ஆயிரத்திற்கு மேற்பட்ட இந்திய ராணுவத்தினரும் உலங்கு வானூர்திகள், கப்பல்கள் போன்றனவும் விரைவில் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்படும் என இந்திய இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்ததாக AFP செய்திநிறுவனம் தெரிவித்துள்ளது.
3000 துருப்புக்களையும், மூன்று யுத்தக் கப்பல்களையும், அடுத்த மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள தெற்காசிய நாடுகளின் உச்சி மாநாட்டிற்கு முன்னதாக அனுப்பவுள்ளதாக புதுடெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.
புலிகளின் தாக்குதலுக்கான சாத்தியப் பாட்டைக் கருத்தில் கொண்டே இந்த முன்நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக மேலும் தெரிவித்த புதுடெல்லி பாதுகாப்பு வட்டாரங்கள், இலங்கை சர்வதேச விமானநிலையம் பூட்டப்படும் நிலையேற்படும் பட்சத்தில் உலங்கு வானூர்திகளைக் கொண்ட கப்பல்கள் தலைநகரைச் சுற்றி நங்கூரமிட்டிருக்கும் என மேலும் கருத்துவெளியிட்டன.
சார்க் உச்சிமாநாட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாகக் கலந்தாலோசிக்க இந்திய உயர்மட்ட ராஜதந்திரிகள் குழு கொழும்பு சென்றிருந்ததது அறிந்ததே.
இலண்டனில் இன்று நடைபெற்ற தேசம்நெற் ஏற்பாடு செய்திருந்த 13 வது திருத்தச் சட்டம் தொடர்பான கலந்துரையாடலில் இந்தியாவின் இன்றையநிலை தொடர்பான கருத்துக்கள் பரவலாகப் பேசப்பட்டது.