கொரோனா பரவல் துவங்கி தீவிரம் பெற்ற பின்னர் உலகின் பல நாடுகள் கொரோனா தடுப்பூசியைத் தயாரித்தன. இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் என்ற தடுப்பூசியை தயாரித்தது. இந்தியாவில் உருவாக்கப்பட்ட இந்த தடுப்பூசியை இந்தியர்கள் அதிகம் போட்டுக் கொள்ளவில்லை. காரணம் இந்த ஊசிக்கு சர்வதேச அங்கீகாரம் இல்லாமல் இருந்தது. இந்தியா வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோவிஷீல்ட், பைசர் உட்பட பல வெளிநாட்டு ஊசிகளையே இந்திய மக்களுக்கு பயன்படுத்தி வந்தது.
இந்தியாவில் ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் ஊருக்கு சர்வதேச அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டும் என இந்தியா கோரிக்கை விடுத்து வந்தது. சர்வதேச அளவில் இந்த தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டு வர உலக சுகாதார அமைப்பு, தனது அவசர பயன்பாட்டு பட்டியலில் சேர்த்து அங்கீகாரம் அளிக்க வேண்டும்.
இந்த அங்கீகாரத்திற்காக பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பித்து பல மாதங்களாக காத்திருந்தது. அங்கீகாரம் கிடைக்காத காரணத்தால் வெளிநாடு செல்கிறவர்கள் உட்பட பெரும்பான்மையானோர் கோவாக்சின் ஊசியை போட்டுக் கொள்ள தயங்கிய நிலஒயில் கோவாக்சின் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.