ஐ.நா அமைதிப் படையில் உள்வாங்கப்பட்டு ஹெய்ட்டியில் பணியாற்றி இலங்கை இராணுவத்தினருக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பதக்கம் வழங்கப்பட்டு உயர் கௌரவம் கொடுக்கப்பட்டு உள்ளது.
ஹெய்ட்டியில் இலங்கை இராணுவத்தினர் ஆற்றி இருக்கின்ற மனிதாபிமான பணிகளுக்காக இக்கௌரவம் வழங்கப்பட்டு உள்ளது என ஐ.நாவால் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இலங்கையில் இனப்படுகொலை நிகழ்த்திய இராணுவத்திற்கு எதிரான போர்க்குற்றங்கள் குறித்து இதே ஐக்கிய நாடுகளும் அதன் எஜமானர்களான அமரிக்க ஐரோப்பிய நாடுகளும் நாடகமாடிவருகின்றன.
அப்ப இலங்கை இராணுவம் ஹெய்ட்டியில்ப் பெண்களைக் கற்பழித்ததாக புலி ஊடகங்கள் முழங்கித் தள்ளியதெல்லாம் பொய்ப் பிரச்சாரம் தானா…….!!!??.
அமைதிப்பணிக்காக செல்லும் இராணுவங்கள் செல்லும் நாடுகளில் இப்படி துஸ்பிரயோகம் செய்வது சா்வசாதாரண விடயமாதலால் யுஎன் இதை பெரிதுபடுத்துவதில்லை சிலவேளை ஒப்பீட்டளவில் சிங்கள இராணுவம் குறைவாக குற்றத்தில் ஈடுபட்டதால் கெளரவிக்கின்றார்களோ என்னவோ.