பெரியார் துவங்கப்பட்டு இன்று வீரமணியின் குடும்பச் சொத்தாக மாற்றப்பட்டு விட்ட பிரமாண்ட தன்னார்வ நிறுவனமான திராவிடர் கழகத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் நடந்தது. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதாவோடும் கருணாநிதி ஆட்சிக்கு வந்தால் கருணாநிதியோடும் ஒட்டிக் கொள்ளும் வீரமணி நாளை சாய்பாபா ஆட்சி தமிழகத்தில் வந்தால் அவரோடு ஒட்டுக் கொள்ளத் தயங்காத இந்த சமூக நீதி வீரர். பொதுக்குழுக் கூட்டத்திற்குப் பிறகு அபூர்வாமான கருத்தொன்றை சொல்லியிருக்கிறார். ”
2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில், சமூக நீதிக் கண்ணோட்டத்தில், சாதிவாரியான கணக்கெடுப்பு அவசியம். நாடாளுமன்றத்தில் இதற்கான ஒப்புதலை பிரதமர் அறிவித்துள்ள நிலையில் மத்திய அமைச்சரவைக் கூட்டங்களில் இரண்டே இரண்டு அமைச்சர்கள் மாறுபட்ட கருத்தை தெரிவித்தார்கள் என காரணம் கூறி, அதற்கென ஒரு குழுவை நியமித்து, பரிசீலிக்கப்படும் என்ற முடிவு பிற்படுத்தப்பட்ட மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இடஒதுக்கீட்டிற்கு எதிரானவர்களே சாதிவாரி கணக்கெடுப்பு கூடாது என்கின்றனர். அவர்கள் சமூக நீதிக்கு விரோதமானவர்கள்.மக்கள் தொகை கணக்கெடுப்பில் இனம் என்ற இடத்தில் திராவிடன் என்றும், மதம் என்ற இடத்தில் நாத்திகன் என்றும் தவறாமல் குறிப்பிட்டு பதிவு செய்ய வேண்டும் என பகுத்தறிவாளர்கள், இன உணர்வாளர்களை கேட்டுக் கொள்கிறோம் என்றார். இவர்களுக்கு தேவை ஏற்படும் போது தமிழ் தமிழன் என்று பேசுவதும் தமிழனுக்கு ஒரு ஆபத்து ஏற்படும் போது பதவியைக் காப்பாற்றிக் கொள்ள பம்மிப் பதுங்குவதையுமே நாம் கண்கூடகாகக் கண்டோம். பெரியாருக்குப் பின்னர் திராவிடக் கொள்கை அதன் உண்மையான அர்த்தத்தை இழந்து விட்டது. சில குடும்ப சார்வாதிகாரிகள் தங்களின் வாரிசு அரசியலை வளர்க்க திராவிடக் கொள்கையின் பெயரால் கண்ணெதிரே நடக்கும் மக்கள் கொலைகளை வேடிக்கை பார்த்தது சென்ற வருட வரலாறு…..
பெரியார் வழியை அப்படியே கடைபிடிக்கிறார் வீரமணி. காங்கிரஸ் ஆட்சியின்போது காமராஜ் பச்சைத்தமிழன் என்று கூறி அரசுக்க வால்பிடித்துக்கொண்டு திமுகவை கண்ணீர்த்துளிகள் என்று திட்டிக்கொண்டிருந்தார். 67 ல் திமுக ஆட்சியைப்பிடித்தவுடன் நம்ம பயலுக என்று கூறி அவர்களுக்கு தாளம் போட்டுக்கொண்டிருந்தார். எனவே வீரமணி பெரியார் பாதையில் பீடுநடை போடுகிறார்.
பெரியார் காமராஜை ஆதரித்தது மிகநல்ல காரணங்கட்காகவே. தமிழகத்தின் மீது பார்ப்பனியப் பிடியை உடைப்பதில் காமராஜுக்கு ஒரு பங்குண்டு.
பெரியார் தி.மு.க.வைத் தேடிப் போகவில்லை. தி.மு.கவினர் பெரியாரைத் தேடிப் போனார்கள்.
தயவு செய்து வீரமணி போன்றோரின் அரசியல் தகிடுதத்தங்களுக்குப் பெரியாரைப் பழி சொல்லாதீர்கள்.
வீரமணிக்கு சாதியில்லையென்றால் அவரது பிள்ளைகளை யாதவனுக்கு மட்டுமே கட்டிகொடுப்பதேன்
அய்யா வீரமணி தமிழக வரலாறும் பண்பாடும் கொஞ்சம் படிங்க.முடிஞ்சா கொஞ்சம் தொல்காப்பியமும் படிங்க. நாம் திராவிடர் இல்லை. தமிழர். திராவிடம் என ஒரு இனம் இல்லவே இல்லை. பெரியாருக்கு அந்த காலத்துல் புத்தகம் படிக்க நேரம் இல்லாம இருந்திருக்கலாம், இல்லை அவர் பெரியார் ஆனதால் படிக்க வேண்டியதில்லை என நினைத்திருக்கலாம். நாங்க இப்ப படிச்சிட்டோம். அதனால எங்களால் முட்டாளா இருக்க முடியாது. so கொஞ்சம் ஞானத்தை வளத்துக்குங்க மணி. என்ன சின்னபுள்ளதனமா பேசிட்டு இருக்கீங்க?
தயவு செய்து பெரியாரின் அரசியலை விளங்காமல் நிந்திக்காதீர்கள்.
அவர் திராவிட என்று சொன்னது தமிழ் என்றால் பார்ப்பானர் உள்நுழைந்துவிடுவார்கள் என்பதாலேயே.
ஆந்திரா பிரிந்த போதே சொல்லி விட்டார் “திராவிட நாடாவது வெங்காயமாவது” என்று.
அது போக, தமிழ்நாட்டில் உள்ளவர்களில் எத்தனை சத வீதம் பேர் “தமிழர்” என்று நினைக்கிறீர்கள்?
தமிழ் இனம் & நாத்திகன் மதம் என்று போடலாம் .ப .செல்வராஜ்
பெரியார் ,பெரியார் ,தமிழருக்காக் போரட்டம் ,இந்த இயக்கத்தில் இருப்பவர்கள் அனைவரும் தமிழை தாய் மொழியாக் கொன்டவர் ?