வன்னி மக்கள் மீதான யுத்தத்தின் போது இலங்கைபடையினருக்கு பயிர்ச்சியும் ஆயுதங்களும் பணமும் கொடுத்து உதவியது இந்திய அரசு
. தோற்றுப் போன போர்த்தந்திரங்கள், மேற்குலகையும் இந்தியாவையும் நம்பியிருந்த புலிகளின் முடிவு முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு நகராகமல் கொடூரமான முறையில் முடிவுக்கு வந்தது. பல்லாயிரம் மக்களும் போராளிகளின் குடும்பங்கள் கொடூரமான முறையில் இனகொலை ஆனார்கள். இந்தப் போரின் வெற்றி இலங்கை இராணுவத்தின் வெற்றியாக பறைசாற்றி சர்வதேச அளவில் தங்களின் இராணுவ வலிமையை விற்பனைத் தந்திரமாக கையாண்டு வருகிறது. பயங்கரவாத இலங்கை அரசு. இந்நிலையில் இந்தியாவில் வடகிழக்கிலும், தண்டகாரண்யா பகுதிகளிலும் போராடும் மாவோயிஸ்டுககளை ஒடுக்க முடியாமல் கடும் இழப்புகளைச் சந்தித்து வருகிறது இந்திய இராணுவம். இந்நிலையில் மாவோயிஸ்ட் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள சிறப்பு கெரில்லா படையினருக்கும், சி.ஆர்.பி.எப்ஃ, சிறப்பு அதிரடிப்படைக்கும் இலங்கை இராணுவத்தின் ஆழ ஊடுறுவும் அணியினர் பயிர்ச்சி அளிக்க முன் வந்திருப்பதாகவும் வருகிற நாட்களில் இந்தியாவுக்கு வந்தே அவர்கள் இப்பயிர்ச்சியை அழிக்க தயராகி வருகிறார்கள் என்றும் தெரிகிறது. ஆனால் புலிகளை வென்றது போல மாவோயிஸ்டுகளையும் வெல்ல முடியாது என்பதே யதார்த்தம். புலிகள் கடைசியில் இருந்த முள்ளிவாய்க்கால் என்பது மிகக் குறுகிய நிலப்பகுதி என்பதோடு தப்பிச் செல்வதற்கான வழிகள் எதுவும் இல்லாமல் அதற்குள் அடைபட்டனர் என்பதோடு புலிகளும் இறுதி யுத்தத்திற்கு முன்னால் தங்களின் இராணுவ தந்திரோபாயங்களை மற்றிக் கொள்ளவில்லை என்பதோடு மேற்குலகையும் இந்தியாவையும் அவர்கள் நம்பியிருந்தனர் என்பதாக எவ்வளவோ காரணங்களைச் சொல்ல முடியும் ஆனால் மாவோயிஸ்டுகளின் காடுகள் என்பது பழங்குடி சமூகங்களின் வாழ்விடங்கள் என்பதோடு மரபு வழி இராணுவமாகவும் அவர்கள் இல்லை. தவிறாவும் இந்தியாவின் தண்டகாரண்யா காடுகளே புவியியல் ரீதியாக அவர்களுக்க்கு சாதகமாக இருப்பதால் இந்தப் பயிர்ச்சிகள் எவ்விதமான யுத்த தந்திரங்களையும் இந்திய இராணுவத்திற்கு கொடுக்கப் போவதில்லை என்பது யதார்த்தம்.