பாதுகாப்புச் செயலாளரும் இனப்படுகொலையின் சூத்திரதாரியுமான கோதபாய ராஜபக்ஷவிற்கு 250 மில்லியன் (25 கோடி)ரூபா நட்ட ஈட்டை வழங்குமாறு சண்டே லீடர் பத்திரிகைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பு செயலாளரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் செய்திகளை பிரசூரம் செய்ததாகத் தெரிவித்து நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை பரிசீலனை செய்த கல்கிஸ்ஸ மாவட்ட நீதிமன்றம், சண்டே பத்திரிகை ஊடக நெறிமுறைகளுக்கு புறம்பாக செயற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
யுத்த காலத்தின் போது மிக் விமானங்கள் கொள்வனவு செய்யப்படட்டது தொடர்பில் சண்டே லீடர் பத்திரிகை வெளியிட்ட செய்தியின் மூலம் தனக்கு அபகீர்த்தி ஏற்படுத்தப்பட்டதாக அப்பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பெட்ரிகா ஜான்ஸூக்கும் பத்திரிகை நிறுவனத்திற்கும் எதிராக பாதுகாப்பு செயலாளரினால் தாக்கல் செய்யப்பட்ட மானநஷ்ட வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்ட நிலையிலேயே நீதவான் குறித்த உத்தரவைப் பிறப்பித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கோதாபயவின் லங்கா லொஜிஸ்டிக் என்ற தனியார் நிறுவனத்தின் ஊடாக பல மில்லியன்கள் பெறுமானமுள்ள இராணுவத தளபாடங்கள் கொள்வனவு செய்யபட்டன. அமரிக்காவில் சாதாரண தொழிலாளியாக இருந்த கோதாபயவை தெற்காசியாவின் பணமுதலைகளில் ஒன்றாக மாற்றியதும் வன்னிப் படுகொலைகளே.