இந்திய அரசின் இராணுவப் பிரிவில் பணியாற்றி ஓய்வு பெறும் முன்னாள் ஊழியர்களை உளவாளிகளாக இந்திய அரசு பயன்படுத்தி வருகிறது. மேலும் காஷ்மீர், சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களில் சட்ட வீரோத ஆயுதப் படைகளுக்கு தலைமை தாங்குவதும் பயிர்ச்சி அளிப்பதும் இவர்கள்தான். இந்நிலையில் இந்திய எல்லை பாதுகாப்பு படையில் கான்ஸ்டபிளாக பணியாற்றி ஓய்வு பெற்ற பதேசிங் பாந்தர் என்பவர், கனடா செல்ல விசா கோரினார். டெல்லியில் உள்ள கனடா தூதரகம் அவரை வரவழைத்து விசாரித்தது.அப்போது அங்கிருந்த அதிகாரிகள், காஷ்மீரில் வன்முறையில் ஈடுபடும் எல்லை படையில் பணியாற்றியவர் நீங்கள் என்று கூறி, அவருக்கு விசா வழங்க மறுத்து விட்டனர். இதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. இந்திய வெளியுறவுத்துறை வீசா மறுத்ததற்கான காரணத்தைக் கனடா தூதரகத்திடம் கேட்க அவர்க்ளோ நாங்கள் யாரையும் இழிவு படுத்த வில்லை என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் இதற்கு முன்னரும் சந்தேகத்திற்கிடமாக வீசா கோருகிற பலருக்கும் கனடா வீசா மறுத்துள்ளதாக கூற்ப்படுகிறது. இந்நிலையில் இந்திய உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் இப்பிரச்சனையை கனடா அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று அவர்களை வருத்தம் கோர வைக்க வேண்டும் அப்படி செய்யாவிட்டால் இந்தியாவில் இருக்கும் கனடா பயணிகளை திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் கடிதம் எழுதியுள்ளார் டில்லியில் உள்ள கனடா தூதரை அழைத்து இந்தியா தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் வீசா மறுக்கப்பட்டவர்கள் எவரும் அரசு முறைப்பயணமாக கனடாவுக்கு வீசா விண்ணப்பிக்கவில்லை தனிப்பட்ட காரணங்களுக்காகவே வீசா விண்ணப்பித்து மறுக்கப்பட்டவர்கள் இவர்கள். தவிறவும் வன்னிப் போருக்குப் பின்னர் புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளுக்கு இந்திய இலங்கை உளவாளிகள் ஏராளமாக அனுப்பப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
வன்னிப் போருக்குப் பின்னர் புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளுக்கு இந்திய இலங்கை உளவாளிகள் ஏராளமாக அனுப்பப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
அனுப்பி என்ன புடுங்க போறங சும்ம வாய்ல வந்தத எழுத வேன்டியது