இந்தியர்கள் அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்துவது தொடர்பான திட்டத்தை மோடி அரசு அறிமுகம் செய்து ஆறு மாதங்களைக் கடந்து விட்ட போதும். மக்கள் தொகையில் 5% பேருக்குத்தான் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் இந்த தடுப்பூசி திட்டத்தை அரசு துவங்கும் போது அதனிடம் தெளிவான திட்டங்கள் எதுவும் இல்லை. தடுப்பூசி கொள்கையே இல்லை. தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபம் பார்த்துக் கொண்டிருந்தது அரசு. நீதிமன்றம் இதை கடுமையாக விமர்சித்த பின்னரே தடுப்பூசிகள் இலவசம் என அறிவித்தார்கள்.ஜனவரி மாதம் 16ஆம் தேதி தடுப்பூசி வழங்கல் தொடங்கியதில் இருந்து இதுவரை சுமார் 39 கோடி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஆஸ்ட்ரா செனீகா மருந்து கோவிஷீல்ட் என்ற பெயரிலும்,, பாரத் பயோடெக் தயாரித்த மருந்து கோவாக்சின் என்ற பெயரிலும், ரஷ்ய தயாரிப்பு மருந்து ஸ்புட்னிக் வி என்ற பெயரிலும், மேலும் அமெரிக்க மருந்தான மாடர்னா இப்போது ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் 65 கோடி தடுப்பூசிகளை வாங்க அதற்கான உத்தரவை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் சீரம் நிறுவனத்திடம் 37 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகளும், பாரத் பயோடெக்கிடம் 28.8 கோடி கோவாக்சின் தடுப்பூசிகளை பெற மத்திய அரசு முடிவு செய்து ஒப்பந்தத்தை இறுதி செய்தது. இதில் கோவிஷீல்டு தடுப்பூசி ரூ.205க்கும், கோவாக்சின் தடுப்புசி ரூ.215க்கும் கொள்முதல் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.