போர்க் குற்றவாளியும் வன்னிப் படுகொலைகளின் சூத்திரதாரிகளில் ஒருவருமான பாலித கோகண ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் உயர் பதவிக்குத் தெரிவாகியுள்ளார். மக்கள் மீது இலங்கை அரசாங்கம் மக்கள் மீது பயங்கரவாத யுத்தம் நடத்திய காலத்தில் இலங்கையின் வெளியுறவுச் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்த பாலித கோகண இலங்கை பாசிச இனக்கொலை அரசின் ஊதுகுழலாகச் செயற்பட்டவர். அதன் பின்னர் இலங்கை அரசின் ஐ.நாவிற்கான நிரந்தரத் தூதுவராக நியமிக்கப்பட்டார். வன்னியில் விழுந்த ஒவ்வொரு மனிதப் பிணங்களதும் மரணத்தின் பின்னால் பாலித கோகண என்ற அவுஸ்திரேலியப் பிரசா உரிமை பெற்ற இந்த இனக்கொலையாளியின் பங்கு உள்ளது.
இனப்படுகொலைக் காலம் முழுவதும் மகிந்த ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய ஆலோசகராச் செயற்பட்ட பாலித கோகண மீது நேரடியான போர்க்குற்றம் சுமத்தப்பட்டிருந்ததது. நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோரது சரணடயக்கோரி நேரடியாக அவர்களுடன் தொடர்புகொண்டு கொலைக்களம் வரை நடத்திச் சென்றவர் இந்த பாலித என்ற பாசிச அடியாள் என்று நிறுவப்பட்டது. சரணடைந்தவர்கள் கொல்லப்பட்ட பின்னர் தாக்குதலில் இறந்துபோனார்கள் என்று அப்பட்டமான பொய்யை ஊடகங்ளுக்கு அனுப்பியவரும் இவரே.
போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று ஐக்ய நாடுகள் நிறுவனம் ஒரு புறத்தில் நாடகமாடும் அதே வேளை, போர்க் குற்றவாளிகளுக்கு உயர் பதவி வழங்கிக் மரியாதை செலுத்துகிறது.
பாலித கோகண ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் சட்டவாக்க உறுப்பின் ஆறாவது குழுவின் தலைவராகத் தெரிந்தெடுக்கப்பட்டுள்ளார். ஐக்கிய நாடுகளில் அதி உயர்ந்த பதவி ஒன்றைப் பெற்றுக்கொள்ளும் முதலாவது இலங்கையராக இவர் கருதப்படுகின்றார். இறுதி நேரம்வரைக்கும் இலங்கை அரசின் இனச் சுட்திகரிப்பை நியாயப்படுத்தும் அடியாளாகச் செயற்பட்ட இவர் முன்னதாக 10 வருடங்கள் ஐ.நா வில் உயர் பதவியை வகித்தவராவர்.
ஐக்கிய நாடுகள் சபையோடு பேசி உரிமை பெற்றுத் தருகிறோம் என்று மக்களை ஏமாற்றும் பிழைப்புவாதிகளுக்கும் அப்பாவித் தனமாக இந்தப் பிழைப்புவாதிகளை நம்புவோருக்கும் இந்தச் செய்தி சமர்ப்பணம்.
இதற்கு முன்னரும் இலங்கை இனப்படுகொலை இராணுவத்தில் வன்னிப்படுகொலைகளைத் தலைமை தாங்கிய தளபதிகளில் ஒருவரான சவேந்திர சில்வா ஐ.நாவின் அமைதிகாக்கும் கண்காணிப்புக் குழுவில் இடம்பெற்றார்.
உலகில் ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடும் மக்கள் கூட்டங்கள் அமரிக்காவையும் அதன் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு இரத்த முத்திரையிட்டு அங்கீகரிக்கும் ஐ.நா போன்ற ஏகாதிபத்தியக் கூறுகளையும் நம்பியிருப்பதில்லை. ஈழப் போராட்டம் போன்று உலகின் போராட்டங்கள் யாரால் அழிக்கப்படனவோ அவர்களையே நண்பர்கள் என்று இன்றுவரை எந்த அவமான மனோபாவமுமின்றிக் கூறும் தமிழ் அரசியல் பிழைப்புவாதிகளும் மக்கள் அதிகாரவர்க்கப் பயங்கரவாதிகளால் அழிக்கப்பட துணை போனவர்களே.
மக்களின் அவலங்களில் பிழைப்பு நடத்தும் இப் பிழைப்புவாதிகள் அரசியலிலிருந்து நீக்கம் செய்யப்படும் வரை அழிவு தொடரும்.
இலங்கை அரச அதிகாரிகளுள் நேரடியான ஆதாரத்துடன் போர்க்குற்றவாளி என நிறுவப்ப்பட்ட பாலிதவிற்கு ஐக்கிய நாடுகள் உயர் பதவி வழங்கிக் கௌரவிக்கும் போது ராஜபக்ச மேற்கு நாடுகளும் ஐ.நாவும் நவி பிள்ளையும் தனக்கு எதிராக்ச் செயற்படுகின்றனர் என்று சிங்கள மக்களிடம் வாக்குப் பொறுக்குகிறார் சர்வாதிகாரி மகிந்த. இதே ஐ.நாவைப் பிடித்து ராஜபக்ச உட்பட அனைவரையும் தூக்கில் போடுகிறோம் என்கிறனர் தமிழ் ஏகாதிபத்திய முகவர் குழுக்கள். இந்த இரண்டு பிழைப்பு வாத முகாம்களுக்கும் இடையில் நசுங்கி மாண்டு போவது அப்பாவி மக்களே.
சில முன்னைய பதிவுகள்:
பாலித கோகண்ன போர்க்குற்றவாளி – அவரே ஒப்புக்கொள்ளும் ஆதாரம்
இலங்கை போர்க் குற்றவாளி ஐ.நா ஆலோசனைக் கூட்டத்தில் : காணொளி
ஜெனிவாவில் ராஜபக்ச குடும்பம் தீண்டப்படப் போவதில்லை