இலங்கை இனப்படுகொலை இராணுவத்தில் வன்னிப்படுகொலைகளைத் தலைமை தாங்கிய தளபதிகளில் ஒருவரான சவேந்திர சில்வா உலக அமைதியை நிலைநாட்டுவதாகக் கூறும் ஐ.நாவின் அமைதிகாக்கும் கண்காணிப்புக் குழுவில் இடம்பெற்றுள்ளார்.
இது குறித்து கருத்துத் தெரிவித்த பன் கீ மூன், ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதி சவேந்திர சி;ல்வா அமைதி காக்கும் பணிகளை கண்காணிக்கும் நடவடிக்கைகளை தடுக்கும் அதிகாரம் கியைடாது என ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
உறுப்பு நாடுகளே இதனைத் தீர்மானிக்க வேண்டுமெனவும், தாம் தனித்து இந்த விடயத்தில் தீர்மானங்களை எடுக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
லிபியாவில் உறுப்பு நாடுகளின் அனுமதியின்றி நேட்டோ குண்டுவீசிய போது வாழாவிருந்த அதே பன் கீ மூன் பேசுகிறார்.









தமிழினப்படுகொலையின் சர்வதேச சின்னம் “பான் கீ மூன்”
இனப்படுகொலையை தீரத்துடனும் வீரத்துடனும் செய்யும் படைக்குப் பெயர்தான் அமைதிப்படை, இதனை இந்தியா என்ற நாடு ஈழத்தில் செயல்படுத்தி உலகிற்கு போதித்து பெருமையும் அடைந்துள்ளது. இப்படி இந்தியா பெருமையடைய காரணமான அரசியல்வாதிகளையும் மீண்டும் மீண்டும் தெரிவுசெய்து மகிழ்ச்சியும் அடைகிறார்கள் இந்தியப் பெருமக்கள்.
இந்தியாவின் செல்லப்பிள்ளைதான் சிறீலங்கா. தாய் 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்பதை நிரூபித்து நிற்கிறது. இனப்படுகொலையை இந்தியாவைவிடவும் விவேகமாகச் செய்யும் நாடு என்ற கீர்த்தியுடன் ஐக்கிய நாடுகளால் அமைதிப்படைக்கு தெரிவாகும் பெருமையையும் பெற்றுக்கொண்டுள்ளது. மேலும் ஈழப்போராட்டத்தை அழித்தவர்களுக்கும், அழியத் துணைபோனவர்களுக்கும் இது இனிப்பான ஒரு செய்தியுமாகும்.