10.11.2008.
வாஷிங்டன்: சர்வதேச பொருளாதார நெருக்கடியின் விளைவாக இந்தியப் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.3 சதவிகிதமாகக் குறைந்துவிடும் என சர்வதேச நிதி அமைப்பு (ஐஎம்எப்) தெரிவித்துள்ளது.
அடுத்து வரும் நிதி ஆண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி எப்படி இருக்கும் என்ற ஐஎம்எப் கணிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி வரும் நிதியாண்டில் எதிர்பார்க்கப்பட்டதை விட மேலும் 0.6 சதவிகிதம் குறைவாகவே இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதம் இருக்கும் எனப்படுகிறது.
சர்வதேச வர்த்தகத்தின் அளவும் அடுத்த ஆண்டு 2.4 சதவிகிதமாகக் குறைந்துவிடும் என இந்த அமைப்பு தெரிவித்துள்ளது. ஏற்கெனவே இது 7.2 சதவிகிதத்திலிருந்து 4.6 சதவிகிதமாகக் குறைந்து விட்டது சர்வதேச வர்த்தக அளவு.
கடந்த ஆண்டு இதே மாதத்தில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.9 சதவிகிதமாக இருந்தது. இப்போது 6.6 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. இது இன்னும் குறையும் என ஐஎம்எப் எச்சரித்துள்ளது.