தீவிரவாதத்தை எப்படி வெற்றிகொள்வது என்பது தொடர்பாக இலங்கைக் கடற்படையிடமிருந்தும் பாதுகாப்புப் படையிடமிருந்தும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என ஜப்பானியப் பாதுகாப்புப் படையின் தளபதி அட்மிரல் கட்சுடோசி கவானோ இலங்கையில் தெரிவித்தார். அமெரிக்க அரசின் நட்பு நாடும், அதன் அரசியல் வழி நடத்தலில் செயற்படும் நாடுமான ஜப்பானியத் தளபதி வன்னியில் நடந்த இனப்படுகொலையிலிருந்து கற்றுக்கொண்டு ஏனைய நாடுகளும் அதனை நடத்தவேண்டும் என தேரிவித்தார் என்பதே உண்மை.
அனுராதபுரத்தில் மகிந்த ராஜபக்ச தங்கும் ஆடம்பர மாளிகையில் அவரைச் சந்தித்த ஜப்பானியத் தளபதி, இலங்கைத் துறைமுகத்தில் ஜப்பான் ஆர்வம் காட்டி வருவதாகவும், அடுத்த ஒரு இரு வருடங்களில் ஜப்பன் 15 போர்க் கப்பலை அனுப்ப போவதாகவும் தெரிவித்துள்ளார்.
உலகின் சிறிய நாடுகளில் ஒன்றான இலங்கையை யுத்தக் கப்பல்களாலும், அதி பயங்கர ஆயுதங்களாலும், இராணுவப் பயங்கரவாதிகளாலும், மகிந்த ராஜபக்ச போன்ற கொடிய போர்க்குற்றவாளிகளாலும் நிரப்பிவைத்துவிட்டு கற்றுக்கொள்ள முனையும் ஜப்பானின் எஜமான் அமெரிக்கா இலங்கையைத் தண்டிக்கப்போவதாகப் படம்காட்டி வருகிறது.
SriLanka’s Diplomatic relation with Japan established in 1952…
Srilanka-japan relations go back into history tracing many centuries ago… When Japanese traders visited srilanka…
This partnership was officially formalized in 1954… With focusing on technical cooperation…