திருகோணமலை சம்பூர் பிரதேசத்தில் நிலக்கரி மின்நிலையத்தை அமைப்பதற்காக இந்தியாவிற்கு காணிகள் வழங்கப்பட்டமையினால் இடம்பெயர்ந்து மட்டக்களப்பு முகாம்களில் தங்கியிருந்த 7 ஆயிரம் மக்கள் மூதூர் பிரதேசத்திலுள்ள முகாம்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
இந்த இடம்பெயர்ந்த மக்கள் ஆறாவது முறையாக வேறு முகாம்களுக்கு இடம்மாற்றப்பட்டுள்ளனர். விவசாயம் மற்றும் மீன்பிடி தொழில்களைச் செய்து வாழ்ந்துவந்த மக்களுக்குச் சொந்தமான 19 ஆயிரம் ஏக்கர் காணிகள் மேற்கூறிய மின் உற்பத்தித் திட்டத்திற்காக கையப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்காரணமாக இந்த மக்கள் தொடர்ந்தும் நான்கு வருடங்களாக முகாம்களில் வசித்துவருகின்றனர். இந்த மக்களை வேறு முகாம்களுக்கு இடம்மாற்றிய தகவலை சில ஊடகங்கள் கிழக்கில் இடம்பெயர்ந்தோர் முகாம்கள் அகற்றப்பட்டு மக்கள் முழுமையாக மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளதாக செய்திகளை வெளியிட்டன.
எனினும், இந்த மக்கள் தொடர்ந்தும் இடம்பெயர் முகாம்களில் தொடர்ந்தும் இடர்களுடனேயே வாழ்த்துவருகின்றனர்.