இந்திய அமைதி காக்கும் படையினர் தொடர்பில் எவ்வித கருத்துக்களையும் வெளியிடப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்திய அமைதிகாக்கும் படையினர் என்ற பெயரில் வடகிழக்கை ஆக்கிரமித்த இந்திய இராணுவம் பல்வேறு கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. பலர் கொல்லப்பட்டனர். பெண்கள் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தபட்டனர். தமிழ் தேசிய இராணும் என்ற உள்ளூர் இராணுவக் கூலிக் குழுவை இந்திய இராணுவம் உருவாக்கியது.
அப்பாவி இளைஞர்களைப் பலவந்தமாகப் கடத்திய இந்திய இராணுவத் துணைக்குழுவான ஈ.பி.ஆர்.எல்.எப் என்ற ஆயுதக் குழு தமிழ் தேசிய இராணுவத்தை உருவாக்குவதற்குத் துணை சென்றது. இவ்வாறு பலவந்தமாக இளைஞர்களைச் சேர்த்துக்கொவதற்கு தலைமை வகித்தவர் சுரேஷ் பிரேமச்சந்திரன். யாழ்ப்பாணத்தில் அசோக் விடுதியில் தலைமையகத்தைக் கொண்டிருந்த ஈ.பி.ஆர்.எல்.எப் கைதான இளைஞர்களை அங்கு அடைத்துவைத்தது. பயிற்சிக்கு அனுப்புவதற்கு முன்னர் பிரேமசந்திரனின் நேரடி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். இணைந்துகொள்ள மறுத்தவர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டனர். சிலர் கொலை செய்யப்பட்டனர்.
தமிழ்த் தேசிய இராணுவத்தை அனாதரவாகக் கைவிட்டு பிரேமச்சந்திரன் குழு இந்திய இராணுவத்துடன் தப்பிச் சென்றதும், அப்பாவி இளைஞர்களைப் புலிகள் கைது செய்தனர். கைதான பலர் பல்வேறு முகாம்களில் புலிகளால் சாரி சாரியாக் கொலை செய்யப்பட்டனர். யாழ்ப்பாணத்தில் புலிகளின் கந்தன் கருணை முகாமில் மட்டும் ஒரு சில மணி நேரங்களுக்குள் 54 அப்பாவி இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். கிழக்கில் மட்டும் 300 இளைஞர்கள் வரை கொல்லப்பட்டனர். பொதுவாகக் கிழக்கு மாகாண இளைஞர்களே இவ்வாறான பாதிப்பிற்கு உள்ளாகினர்.
தவிர, புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பல அப்பாவிகளை சுரேஷ் பிரேமச் சந்திரன் தலைமை வகித்த கிரிமினல் இராணுவமான மண்டையன் குழு கொலை செய்திருந்தது.
பின்னதாக மகிந்த ராஜபக்ச மீன்பிடி அமைச்சராகவிருந்த வேளையில் அந்த அமைச்சின் முக்கிய பொறுப்பிலிருந்த பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்ட போது பிரபாகரனின் ஆசி பெற்று அதன் முக்கிய உறுப்பினரானார்.
மகிந்த ராஜபக்ச போன்ற இனக்கொலையாளிகள் தண்டிக்கப்படாவிட்டால் அது மனிதகுலத்தின் அவமானமாகும். மகிந்த ராஜபக்ச போன்று பலர் இலங்கையில் மட்டுமல்ல உலகின் ஏனைய நாடுகளிலும் அச்சமின்றிக் கொலைகள் நடத்துவார்கள். வன்னிக் கொலைகளின் சூத்திரதாரிகளான மகிந்த குடும்பம் உலகின் கோரமான கொலையாளிகளுகு முன்னுதாரணத்தை வழங்கியிருக்கின்றது. அவர்களை ஊக்கப்படுத்துகின்றது. இனக்கொலையில் நேரடியாகப் பங்காற்றிய கோதாபய ராஜபக்ச மேற்கு ஏகாதிபத்தியங்களின் துணையோடு தனியார் இராணுவத்தை உருவாக்கியுள்ளார்.ஆனால் மகிந்த ராஜபக்சவின் குற்றங்களின் பின்னால் இந்திய ஆக்கிரமிப்பிற்குத் துணைசென்ற பல கிரிமினல்கள் மறைந்துகொள்வது நியாயமில்லை.
NN
கந்தன் கருணை படுகொலை 1987 களின் நடுப்பகுதியில் நடந்தது அதில் EPRLF மற்றும் அமைப்புகளால் உருவாக்கப் பட்ட தமிழ் தேசிய ராணுவம் (TNA) சார் உறுப்பினர்கள் கொல்லப்படவில்லை. அது உண்மையில் புலிகளின் அதிகாரத் தலைமைக்கு கிட்டு சவாலாக எழுந்த காலப் பகுதியில் கிட்டுவை அதிகாரப் போட்டியில் இருந்து அகற்ற புலிகள் கிட்டுவை ஒழித்து கட்டும் முகமாக தாக்குதலை நடாத்தியபோது, அருணா என்கின்ற புலிகளின் மூத்த உறுப்பினர் கிட்டுவை மாற்று இயக்கங்களே தாக்கியதாக கருதி கந்தன் கருணை முகாமில் புலிகளால் தடுத்து வைக்கப் பட்ட மாற்று உறுப்பினர்களை பழிவாங்கு முகமாக கொன்றொழித்தார்.
கிட்டுவுக்கும் புலிகளின் தலைமைக்கும் முரண்பாடுகளை உருவாக்கும் திரைமறைவு புலனாய்வு வேலையை இலங்கை புலனாய்வுத் துறை தமது புலனாய்வு முகவர் அல்லது உறுப்பினரான புலிகளின் உறுப்பினரும் கிட்டுவின் மொழிபெயர்ப்பாளருமாக இருந்த ரஹீம் ஊடாக செய்து வந்தது.
இங்கும் கந்தன் கருணை படுகொலையில் பாதிக்கப் பட்டவர்கள் சுரேஷ் பிரேமச்சந்திரன் போன்றோரின் தவறான வழி நடத்தல்களால் புலிகளினால் தோற்கடிக்கப்பட்ட EPRLF உறுப்பினர்களே அதிகம்.
இந்திய ராணுவ காலத்தில் உருவாக்கப் பட்ட TNA யை கூட சுரேஷ் புலிகளினதும் இலங்கைப் படைகளினதும் கொலை கரங்களில் சிக்கவைத்துவிட்டு சந்தர்ப்பவாத சுரேஷ் கூட்டணி தப்பியோடியது.
இன்றும் தமிழ் மக்களை, ஒடுக்கப் படும் மக்களின் புரட்சிகர செயல் பாட்டாளர்களை ஒன்றிணைக்கும் செயல் திட்டத்தில் எத்தகைய காத்திரமான பங்களிப்பும் இன்றி அல்லது தடை கற்களை ஏற்படுத்தி கொண்டு வெத்துவேட்டு அரசியல் அறிக்கைப்போர் மாத்திரம் நடத்திக் கொண்டு அரசியல் மலடுகளாக உலாவருகிறார்கள்.
EPRLF புலிகள் உடனடி மோதல் உருவாக சுரேஷின் விவேகமற்ற மோதல் போக்கும் வெறும் அறிக்கை போருமே காரணமாகும். இதனால் கொல்லப் பட்டது வெறும் அப்பாவி EPRLF உறுப்பினர்களே. மோதலை உருவாக்கிவிட்டு இந்தியா தப்பிச் செல்ல முதலில் படகில் குந்திய சீமான்.
MP பதவி இல்லாவிட்டால் தமிழ் தேசியமும் மண்ணாங்கட்டியும் என்பதே சுரேஷின் செயலாக இருந்திருக்கும். தான் சார்ந்த EPRLF உறுப்பினர்களையும் தமது கட்சி நீக்கத்திலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு நீக்கம் செய்வதிலும் உறுதியாக இருக்கும் சீமான்.
EPRLF ராசிக் மக்கள் விரோத மனிதனாக மாற உருகொடுத்த பெருமகன் இவர். இன்றும் அதே கோணல் மாணலாய் தான் வலம் வருகிறார். கால ஓட்டத்தில் ஆவது மனிதர்கள் மாறவேண்டும். இவர்கள்???…………….
“புலிகளின் அதிகாரத் தலைமைக்கு கிட்டு சவாலாக எழுந்த காலப் பகுதியில் கிட்டுவை அதிகாரப் போட்டியில் இருந்து அகற்ற புலிகள் கிட்டுவை ஒழித்து கட்டும் முகமாக தாக்குதலை நடாத்தியபோது…”
– பின்புதான் தெரிய வந்தது… கிட்டுவிற்கு கால் போக கிரனைட் தாக்குதல் நடாத்தியவர்… தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் (PLOTE) இருந்து பிரிந்தவர் என்றும்… தற்போது கனடாவில் வசிக்கிறார் என்றும்…
“திரைமறைவு புலனாய்வு வேலையை இலங்கை புலனாய்வுத் துறை தமது புலனாய்வு முகவர் அல்லது உறுப்பினரான புலிகளின் உறுப்பினரும் கிட்டுவின் மொழிபெயர்ப்பாளருமாக இருந்த ரஹீம்…”
– இவரும் தற்போது கனடாவில் வசிக்கிறார்…
மகிந்தா அரசு செயல்பாடே இந்தியைராணுவ போர்குற்ற விசாரனை.
இதை கிழறி விட்டுவிட்டு தாங்கள் தப்பிக்கப்பார்க்கிறார்கள்
இந்தியாவும் மகிந்தவுடன் கூட்டுச் சேர்ந்து……….