வன்னிப் படுகொலைகள் நடைபெற்று ஒருவருடங்களின் பின்னர் அதன் சூத்திரதாரிகளில் ஒருவரான கோதாபாய ராஜபக்ச கருணாநிதி எவ்வாறு தமிழினப் படுகொலைக்கு உதவினார் என நேர்கணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். ஏழைக் குடும்பத்தில் பிறந்து இந்திய மில்லியனேர்களில் ஒருவரான அரசியல் வியாபாரி தமிழக முதல்வர் கருணாநிதி, வன்னி இனப்படுகொலை நடந்து கொண்டிருந்த வேளைகளில் பல வழிகளில் ராஜபக்ச குடும்பத்தினருக்கு உதவியுள்ளார் என்பது அறியப்படதே எனினும் அது கோதாபாயவின் விரிவான விளக்கமாக இன்று வெளியாகியுள்ளது. வன்னியில் இரத்த ஆறு ஓடிக்கொண்டிருந்த வேளையில் தனது பேரப்பிள்ளைகளின் பதவிக்காகப் பேரம்பேசிக்கொண்டிருந்த கலைஞர் என்று அழைக்கப்படும் முத்துவேல் கருணாநிதி, தனது இறுதிக்காலத்தில் நடத்தியிருக்கும் அருவருப்பான அரசியல் நாட்கம் அம்பலமாகியுள்ளது. புலிப் பினாமியாகத் தொழிற்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி, திருமாவளவன் ஆகியோர் இன்று கருணாநிதியோடு கைகோர்த்துகொண்டு இனப்படுகொலையை மூடி மறைக்கிறார்கள். இதற்கும் மேலாக பிரபாகரன் துதி பாடிய பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி கருணானிதியோடு இணைந்து செம்மொழி மாநாடு நடத்துகிறார்.
சிவ்டி நியூஸ் என்ற ஊடகத்தைச் சேர்ந்த எம்.கே சிவகுமார் என்பவருக்கு வழங்கிய நேர்காணலில் கோதாபாயவின் கூற்று:
“கடந்த வருடம் ஏப்ரல் 24 ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி உடனடிப் போர் நிறுத்தம் வேண்டி சென்னையிலுள்ள அண்ணா சமாதியில் உண்ணாவிரதம் இருந்தார். இச்சம்பவம் நடப்பதுற்கு முதல் நாள் மாலை 4 மணிக்கு இந்திய வெளியுறவுச் துறைச் செயலர் சிவசங்கர மேனன் என்னை அவசரமாகத் தொலைபேசி யில் தொடர்பு கொண்டார். இந்தியத் தூதுக்குழு ஒன்று அவசரமாக கொழும்பு வரவிருப்பதாகத் தெரி வித்தார்.
நான் உடனடியாகவே ஜனாதிபதி ராஜபக்சேயின் அலுவலகத்திற்குச் சென்று அவரின் அனுமதியைப் பெற்று 5 நிமிடத்திற்குள்ளாகவே மீண்டும் மேனனைத் தொடர்பு கொண்டேன். கருணாநிதி உண்ணா விரதத்தைத் தொடங்கி ஆறுமணி நேரத்திற்குள் நாம் யுத்த தவிர்ப்பு பிரதேசத்திற்குள் ஷெல் தாக்குதல்கள் உள்பட சகல தாக்குதல்களையும் நிறுத்துவதாக அறிக்கையை வெளியிட்டோம். இந்த அறிக்கையைத் தொடர்ந்து கருணாநிதியின் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது. இதன் மூலம் தமிழ்நாட்டிலிருந்து எழுந்திருக்கக்கூடிய பெரிய ஆபத்தை நாம் தவிர்த்துக் கொண்டோம்.”
இந்தியா – இலங்கை அதிகாரிகள் குழுவாக மேற்கொண்ட ராஜதந்திர நடவடிக்கையின் ஒரு சிறந்த உதாரணமாக இது உள்ளது என்று கூறியுள்ளார்.
“A day before the Dravida Munnettra Kazhagam (DMK) supremo and Tamil Nadu Chief Minister M. Karunanidhi went on a fast on April 27, 2009 at the Anna Memorial in Chennai protesting against the SLAF offensive against the LTTE, Menon called me on my cell phone at 4.30 pm. The Indian team wanted to visit Colombofor urgent talks. I went straight to the President’s office and got his sanction and called Menon back within five minutes. Within six hours of Karunanidhi going on fast we could defuse the crisis in Tamil Nadu by issuing a statement announcing the end of combat operations and shelling inside the ‘No Fire Zone’, which led to the Tamil Nadu Chief Minister ending his fast. This was a classic example of quiet, corrective diplomacy between two officially designated government teams,” Gotabhaya reveals.
********************************************************************
//இதற்கும் மேலாக பிரபாகரன் துதி பாடிய பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி கருணானிதியோடு இணைந்து செம்மொழி மாநாடு நடத்துகிறார்.//
செம்பு தூக்கும் உரிமையில் தலையிடுவது நாகரீகமான விடயம் கிடையாது. அது அவரவர் உரிமை.
இது பழைய நியூஸ். இரண்டொரு மாதங்களுக்கு முன் வந்தது.
http://www.dailymirror.lk/print/index.php/news/news/8982.html
கோதபாயா, நாரவாயன்,சிவசங்கரன் சூழ்ச்சி முற்றும் முழுதுமாகத் தமிழர்களை மடையர்களாக்கி விட்டது.
ராஜ பக்சே எதிரி,
புது டில்லி எதிரி என்பதை மறந்து தமிழர்கள் ஒருவரையொருவர் குறை சாடுவதிலும், அரசியல் பார்ப்பதிலும் தான் இருந்தார்கள்.
உண்ணாவிரதம் இருந்தது யாருக்கும் தெரியாமல் தான் விடியற்காலையில் செய்துள்ளார். ஆனால் ஏதாவது நடக்கும் என்பதை உணர்ந்து நாரவாயன், சிவசங்கரன் கோதபாயாவுடன் தயாராக இருந்துள்ளார்கள். தமிழகத்தில் ஏற்பட்டக் கொந்தளிப்பை பச்சைப் பொய் சொல்லி அடக்கி விட்டார்கள்.
இன்றும் ராஜபக்சே, புது டில்லிதான் எதிரி என்பதை உணராமல் சகோதரச் சண்டையில் நேரத்தை வீணக்குவது மடமையிலும் பெரு மடமை.
புது டில்லியை ஆட்டுவித்தால் கோதபாயே அடங்கி விடுவான்.