வன்னிப் படுகொலைகள் நடைபெற்று ஒன்றரை வருடங்கள் கடந்த நிலையில், 16ம் திகதி டிசம்பர் மாதம் 2010 ஆம் ஆண்டு, ரோரிக் கட்சியில் பாதுகாப்புச் செயலாளராகவிருந்த லியம் பொக்ஸ் மற்றும் அடம் வெரட்டி என்ற அவரது எடுபிடியும் இலங்கைக்குச் சென்று ராஜபக்சவைச் சந்தித்தனர். மகிந்த ராஜபக்சவின் ஆதரவோடு கொலைசெய்யப்பட்ட இலங்கையின் வெளி நாட்டமைச்சர் லக்மன் கதிர்காமரின் நினைவு தினத்தில் தலைமை உரையாற்றவே லியம் பொக்ஸ் இலங்கைகுச் சென்றார்.
லியாம் பொக்சின் அறிவுத்தலைத் தொடர்ந்து ராஜபக்ச தொடர்பாக பிரித்தானிய மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள ‘தவறான’ அபிப்பிராயத்திற்கு எதிராகப் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்ற முடிவிற்கு ராஜபக்ச அரசு வந்து சேர்கிறது. அதன் தொடர்ச்சியாக பிரித்தானியாவைத் தலைமையகமாகக் கொண்ட பெல் பொட்டிங்டர் என்ற நிறுவனத்தை ராஜப்கசவிற்கு ஆதரவான எண்ணத்தை பிரித்தானிய ஜனநாய சக்திகளிடையேயும், மனித உரிமைவாதிகள் மற்றும் இடதுசாரிகளிடையேயும் ஏற்படுத்த வாடகைக்கு அமர்த்திக் கொள்கின்றனர்.
2010 ஆம் ஆண்டில் மீன்பிடித் துறை அமைச்சராகவிருந்த ரஜித சேனாரத்னவே பெல் பொட்டிங்டர் நிறுவனத்தை ராஜபக்சவிற்காகப் பிரச்சாரம் செய்ய அமர்த்திக்கொள்கிறார். ராஜபக்ச ஐ.நாவில் ஆற்றிய உரையிலிருந்து பல்வேறு சம்பவங்களை பெல் பொட்டிங்கடரே திட்டமிட்டுக்கொடுத்தது. பெல் பொட்டிங்டர் நிறுவனத்துடன் நேரடியான தொடர்புகளைப் பேணியவர் ரஜித சேனாரத்னவே. இந்த நபர் இன்று ராஜபக்சவிற்கு எதிரணியின் முக்கிய புள்ளி. ராஜபக்ச
அரசிலிருந்து வெளியேறி ஜனாதிபதி வேட்பாளராகியுள்ள மைத்திரிபால சிரிசேனவின் நெருங்கிய சகாவாகியுள்ளார்.
ரஜபக்ச கும்பல் நடத்திய இனப்படுகொலையின் பின்னர் ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் இனப்படுகொலையை மூடி மறைத்தவர்களுள் மிகப்பிரதானமானவர். ரஜித சேனாரத்ன. ராஜபக்ச கொள்ளையிடும் பணம் முழுவதையும் குடும்பத்தோடு மட்டும் பகிர்ந்துகொள்வதாலேயே ரஜித போன்றவர்கள் விலகியோடுகிறார்களே தவிர தமிழ் ஊடகங்கள் சொல்வது போல எதிரணி ஜனநாயகத்தை மீளமைக்கும் என்பது பகற்கனவு.
போர்க்குற்றம், இனப்படுகொலை, நல்லிணக்கம், அரசியல் கைதிகள், சிறுபான்மைத் தேசிய இனங்களின் உரிமை, வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவம் போன்ற எதனைப்பற்றியும் மூச்சுக்கூட விடாத எதிரணிப் பேரினவாதிகளும் ராஜபக்சவிற்கு இணையானவர்களே.
இங்கேயும்”பொட்டு”ங்கர்தானா?
இக் கருத்தின் அர்த்தம் என்ன??
UNP won’t allow war crimes against Govt. leaders…
– by UNP MP Harsha De Sikva
So, what are they going to do the external forces who are backing these dummies…?
What is the stand of the Diaspora, who wants the regime change & going to UN…?
What is the stand of The TNA…?
I know TNA must be sit like a cat over the wall…
Not only TNA… also SLMC…
Traditional Minister has no problem…
2010 டிசம்பர் 2 ஆந் திகதி அளவில் மகிந்த ராஜபக்ச லண்டனில் இருந்து கலைக்கப் பட்டது தான் ராஜபக்ச இப்போ நேர்கொண்டுள்ள நெருக்கடிக்கு அடித்தளம் அமைத்தது.
ஆனால் அந்நேரத்து முக்கிய நிகழ்வுகள் பல பரிரங்கமாக பதிவு செய்யப்பட்டுருக்க வேண்டும். அப்போது தவறவிடப்பட்ட பிழைகளை பெருப்பிபதாக மட்டும் முடியாமல் முக்கிய புள்ளிகளையும் தவற விடும், வசதி படைத்த தேசங்களில் உள்ளோர் பதிவுகளை நேர்த்தியாக்க முனைய வேண்டும்.
2009/2010 அளவில் சில சொறியர் தான்தோன்றித் தனமாக தம்மை ஈழத் தமிழரின் பிரதிநிதிகள் என தமக்கே பேய்க்காட்டிக் கொண்டு லியம் பொக்ஸ்-இனால் கப்பமறவிட எத்தனிக்கப்படும் தூரத்துக்கு சென்றுருக்கின்றனர். அவர்கள் அறிந்திருந்தவன் தான் அடம் வெரிட்டி எனும் தமிழர் இனப்படுகொலைக்கு உடந்தையான மர்ம நபர். அடம் வெரிட்டி லியம் பொக்ஸ்-உடன் வைத்திருந்த கள்ளத் தொடர்பு வெளியே வந்தது ஈழத்தமிழர் சார்ந்த ஆவணங்களால் என்பதை நாம் உணர வேண்டும். இந்த இரண்டு ஒட்டுண்ணிகளும் நட்சத்திர விடுதியில் தமிழர் போராட்ட உக்கிரத்தால் முற்றுகையிடப்பட்டிருந்த மகிந்த ராஜபக்சவின் மானத்தை காப்பதற்காக அவசர அவசரமாக ரூபவாகினி தொலைக்காட்சிப் பதிவொன்றிற்காக களமிறக்கப்பட்டனர். அந்த அவசரத்தில் தான் அடம் வெரிட்டி-இன் கள்ளத் தொடர்பு வெளியுலகுக்கு சில மாதங்கள் கழித்து யூ-ட்யூப் வீடியோ பிரதிஒன்றிலிருந்து ஆராய்ச்சியாளைகளிடம் அகப்பட்டது. பிரித்தானிய ஆட்சி பீடமே அதிர்ந்து போகுமளவுக்கு அடம் வெரிட்டி என்பவனின் செயற்பாடுகள் ராஜபக்ச-உடன் கைகுலுக்கும் பதிவாக வெளிவர பல முக்கிய உண்மைகளும் அவசர அவசரமாக மறைக்கப்பட்டன.
அந்நேரத்தில் (2010 டிசம்பர்) ஏற்பட்ட சிக்கல்களைச் சமாளிக்க பிரித்தானியப் பாதுகாப்பு செயலானாக ராஜபக்சவுக்கு பெருந்துணையாக நின்ற லியம் பொக்ஸ் கண்டிக்கப்படுவது போல் மாபெருங் குள்ள நரியும் கள்ளனுமான பிரித்தானிய வெளியுறவுத் துறை செயலாளன் வில்லியம் ஹேக் பொய்ப்பிரச்சார வேலைகளில் களமிறக்கப்பட்டான். இது பாதுகாப்பு அமைச்சு விடயமல்ல வெளியுறவுத் துறை அமைச்சு விடயம் என தமக்குள் பிரச்சனை என நாடகமாடி தமிழர் படுகொலையில் பிரித்தானிய அரசின் பாரிய குற்றங்களையும் பங்கையும் காப்பாற்ற திசை திருப்பு முயற்சிகளில் இறங்கினான். அதன் நிமிர்த்தம் 2010 டிசம்பர் 16ஆந் திகதி என இனியொரு சுட்டிக்காட்டும் நிகழ்வு ரத்துச் செய்யப்பட்டது. லியம் பொக்ஸ் ஸ்ரீலங்கா சம்பந்தமான எவ்வளவோ ரகசியங்களை பேணியவாறு சாதுர்யமாக பல காலம் கழித்து ராஜினாமா செய்தான். வேறு பல குற்றச்சாட்டுக்களும் மடை திறக்கப்பட்டது போல் அடுக்கடுக்காக வெளிவர தமிழரின் ஒற்றுமையின்மையும் போட்டி மனப்பான்மையும் புலத்தில் வளர, பிரித்தானியா ஸ்ரீலங்கா விடயத்தில் ஒன்றுந்தெரியாத குழந்தை போல் தொடர்ந்தும் இனப்படுகொலைக்கு உடந்தையாக இருக்க மேலதிக வழிவகுக்கப்பட்டது. முக்கிய ஆராய்ச்சிகளும் பதிவுகளும் தவற விடப்பட்டன. லியம் பொக்ஸ் ராஜினாமா செய்ய நிர்ப்பந்திக்கப் படும் பல சிக்கல்கள் தொடர்ந்தவாறே இருந்தது. எனவே உண்மைகளை பிழையான வழிகளில் திசை திருப்பும் ஒரு யுக்தியாக காலந்தள்ளப் பட்ட கதிர்காமர் நினைவு தின சொற்பொழிவை 2011 ஜூலை மாதம் பிரித்தானிய ஆதிக்கவர்க்கத்தின் நெருக்கடிகளை தீர்க்குமுகமாக அடம் வெரிட்டி அவசர அவசரமாக கொழும்பில் லியம் பொக்ஸ்-உக்காக தயார் படுத்தியிருந்தான். கட்டுநாயக்கா விமான நிலையத்தில் லியம் பொக்ஸ் வந்திங்கியபோது அட வெரிட்டி இரண்டாவது தடவையாக புகைப்படங்களில் அகப்பட்டான்.
மேலெழுதிய அனைத்தையும் இயக்கியது பெல் பொட்டிஞ்சர் எனும் நிறுவனம் என்பதே இங்கு நாம் கவனிக்க வேண்டிய மிகமுக்கிய தொடர்பு.
2010 டிசம்பர் இன் பின்னர் பெல் பிரபு எனும் கள்ளன் தானே களமிறங்கி லியம் பொக்ஸ் உருகவாக்கிய பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிதாயிற்று (பெல் பிரபு தான் பெல் பொடிஞ்சர் நிறுவனத்தின் தாபகன்)
பெல்-இன் ஏவலாலேயே வேறொரு ஆயுதவியாபாரம் சம்பந்தமான கப்பமறவிட முயன்ற நிகழ்வொன்றை காரணங் காட்டி சக்தி மிகுந்த பாதுகாப்புத்துறை செயலாளன் தனது பிரதமாகும் அவாவையே தூக்கி எறிந்து ராஜினாமா செய்யக்கூட வேண்டியதாயிற்று. லியம் பொக்ஸ் டேவிட் கமரூன் -க்கே சவாலாக இருந்ததும் அவனது அன்றைய பதவி விலக்களுக்கு உந்து சக்தியானதும் உண்மை .
பெல் பொடிஞ்சர் தான் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றும் சாட்டில் ராஜபக்சவை பிரித்தானியாவுக்கு அழைத்து , அதனோடு கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை 2018-இல் அம்பாந்தோட்டையில் நிகழ்த்துவது என்ற தந்திரத்தையும் இணைத்து பல மில்லியன் பவுன்களை ஸ்ரீலங்காவிடமிருந்து அறவிட்டிருந்தது. பல தமிழர் அந்நிறுவனத்தின் செயற்பாடுகளை அறிந்திருந்தும் ராஜபக்ச-இன் லண்டன் வருகைக்கு சற்று முன்னதாக பெல் பொடிஞ்சரின் பிரதிநிதிகள் தமிழரின் தேசியம் சம்பந்தமான ஒரு நிகழ்விலாவது பங்குபற்றி சமாதானப் போக்கை நிலை நிறுத்துவது போல் பேய்க்காட்டவும் எத்தனித்திருக்கின்றனர். பிரித்தானிய ஆதிக்க வர்க்கத்தின் முக்கிய ஊதுகுழல்களான டைம்ஸ் மற்றும் டெலிகிறாப் பத்திரிக்கைகளில் முதற்பக்கங்களிலேயே ராஜபக்ச எனும் ஒக்ஸ்போட் பல்கலைக்கழக விரிவுரையாளர் தகுதியுள்ள உலக நாயகனுக்கு புகழாரஞ் சூடும் திட்டம் பெல் பொடிஞ்சரிடம் இருந்துள்ளது. தமிழர் போராட்ட உக்கிரத்தோடு விக்கிலீக்ஸ் இணய தளமும் 2010 நவம்பர் முப்பதாம் திகதி பல ரகசியங்களை ராஜபக்ச சகோதரர்களும் பொன்சேகாவும் எவ்வளவு பாரிய குற்றவாளிகள் எனக்காட்டி தகுந்த நேரத்தில் வெளியிட்டது பெல் பொட்டிஞ்சருக்கு பெருந்தலையிடியானது. ராஜபக்ச பொல்லைக் கொடுத்து அடிவாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டான். ஆனால் அதனோடு விடுவங்களா பெல் பொடிஞ்சர்? ஈழத் தமிழரும் அவர்களுக்கு கரம் கொடுக்க வந்த வேற்று இனத்தவரும் திசைதிருப்பியே ஆக வேண்டும் என்பதற்காக, முற்றுகையிடப்பட்டு தப்பியோடிய ராஜபக்சவை இழிவாகக் காட்டுவது போல் பாசங்கு செய்து எவ்வளவோ முக்கிய உண்மைகளை மறைத்தது. டைம்ஸ் பத்திரிகை ராஜபக்சவை இழிவாகக் காட்டினாலும் தமிழரின் அவலத்தின் உண்மை நிலை பெரிதளவு மறைக்கப்பட்டது. ஓரளவில் பல தமிழ் பிரதிநிதிகள் பிரித்தானிய ஆதிக்க வரிக்கத்தினுன் அடிவருடிகளாகவும் உள்வாங்கப்பட்டனர். அதே நேரம் சத்தம் போடாமல் வேறுவழியில்லாமல் தனக்கு நேர்ந்த அவமானத்தை தாங்கிய ராஜபக்சவின் கருணை பிரித்தானிய ஆதிக்க வர்க்கத்தை மேன் மேலும் அவனிடம் கடமைப்பட வைத்தது.
அதுதான் இருதினங்களுக்கு முன் அநுராதபுரத்தில் தன்னை விட்டு விலகும் கட்சிக்காரர்களுக்கு சொன்ன அதே வார்த்தைகளையே மகிந்த ராஜபக்ச டேவிட் கமரூன்-இன் கொமன்வெல்த் மாநாடு சம்பந்தமான பொய்நாடகம் கூடிக்கொண்டே போன போது உச்சரித்த உண்மை :- “கண்ணாடி வீடுகளிலிருந்து கொண்டு கல் எறியாதீர்”
பெல் பிரபு தான் மாக்ரட் தட்சர் என்ற ஒரு பெண்ணையே பெண் ஒருக்குமுறையில் தோய்ந்த பிரித்தானிய பழமைவாத (டோரி) கட்சித் தலைவிப் பதவிக்கு அமர்த்தியதில் முக்கிய பங்காற்றியவன். அதன் பின்னரான அவளின் சகல அரசியல் வெற்றிகளுக்கும் பின்னின்று ஊடகத்துறையையே அடிமை ஆக்கியது பெல் எனும் பாதகனே. 1984 இல் கொலைகாரி மாகிரட் தட்சர் விக்டோரியா அணையை திறந்து வைக்க கண்டிக்கு வந்த போது, பக்கத்திலேயே இருந்து எப்படி மகாவலி நீர் திசைதிருப்பப் பட்டு அபிவிருத்தி உதயமாகும் என்ற உரையை அவளுக்குக் எழுதிக் கொடுத்ததும் பெல் பிரபு. அதன் பின் இரத்த ஆறு ஓடுவது நாமறிந்த உண்மை. பெல் பிரபுவுக்கும் மார்க்கிரட் தட்சரின் நம்பிக்கைகுருயவனாக வஅரசியலில் வளர்ந்த லியாம் பொக்ஸ்-இற்கும் இந்த உண்மை தெரிந்தேயிருக்கும்.
உலக ராணுவ மயமாக்குதலுடன் பின்னிப் பிணைந்து பிரித்தானியாற்கு அப்பால் ஐக்கிய அமெரிக்காவிலும் சர்வதேச ஆயுத விற்பனை முதல் நில அபகரிப்பு போன்ற மானிட குலத்துக்கு எதிரான பல அடக்குமுறைகளுக்கும் துணைபோகும் பெல் பொடிஞ்சர் பலகாலமாக லியம் பொக்ஸ்-ஐ ஸ்ரீலங்கா விடயத்தில் அமர்த்தி கடற் கொள்ளையர் என்ற பொய்ச்சாட்டில் இந்து சமுத்திரத்தில் ஸ்ரீலங்காவை முக்கிய கட்டளை மையப்புள்ளியாக்கும் வரை இயக்கியது. லியம் பொக்ஸ் ரணில் விக்கிரமசிங்க-உடன் கொண்ட இரு தசாப்தங்கள் கடந்த கள்ளத் தொடர்பு தான் இப்போது பெல் பிரபுவின் நாக்கை ஊற வைக்கும் விடயமாக மீண்டும் உருவெடுத்துள்ளது.
சில வாரங்களுக்கு முன்னர் தான் ரணில் விக்கிரமசிங்க பிரித்தானிய பழமைவாதக் கட்சியின் பேர்மிங்காம் நகரத்தில் நடந்த மாநாட்டுக்கு அழைக்கப்பட்டான். ஸ்ரீலங்காவில் ஆட்சி மாற்றத்தின் அறிகுறி அங்கேயே தென்பட்டது. அங்கு ரணில் விக்கிரமசிங்-உடன் பேர்மிங்காம்-இல் கொஞ்கிக்குலாவியவாறு லியம் பொக்ஸ் காணப்பட்டது ஒன்றும் வியக்கத்தக்க விடயமல்ல.
‘லியம் பொக்ஸ் உடன்படிக்கை’ என்று 1996-இலேயே கீரியும் பாம்பும் போன்று முழுநேரமும் சண்டை போட்டுக்கொண்டிருந்த சந்திகா, ரணில் தரப்பினரை சமாதானப் படுத்தி தமிழரை அழிக்க சிங்கள இனத் துவேச சக்திகளை ஒருமிக்கும் செயற்திட்டம் லியம் பொக்ஸ்-இனால் உன்னெடுக்கப் பட்டிருந்தது. 1996-இல் இந்த உடன்படிக்கை காரணமாகவே ரணில் தரப்பிலிருந்து வியம் பொக்ஸ்-உடன் (அவனூடு பெல் பொடிஞ்சர்-உடன்) நெருங்கிய தொடர்பினைப் பேணிவளர்த்தவனே இந்த ராஜித சேனாரட்ன.
அதே காலத்து இன்னொரு லியம் பொக்ஸ்-உடன் நெருக்கமான உறவாடி தற்போதைய எதிரணியில் முக்கிய பங்காற்றுபவனும், இப்போ ராஜ் ராஜரட்ணத்துடன் கொழும்பு பங்குசந்தையில் பெருங்களவு என குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ரவி கருணாநாயக்க.
ராஜித சேனாநாயக்கவுடனான படங்கள் வெளியானதாகத் தெரியாவிடினும் கீழுள்ள படங்கள் ஒருவகையில் விடயத்தை நன்கு அறிய உதவலாம்:-
https://archive.today/gP8HT
https://archive.today/Z7M3H