ரஷ்யாவின் சுகோய் விமான நிறுவனம் இதுவரை போர் விமானங்ளை மட்டுமே தயாரித்து வந்த நிலையில் தற்போது பயணிகளின் விமானத்தை தயாரித்து வருகிறது. இந்தோனேஷியாவின் ஜகார்த்தா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானத்தில் ரஷ்ய நாட்டின தூதரக அதிகாரிகள் மற்றும் இந்தோனேஷியாவின் வர்த்தகர்கள்பயணித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மேற்கு ஜாவாவின் போகோர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது விபத்திற்குள்ளானது.
இந்தோனேசியாவின் ஜகார்த்தா விமான நிலையத்திலிருந்து, நேற்று மதியம் இந்த விமானம் 2 விமானிகள் மற்றும் 48 பயணிகளுடன் புறப்பட்டது. ஆனால், புறப்பட்ட அரைமணி நேரத்திற்கு பிறகு இந்த விமானத்திலிருந்து தரை கட்டுப்பாட்டு தளத்திற்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. மேற்கு ஜாவாவில் உள்ள போகோர் என்ற இடத்தில் விமானம் மாயமானதாக கருதப்படுகிறது.