ஆஃப்கானிஸ்தான் தாலிபான் பிடியில் சிக்கப் போகிறதென சில மாதங்களாகவே உலக பத்திரிக்கைகளில் எழுதி வந்தார்கள். அது இங்கு பரப்பப்பட்டும் வந்தது !பிறகேன் இன்று போய் காபூல் விமானநிலையத்தில் கிடைக்கும் ஃப்ளைட் சீட், சக்கரம், இண்டு, இடுக்குகள் தேடி மக்கள் வேற்று நாடுகளுக்கு பறக்கத் துடிக்கிறார்கள் ?உண்மையிலேயே ஆஃப்கன் முழுக்க அவர்களுடைய கட்டுப்பாட்டுக்குள் போக இன்னும் சில வருடங்கள் ஆகலாம், அதற்குள் இயன்றவரை சம்பாதித்துவிட்டு நல்ல நாடாகப் பார்த்துப் போய்விடலாம் அல்லது அப்படி ஒரு நிலை மீண்டும் இங்கு வரவே வாய்ப்பில்லை, வந்தாலும் நம்மை பாதுகாக்க ஏதேனும் ஒரு பெரிய வல்லரசு நமக்காக நிற்கும் என்றும் நம்பியிருக்கலாம் !போக, கடந்த இருபது வருடங்களில் நம் இராணுவம் மிகவும் பலமாகிவிட்டிருக்கிறது, நம்மை எளிதில் வீழ்த்த முடியாது. எது வீழ்ந்தாலும் காபூல் வீழாது என்கிற ஆஃப்கன் அதிபரின் வார்த்தையை அதீதமாக நம்பி விட்டிருப்பார்கள் !நம் வடையரைப் போல அங்கும் ஒரு வடையர் இருந்திருப்பதை நேற்றுதான் உணர்ந்திருப்பார்கள். ஏன்னா அந்தாள் தஜிகிஸ்தானுக்கு நைஸா நேத்துதான் தப்பியோடினார் !அம்போவென தன் மக்களை அரசன் விட்டோடிய பின்னர்தான் வீரியமே பலருக்கும் புரிந்திருக்கிறது,
பாவம் 21ம் நூற்றாண்டில் போய் மதத்தைக் காரணம் காட்டி கொத்துக் கொத்தாய் கொல்வார்கள் என்று ஓர் இந்தியக் குடிமகன் என்றேனும் நினைத்திருப்பானா ? அவன் நடுத்தெருவில் கொல்லப்படும் போது, காவல்துறை கண்களை இறுக மூடிக் கொள்ளும் என்றால் நம்பியிருப்பானா ?ஒரு நிறைமாதக் கர்ப்பிணிப் பெண் தன்னைக் கூட ஓட ஓட விரட்டி வெட்டுவார்கள், இன்னும் பிறக்காத தன் குழந்தையையும் உருவி எடுத்து எரிப்பார்கள் என சில நாட்கள் முன்பு சொல்லியிருந்தால் நம்பியிருப்பாளா ?கோத்ரா ரயிலெர்ப்புக்காக குஜராத் முழுக்க 2002 ல், அதுதானே நடந்தது ?3000+ அப்பாவி சிவிலியன்கள் அல்லவா கொல்லப்பட்டார்கள் ?அப்படி கொல்ல உத்தரவிட்டவன்களே இந்திய ஒன்றியத்தை 12 ஆண்டுகள் கழித்து ஆள்வார்கள் என்றிருந்தால் எந்த ஜோஸியனாவது முதலில் நம்பியிருப்பானா ?சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டு சிறப்பு முகாம்களில் வாழ வேண்டிய நிலை வருமென முஸாபர்நகர் முஸ்லீம்கள் நினைத்துப் பார்த்திருப்பார்களா ? அதுவும் தன்னை முஸ்லீம்களின் பாதுகாவலன் எனச் சொல்லிக்கொண்ட அகிலேஷ் ஆட்சியில் ? அவரையும் மீறி அங்கு மதவெறி வென்றது.
அந்த மதவெறி, அந்த அட்டூழியம் சாகஸமாகப் பார்க்கப்பட்டு, அடுத்து அவர்களையே பெருவாரியாக வெல்லவும், ஆளவும் வைத்தது. அதனால்தானே ஏதோ ஒரு கறியையும் மாட்டுக்கறி எனக் கூறி முதிய இந்தியனைக் கொன்றான்கள் ??அன்னிக்குப் பார்த்து சீக்கிரம் தூங்கிட்டீங்க, விடிஞ்சா பைல இருக்கிற 1000, 500 நோட்டு செல்லாதுன்னு நண்பன் போன் போட்டான்னா, நம்மால நம்ப முடிஞ்சிருக்குமா என்ன ?அட, கொரோனா காலத்துக்கு முன்பே கஷ்மீர் மக்கள் நீண்ட லாக் டவுனுக்குள் போனார்களே ? நமக்கு அந்த உண்மையாவது உறைத்திருக்குமா ? ஆனா ரெண்டு நாள் லாக் டவுன் அப்படியே நாப்பது அம்பது நாளுக்கு நீண்ட போது ரத்தக்கண்ணீர் வந்ததுல்ல ?? இத்தனைக்கும் லாக்டவுன வட்டில்ல கரண்டியால தட்டி, வெளக்கு புடிச்சி குதூகலமால்லாம் ஆரம்பிச்சோமே ?2000 கி மீக்கு மக்கள் கால்நடைக போல, அவங்க அவங்க ஊருக்கு நடந்தே போவாங்கன்னு கேள்வியாவது பட்டிருக்கோமா ?சரி. இதைக் கேளுங்க.
உனக்கு பர்த் சர்டிபிகேட் இல்லைன்னா உன்னை வதை முகாம்க்கு அனுப்பிடுவோம், பெருசு பெருசா அதைக் கட்டிக்கிட்டுருக்கோம்ன்னு சொல்லி ஒரு சட்டத்தைக் கொண்டு வாரான். அதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம்ன்னு பல லட்சம் மக்கள், ஒவ்வொரு நகர பிரதான சாலைகளிலும் வெய்யில், மழை, குளிர் பாராம, குழந்தை குட்டிகளோட 24 மணி நேரமும், தொடர்ந்து பல மாதங்கள், வேலை வெட்டிய எல்லாம் விட்டுட்டு போராடுனாங்களே ?
நாடு விடுதலையான பின், ஆளும் அரசுக்கு எதிராக இப்படில்லாம் சிறுபான்மை மக்கள் போராடிக் கேள்விபட்டிருக்கீங்களா ? இப்படி நடந்தது என்றாலும் நம்ப முடிகிறதா ?அமெரிக்க அதிபர் டெல்லில இருக்கும் போதே, வடகிழக்கு டெல்லில கலவரம் செஞ்சு, ஐம்பது உயிர்கள் வரை படுகொலை செய்து சாக்கடைக்குள் எறிஞ்ச ஆட்சியாளர்களுடைய நாடு சார் இது 99 நாட்கள் அமைதியா போராடிய ஸ்டெர்லைட் அறப்போராளிகளை, 100 வது நாளில் கலவரக்காரர்களா மாறிட்டாங்கன்னு ஒரு சூப்பர் ஸ்டார் மூலமா சொல்ல வச்சு, குறிபார்த்து சுட்டுக் கொன்ன கூட்டம் சார் நம்ம ஆட்சியாளர்கள் ?? அதுல ஒரு பெண் குழந்தை நல்லாப் பேசுச்சுன்னு வாய்லயே ஸ்னைபர்ல சுட்டானுக ஜெய் கிஸான், இது உழவர் நாடு, உழவர்தான் எங்கள் முதுகெலும்பு, உழவுதான் எங்கள் மூச்சு என்றெல்லாம் மேடைகளில் வடை சுட்டுவிட்டு, அவர்களை ஒன்பது மாதங்களாக கதறவிட்டு வேடிக்கை பார்க்கும் தாலிபான்களைக் காட்டிலும் அதிகார வெறிமிக்க நூலிபான்கள் ஆளும் பூமி சார் இது ?
அவர்களை ஒரே ஒரு நாள் கூட இதுவரை அரசு சார்பாக ஒத்த ஆள் போய், உங்களுக்கு என்ன செய்யணும்ன்னு கேக்கலையே ? தாலிபான்களுக்கு கூட இவ்வளவு நெஞ்சழுத்தம் கிடையாது பாஸ் !சொன்னது கொஞ்சம். இன்னும் பாபர் மசூதி இடிப்பும், தீர்ப்பும், நீட் படுகொலைகள் என அடுக்கிக் கொண்டே போனால், நாம் ஓடிபோய் ஆஃப்கனுக்கு ஃப்ளைட் பிடித்தாலும் பிடிப்போம் !தாலிபான்களைக் காட்டிலும் கேவலமான ஆட்சிதான் இந்திய ஒன்றியம் சார்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எப்படா சான்ஸ் கிடைக்கும், இந்த எலக்ஷன், ஜனநாயகம், போராட்டம், மயிரு, மட்டல்லாம் இல்லாம அதிபராகி, இந்து தேசிய ஆட்சியை அமைப்போம்ன்னுதான் காத்திருக்கானுக !எனவே ஆஃப்கன் மக்களுக்காக உச் உச் உச் கொட்டும் முன் கண்ணாடி முன் நின்று ஒரு விநாடி உற்று நோக்கவும். நொந்து நூலாகி கிடக்கும் நம் மீதே நமக்குப் பரிதாபம் பிறக்கும் !ஆஃப்கனோட ஒப்பிட்டா நாமதான் சீனியர் பாஸ். அவனும் நம்மளப் போலத்தான் மீண்டும் மதவெறியன்கள் பிடிக்குள் நாடு போகாதுன்னு நம்பியிருந்திருப்பானுக. இன்னிக்கு நம்மளப் போலவே ஏமாந்துட்டானுக !இந்தியாவுக்கும், ஆஃப்கானிஸ்தானுக்கும் மதவெறியன்களல்லாத நல்லாட்சி அமைய வேண்டுமென ஒருசேர வேண்டுவதே அறிவுடமை !!!