ஜம்முதாவி எக்ஸ்பிரஸ், மெக்கா மசூதி மற்றும் அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு தீவிரவாத தாக்குதல்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு தொடர்பு உள்ளதாக அறிவித்துள்ள மத்திய அரசு, அவற்றில் தொடர்புடைய 10 பேர்களின் பெயர்களை பகிரங்கமாக வெளியிட்டு உள்ளது.
காவி பயங்கரவாதத்தைப் பரப்புவதற்காக பாஜகவும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் பயங்கரவாத பயிற்சி முகாம்களை நடத்துகின்றன என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே குற்றம் சுமத்தியதற்கு இந்துத்துவா அமைப்புக்கள் மறுப்புத் தெரிவிக்கவில்லை.
மோடி போன்ற நேரடியான பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டோர் பல தசாப்தங்களாகக் கைதாகாமல் மக்கள் அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
பயங்கரவாத நடவடிக்கைகளில் நிறுவனமயப்பட்ட நிலையில் ஈடுபட்டதாக 10 பேருடைய பெயர், விவரங்களையும் ஆர்.கே.சிங் பகிரங்கமாக வெளியிட்டுள்ளார்.
மறைந்த சுனில் ஜோஷி, ஆர்.எஸ்.எஸ்ஸின் தேவாஸ் மற்றும் முவா இயக்கத்தில் 1990 முதல் வரை இருந்தவர். இவர் சம்ஜாவ்தா மற்றும் அஜ்மீர் குண்டு வெடிப்பில் தொடர்புடையவர். தலைமறைவாக உள்ள சந்தீப் டாங்கே, ஆர்.எஸ்.எஸ் பிரச்சார இயக்கத்தில் 1990 முதல் 2006 வரை இருந்தவர். இவர் இன்டோரை சேர்ந்தவர். ஜம்முதாவி, மெக்கா மசூதி மற்றும் அஜ்மீர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்.
கைது செய்யப்பட்டுள்ளவர்களில் லோகேஷ் சர்மா, ஆர்.எஸ்.எஸ்ஸின் கர்யவஹாக் அமைப்பையும், சுவாமி அசேமானந்த் ஆர்.எஸ்.எஸ் வனவாசி கல்யான் இயக்கத்தையும், ராஜேந்தர் என்கிற சமுந்தர் ஆர்.எஸ்.எஸ். சின் வர்க் விசாரக் அமைப்பையும் சேர்ந்தவர்கள்.
மேலும் குஜராத்தை சேர்ந்த முகேஷ் வசானி கோத்ரா ஆர்.எஸ்.எஸ். அமைப்பையும், தேவேந்தர் குப்தா ஆர்.எஸ்.எஸ். சின் பிரச்சாரக் அமைப்பையும், சந்திரசேகர் லெவே ஆர்.எஸ்.எஸ் சின் பிரச்சாரக் 2007 இயக்கத்தையும், கமல் செளகான் பிரச்சாரக்கின் கிளை இயக்கத்தையும், தலைமறைவாக உள்ள ராம்ஜி கல்சங்ரா ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்த 10 பேரும் ஜம்முதாவி எக்ஸ்பிரஸ், மெக்கா மசூதி மற்றும் அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு தீவிரவாத தாக்குதல்களில் ்ஈடுபட்ட ஆர்.எஸ்.எஸ். இயக்க மற்றும் கிளை உறுப்பினர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.