இஸ்ரேலிய பெரெஸ் கல்வியியல் மையத்தில் முன்னை நாள் அமரிக்க ஜனாதிபதி பில் கிளிங்டன் உரையாற்றவுள்ளார். பாலஸ்தீனியர்களின் இனச் சுத்திகரிப்பிற்கும் இனப்படுகொலைக்கும் கருத்தியல் நியாயத்தை வழங்கும் இஸ்ரேலிய மேட்டுக்குடிகளின் அமைப்பான யூதர்களின் தேசிய நிதியம் என்ற அமைப்பு பெரேஸ் மையத்துடன் இணைந்து நிகழ்வை ஒழுங்கு செய்துள்ளது. இஸ்ரேலின் ஐந்தாவது வருடாந்த கருத்தரங்கில் ஜுன் 18ம் திகதி உரை நிகழ்த்தவிருக்கும் கிளிங்டனுக்கு 45 நிமிடங்கள் பேசுவதற்கான சன்மானம் அரை மில்லியன் டொலர்கள். இத்தொகையை நிகழ்வை ஒழுங்கு செய்யும் அமைப்புக்களில் ஒன்றான யூதர்களின் தேசிய நிதியம் வழங்கவுள்ளது. உலகம் முழுவது ஜனநாயகத்தை நிலை நாட்டப் போகிறோம் என பீரங்கிகளோடும் பிப்பாக்களோடும் அலையும் அமரிக்க ஜனநாயகத்தின் இனப்படுகொலை முகத்தின் விலை அரை மில்லியன் டொலர்கள்.
Nobody should try to redraw borders on blood – President Bill Clinton in Islamabad, Pakistan.