யாழ்ப்பாணத்தில் இந்திய அரசு கலாச்சார மையம் ஒன்றை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்ததில் கைச்சாத்திட்டது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இலங்கைக்கான இந்திய தூதர் Y.K.சின்கா மற்றும் அந்நாட்டு பொருளாதார மேம்பாட்டு செயலாளர் நிகல் ஜெயதிலகா ஆகியோர் கையெழுத்திட்டனர். அப்போது இலங்கை பொருளாதார மேம்பாட்டுத்துறை மந்திரியும், அதிபர் ராஜபக்சேவின் சகோதருமான பசில் ராஜபக்சே உடனிருந்தார். அதன்படி வடக்கு மாகாணத்தின் தலைநகரான யாழ்ப்பாணத்தில், பொது நூலகத்துக்கு அருகே இந்த கலாச்சார மையம் கட்டப்படுகிறது. ரூ.56 கோடியில் கட்டப்படும் இந்த மையத்தில் பல்வேறு பயிற்சிகள், கல்வி தொடர்பான தகவல்கள் மற்றும் பல்வேறு விதமான பண்பாட்டு ஒழுக்கங்கள் கற்றுத்தரப்படும் என்று கூறுகிறார்கள்.
இந்திய அரசு இலங்கை அரசுடன் இணைந்து வன்னியில் நடத்திய இனப்படுகொலையின் பின்னர் சம்பூரில் அமைக்கும் அனல் மின்நிலையத்திற்காக 1262 குடும்பங்களை அகதிகளாக விரட்டிய பின்னர் இச்செய்தி வெளியாகியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படும் கலாச்சார மையத்தின் பின்னணியிலுள்ள நோக்கங்கள் இன்னும் முழுமையாக இனியொருவிற்குக் கிடைக்கப்பெறவில்லை.
கலாரசாரம்
கலாச்சாரம் பிழை
கலாச்சார மையத்தின் பின்னணியிலுள்ள நோக்கங்கள் ;கலை: மானாட மயிலாட, சூப்பர் சிங்கர் 8, கத்தி2, .
.
சென்னை சில்க், போத்தீஸ்,.. .
.இதயம் நல்லெண்ணெய்,
இன்னும் பல