இந்திய வெளியுறவுச் செயலரின் இலங்கை விஜயத்தின் போது, பலாலி விமானத் தளத்தை பிராந்திய விமானப் போக்குவரத்து தளமாக மீள ஆரம்பிப்பதுடன் காங்கேசன் துறைமுகத்தை உள்ளூர் வர்த்தக மற்றும் வாணிபத் துறைமுகமான பயன்படுத்துவது தொடர்பிலான பாரிய திட்டங்கள் குறித்தும் விவசாய வர்த்தக நீட்சி குறித்தும் பேசப்பட்டதாகத் தெரியவருகிறது.
இந்திய வர்த்தக நிறுவனங்களின் விஸ்தரிப்பின் காரணமாக வன்னியில் மீள் குடியேற்றம் பல பிரதேசங்களில் தடைப்பட்டுள்ளது என இலங்கையிலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் உட்பட்ட கட்சிகளின் இந்திய விசுவாசம் காரணமாக இலங்கையில் இது குறித்துப் பேசப்படுவதில்லை.