“”மாவோயிஸ்டு ஒழிப்பு நடவடிக்கை” என்ற பெயரில், இந்திய மக்களின் உடைமைகள் மீதும் உரிமைகள் மீதும் ஒரு உள்நாட்டுப் போரை மத்திய அரசு தொடுத்திருக்கிறது. ஆபரேசன் கிரீன் ஹன்ட் என்று அழைக்கப்படும் நடவடிக்கையில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட அரை இராணுவத் துருப்புகளும், விமானப்படைகளும் களத்தில் இறக்கப்பட்டிருக்கின்றன. ஆந்திரம், ஒரிசா, ஜார்கண்டு, சட்டிஸ்கார், மே.வங்கம் ஆகிய மாநிலங்களின் எல்லைப்புறங்களைத் தழுவியிருக்கும் தண்டகாரண்யா காட்டுப் பகுதியின் பழங்குடி மக்களை வெளியேற்றி விட்டு, கனிமவளங்கள் நிறைந்த அந்தப் பகுதியை டாடா, அம்பானி, மிட்டல் போன்ற பெரும் முதலாளிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் சொந்தமாக்கும் நோக்கத்தில் தான் இந்தப் போர் நடத்தப்படுகிறது.
இந்தப் போரை அறிவித்திருக்கும் தற்போதைய உள்துறை அமைச்சர் திரு. ப.சிதம்பரம், ஏற்கெனவே ஸ்டெரிலைட் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களின் இயக்குநராகவும், என்ரான், நோவோர்ட்டிஸ், ஜெனரல் எலக்டிரிக் போன்ற கம்பெனிகளுக்கும் மற்றும் பல சுரங்கத் தொழில் நிறுவனங்களுக்கும் வழக்குரைஞராகவும் பணிபுரிந்தவர். இன்று தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தியாவின் துணை இராணுவப்படைகளை, சுரங்கத்தொழில் கார்ப்பரேட் நிறுவனங்களின் கூலிப்படையாக மக்கள் மீது ஏவிவிட்டிருக்கிறார் என்பதே உண்மை.
இந்திய மக்கள் மீது தொடுக்கப்பட்டிருக்கும் இந்தப் போரில் பாரதிய ஜனதா கட்சி முதல் மார்க்சிஸ்டு கட்சி வரையிலான தேர்தல் அரசியல் கட்சிகள் அனைவரும் மத்திய அரசுரடன் கைகோர்த்து நிற்கின்றனர். தனியார்மய தாராளமயக் கொள்கைகளின் கீழ் நாட்டின் பொதுச்சொத்துகளை தனியார்மயமாக்குவதிலோ, வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் பழங்குடி மக்களையும் விவசாயிகளையும் வெளியேற்றுவதிலோ, எதிர்த்துப் போராடுபவர்களை ஒடுக்குவதிலோ இந்தக் கட்சிகளிடையே எவ்வித கொள்கை வேறுபாடும் இல்லை. நாட்டின் இறையாண்மையையே அமெரிக்கா போன்ற அந்நிய வல்லரசுகளுக்கு விலை பேசுகின்ற இத்தகைய மறுகாலனியாக்க கொள்கைகளை எதிர்த்து நக்சல்பாரி இயக்கத்தினர் மட்டுமே நாடு முழுவதும் போராடி வருகிறார்கள். எனவேதான் நக்சல்பாரி இயக்கத்தை ஒடுக்குவதென்பது மத்திய அரசு அறிவித்துள்ள இந்தப் போரின் முக்கிய நோக்கமாக இருக்கின்றது.
இந்தப் போருக்கு எதிராக தமிழகம் தழுவிய அளவில் நாங்கள் மேற்கொண்டு வரும் இயக்கத்துக்கு மக்கள் பேராதரவு கொடுத்து வருகிறார்கள். தொழிற்சங்க உரிமை பறிக்கப்பட்டு அன்றாடக் கூலிகளாக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக வெளியேற்றப்பட்ட விவசாயிகள், மீன்பிடி உரிமை பறிக்கப்படும் மீனவர்கள், சுயநிதிக் கல்விக்கொள்ளையால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், வெள்ளைக்காலர் கொத்தடிமைகளாக உழலும் ஐ.டி துறை ஊழியர்கள், பன்னாட்டு நிறுவனங்களால் பாதிக்கப்பட்ட சிறுவணிகர்கள், வழக்குரைஞர்கள், பேராசிரியர்கள் என்று சமூகத்தின் எல்லாத் தரப்பு மக்களும் இந்தப் போர் தங்களுக்கு எதிராக நடத்தப்படும் போர்தான் என்பதை உணர்ந்து வருகிறார்கள்.
இந்தப் போர், பன்னாட்டு நிறுவனங்களுக்கும், இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் ஒரு இலாபவெறி சூதாட்டம். மக்களைப் பொருத்தவரை இது ஜீவ மரணப் போராட்டம். எத்தகைய அடக்குமுறைகள் வரினும் இந்தப் போராட்டம் தொடரும்.
மாவோயிஸ்டு ஒழிப்புப் போர் என்ற பெயரில் மக்கள் மீது தொடுத்திருக்கும் போரை நிறுத்து!
பன்னாட்டு முதலாளிகள், இந்தியத் தரகு முதலாளிகளுடன் போடப்பட்டிருக்கும் மக்கள் விரோத புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ரத்து செய்! சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைப்பதை நிறுத்து!
பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்ட அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்!
தனியார்மய, தாராளமயக் கொள்கைகள் அனைத்தையும் கைவிடு!
என்று அரசைக் கோருகிறோம். இந்தக் கோரிக்கைகளுக்காக நக்சல்பாரி இயக்கத்தினர் நடத்தும் போராட்டங்களில் அணிதிரளுமாறு மக்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
இவண்,
மருதையன்,
பொதுச்செயலாளர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்.
மக்கள் கலை இலக்கியக் கழகம்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
110/63,என்.எஸ்.கே சாலை, கோடம்பாக்கம், சென்னை 600 024. கைபேசி:94448 34519
தாம் வாழும் மண்ணிலிருந்து வெளியேற்றப்படும் உரிமைகள் மறுக்கப்பட்டு, ஒடுக்கப்படும் மக்களிற்காக குரல் கொடுப்போம்!
POSCO பிரதிரோத் சங்கரம் சமிதியினரால் (PPSS) Asian Human Rights Commission (AHRC ) அமைப்பினருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கோரிக்கையில், தென்கொரிய மிகப்பெரிய இரும்பு உருக்கு ஆலையின் (POSCO) இரும்பு உருக்கு ஆலையோன்று ஒரிசாவின் வட-கிழக்கு பகுதியான ஜகத்சின்க்புற என்ற இடத்தில் ஆரம்பிக்கப்படுவதையோட்டி அங்கு வாழும் 30 கிராமங்களை மக்கள் வெளியேற்றப்படும் அபாய சூழ்நிலையுள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கடந்த இரு வருடங்களாக தொடர்ந்து பல போராட்டங்களை நடத்திவரும் நிலையில், தங்களிற்கு ஆதரவாக ஒடுக்கப்படும் மக்களிற்காக குரல் கொடுக்கும் அனைவரையும் ஒன்று திரண்டு ஒரிசா முதல்வர், வனம் சுற்று சூழ்நிலைக்கான பிரதம செயலாளர் ஆகியோருக்கு தங்கள் கண்டனங்களையும், அம்மக்களிர்க்கான ஆதரவையும் தருமாறு வேண்டிக்கொள்கிறார்கள்.
Statement from POSCO Pratirodh Sangram Samiti (PPSS) forwarded by the Asian Human Rights Commission
INDIA/SOUTH KOREA: Korean steel giant’s project will make thousands homeless in India
Dear Friends,
Anti POSCO struggle in the Indian state of Orissa urgently require your help!
Pohang Iron and Steel Company (POSCO), the South Korea based steel giant is moving forward with its plans to build a steel mill in Jagatsingpura in the north-eastern part of Orissa, India. The mill, also involves mining at Keonjhar and a new port just north of Paradip. In all, over 30 villages are targets for forced displacement. The villagers are continuously protesting in one form or the other for the last two years under the leadership of the POSCO Pratirodh Sangram Samiti (PPSS).
Please call the Chief Minister of Orissa, Mr. Naveen Panaik and the state’s Chief Secretary of Environment and Forests Mr. U. N. Behara, today. You can also send your request through fax in the numbers provided below.
வயிற்று வலி தனக்கு தனக்கு வந்தால்தான் தெரியும்; இதே நிலை இன்று எமது கிழக்கிலங்கை சம்பூர் மக்களிற்கு ஏற்பட்டுள்ளது. போரின் போது அங்கிருந்து வெளியேறினவர்கள் …..வெளியேற்றப்பட்டவர்கள் இன்னும் மீள் குடியேற்றப்படாமலேஎயுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்ல இனிவரும் காலங்களில் அபிவிருத்தி, சுற்றுலா மையங்கள் என்ற பெயரில் எம்மண்ணிலும் இதுதான் நடக்கப்போகிறது. அதுமட்டுமல்ல சில இனிய தளங்கள் “ஆயிரக்கணக்கான தென்பகுதி சுற்றுலாப் பயணிகள் வடக்கிற்கு சென்றார்கள்” என்று பெருமையாக ஏதோ வடக்கும் தெற்கும் இணைந்து எமது அடிப்படை வாழ்வாதார பிரச்சனைகலேல்லாம் தீர்க்கப்படாதாக செய்தி போடுகிறார்கள். ஆனால் இன்று நலிந்து போயிருக்கும் எம்தாயக மண்ணில் இது ஓர் காலச்சார சீரழிவையே கொண்டுவரவுள்ளது.
சரி விடயத்திக்கு வருவோம், இவ் ஒரிசா மக்களுக்காக உங்கள் குரல்களை, ஆதரவை கொடுங்கள்!
கீழ் வரும் தொடர்பிலக்கங்கள் மூலம் தொலைபேசியிலோ, தொலைனகளிலோ, அஞ்சல் முகவரிக்கோ தங்கள் ஆதங்கத்தை, அம்மக்களிர்க்கான ஆதரவை, இவ் இரும்பு ஆலையினால் சுற்று சூழலிற்கு ஏற்ப்படும் பாதிப்பை தெளிவுபடுத்துங்கள், விளக்குங்கள்.
Please call as soon as possible.
ஈழத்து, இந்திய, அனைத்து தமிழ் பேசும் மக்களே!.. ..
குரல் கொடுப்போம்! ஆதரவுக் கரம் கொடுப்போம்!
1. Mr. Naveen Patnaik
Chief Minister and Minister for Forests and Environment
Government of Orissa
Bhubaneswar, Orissa
INDIA
Tel: + 91 674 2531100 + 91 674 2531100 ; 2535100; 2531500
Fax: + 91 674 2392115
2. Mr. U. N. Behara
Principal Secretary
Department of Environment and Forests
Government of Orissa
Bhubaneswar, Orissa
INDIA
Tel: +91 674 2595503 +91 674 2595503 ; 2536822
Fax: +91 674 2395820
மேடைப்பேய்ச்சிலோ, வாய்ப்பெச்சிலோ, எழுத்திலோ ஒன்றுமில்லை! செயலில் இருக்க வேண்டும்!
தோழமையுடன்,
அலெக்ஸ் இரவி.
மேலும் விரிவாக அறிய:
http://www.ahrchk.net/statements/mainfile.php/2010statements/2434
HIGHLIGHTS OF THE POSCO INDIA PROJECT
http://orissagov.nic.in/posco/highlights.htm
Orissa government today decided to seek public opinion on Posco-India’s proposed mega steel plant after failing to implement South Korean steel major’s Rs 51,000 crore project near Paradip due to local opposition…….so “INIORU” readers give your voice!
http://timesofindia.indiatimes.com/biz/india-business/Orissa-to-seek-public-opinion-for-Posco-project/articleshow/5453233.cms
POSCO to construct mega steel plant in Orissa
http://www.dancewithshadows.com/business/posco-orissa-steel-plant.asp
Posco official admitted that some villagers at the proposed plant site are still opposed to the project, and efforts are on to win them over.
http://www.indianexpress.com/news/posco-moving-out-of-orissa-mines-minister/503485/
Posco-India Pvt Ltd was granted clearance to acquire forest land based on the Scheduled Tribes and Other Traditional Forest Dwellers Forest
http://www.livemint.com/2010/01/12003817/Posco8217s-plans-for-Orissa.html
The Pohang Iron and Steel Company, or POSCO, based in Pohang, South Korea, is the world’s second largest steel maker by market value[1] and Asia’s most profitable steelmaker.
http://en.wikipedia.org/wiki/POSCO
நன்றி அலெக்ஸ்.
இது தமிழக அரசியலில் ஒரு நல்ல மாற்றத்தையும் நேர்மையான மர்க்சியவாதிகளிடையே ஒற்றுமையையும் கொண்டுவர வேண்டும்.
போராட்ட அமைப்புக்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள் உரியன.
ஐயா, அப்பாவிப் பழங்குடி மக்களைக் காப்பற்றுங்கள். அப்பாவி ஈழத்தமிழரை செய்மதிப் படங்களின் சாட்சியங்களுடனேயே கொன்றவர்கள். இருண்ட காட்டில் சாட்சியமில்லாமலேயே கொன்று விடுவார்கள். கவனம், படு பாதகர்கள்.
இலங்கைத் தமிழர் போராட்டத் தலைமையைப் போலன்றி இந்தியப் பழங்குடிகளின் தலைமை அன்னிய வல்லரசுகளை நம்பியிருக்கவில்லை.
அவர்களுக்கு ஆதரவு தருவோர் பாராளுமன்ற அரசியல் சில்லரை வியபாரிகளோ பெரு வணிகர்களோஅல்ல.
எனவே, அவர்கள் போரடி வெல்வார்கள்.
இந்தியப் பொதுமக்களின் ஆதரவத் திரட்ட வேண்டியது நல்ல மனங்களின் பணி.
அன்னிய வல்லரசுகளை நம்பி இருப்போரே நீங்கள் அழிக்கப்படுவீர்.
பாராளுமன்ற அரசியல் சில்லரை வியபாரிகளின் ஆதரவு பெறுவோரே படுகொலைக்கு உள்ளாக்கப்படுவீர்.
பெரு வணிகர்களின் உறவிருப்போரே உருக்குலைக்கப்படுவீர்.
அழித்தல் கடவுள்மார் அரட்டை அடிக்கினம்.
அவுஷ்திரேலிய,வட அமெரிக்க,ஈழ,பபிலோனிய பழங்குடி மக்களைப் போல் நீங்களும் கதைகளில்,கவிதைகளில் வாழ்வீர்கள்.
இலக்கியத்திற்கான நோபல் விருது தமிழுக்கும் கிடைக்காதா என் ஏங்கும் என்னைப் போன்றவர்கள், உங்களப் போன்ற நெருப்புக்கள தேடிக் கொண்டிருக்கிறோம்.எப்போது தீயாக மாறப் போகொறீர்கள் அதிர்வு?மிக நீண்ட நாட் களூக்குப் பிறகு அதிர்கிறீர்கள்,நலமா?
கடந்த 15.09.2010 அன்று எம்மால் செய்யப்பட்ட சத்தியாக்கிரகம் நிறைவேறிட ஒத்துழைத்த தங்களின் ஆட்சியின் கீழ் செயற்படும் .தமிழக அரசின் நிர்வாகமாகிய,குளித்தலை வட்டாட்சியர் அவர்களுக்கும்,அவரது நிர்வாகத்திற்கு உறுதுணையாக இருக்கும் குளித்தலை காவல்துறையினர்க்கும்,எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.இப்பவும் குளித்தலை வட்டாட்சியர் அவர்களிடம் முறையே 20 ,27 -09 -2010 ஆகிய நாட்களில் அனைத்து வணிக நிறுவனங்களும் விலைப் பட்டியல் வைத்தும்,பண வரவு பற்று சீட்டு (bill ) தருவதைக் கட்டயமாக்கிடவும்,தினசரி கந்து வசூல் என்னும் சட்டவிரோதமான முறையில் ஏழை இந்தியனின் உழைப்பை சுரண்டும் சமூகவிரோத செயலை தடுத்து, ஏழை எளிய இந்தியனின் உழைப்பைக் காத்து அவனது (சுய சார்புடையவனாக சுயமரியாதை உள்ளவனாக) ஏழ்மை என்ற செயற்கை நிலை மாற்றி வளமை என்ற இயற்கை நிலை ஏற்பட நடவடிக்கை வேண்டியுள்ளேன். மனுவின் நகல் தாங்கள்,காவல் துறை இயக்குநர் சென்னை.,மற்றும் கரூர் மாவட்ட ஆட்சியர் .ஆகியோருக்கு இன்று 4 .10 .2010 .இன்று சான்று அஞ்சலில் மனு செய்துள்ளேன். அதன் மீது தகுந்த உத்தரவு குளித்தலை வட்டாட்சியருக்கு செய்து ஏழை எளிய இந்தியர்களை காக்க
வேண்டுமென மிகவும் பணிவுடன் இறைஞ்சுகிறேன் .உண்மையுள்ள s . k.மனோகரன் ,அகிலஇந்திய திரிணாமூல் காங்கிரஸ் குளித்தலை நகர செயலாளர்,குளித்தலை,கரூர் மாவட்டம்.தமிழ்நாடு.
Mon, 4 October, 2010 6:33:30 PMஎம்மால் செய்யப்பட்ட சத்தியாக்கிரகம் நிறைவேறிடFrom: Manoharann Sk View Contact To: cmcell@tn.gov.in Cc: sk.manoharann@yahoo.com
——————————————————————————–
கடந்த 15.09.2010 அன்று எம்மால் செய்யப்பட்ட சத்தியாக்கிரகம் நிறைவேறிட ஒத்துழைத்த தங்களின் ஆட்சியின் கீழ் செயற்படும் .தமிழக அரசின் நிர்வாகமாகிய,குளித்தலை வட்டாட்சியர் அவர்களுக்கும்,அவரது நிர்வாகத்திற்கு உறுதுணையாக இருக்கும் குளித்தலை காவல்துறையினர்க்கும்,எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.இப்பவும் குளித்தலை வட்டாட்சியர் அவர்களிடம் முறையே 20 ,27 -09 -2010 ஆகிய நாட்களில் அனைத்து வணிக நிறுவனங்களும் விலைப் பட்டியல் வைத்தும்,பண வரவு பற்று சீட்டு (bill ) தருவதைக் கட்டயமாக்கிடவும்,தினசரி கந்து வசூல் என்னும் சட்டவிரோதமான முறையில் ஏழை இந்தியனின் உழைப்பை சுரண்டும் சமூகவிரோத செயலை தடுத்து, ஏழை எளிய இந்தியனின் உழைப்பைக் காத்து அவனது (சுய சார்புடையவனாக சுயமரியாதை உள்ளவனாக) ஏழ்மை என்ற செயற்கை நிலை மாற்றி வளமை என்ற இயற்கை நிலை ஏற்பட நடவடிக்கை வேண்டியுள்ளேன். மனுவின் நகல் தாங்கள்,காவல் துறை இயக்குநர் சென்னை.,மற்றும் கரூர் மாவட்ட ஆட்சியர் .ஆகியோருக்கு இன்று 4 .10 .2010 .இன்று சான்று அஞ்சலில் மனு செய்துள்ளேன். அதன் மீது தகுந்த உத்தரவு குளித்தலை வட்டாட்சியருக்கு செய்து ஏழை எளிய இந்தியர்களை காக்க
வேண்டுமென மிகவும் பணிவுடன் இறைஞ்சுகிறேன் .உண்மையுள்ள s . k.மனோகரன் ,அகிலஇந்திய திரிணாமூல் காங்கிரஸ் குளித்தலை நகர செயலாளர்,குளித்தலை,கரூர் மாவட்டம்.தமிழ்நாடு.
அவர்கள் போராட்டம் வெல்ல நாமும் உதவ வேண்டும் .
இன்றைய சூழலுக்கும் பொருத்தமாக பாட்டெழுதிய மக்கள் கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் (13 . 04 .1930 – 08 .10 .1959 ) நினைவு நாள் (08 அக்டோபர் ).
மிக இளம் வயதில் மறைந்த மக்கள் கவிஞனை இந்த நேரத்தில் நினைவு கொள்வதில் பெருமை கொள்வோம்.
சூழ்ச்சியிலே சுவரமைத்து
சுயநலத்தால் கோட்டைகட்டிச்
சுடர்விட்ட நீதிதனைத்
தூக்கி எறிந்துவிட்டுச்
சாட்சிகள் வேண்டாம்
சகலமும் நானென்று
சதிராடும் வீணர்களின்
அதிகார உலகமடா
புதிரான உலகமடா – உண்மைக்கு
எதிரான உலகமடா – இதில்
பொறுமையைக் கிண்டிவிடும்
போக்கிரிகள் அதிகமடா
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்
குருட்டு உலகமடா – இது
கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும்
திருட்டு உலகமடா – தம்பி
தெரிந்து நடந்துகொள்ளடா – இதயம்
திருந்த மருந்து சொல்லடா (குறுக்கு)
இருக்கும் அறிவை மடமை மூடிய
இருட்டு உலகமடா – வாழ்வின்
எந்த நேரமும் சண்டை ஓயாத
முரட்டு உலகமடா – தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா – இதயம்
திருந்த மருந்து சொல்லடா………….
ஒரு குறையும் செய்யாமே
ஒலகத்திலே யாருமில்லே – அப்படி
உத்தமனாய் வாழ்ந்தவனை – இந்த ஒலகம்
ஒதைக்காம விட்டதில்லை………….
தர்மமென்பார் நீதி என்பார் தரமென்பார்
சரித்திரத்துச் சான்று சொல்வார்
தாயன்புப் பெட்டகத்தைச்
சந்தியிலே எறிந்துவிட்டுச்
தன்மான வீரரென்பார்
மர்மமாய்ச் சதிபுரிவார்
வாய்பேசா அபலைகளின்
வாழ்வுக்கு நஞ்சுவைப்பார்
கர்மவினை யென்பார்
பிரமனெழுத் தென்பார்
கடவுள்மேல் குற்றமென்பார் – இந்தத்
திண்ணைப் பேச்சு வீரரிடம் – ஒரு
கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி – நாம்
ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி
எந்நாளும் உலகில் ஏமாற்றும் விழிகள்
இல்லாத நன்னாளை உண்டாக்கணும்…..
.
ஏட்டில் படித்ததோடு
இருந்து விடாதே!-நீ
ஏன்படித்தோம் என்பதையும்
மறந்துவிடாதே (ஏட்டில்)
நாட்டின் நெறிதவறி
நடந்துவிடாதே-நம் (நாட்டின்)
நல்லவர்கள் தூற்றும்படி
வளர்ந்துவிடாதே!
பள்ளிக்கூடம் இல்லாத ஊருக்குப்
பயணம் போறேண்டா-நான்
பள்ளிக்கூடம் இல்லாத ஊருக்குப்
பயணம் போறேண்டா ( மனு )
ஒரு சிறுவன்: அங்கே நானும் வாரேண்டா…
வெளியே படிக்க வேண்டியது நெறய இருக்கு
படிச்சிட்டு வாரேண்டா-சிலர்
படிக்க மறந்தது நெறய இருக்கு
படிச்சிட்டு வாரேண்டா…. ( மனு )
எழுதிப் படிச்சு அறியாதவன்தான்
உழுது ஒளச்சு சோறும் போடுறான்..
எல்லாம் படிச்சவன் ஏதேதோ
பேசி நல்லா நாட்டைக் கூறு
போடுகிறான்-இவன்
சோறு போடுகிறான்-அவன்
கூறு போடுறான்
இறுதிக் கவிதை:
—————————–
செக்கச் சிவந்த செழுங்கதி ரோனும்
கிழக்கினில் வந்துவிட்டான் – புற
மக்கள் மதிக்கண் விழித்துக் கிளம்பிட
வானில் உதித்து விட்டான்.
கொக்கரக்கோ வெனக் கோழியும் கூவுது
கொக்கோடு பற்பல புட்களும் மேவுது
சக்கரம் போலவே ஜகம் சுழன்றாடுது
தொக்கி நின்ற இருள் சொல்லாமல் μடுது
பத்துத் திசையிலும் ஜன சக்தி முழங்கிடுதே (செக்க)
தெற்கில் ஒரு குரல் தென்பாங்கு பாடுது
தீய செயல்களைச் செங்கைகள் சாடுது
பக்குவம் கொண்ட படைபல கூடுது
சிக்கல் அறுத்து பொது நடை போடுது
சொத்தை மனம் திருந்தப் புதுச் சத்தம் பிறந்திடுதே (செக்க)
கத்தும் பறவை கனிகரத்தில் வந்து
ஒற்றுமை காட்டிடுதே தலைப்
பித்தம் பிடித்தொரு கூட்டம் தனித்தனி
பேதம் வளர்த்திடுதே
ரத்த வேர்வைகள் சொட்ட உழைத்தவன்
நெற்றி சுருங்கிடுதே – ஏழை
உத்தமர் வாழ்வை உறிஞ்சும் உலுத்தரின்
கொட்டம் அடங்கிடுதே – மக்கள்
வெற்றி நெருங்கிடுதே (செக்க)
[15-08-1959 ஜனசக்தியில் புது ஞாயிறு என்ற தலைப்பில் வெளிவந்த இந்த
கவிதைதான் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார் எழுதிய இறுதிக் கவிதை]
இந்திய மக்களின் போராட்டத்திற்கு எனது வாழ்த்துக்கள்.