Friday, March 6, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

இந்திய-இலங்கை அரசுகள் தொடுக்கும் உளவியல் யுத்தம் !!

இனியொரு... by இனியொரு...
10/26/2010
in பிரதான பதிவுகள் | Principle posts, புதிய ஜனநாயகம், அரசியல்
0 0
4
Home பிரதான பதிவுகள் | Principle posts

தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டுக்கான முன்னாள் பொறுப்பாளரும் தற்போது சிங்கள இனவெறி அரசின் தடுப்புக் காவலில் உள்ளவருமான கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன், கொழும்பு நகரிலிருந்து வெளிவரும் “டெய்லி மிரர்” நாளேட்டுக்கு அண்மையில் அளித்துள்ள நேர்காணலில், இறுதிக் கட்ட ஈழப் போரின் போது இந்தியா போர் நிறுத்தத்துக்கு முயன்றதாகவும், அதனை வைகோவும் நெடுமாறனும் சீர்குலைத்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

போர் நிறுத்தத்தைக் கொண்டுவருவதற்குப் புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் நடேசன் மூலமாக தான் முயற்சி செய்ததாகவும், இதற்கு இந்திய நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழியும் கிறித்துவப் பாதிரியான ஜெகத் கஸ்பாரும் உதவியதாகவும், அவர்கள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திடம் இது குறித்துப் பேசி ஒரு திட்டம் தயாரித்ததாகவும், இதை ஏற்கக் கூடாது என்று புலிகளிடம் வலியுறுத்தி வைகோவும் நெடுமாறனும் இதற்குத் தடையாக இருந்ததால்தான் போர் நிறுத்தம் வராமல் போனது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டால் அது தி.மு.க. மற்றும் காங்கிரசு கட்சிகளுக்கு நல்ல பெயராகி தேர்தலில் சாதகமான நிலையைத் தோற்றுவித்துவிடும் என்று கருதி புலிகளின் முடிவை வைகோ மாற்றியதாகவும், தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமையும் போது விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிலையை எடுக்க முடியும் என்று வைகோ புலிகளிடம் கூறியதாகவும் கே.பி. குறிப்பிடுகிறார்.

பாதிரியார் ஜெகத் கஸ்பாரும் 2009 ஜனவரி இறுதியில் இந்திய அரசு போர் நிறுத்த முயற்சியில் ஈடுபட்டது உண்மைதான் என்கிறார். இந்திய அரசின் சார்பில், புலிகளின் தலைவரான பிரபாகரனின் நம்பிக்கைக்குரிய – பிரபாகரனின் சார்பில் பேசும் தகுதியுடைய நடேசனோடு தொடர்பு கோரப்பட்டதாகவும், ஆயுதங்களை ஒப்படைப்பதற்கான விருப்பம் (Intention to Lay Down Arms) மட்டுமே அப்போது விதிக்கப்பட்ட நிபந்தனை என்றும் அவர் கூறுகிறார். இதை புலித் தலைமையிடம் தெரிவித்த கஸ்பாரிடமே, நீங்களே ஒரு மாதிரி வரைவு (draft) தயாரித்து டில்லிக்காரர்களுக்குச் சம்மதமா என்று கேட்டுச் சொல்லுமாறு புலித் தலைமை கூறியதாம். அதன்படி ப.சிதம்பரத்தின் ஏற்பாட்டின்படி கஸ்பார் ஒரு வரைவு தயாரித்தாராம்.

இந்த வரைவினை இருதரப்பும் ஏற்றுக் கொண்ட பிறகு, புது டில்லி உயர் அதிகாரி ஒருவரோடு நடேசன் நேரடியாகப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினாராம். பின்னர் அது முறிந்துவிட்டதாம். போர் நிறுத்தத்திற்கான அந்த வாய்ப்பு ஏன் தவறவிடப்பட்டது என்ற காரணத்தை நடேசன் சொல்லவில்லை என்கிறார் கஸ்பார்.

ஆனால், முள்ளிவாய்க்கால் முடிவுற்ற பிறகு, களத்தில் நின்ற பலருடன் விவாதித்த போது கஸ்பாருக்குப் பல உண்மைகள் தெரிய வந்ததாம். ” காங்கிரசு மீண்டும் ஆட்சிக்கு வரப்போவதில்லை, தமிழகத்தின் அனைத்து தொகுதிகளையும் தங்கள் கூட்டணிதான் வெல்லப் போகிறது, கொந்தளிக்கும் தமிழக மக்கள் போர் நிறுத்தத்தை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்” என்றெல்லாம் புலிகளை எச்சரித்து, “ஈழ விடுதலைப் போராட்டத்தை எப்பாடுபட்டேனும் காப்பாற்றியிருக்க வேண்டிய ஒரு வாழ்வா-சாவா கட்டத்தில் தங்கள் அரசியல் கணக்கு வட்டத்திற்குள் போராட்டத்தை வளைத்து, போராட்டத்தின் கட்டளைக் கட்டமைப்பு (Command Structure) அழிக்கப்பட காரணமாக இருந்துள்ளார்கள்” என்று வைகோவையும் நெடுமாறனையும் குற்றம் சாட்டுகிறார், கஸ்பார்.

ஈழத்தில் இனப்படுகொலை நடந்து ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது இவர்கள் இப்படிக் கூறுவதில் ஏதாவது உண்மையிருக்கிறதா? சிங்களப் பேரினவாத ராஜபக்சே அரசுக்குப் பல்வேறு உதவிகளும் செய்து போரை வழிநடத்திய இந்தியா, போர் நிறுத்த முயற்சி செய்ததாகக் கூறுவதை நம்பத்தான் முடியுமா? இது பற்றி இந்திய அரசோ, ராஜபக்சே அரசோ வாய்திறக்காத நிலையில், இந்திய உளவுத்துறைக்கு அப்பாற்பட்டு கே.பி.யும் கஸ்பாரும் போர்நிறுத்தத் திட்டத்தைத் தயாரித்ததாகக் கூறும் கோமாளித்தனத்தை ஏற்கத்தான் முடியுமா?

மேற்கத்திய நாடுகள் போர்நிறுத்தம் வேண்டுமென்று இலங்கை அரசை வலியுறுத்தியபோதிலும், தமிழகத்தில் போர் நிறுத்தம் கோரி போராட்டங்கள் தொடர்ந்த போதிலும், இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் நாம் தலையிட முடியாது, போர் நிறுத்தத்தைக் கோரவும் முடியாது என்றுதான் இந்திய ஆட்சியாளர்கள் கூறிவந்தனர். அதேசமயம், இந்திய இராணுவ மற்றும் இந்திய உளவுப்படையான “ரா” வின் அதிகாரிகள் முள்ளிவாய்க்காலில் நிறுத்தப்பட்டிருந்தனர்.

தேர்தலையொட்டி தனது உண்ணாவிரத நாடகத்தின் விளைவாக போர் நிறுத்தப்பட்டு விட்டது என்று கருணாநிதி ஆரவாரம் செய்தார். கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதை மட்டுமே நிறுத்தியிருக்கிறோம், இது போர் நிறுத்தம் அல்ல என்று இலங்கை அரசு அழுத்தம் திருத்தமாக அறிவித்தது. அதுவும் இந்திய நாடாளுமன்றத் தேர்தல்கள் முடியும்வரைதான் நீடித்தது. அதன் பிறகு, இந்தியாவின் வழிகாட்டுதலின்படி முழுவீச்சில் இறுதித் தாக்குதலை சிங்கள பாசிச அரசு கட்டவிழ்த்துவிட்டு உலகின் மிகக் கொடியதொரு இனப்படுகொலையை அரங்கேற்றியது.

அப்போது பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜியோ பிரதமர் மன்மோகன் சிங்கோ போர் நிறுத்தத்தைப் பற்றிப் பேச மறுத்துவிட்ட நிலையில், இவற்றுக்குத் தொடர்பே இல்லாத நிதியமைச்சரான ப.சிதம்பரம் வழிகாட்டுதலில் போர் நிறுத்தத் திட்டம் தயாரிக்கப்பட்டதாக கஸ்பார் கூறுவது அண்டப்புளுகு அன்றி வேறன்ன? கோயபல்ஸ் பாணியில் திரும்பத் திரும்ப இந்தப் பொயைச் சொல்வதன் மூலம் காங்கிரசு மற்றும் கருணாநிதி மீது ஈழ மற்றும் தமிழக மக்கள் கொண்டுள்ள கோபத்தையும் வெறுப்பையும் திசைதிருப்புவதே இந்த கீழ்த்தரமான முயற்சியின் நோக்கம்.

இந்திய அரசு போர் நிறுத்த முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறுவதன் மூலம், கருணாநிதியைப் பாதுகாப்பது மட்டுமல்ல; இலங்கை அரசு போர் நிறுத்தத்துக்கு தயாராக இருந்ததைப் போலவும், புலிகள் போர் நிறுத்தத்துக்கு சம்மதித்துச் சரணடைந்திருந்தால், முள்ளிவாய்க்கால் படுகொலையைத் தவிர்த்திருக்க இயலும் என்பதைப் போலவும் ஒரு புதுக்கதையைக் கிளப்புவதன் மூலம் ஈழத்தமிழர்கள் மத்தியில் ராஜபக்சேவுக்கு ஆதரவு தேடும் கீழ்த்தரமான முயற்சியும் இதில் உள்ளடங்கியிருக்கிறது.

வைகோ, நெடுமாறன், சீமான் முதலானோர் தேர்தலில் தங்கள் கூட்டணி வெற்றி பெறும் என்று புலிகளுக்கு நம்பிக்கையூட்டியவர்கள்தான். இந்தியாவின் மேலாதிக்கத்தை எதிர்ப்பதற்கு பதிலாக, சீனாவின் கூட்டாளியான ராஜபக்சே கும்பலை நம்பி ஏமாறக் கூடாது என்று உபதேசித்து இந்திய அரசை இன்னமும் தாஜா செய்பவர்கள்தான். இருப்பினும், இனப் படுகொலையைக் கட்டவிழ்த்துவிட்ட கொலைகார ராஜபக்சே கும்பலைப் போர்க் குற்றவாளியாக அறிவித்து தண்டிக்க வேண்டும் என்றும், ஈழப் படுகொலைக்கு இந்தியாவும் காரணம் என்றும் அவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

அவர்களைத் தனிமைப்படுத்தும் நோக்கத்திலேயே இந்தப் போர் நிறுத்தக் கதை அவிழ்த்து விடப்படுகிறது. இந்தக் கதையை இன்று இந்திய அரசோ, இலங்கை அரசோ கூறும் பட்சத்தில் அதை நம்புவதற்கு ஆளிருக்காது. அதன் பொருட்டுத்தான் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் கே.பி.யை ஊடகங்களின் முன் கொண்டுவந்து நிறுத்தி, இப்படி ஒரு பொய்யை உலகுக்குச் சொல்ல வைத்திருக்கிறது, இலங்கை அரசு.

ஈழப்போரின் போதே சிங்கள பாசிச அரசுக்கு ஆதரவாகத் தமிழக ஊடகவியலாளர்களை விலைபேசி இலங்கை அரசின் மீது நல்லெண்ணத்தைப் பரப்பும் வேலையை அப்போது சென்னையில் இலங்கையின் துணைத் தூதராகப் பணியாற்றிய அம்சா மூலமாக ராஜபக்சே கும்பல் நடத்தி வந்தது. போருக்குப் பின்னர் “இந்து” நாளேட்டின் ஆசிரியரான ராம் மற்றும் பிறரைக் கொண்டு நிவாரணப் பணிகள் சிறப்பாக நடப்பதாகக் காட்டி, ராஜபக்சே கும்பலின் போர்க்குற்றங்களை மறைக்கும் முயற்சிகள் நடந்தன. பிறகு, தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் இலங்கை விஜயமும், சினிமா நடிகர்களின் சுற்றுப்பயணமும் அரங்கேற்றப்பட்டன. அடுத்த ஆண்டு ஜனவரியில் அனைத்துலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நடத்ததுவதென்றும் இலங்கை அரசு தீர்மானித்துள்ளது.

இது, இந்திய-இலங்கை அரசுகள் இணைந்து தொடுக்கத் தொடங்கியிருக்கும் உளவியல் யுத்தம். இந்திய மேலாதிக்கத்தால் கருச்சிதைவு செய்யப்பட்ட ஈழப்போராட்டம், இத்தகைய வதந்திகளைப் பரப்புவதற்குத் தோதான பலவகையான சக்திகளை ஈழத் தமிழ்ச் சமூகத்தில் தோற்றுவித்திருக்கிறது. இவர்களின் மூலம் துயரத்தில் வீழ்ந்திருக்கும் ஈழத் தமிழ்ச் சமூகத்தில் குழப்பத்தையும் அவநம்பிக்கையையும் பரப்பி, அவர்களை அரசியல் ரீதியாகவும் சரணடைய வைப்பதே ராஜபக்சே அரசின் நோக்கம்.

– புதிய ஜனநாயகம், அக்டோபர் – 2010

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

தொழிலாளர்களைக் கைவிட்ட அரச சார்புத் தொழிற்சங்கங்கள்

Comments 4

  1. basel ali says:
    15 years ago

    கிளீத்தட்டு விளயாட்டில் கிளீயிடம் பிடிபடாது உச்சிப் போக வேண்டும்.போனது மாதிரி இருக்கும் ஆனால் போகமுடியாது.இங் கே கிளீயின் விவேகமே உச்சிப் போவரின் வேகத்தை தீர்மானிக்க முடியும். மலையூர் மம்பட்டியான் படத்தில் மலையூர் மம்பட்டியானை செந்தில்தான் காட்டிக் கொடுக்கிறார்.யானைக்கும் அடி சறூக்கும் என்பது இதுதான்.எப்போதும் போலித்தனமான கெளரவம் பார்த்து கோமாளீயானது புலிகளே மக்கள் பலிக்கடாவானார்கள்………….கிளீயிடம் இருந்து யாராலும் உச்ச முடியவில்லை……………..கனிமொழி, கஸ்பார், மெளனமாக அழுதார்கள் அதுதான் அவர்களால் முடிந்தது.

  2. Mahendra says:
    15 years ago

    ரீ ஆர் ரீ தமிழ் சேவைமூலம் ஈழத்தமிழ் மக்களுக்காக சேர்க்கப்பட்டு நீ எடுத்துச்சென்ற கோடிக்கணக்கான பணத்தை யாரோ கையாடிவிட்டார்கள் என்று சொன்னபோது உன்னை நம்பினோமே. அருட்தந்தை நீ பொய் சொல்லமாட்டாய் என திரும்ப வந்தபோதும் உன்னை தலைமேல் வைத்து கொண்டாடி மீண்டும் பொருள் அள்ளித் தந்தோமே. யேசுவின் புனிதத்தை போர்த்திய பேயா நீ! சிதம்பரமும், கனிமொழியும் இன்றைய அரசியல்வாதிகள். நயவஞ்சகம், துரோகம் அவர்கள் இரத்தத்துடன் ஊறியது. கேபி இப்போது இறக்கைவெட்டி கூண்டில் அடைக்கப்பட்ட கிளி, சொன்னதையே சொல்லும். பாதிரியே! நீ ஏன் இப்படி! ஒன்றுக்குப் பின் ஒன்று முரணாக எத்தனை செய்திகளை வெளியிட்டு வருகிறாய். உனக்கு தமிழன் என்ன துரோகம் செய்தான்?.

  3. ashroffali says:
    15 years ago

    யார் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் ஒரு காலத்தில் பு லிகளுக்காக முழு மூச்சாய் இயங்கியவர்கள் மற்றும் புலிகளின் முக்கியஸ்தர்கள் ( தயா மாஸ்டர் ஜோர்ஜ் மாஸ்டர் பானு எனப் பலரைக் குறிப்பிடலாம்) அரசாங்கத்தின் வலைக்குள் வீழ்ந்து தான் இருந்தார்கள். இரவு வேைளகளில் அவர்களின் இரகசிய கோல் அந்தரங்கங்கள் பற்றி எனக்கும் தெரியும்.

    உண்மையிலேயே புலிகளின் அபிமானியாக இருந்த சொல்கைமுக்கு அழகான ஒருத்தியை படுக்கைக்கு அனுப்பியவுடன் ஆள் அவுட். அன்று தொடக்கம் அவரும் இலங்கை அரசாங்கத்தின் நண்பனாகத் தான் இருந்தார். நம்ப முடியாதவர்கள் விட்டு விடுங்கள்.

    தமிழ்ச்செல்வனின் மறைவிடம் மற்றும் ரத்தினம் மாஸ்டர் மன்னார்ப் பகுதியில் நிலை கொண்டிருப்பது உட்பட அனைத்தையும் காட்டிக் கொடுத்த தயா மாஸ்டர் இன்றைக்கு அரச ஆதரவில் சுகபோக வாழ்க்கையில்.. போராட்டம் என்று உண்மையாக வாழ்ந்தவர்கள் தான் புதைகுழியில்… நரக வாழ்க்கையில்…

    மறுபுறத்தில் போராட்டம் முடிந்த பின்னும் அநியாயங்கள் தொடரக் கண்டு அடக்க மாட்டாத உணர்வுகளுடன் வெளியேறி வந்த என்னைப் போன்றவர்களும் உணவுக்காக பலரிடம் கையேந்தும் நிலையில்….

    ஆனால் வெளிக்கொணார்ந்த தகவல்களை முன்னிலைப்படுத்திய ஒரு சிலர் அதனை வைத்து இன்றைக்கு ஐரோப்பிய நாடுகளில் வசதியான வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருக்கின்றார்கள். கரணம் தப்பினால் மரணம் என்ற ஆபத்தான நிலையில் அவற்றைச் சேகாரித்துக் கொடுத்த நாங்கள் யாராலும் கணக்கெடுக்கப்படாத நிலையில். .
    இது தான் உலக யதார்த்தம்…நமது மக்களின் உண்மை ரூபம்.

    அம்சா போன்ற புல்லுருவிகள் என்றைக்கும் காசுக்காக மனிதாபிமானத்தை மட்டுமல்ல மனச்சாட்சியை கூட விற்று விடுவார்கள்.அவருடன் சேர்ந்திருப்பவர்களுக்கு மட்டும் அவையெல்லாம் இருந்து விடப் போகின்றதா?

    தமிழ் மக்கள் பட்ட துன்பங்கள் துயரங்கள் என்பவற்றின் பெரும் பங்கு கோயபல்ஸ் ஊடகவியலாளர்களின் பங்களிப்பில் உருவானது தான். பணத்துக்காக அவர்கள் கண்டதையெல்லாம் எழுதினார்கள். புலிகளே தமிழர்கள் தமிழர்களே புலிகள் என்றெல்லாம் உசுப்பேத்தி விட்டார்கள். அதை மறுத்த எங்களை துரோகி என்றார்கள்

    ஆனால் நாங்கள் தமிழ் மக்களின் துயரங்கள் கண்டு மனம் வெந்து வெளியேறி வர காத்திருந்தவர்கள் போல அவர்கள் வந்து ஒட்டிக் கொண்டு விட்டார்கள். அப்போது நாங்கள் துரோகிகள்.. புலிகளை ஆதரித்தவர்களுக்கு.. இப்போது நாங்கள் துரோகிகள்.. அரச ஆதரவாளர்களுக்கு… என்ன செய்வது.. ?

  4. Mahendra says:
    15 years ago

    ashroffali நீங்கள் “போராட்டம் என்று உண்மையாக வாழ்ந்தவர்கள் தான் புதைகுழியில்… நரக வாழ்க்கையில்…” என்று எழுதியுள்ளது
    முற்றிலும் நம்பகமான யதார்த்தத்தில் நடைபெறும் மறுக்கமுடியாத உண்மை. இத்தன்மையான தமிழர்களை மாவீரர்களை இழிவுபடுத்தி, செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாத சில துர்க்குறிகள் போராட்டத்திற்கு எதிராக செயற்பட்டு வந்ததோடு, இங்கு கருத்தும் எழுதி யாரிடமிருந்தோ ஆதாயம் தேடிக்கொள்வது தெரிகிறது. நீங்கள் குறிப்பிட்டதுபோல், புல்லுருவிகள் என்றைக்கும் காசுக்காக மனிதாபிமானத்தை மட்டுமல்ல மனச்சாட்சியை கூட விற்று விடுவார்கள்.

    “ஒரு காலத்தில் புலிகளுக்காக முழு மூச்சாய் இயங்கியவர்கள் மற்றும் புலிகளின் முக்கியஸ்தர்கள் ( தயா மாஸ்டர் ஜோர்ஜ் மாஸ்டர் பானு எனப் பலரைக் குறிப்பிடலாம்) அரசாங்கத்தின் வலைக்குள் வீழ்ந்து தான் இருந்தார்கள். இரவு வேளைகளில் அவர்களின் இரகசிய கோல் அந்தரங்கங்கள் பற்றி எனக்கும் தெரியும்.” என்று குறிப்பிட்டுள்ளீர்கள். தலைவர் முள்ளிவாய்க்காலில் மறையும்வரை துரோகிகள் தண்டிக்கப்பட்டமை மறுக்க முடியாது. அப்படி தண்டனை பொய்யென்றால் கருணா வெளியேறவேண்டிய தேவையே ஏற்பட்டிருக்காது.

    போராளிகளின் அந்தரங்கங்கள் பற்றி உங்களுக்கு தெரிந்தபோது அதனை எதற்காக நீங்கள் தலைமையிடம் அறியத்தரவில்லை. கழுத்திலே நஞ்சை அணிந்து உயிரையே துச்சமாக மதித்து போராடிய உங்களுக்கு துரோகிகளை இனம்காட்டிக் கொடுக்காமல் தடுத்தது எது? பயமா? நம்பமுடியவில்லையே!. எனது மகன் இன்று உயிருடன் இல்லை. அன்று அவன் இந்திய இராணுவத்தினால் பிடிபட்டு பின் விடுபட்டான். பிடிபடும்போது நஞ்சருந்தவில்லை என்பதற்காக அவனுக்கு பணிமாற்றம் செய்து தண்டனை கொடுக்கப்பட்டது.

    புலிகளே தமிழர்கள் தமிழர்களே புலிகள் என்றெல்லாம் உசுப்பேத்தவில்லை, அது உண்மை. அதற்குள் இருந்த புல்லுருவிகளை இனம்காணவும் காட்டவும் தவறியதே தமிழர் அழிவிற்கு முதற்காரணம். இனி ஈழத்தில் தமிழர்கள் மட்டும் அழிக்கப்படமாட்டார்கள், புல்லுருவிகளும் தங்களை தமிழர்களாக காட்டுவதற்கு முற்பட்டால் அவர்களும் அழிக்கப்படுவார்கள்.

    உண்மையான போராளிகளும் உணவுக்காக பலரிடம் கையேந்தும் நிலை தமிழர்களை விரக்திகொள்ள வைத்துள்ளது. உறுதியான தமிழ் தலைமை வெளிப்படும் வரையில் யாரையுமே நம்புவதற்கில்லை. ஈழத்திலுள்ள எங்கள் உறவுகள் மூலமே முடிந்தளவு உதவிகளை வழங்கி வருகிறோம்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...