இருந்தவர்கள், உறங்கியவர்கள் மீது எரி குண்டுகளை வீசி மூச்சுத் திணறடித்து அதன் வாயிலாக உடல் எல்லாம் எரிந்து துடி துடிக்க இறந்துள்ளனர்.
இவ்வாறான ஆதாரங்கள் உலக மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லப்படுவதும், உலகில் போராடும் மக்களோடும் ஜனநாயக முற்போக்கு சக்திகளோடு இணைந்து இலங்கை அரசை அம்பலப்படுத்துவதுமே இன்றைய தேவையாகும். இலங்கை அரசு எந்தப் பய உணர்வுமின்றி இனப்படுகொலையை நடத்தியதானது உலகில் எந்த அரசும் இவ்வாறு நடந்துகொள்ள ஒரு முன்னுதாரணம். ஆக, உலகின் ஏனை ஒடுக்கப்பட்ட இனங்களோடுடனான பிணைப்பு இன்னும் அதிகமாகவே அவசியமாகிறது.
சிங்கள இனகொலை வெறியரை உலகிற்கு அம்பலப்படுத்த இந்த ஆதாரங்களை வெளியிடுவது அவசியம். இந்த கொலைவெறியரை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் வரை ஓயாக் கூடாது.