உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுச் செயலர் ரஞ்சன் மாத்தாய் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இன்று திங்கட்கிழமை மாலை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இதன்போது வடக்கு கிழக்கில் யுத்தத்தின் பின்னரான அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
வன்னி இனப்படுகொலையின் பின்புலத்தில் இந்திய அரசு செயலாற்றிய காலப்பகுதியில் தொடர்ச்சியான வெளியுறவு மற்றும் பாதுகாப்பு செயலர்களின் இலங்கைப் பயணம் இடம் பெற்றது. மாத்தாயின் முதலாவது இலங்கைக்கான பயணம் இதுவாகும். இந்திய அதிகாரவர்கத்தின் நலனை உறுதிசெய்து மீண்டும் உறுதிசெய்துகொள்ளும் நோக்குடனான மற்றொரு பயணமாகவே இது கருதப்படுகிறது.