மலேசியாவில் இருந்து செயற்படும் புலி உறுப்பினர்களால் கடந்த வாரம் மலேசியாவில் இருந்து அவுஸ்திரிலியாவிற்க்கு இலங்கை தமிழ் அகதிகள் அனுப்பட்ட கப்பல் தொடர்பாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளன.
புலிகளின் கப்பல்களுக்கு பொறுப்பான பிரித்தானியா பிரஜையான சங்கர் மற்றும் நோர்வே பிரஜையும் இலங்கை தமிழருமான ஸ்டிபன் ராஜா என்று அழைக்கபடும் சோதி மற்றும் ஜேர்மனிய பாபு பிரித்தானியாவில் வசிக்கும் புலிகளின் உறுப்பினரான மோகன் மற்றும் மலேசியாவில் உள்ள கண்ணன் மற்றும் டேனியல் புலிகளின் செயற்பாட்டாளாரும் மலேசியாவில் வசிப்பவருமான ரொனால்ட் அல்லது சுகு இந்தோனிசியாவில் உள்ள பாபு மற்றும் மதி ஆகியோர் இக்கப்பல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது
மோகன் தற்போது இந்தோனிசியாவில் தெரியவருகிறது ஏனையோர் மலேசியாவில் வசித்துவருவதாகவும் இதில் ரொனால்ட் அல்லது சுகு என்பவர் சர்வேதேசரீதியாக புலிகளின் பணத்தினை கையாளபவர் எனவும் இவர் மலேசியாவில் ஆடம்பர மாளிகை ஒன்றில் புலிகளின் பணத்தில் வாழ்ந்து வருபவர் எனவும் தெரிவிக்கபடுகிறது
இதில் சோதியும் ரொனால்ட் அல்லது சுகு வன்னிமுகாமில் உள்ள புலி உறுப்பினர்களை அவுஸ்திரிலியாவிற்க்கு அனுப்புவதற்க்கு கப்பல் வாங்கவேண்டும் என கனடாவில் மூன்று லட்சம் டொலர்களை சேகரித்து அதில் 35.000 டொலர்களுக்கு பாவனைக்கு உதவாத படகு ஒன்றினை வாங்கி அதில் 30 புலிஉறுப்பினர்களையும் அத்தோடு ஏனைய 230பேரிடம் 15.000 டொலர்கள் வீதம் பெற்றுகொண்டு அப்படகில் அனுப்பிவைத்த படகை தற்போது இந்தோனிசியா கடற்படையினர் கைது செய்துள்ளமை குறிப்பிடதக்கது இதன் ஊடாக அம்மக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொள்ளாது செயற்பட்டதன் மூலம் அம்மக்களை பலிகொடுக்கவும் துணிந்துள்ளனர்.
ரிபிசி செய்தி பிரிவு.
ஆசிரியருக்கு,
இந்தச் செய்தி ஊடாக தாங்கள் எதனைப் புலப்படுத்த எண்ணியுள்ளீர்கள் என்பதனைத் தயவு செய்து சொல்ல முடியுமா?
என்னுடைய அறிவு நீங்கள் புலிகளை அவர்களது ஏஜெண்டுகளை அம்பலப்படுத்த முயற்சித்துள்ளீர்கள் என்று சொல்கிறது. அதற்கு தாங்கள் ஆதாரமாகக் கொண்டுள்ளது ரிபிசி எனும் வானொலி. புலிகளது வானொலிக்கு மாற்றான ஒரு வானொலி. அது தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், கொழும்பிலுள்ள எங்களுக்குத் தெரிந்த விடயம் ரிபிசிக்கு மாதம் ஆயிரக்கணக்கான பவுண்கள் இலங்கை அரசாங்கத்தால் கொடுக்கப்பட்டு அவ்வொனொலி இலங்கையில் ஒலிபரப்பாகியது என்பது. பின்னர் இலங்கை அரசாங்கத்துடன் ஏற்பட்ட முறிவைத் தொடாந்து இலங்கை அரசாங்கத்திற்கெதிராக புலிகளுடைய வானொலியை விடவும் மோசமாகப் பிரச்சாரம் செய்தது. இவையெல்லாம் அதனுடைய நம்பகத் தன்மை பற்றி ய உரைகல்கள். ஐபிசியைக் கேட்க விரும்புபவர்கள் போல ரிபிசியைக் கேட்க விரும்பபவர்கள் கேட்கலாம். புpரச்சினை அதுவல்ல. ஒரு இடதுசாரி இணையமாகக் காட்டிக் கொள்ளும் தாங்கள் அதனை மேற்கோள் காட்டி செய்தி வெளியிடுவது அபத்தமாக இருக்கிறது.
இரண்டாவது, இதனூடாக நீங்கள் சொல்ல விரும்புவது என்ன? கப்பலில் வந்தவர்கள் அனைவரும் புலிகள் அல்லது அவர்களுடன் தொடர்பு பட்டவர்கள் அவர்களுக்கு அகதி அந்தஸ்து கொடுக்கக் கூடாது. அவர்கள் திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்பதா?
ஏற்கெனவே புலிகள் அல்லாத இளைஞர்கள் கட்டுநாயக்கா விமானநிலையத்தில் படும் அவஸ்தை குறித்து நீங்கள்; செய்தி வெளியிட்டுள்ளீர்கள் அல்லவா? அவ்வாறானால் இவர்கள் திருப்பி அனுப்பப்பட்டால் அங்கு என்னவாவார்கள் என்று சற்று யோசித்துப் பாருங்கள்.
மற்றையது, சட்டப+ர்வமற்ற வழிமுறைகளுடாகத் தான் ரிபிசி வானொலியில் உள்ளவர்களும் அதன் கேட்டுனர்களும் கூட ஐரோப்பாவுக்கு வந்து சேர்ந்திருப்பார்கள் என்பதில ஐயமில்லை. இந்த ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்கள் போதைவஸ்து மற்றும் கடத்தல் வியாபாரங்களில் ஈடுபடுபவர்கள் என்பது யாவரும் அறிந்தது தான். அவர்கள் மோசமானவர்கள் என்பதால் அவர்களைப் பயன்படுத்தி ஐரோப்பாவுக்கு எவராவது வராமல் விட்டார்களா?
ஆக, புலிகள் அதனைச் செய்து விட்டார்கள் என்பது தான் உங்களுடைய பிரச்சினை. புலிகள் செய்ய மாட்டார்கள் என்பதற்கு இதுவரை எந்த உத்தரவாதமும் இல்லையே. பின்னர் ஏன் அது அதிர்;ச்சிய+ட்டும் தகவலானது?
ஏனென்றால் புலிகளில் உங்களுக்கிருக்கும் கோபம். அது மட்டும் தான். ரிபிசிக்கும் அது தான். எனது மூக்குப் போனாலும் பரவாயில்லை எதிரிக்கு சகுனப் பிழையாக வேண்டும் என்று நினைத்ததைத் தவிர வேறு ஏது அதில் தெரிகிறது.
30 புலி உறுப்பினர்களைத் தான் விடுவோம். மீதி 230 பேர் பற்றி தாங்கள் என்ன எண்ணியுள்ளீர்கள். ஓரு குற்றவாளி தப்பித்தாலும் பரவாயில்லை நிரபராதி எவரும் தண்டிக்கப்படக் கூடாது என்கிற முதலாளித்துவ ஜனநாயகம் பணம் பண்ண இயங்குகிற ரிபிசியிடம் தான் இல்லை. ஓரு இடதுசாரி இணையத்தளமான தங்களிடமுமா இல்லை.
இடதுசாரிகள் தம்மை விமர்சனத்தற்கு அப்பால் நிறுத்திக் கொண்டு எல்லோரையும் விமர்சிப்பவர்களாக இருந்ததால் தான் இலங்கை தமிழ் மக்களுக்கு இவ்வளவு அழிவுகளும் நேர்ந்தது என்பேன். எனவே இதனை இடதுசாரி எதிர்ப்பாகக் கொள்ளாமல் ஆக்க பூர்வமான விமர்சனமாகக் கொள்வீர்கள் என்பது நம்பிக்கை.
தீர்மானிக்க வேண்டியது நீங்கள்.
விஸ்வன்,
இனியொருவின் நிலைபாடுகளுக்கும் ரீ.பீசி வானொலிக்கும் எந்த உடன்பாடுகளும் கிடையாது; மாறாக அதன் செயற்பாடுகளுடன் -புலிகளுடன் அடிப்படையில் முரண்படுவது போல்- அடிப்படையிலேயே முரண்படுகிறோம். தவிர, செய்தி என்பது பீ.ரீ.ஐ, பீ.பீசி,ரொய்ட்டர், போன்ற ஏகாதிபத்திய சார் வியாபார நிறுவனங்களின் தரவுகளிலிருந்து கூட சேகரிக்கப்படுகிறது, ஆதாரம் காட்டப்பட்டு வெளியிடப்படுகிறது. ரீ.பீ.சி செய்தி என்பது உறுதிப்படுத்தப் பட்டபின்னர், இலகு படுத்தும் நோக்கில் அவர்களின் இணையத்திலிருந்து பிரதிசெய்யப்பட்டது. அவ்வளவுதான். இச்செய்தி ஆட்கடத்தல் முகவர்களின் – அவர்கள் புலியானால் என்ன அரசாங்கமானால் என்ன – மனிதாபிமானமற்ற வியாபார நோக்கங்கள் அம்பலப்படுத்தப்பட வேண்டும் என்பது சரியானதே. இதனால் அகதிகளை இலங்கைக்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று பொருள்பட எந்த சந்தர்ப்பத்திலும் இனியொரு செய்தியில் குறிப்பிட்டதாகத் தெரியவில்லை. புலிகளுக்கு எதிரானவர்களெல்லாம் நண்பர்கள் என்ற சமன்பாட்டை இனியொரு எப்போதுமே பிரயோகித்ததில்லை. தவிர கிழக்கு இலண்டனிலிருந்து நீங்கள் எழுதிய பின்னூட்டமானது கொழும்பிலிருந்து எழுதியிருப்பதாகக் குறிப்பிட்டிருப்பதும் ஆச்சரியத்தைத் தருகிறது. திட்டமிட்டு முரண்பாடுகளை ஏற்படுத்துவதும், விமர்சனங்களைக் கூட திசை திருப்பும் நோக்கில் திரிபுபடுத்தி முன்வைப்பதும் சிலரின் பொழுது போக்காக மாறிவிட்டது. இந்த வகைக்குள் நீங்கள் அடங்க மாட்டீர்கள் என்பது நம்பிக்கை.
– நாவலன் –
செய்தியை சேகரிப்பதற்கான மூலங்கள் நீங்கள் குறிப்பிடுவது போல ஏகாதிபத்திய சார் வியாபார நிறுவனங்களின் கைகளில் தான் பெருமளவில் உள்ளன என்பதையும் அவற்றில் தான் எமது ஊடகங்கள் பெரும்பாலும் தங்கி நிற்கின்றன என்பதையும் நான் அறிவேன். பிரச்சினை அதுவல்ல. எமது தெரிவும் தெரிவுக்கான அரசியலும் தான்.
உதாரணமாக வங்கத்தில் மாவோயிஸ்ட்டுக்கள் மக்களைக் கொல்கிறார்கள் என்று தான் இந்திய ஆளும் தரப்பு ஊடகங்கள் சொல்லி வருகின்றன. அதனை நாம் பிரதி செய்ய முடியுமா? கம்யூனிஸ்ட்டுக்கள் பயங்கரவாதிகள் என்று தான் ஏகாதிபத்திய சார்பு ஊடகங்கள் சொல்லி வருகின்றன. அவற்றை நாம் மறுபிரசுரம் செய்ய இயலுமா?
அங்கு அவரவர் அரசியலும் தெரிவும் வருகின்றன என்பது உண்மையல்லவா?
இன்னொரு முக்கியமான விடயம், ஆட்கடத்தல் முகவர்கள் ஒன்றும் மனிதாபிமான நோக்கில் இவ்வியாபாரத்தில் ஈடுபடுவதில்லை. நான் ஏற்கெனவே கூறியது போல போதைவஸ்து மற்றும் கடத்தல்களுடனும் குற்ற நடவடிக்கைகளுடனும் தொடர்பு கொண்டவர்களாகத் தான் இவர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய வியாபாரத்தில் மனிதாபிமானத்தைத் தேடுவது எப்படி என்பது தான் எனக்குப் புரியவில்லை.
பிரச்சினை செய்தி அல்ல. செய்தியின் விளைவு தான் என்பேன். இவர்கள் புலிகள் என்று நிரூபிக்கப்படுமிடத்து அவர்களுடைய அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படக் கூடும் அல்லவா? அந்த விளைவுக்கு ஒரு இடதுசாரி இணையத்தளமும் துணைபோகலாமா என்பது தான் என்னுடைய கேள்வி.
இந்த மிக எளிமையான கேள்விக்கு என்னுடைய நதிமூலம் ரிசி மூலம் எல்லாம் ஆராய்ந்து திட்டமிட்டு முரண்பாடுகளை ஏற்படுத்துபவராகவும், விமர்சனங்களைக் கூட திசைதிருப்பி முன்வைப்பவராகவும், பொழுதுபோக்கில்லாமல் உங்கள் இணையத்தளத்திற்கு பின்னூட்டமிடுபவராகவும் உள்ளவர்களாக என்னைக் காண முனைவது வருத்தமளிப்பதற்குப் பதிலாக இடதுசாரிகள் குறித்து ஒரு தவறான அபிப்பிராயத்தையே மீளவும் ஏற்படுத்துவதாக இருக்கிறது.
சிவசேகரத்தின் நேர்காணலில் அவருடைய கருத்துக்கள் குறித்தும் நான் கேள்வி எழுப்பி உள்ளேன். அவரும் பதிலளித்து உள்ளார். ஆனால் அவர் இப்படி குற்றச்சாட்டைச் சுமத்தவில்லை. கேள்வி கேட்பது என்பதை அது எவ்வளவு மொக்குத் தனமாக இருந்தாலும் பொறுமையாகப் பதிலளிக்க வேண்டும் என்று தான் உண்மையான இடதுசாரிகள் கற்றுத் தந்துள்ளார்கள்.
இன்னும் உங்களுடைய நதிமூலம் ரிசிமூலம் ஆராய்ச்சி செய்து ஒரு இடதுசாரி தனது நேரத்தை வீணடிக்காவண்ணம் நான் என்னைப் பற்றியே சொல்லிவிடுகிறேன்.
கொழும்பு தான் எனது சொந்த இடம். தற்காலிகமாக லண்டனில் இருக்கிறேன். நான் தந்திருக்கும் பெயர் எனது புனை பெயர். ஆனால் எனது மின்னஞ்சல் முகவரி உண்மையானது. நான் மீளவும் கொழும்புக்குக் போக வேண்டும் என்பதற்காக புனைபெயரைப் பாவித்திருக்கிறேன்.
இவற்றையெல்லாம் நான் ஏன் சொல்கிறேன் என்றால் விளைவுகளுக்குப்பால் அம்பலப்படுத்துவதே ஒரே நோக்கம் என்பதால் தங்களுடைய நுண்அறிவைப்பயன்படுத்தி நான் லண்டனில் இருப்பதைக் கண்டு பிடித்ததுபோல எனது உண்மைப் பெயர் முகவரியையும் கண்டு பிடித்து அம்பலப்படுத்துகிறேன் பேர்வழி என்று அம்பலப்படுத்தி விடுவீர்கள். பிறகு நான் கட்டுநாயக்காவில் கூட இறங்க முடியாது போய்விடும். இங்கும் நிற்க முடியாமல் திரும்பியும் போக முடியாமல் அவஸ்தைக்குள் ஆளாக நேரிடும் என்பதால் தான் இவற்றைச் சொல்லியிருக்கிறேன்.
காப்பது தங்கள் கடன்.