இறுதி யுத்தத்தில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டமை மற்றும் மன்னார் புதைக்குழி ஆகிய விவகாரங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டும் என தீர்மானங்களை நிறைவேற்றும் நிலைமைக்கு வடமாகாணசபையை தள்ளியமைக்கு இந்த அரசாங்கமே முழுப்பொறுப்பையும் ஏற்கவேண்டும்.
சர்வதேசத்துக்கும், உள்நாட்டில் தமிழ் தலைமைகளுக்கும் வழங்கிய ஒரு உறுதிமொழியையும் நிறைவேற்ற தவறிய இந்த அரசாங்கத்தின் போக்கு வடமாகாணசபை உறுப்பினர்களை இத்தகைய ஒரு தீர்மானத்தை எடுத்து உலக சமூகத்திடம் தீர்வை எதிர்பார்க்கும் நிலைமைக்கு தள்ளியுள்ளது.
எனவே இன்று இது நடந்துவிட்ட பிறகு, இங்கிருந்துகொண்டு “அய்யோ, முறையோ” என் ஒப்பாரி வைத்து எந்த ஒரு பிரயோஜனமும் கிடையாது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு இன்று கொழும்பில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் சிங்கள மொழியில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
உள்நாட்டில் தீர்வு காணாமல், இலண்டனுக்கும், நியூயோர்கிற்கும், புது டெல்லிக்கும் ஓடுவதாக இந்த அரசாங்கம் எங்கள் மீது எப்போதும் குற்றம்சாட்டி வருகிறது. இன்று இலண்டனுக்கும், நியூயோர்கிற்கும், புது டெல்லிக்கும் ஓடுவது யார்? ஜி.எல். பீரிசும், லலித் வீரதுங்கவும், சஜின் வாசும், நாமல் ராஜபக்சவும் இன்று உலகம் சுற்றி திரிகிறார்கள். உள்நாட்டு பிரச்சனையை உள்நாட்டில் தீர்க்க முடியாமல் வெளிநாடுகளுக்கு சென்று சொல்லி தமது குற்றங்களுக்கு பங்காளிகளை தேடுகிறார்கள்.
இந்த உலக உலாவை நிறுத்திவிட்டு யாழ்ப்பாணத்துக்கு செல்லும்படி நான் இவர்களுக்கு சொல்லுகிறேன் . அங்கு சென்று, முதல்வர் விக்கினேஸ்வரனுக்கு வடமாகணசபையை சட்டப்படி நடத்துவதற்கு உரிய சூழலை ஏற்படுத்தி கொடுங்கள் என்று நான் இவர்களுக்கு சொல்லுகிறேன். அந்த சபையை விழுந்து நொறுங்காமல் காப்பாற்றுங்கள் என்று நான் இவர்களுக்கு சொல்லுகிறேன்.
13ம் திருத்தத்தை அமுல் செய்வதாகவும், அதன் பிறகு அதை 13க்கு மேல் கொண்டு செல்வதாகவும், ஐநா செயலாளர் நாயகத்துக்கு வழங்கிய உறுதி மொழியை நிறைவேற்றுங்கள். வடக்கு முதல்வரை அழைத்து பேசுங்கள் என் நான் ஜனாதிபதிக்கு சொன்னேன். அது நடந்தது. ஆனால், அந்த சந்திப்பில் வழங்கப்பட்ட எந்த ஒரு உறுதிமொழியும் நிறைவேறவில்லை. யாழ்ப்பாணத்துக்கு போய் முதல்வரை தானே நேரில் சந்திப்பதாக ஜனாதிபதி என்னிடம் சொன்னார். அந்த சந்திப்பும் நடந்தது. ஆனால்,அதன்மூலம் எந்த ஒரு முன்னேற்றமும் இதுவரையில் ஏற்படவிலை.
ஆகவே வெளிநாடுகளுக்கு போய் பங்காளிகளை தேடுவதில் பிரயோஜனம் இல்லை. வடமாகாண முதல்வரை கொழும்புக்கு அழைத்தோ அல்லது அவரை யாழ்ப்பாணத்துக்கு சென்றோ சந்திப்புகள் நடத்துவதில் பிரயோஜனம் இல்லை.
மக்களால் தேர்வு செய்யப்பட அந்த மாகாணசபைக்கு சட்டப்படி உரிய அனைத்து உரிமைகளையும் வழங்க வேண்டும். முதல்கட்டமாக மக்கள் ஆணையை பெற்ற முதல்வர் தன் நிர்வாகத்தை இடையூறின்றி நடத்த, அங்குள்ள ஆளுநரையும், மாகாண செயலாளரையும் இடமாற்ற வேண்டும். ஆளுனரை எடுத்துவிட்டு ஒரு தமிழ் அதிகாரியை நியமிக்க வேண்டும் என்றுகூட அவர்கள் கோரவில்லை. ஓய்வுபெற்ற ஒரு சிங்கள சிவில் அதிகாரியை நியமியுங்கள். ஒருகாலத்தில் லயனல் பெர்னாண்டோ அங்கு இருக்க வில்லையா?
இது எதுவும் செய்யாமல் எங்களையும் ஏமாற்றி, சர்வதேசத்தையும் ஏமாற்ற நினைப்பீர்களாயின், உங்கள் ஆட்டம் விரைவில் முடிவுக்கு வரும். இந்த பின்னணியில் வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையிட்டு கரித்து கொட்டுவதில் பிரயோஜனம் இல்லை. அங்கு இனப்படுகொலை என்ற வார்த்தை பிரயோக பயன்பாட்டை முதல்வர் விக்கினேஸ்வரன் தடுத்து நிறுத்தியுள்ளதை எண்ணி மகிழ்ச்சியடையுங்கள். அடுத்த முறை அந்த வார்த்தை பிரயோகத்தை அங்கு அதிகாரப்பூர்வமாக முதல்வரே பயன்படுத்தும் நிலைமையை உருவாக்கி விடாதீர்கள்.
I like that too. On one hand it is stale. On the other hand the whole world is sick and tired of the cry baby Sri Lankan Tamils.
You are really a character, you call people seeking justice for the killing of 50k or so people in a day or two as cry baby attitude ? This is the height of lunacy in this forum.
“killing of 50k”
Ok Sir, do u have any statics (some people say 40,000… some say 100,000… easy to put zero’s… but anyone have the count… no…
)
It’s the accuracy of the number that hurts you ? Not the act itself ? If its a 30 or 20k that makes it tolerable to you ? Anyhow my statement allows for a margin of error. Does a tree falling in the forest where no one is present make a noise ? Your question is like that Philosophical one, since no one has the exact number it cannot be true ? Mate, welcome to the Club of Lunatics. BTW it is Statistics not static which is in Physics you learn. Obviously you are not an engineer either since you don’t believe in approximations.
Guys Sarath Fonseka should be forthcoming with numbers now. It is Ethiopia and Narmada and four men here. He said 80,000 have joined the Army. The final 100,000 man offensive by Ethiopia to keep Eritrea in was a debacle.
The fact, ‘TRUR or FALSE’ is different. These counts good for media pripaganda… TNA like politicians propaganda…
UN is not a local market like Chankanai market or Maruthanamadam market to go & say ஒருவர் கத்தரிக்காய் 20 ரூபாய் 20 ரூபாய் என்று கத்த… மற்றவர் 30 ரூபாய் 30 ரூபாய் என்று கத்த…
Anyone have the correct statitics… no…
All are what ever like their own count…
May be you can ask ‘who I’m I to say this… or ask this…
இந்தக் கேள்விகள் விதண்டாவாதங்கள் தான் இன்று எம்மை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது. சில நிஜங்கலூடான சுயவிமர்சனத்தை நாம் ஏற்க்க பழக வேண்டும்…
I’m a engineer or not a problem.. I’m a HUMAN. And I have the rights to say this in this journey…
May be you or anyone can label me, as a GOSL supporter or what ever… who cares… this is the same thing LTTE did… now…???
Alex Eravi, you can stick whatever label that suits you, that is your choice. You still did not answer the question, is it the accuracy of the number that hurts you not the act itself ?
Good point Sri, you being the good friend of all the Singhalese folks you will be abe to extract it from SF with ease. Don’t you think so. I can phrase question for you in Singhala if you wish so.
Ayyo ………………….un ponra aalkaatti irupadhanaal than tamizhinam izhivu pattu kidakiradhu………..
i like mano ganesan, vigneswaran…..
thamil makkalukku nalla kalam pirakkattum….
Whether the NPC CM Wigeswaran says it or not, the Tamil Genocide is an ongoing Sri Lankan state campaign out in open, a ground reality.We do not need to dig out the facts to prove it like the Hidden Mass Graves of Mannar. Let us stop playing with words to please the colonial powers and their local agents.
The struggle continues to expose and bring those state Criminals of Tamil Genocide, a crime against Humanity, to face the Justice.
Let us stop the debate on words, which will blur the visions of Humanity at times..