மேற்குலக ஒழுங்கமைவானது ஒரு குறித்த தெளிவான வடிவத்திற்குள் உருவமைக்கப்பட்ட காலமான, 1949 இற்குப் பின்னர் இப்போது முதற் தடவையாக அதன் சர்வதேச வரிசைப்படுத்தலானது புதிய நிலைகளை நோக்கி நகரவாரம்பித்திருக்கிறது. இன்று மறுபடி உலகம் ஒழுங்கமைக்கப் படுகிறது.பெரும் மூலதனத்தைச் சொந்தமாக வைத்திருக்கும் ஆதிக்க வர்க்கத்தின் தனிப்பட்ட நலன்களை மட்டுமே அடிப்டையாக முன்வைத்து இந்த ஒழுங்கமைப்பு அரசியல் உலகப் படத்தை மாற்றியமைத்துக் கொண்டிருக்கிறது.
மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி நகரும் பொருளாதார ஆதிக்கம், மேற்கு அதிகாரத்தால் தவிர்க்க முடியாத, புதிய பொருளாதாரச் சுற்றை ஆரம்பித்து வைத்திருக்கிறது. 1949 இல் உறுதியான பொருளாதாரச் சுற்று, 1970 களில் நெருக்கடிக்குள்ளான போது மறுபடி ஒழுங்கமைக்கப்பட்டது. பிரித்தானியப் பிரதமர் மாகிரட் தட்சர் மற்றும் அமரிக்க அதிபர் ரொனாட்ல் ரீகன் ஆகியோரது தலைமையில் உருவான இவ்வமைப்பு முறையானது புதிய தாராளவாதப் பொருளாதரக் கொள்கையை உருவாக்கியது.
இதன் வளர்ச்சிக் கட்டமான உலகமயமாதல் என்ற ஒழுங்கமைப்பு இன்று தவிர்க்க முடியாத அமைப்பியல் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது.
ஒவ்வொரு தடவையும் உலகம் புதிதாக ஒழுங்கமைக்கப்படும் போது, அதன் முதற் பகுதியானது, படுகொலைகளும், ஆக்கிரமிபுக்களும், அவலங்களும், அசிங்கங்களும் நிறைந்ததாகவே காணப்பட்டது.
இந்தச் சர்வதேச மாற்றங்களுக்கு முதல் பலிதான் 50 ஆயிரம் அப்பாவிப் பொதுமக்கள். அதிகாரத்திற்கும் ஏகத்துவத்திற்கும் எதிரான எந்த எதிர்ப்பியக்கமும் இந்த சர்வதேச மாற்றத்தின் புதிய அணிசேர்க்கைகளை நிராகரித்து வெற்றிகொள்ள முடியாது.
அமரிக்க அணியின் தலைமையிலான ஏகாதிபத்தியம் என்பது இன்றைக்குப் பல துருவ பிராந்திய ஏகத்துவப் பரவல்களாக விரிவடைந்து கொண்டிருக்க, புதிய அரசியற் சூழலை நோக்கி உலகம் நகர்த்தப் பட்டுக்கொண்டிருக்கிறது.
ஆசியாவின் புதிய அதிகாரங்கள், ரஷ்யாவின் மறு உருவாக்கம், அமரிக்க அணியின் பொருளாதாரச் சரிவு, இலத்தீன் அமரிக்காவின் மேற்குல எதிர்ப்பியல், மத்திய கிழக்கின் புதிய அணி சேர்க்கை என்பவையெல்லாம் இப்புதிய உலக ஒழுங்கு விதியின் பிரதான அரசியற் பொருளாதாரக் கூறுகள்.
மேலெழுந்துள்ள சீனா, இந்தியா போன்ற நாடுகளின் சர்வதேச சக்திகளானது 20ம் நூற்றாண்டில் அமரிக்காவின் சக்திக்கும், 19ம் நூற்றாண்டின் ஒருங்கிணைந்த ஜேர்மனியின் சக்திகும் இணையானதாக உருவாகிக் கொண்டிருக்கிறது என்று கூறும் அமரிக்க தேசிய உளவுத் துறையின் அறிக்கையானது, இந்தப் புதிய சர்வதேச சக்திகள், கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக நிலவிவந்த புவிசார் அரசியலின் தன்மையை மாற்றத்திற்குள்ளாகிவிடும் என்கிறது.
டெல்லிப் பல்கலைக் கழகத்தில் ஷிவ் சங்கர் மேனன் நிகழ்த்திய உரையில் 90 கள் வரையிலான இந்திய வெளியுறவுத் துறையின் கொள்கை மாற்றமடைந்துள்ளது என்கிறார்.
இந்தியா தனது எல்லைக்குள்ளேயே தனது தேவைக்கும் அதிகமான சந்தை வளத்தைக் கொண்டுள்ள ஒரே நாடு. தனது எல்லைக்குள்ளேயே தனது தேவைக்கும் அதிகமான கனிம வளங்களையும், உழைப்புச் சக்தியையும் கொண்டுள்ள நாடு. உலக முதலாளித்துவத்திற்கு இந்தியாவின் சக்தி இன்று வரலாறு காணாத சேவையாற்றிக்கொண்டிருக்கின்றது.
அமரிக்காவும் ஐரோப்பாவும் தனது அதிகார பலத்தின் ஒரு பகுதியை இழந்தாலும், இவ்வொழுங்கமைப்பில் தம்மை இணைத்துக் கொள்வதே தம்மைத் தக்க வைத்துக்கொள்வதற்கான ஒரே வழிமுறை என உணர்ந்து கொண்டுள்ளன.
இப்போது உலகம் முழுவதும் நடைபெறும் அரசியல் பனிப்போர் என்பதெல்லாம் யார் உலக முதலாளித்துவத்திற்கு தலைமைப் பாத்திரம் வகிப்பது என்பது தான். இங்கு தான் துருவ வல்லரசுகளும் அதன் ஆதிக்கமும் மேற்கின் ஏக போகத்திற்குப் போட்டியாக உருவாகின்றது.
இந்தப் பனிப்போரில் பலியாகும் முதல் பிரதேசம் தீபெத். தெற்காசியாவில் இதன் முதல் பலி இலங்கை என்ற அழகிய தீவு. அங்கு தான் 50 ஆயிரம் அப்பாவிப் பொதுமக்கள் சில நாள் எல்லைக்குள் அனைத்துலக ஆசியுடன் இந்திய இலங்கை அரசுகளால் பலியெடுக்கப்பட்டனர். இந்திய அரசு ஐக்கிய நாடுகள் சபையிலிருந்து அனைத்து நாடுகளின் ஆதிக்கத்திற்கு எதிராகவும் இலங்கை அரசைப் பாதுகாப்பதற்காகப் போராடியது.
இறுதியில் இலங்கையில் இந்தியா, அதன் முழுமையான அரசியல் பொருளாதார ஆதிக்கதிற்கு உட்பட்ட பொம்மை அரசை உருவாக்கிவிட்டது. மேற்குலக அதிகாரத்தால் ஆசீர்வதிக்கப்பட்ட சரத் பொன்சேகா குழு இந்திய அதிகாரத்தின் முன் தோற்றுப்போனது.
உலக முதலாளித்துவத்தின் தென் ஆசியத் தலைமையைக் கோருகின்ற இந்திய அரசு இப்பிரதேசத்தில் மேற்கின் அதிகார உள்ளீட்டிற்கு எதிராக சீனாவுடன் கூடக் கைகோர்த்துக் கொள்ளத் தயாராயிருக்கிறது என்பதை இலங்கையில் இந்திய அதிகாரம் நிகழ்த்திய இனப்படுகொலை தெளிவுபடுத்துகின்றது.
“புதிய வல்லரசுகளாக சீனாவும் இந்தியாவும் உருவாதல் என்பது தவிர்க்கமுடியாத மறுதலையான உறுதியெனினும், சர்வதேச அளவில் அமைந்திருக்கும் எனைய வல்லரசுகளுடன் போட்டி போட்டியாகவா, அல்லது ஒத்துழைப்புடனா தன்னைத் தொடர்புபடுத்திக் கொள்ளும் என்பது முற்றிலும் நிச்சயமற்றதாகவே உள்ளது” என்கிறது அமரிக்க தேசிய உளவுத்துறை ஆலோசனை மையம்.
தெற்காசியாவின் சர்வதேச அரசியல் தளம் மூன்று முக்கிய காரணிகளை உள்ளடகியது.
1. சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவு.
2. ஆசிய தேசிய அரசுகளிற்கெதிரான எதிர்ப்பியக்கங்கள்.
3. துருவ வல்லரசுகளின் பிராந்திய அரசியல் முரண்பாடுகள்.
இந்த வேளையில் நாம் இந்தியாவைத் திருப்திப்படுத என்ன செய்யவேண்டும் என்ற கோமாளித் தனமான ஆய்வுகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறனர், அழிந்து போன தமிழ்ப் பேசும் மக்களின் உள்ளிருக்கும் அரசியல் வியாபாரிகள். அப்பாவி மக்கள் துடிக்கத் துடிக்க சாரிசாரியாகக் கொல்லப்பட்ட போதெல்லாம் அக்கொலைகளில் பங்களித்த இந்தியாவின் நோக்கம் தமிழ் மக்களின் நலன்கள் அல்ல. தெற்காசியாவில் அதன் அதிகாரம் மட்டுமே. அதுவும் விரவிட்டெண்ணக் கூடிய இந்தியப் பெருமுதலாளிகளின் அதிகாரத்திற்காகவே இரத்த ஆறு ஓடியது.
இந்தியா அதன் எந்த அரசியல் நிலையிலும் தமிழ்ப் பேசும் மக்களின் நட்பு சக்தியாக இருந்ததில்லை.
80 களில் தமிழ் தேசிய இயக்கங்களுக்ளுக்கு இரணுவப் பயிற்சியும் நிதி உதவியும் வழங்கிய இந்தியா, மூன்று பிரதான நோக்கங்களைக் கொண்டிருந்தது.
1. இலங்கையின் உள் நாட்டு அரசியலைக் கொந்தளிப்பு நிலையில் பேணுவதனூடாக தனது தலையீடுகளை மேற்கொள்வது.
2. இலங்கையில் உருவாகவல்ல புரட்சிகர அமைப்புக்களை சீர்குலைப்பது.
3. தமிழ் நாட்டிலுள்ள முற்போக்குப் போராட்ட அமைப்புக்களுடனான அவர்களின் ஒருங்கிணைவைத் தடுப்பது.
இந்த நோக்கங்களை 90 களின் ஆரம்பம் வரை வெற்றிகரமாக நிறைவேற்றிய இந்திய அரசு, அதன் பின்னரான உலக அரசியல் மாற்றங்களில் இசைவாக்கத்தினூடாக புதிய மாற்றங்களையும் அணுகுமுறைகளையும் அறிமுகப்படுத்திற்று.
மேற்கின் அதிகாரத்தின் ஆளுமை சரிவடைய ஆரம்பித்ததும், உலக முதலாளித்துவத்தில் இந்தியாவின் பங்கு அதிகரித்ததும் இந்தியாவின் தெற்காசிய அரசியல் நிலைப்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்திற்று. இலங்கை அரசை அதன் அதிகார எல்லைக்குள் கொண்டுவருவதில் வெற்றிகண்ட இந்தியா, முன்னயதிலிருந்து வேறுபட்ட அணுகு முறையை கையள ஆரம்பித்தது.
அப்பாவி மக்களை அழித்து தமிழ் பேசும் மக்களின் உரிமைக்கான எதிர்ப்பியக்கத்தை முற்றாக நிர்மூலமாக்கிய இந்திய அரசு, இலங்கையை தனது முழுமையன அதிகார எல்லைக்குள் கொண்டுவந்துள்ளது.
இந்த அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள்:
1. தமிழ்ப்பேசும் மக்கள் மத்தியில் சாத்தியமான புதிய எதிர்ப்பியக்கங்களின் உருவாக்கம்.
2. மேற்கின் அதிகார மீட்சி.
3. சிங்கள மக்கள் மத்தியிலிருந்து உருவாகவல்ல எதிர்ப்பியக்கங்கள்.
மேற்குல ஆளுமைக்கு எதிரான ராஜபக்ச அரசு தென்பகுதியில் இந்த நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள இந்திய அரசிற்குக் கிடைத்த வரப்பிரசாதம். ரஜபக்ச குடும்ப அரசின் மேற்கு எதிர்ப்பும், பேரின வாதப் பாசிசமும் இந்திய துருவ வல்லரசின் நலன்களை நிறைவேற்றப் போதுமானதும் தேவையானதுமான தகவமைப்புக்களைக் கொண்டுள்ளன. சிங்கள மக்கள் மத்தியிலான வரலாற்று வழிவந்த இந்திய எதிர்ப்புணர்வு இன்று இல்லை. இந்திய எதிர்ப்பு வாதத்தை முன்வைத்து ஜே.வி.பி போன்ற கட்சிகள் இன்னும் அரசியல் நடத்த முடியாது. ஆக, திட்டமிட்டு மாற்றியமைக்கப்பட்ட இலங்கை அரசியலின் புறநிலை யதார்த்தம் இந்திய தமிழ்ப் பேசும் மக்கள் மீதான இலங்கை – இந்திய அரசுகளின் ஒடுக்கு முறைகயை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இவை ஒரு புறத்தே இலங்கை அரசியல் சூழலை ஆக்கிரமிக்க, மறு புறத்தே தமிழ்ப் பேசும் மக்களின் பேரின வாதத்திற்கு எதிரான எதிர்ப்பரசியலை சிதைப்பதற்கான முன் நடவடிக்கைகளை இந்தியா ஆரம்பித்துவிட்டது.
இவை மூன்று முக்கிய தளங்களில் முன்னெடுக்கப்படுகின்றன.
1. தமிழ்ப் பிரதேசங்களில் உரிமைக்கெதிராக இந்திய மூலதனத்தின் அபிவிருத்தியை முன்வைத்தல்.
2. எதிர்ப்பரசியலை இந்திய ஆதரவு சக்திகளூடாக முன்வைத்துச் சீர்குலைத்தல்.
3. இலங்கை அரச ஆதிக்கத்தை அதன் துணை இராணுவ அரசியல் குழுக்களூடாக வலுபெறச் செய்தல்.
இந்த வகையில் இந்திய ஆதரவுக் குழுவாக தமிழ்ப் பேசும் மக்களின் எதிர்ப்பியக்கங்களை சிதைக்கும் பிரதான சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாகியுள்ளது. இந்திய உளவுத்துறையின் சிலந்தி வலைக்குள் டெல்லியில் அலுவலகத்தை அமைத்துக் கொண்ட இந்த அமைப்பு இன்னொரு பேரழிவிற்கான அபாயக் குரல்.
மிக நீண்ட ஆழமான நிகழ்ச்சி நிரலைக் கொண்டு செயலாற்றும் இந்திய வல்லரசு அதிகாரத்தை எவ்வறு ஒடுக்கப்படும் இந்திய ஆதிவாசிகள் திருப்திப்படுத்த இயலாதோ அப்படியே தமிழ் மக்களும் திருப்திப்படுத்த முடியாது. ஒடுக்கப்படும் இந்திய மக்களின் நலன்களும் இலங்கையில் ஒடுக்கப்படும் மக்களின் நலன்களும் மட்டுமே ஒன்று சேர முடியும். இந்த இலகுவான உண்மையைப் புரிந்து கொள்ளத் தவறும் பட்சத்தில் இன்னொரு இனப்படுகொலைகூட சத்தமின்றி நிகழ்த்தப்படலாம்.
மக்கள் அரசியலுக்கு எதிராக ஒற்றுமை என்ற சுலோகத்தை முன்வைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமை இந்திய ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்கானது. இதன் அழிவரசியல் இனங்காணப்படவேண்டியது அழிவுகளின் அவலத்தில் வாழும் ஒரு மக்கள் கூட்டத்தின் அவசியக் கடமை.
ஒடுக்கப்பட்ட தமிழ்ப் பேசும் மக்களின் எதிர்ப்பரசியல் மறுபடி ஒரு முறை தவறான குறுந்தேசிய வாதிகளின் ஆதிக்க நலனின் பிடிகளில் இறுகிவிடாமல் இருப்பதற்கான போராட்டம் இன்று முதன்மையானது.
தவிர, மேற்கின் அரசியல் குரலாக ஒலிக்கும் கஜேந்திரன் பொன்னம்பலம், சரத் பொன்சேகா, ஐக்கிய தேசியக் கட்சி போன்ற அனைத்து மக்கள் விரோத சக்திகளும் நிராகரிக்கப்பட வேண்டும். தெற்காசியப் பிராந்தியத்தில் இந்திய,ஐரோப்பிய,அமரிக்க அதிகார மையங்களின் ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடும் மக்கள் பிரிவுகளோடு ஒடுக்கப்படும் தமிழ்ப் பேசும் சிறுபான்மையும் இணைந்து கொள்ளும்போது மட்டும் தான் எமது குரல்கள் ஓங்கி ஒலிக்கும்.
கார்டூன் : தோழர் முகிலன்
ஒரு பொல்லாப்பும் இல்லை, எப்போதோ முடிந்த காரியம் என் யோகர் சுவாமிகள் சொல்லியுள்ளார்.ஆக நடப்பவை எல்லாம் நன்மைக்கே எனும் உணர்வில் தமிழ் மக்கள் துயர் கலைய நம்மாலான பணீயைச் செய்வோம்.காலம் விட்ட வழி பொறூத்திருப்போம்.நல்லது நடக்கும்.
“நல்லது நடக்கும்.”
அப்போ தமிழர் தேசியக் கூட்டமைப்பைத் தமிழ் மக்கள் பூரணமாக நிரகரிப்பார்கள் என்நம்பலாமா?
இங்கு கூறப்பட்டவற்றுக்கு ஆதாரமன விதத்திலேயே த. தே.கூவின்நடத்தை அமைந்துள்ளது.
1. வேட்பாளர் பட்டியல் விவகாரம்.
2. திருகோணமலை மாவட்ட வேபாளர் கே விக்னேஸ்வரன் தரும் தகவல்களையோ தமிழ் காங்கிரசின் குற்றச்சாட்டுக்களையோ சம்பந்தனால் மற்யெளக்க இயலாமை.
3. தமது தீர்வுத்திட்டத்தை சொல்ல மறுப்பு.
4. வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைப் பற்றிய திரிப்புக்கள்.
5. டில்லியில் த. தே.கூ. பணிமனை.
இப்படிப் பலவும் சபா நாவலனின் கருத்துக்கு ஆதாரமாகவே உள்ளன.
//இந்தச் சர்வதேச மாற்றங்களுக்கு முதல் பலிதான் 50 ஆயிரம் அப்பாவிப் பொதுமக்கள். அதிகாரத்திற்கும் ஏகத்துவத்திற்கும் எதிரான எந்த எதிர்ப்பியக்கமும் இந்த சர்வதேச மாற்றத்தின் புதிய அணிசேர்க்கைகளை நிராகரித்து வெற்றிகொள்ள முடியாது.//
கட்டுரை ஆசிரியரே மேலே நீங்கள் எழுதியதை மேலும் விரிவாக எழுத முடியுமா
நிராகரித்து வெற்றிகொள்ள முடியாது – என்பது ஏதாவது ஒன்றுடன் சார்ந்து நிற்றரல் என அர்த்தப்படுத்தலாமா
Indian High Commissioner to Sri Lanka Ashok K. Kantha on Friday visited Vavuniya, Oddusudan and Mullaithivu for a first hand knowledge of the relief camps and the assistance being provided by India for the rehabilitation and re-settlement of the Tamil civilians in the war-ravaged northern province.
According to the Indian Mission here at Vavuniya, Mr. Kantha and Sri Lankan Minister of Social Services and Social Welfare Douglas Devananda inaugurated the limb refitment camp at Menik Farms Zone 1. Most of the displaced people are housed in camps in Menik Farms. About three lakh Tamil civilians were displaced due to the Eelam War IV, which ended in the last week of May.
The Mission said the limb refitment camp was funded by India and was being implemented by the Jaipur-based non-governmental organisation Bhagwan Mahaveer Viklang Sahayata Samiti (BMVSS), better known as the “Jaipur Foot.”
For in full: http://www.hindu.com/2010/03/21/stories/2010032163781200.htm
This Navalan lives in a paradise, he actually lives in the worlds formost capital country holding pasport of another capitalist country, Mr Sampanthan is more wiser than Navalan.
Who can deny Sampanthan’s wisdom?
Ther man has his family based in India, his extended family is in the UK, he hardly visits his electorate(except to get elected) and has effectively expelled half the TNA MPs to safeguard his control over the TNA so that he can be back in India’s good books.
He has contradicted himself many times over on maters of policy; and nobody except a few newspaper columninsts challenge him, and the Tamil media bosses are favouring him.
If you wish, I can give his entire track record in politics.
Incidentally London is no more the world’s formost capital and life there is not like in paradise, as I understand paradise.
மகேஸ்வரனின்ர எலும்புத்துண்டிற்கு ஆசைப்பட்டு, ஒருவருடமாய் காரைநகரில் அலைந்துவிட்டு மறூபடியும் லண்டனிற்கு ஓடி வந்து தான் தப்பியது காரை நகர் சிவனின்ற அதிசயமென்றூ கதை விடும் ஐ.தி.சம்பந்தர், சம்பந்தர் அய்யாவி சால்வையின் தகுதி கூடப் பெறமாட்டார் ஆனால் சம்பந்தர் அய்யாவுக்கே அறீவுரை வழங்குகிறார்.
இவருக்கு காவடி தூக்கும் பாலசுந்தரம்,சீரங்கம், வ.இ.இராமநாதன் என்ற கூட்டம் வேற.
நிரந்தர் அறங்காலர்களாய் இருந்து மக்கள் பணத்தில் வயிறூ வளர்க்கும் கூட்டமெல்லாம் மக்கள் தலைவர் சம்பந்தர் அய்யாவுக்கு அட்வைஸ் பண்ணூது.
இதென்ன சம்பந்தா சம்பந்தமில்லாத சம்பந்தன்களின்டை கதை.
இப்ப தமிழரை ஏய்க்கிற ஒரு சம்பந்தனைப் பற்றிக் கதைக்கிறம்.
மனிசரை மோடர் என்டு நினைச்சோ வழக்கம் போலை கதையை த் திசை மாத்துறியள்?
சம்பந்தர் அய்யா சரியான திசையில் தமிழ் மக்கலை வழி நடத்துவார் என்பதை மிக உறூதியாக நாம் நம்புகிறோம்.நாம் பிரிந்தால் சிதைந்து போவோம்.ஓரணீ நிற்பதே தமிழரிற்கு நல்லது.
Why Tamils Need a Pragmatic Political Leadership
http://www.dailymirror.lk/print/index.php/opinion1/6471.html
You should know that the author Sathiyamoorthy voices the view of the Indian establishment in a seemingly moderate tone. What he prescribes only serves India’s expansionist interests in Sri Lanka
சம்பந்தனின் பாரளுமன்ற அரசியல் ஜே.ஆரின் வரவு செலவுத்திட்டத்துக்குக் அதிலிருந்த ‘திறந்த பொருளாதாரக் கொள்கைக்கும்’ ஆதரவு தெரிவிப்பதுடன் தொடங்கியது.
யூ. என். பீக் குடும்பப் பின்னணியில் வந்த சம்பந்தன் பாராளுமன்றம் போவதற்காக சத்தியாக்கிரகத்தில் பங்குபற்றினார். பணாகொடையில் மறித்து வைத்த பிறகு அரசியலை அடக்கியே வாசித்தர்.
நேமினாதன் 1977இல் ஒதுங்கிய போது கிடைத்த வாய்ப்பை அமிர்தலிங்கத்தின் உதவியோடு பெற்ற சம்பந்தன் எப்போதுமே யூ. என். பீயை நேசித்தவர்.
1983இல் ஜூலை வன்முறையின் பின் இந்தியாவுக்குப் புலம் பெயர்ந்த சம்பந்தனின் அதற்கு முன்பு கூட தொகுதி மக்களுடன் நேரத்தைச் செலவிட்டவரல்ல.
1983இல் இந்தியாவில் தன் குடும்பததோடு குடியேறிய சம்பந்தன் ஊர்ப் பக்கமே தலை காட்டமல் இந்தியாவில் அரசியல் தரகு வேலை பார்த்தார்.
1989இல் திருகோணமலை மக்கள் அவரைப் பூரணமாக நிராகரித்தனர். அடுத்த தேர்தலிலும் தஙத்துரைக்கே கூடிய விருப்பு வாக்குகள் கிடைத்ததால் சம்பந்தன் தெரிவாகவில்லை.
தனக்கு 3 வருடம் பாரளுமன்றத்தில் இடம் வேன்டும் என்று தஙத்துரையுடன் பதவிக்க்கச் சண்டை போட்ட சம்பந்தன் தங்கத்துரை புலிகளல் கொல்லப்பட்டதன் பயனாக எம்.பீ. ஆனார்.
அதன் பின் புலிகள் போட்ட பிச்சையாக எம்.பீப் ப்தவியை வைத்திருந்த சம்பந்தன் இப்போது தாங்கள் என்றுமே பிரிவினை கேட்கவில்லை என்றும் புலிகளை அங்கீகரிக்கவில்லை என்றும் பச்சைப் பொய் சொல்லுகிறார்.
இந்திய ஆட்சியாளர்களல் மிகக் கேவலமக பிச்சைக்காரனை விட இழிவாக நதத்தப்பட்ட இப் பேர்வழி இப்போது இந்தியாவின் ஏஜன்ட்டாக வந்துநிற்கிறார்.
இலங்கை மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்படுகிறார்கள். அவர்களது எதிர்காலம் இருள் சூழ்ந்து ஒளிமங்கிக் கிடக்கிறது.பிராந்திய நலனுக்கும் பொருட் சந்தைக்கும் நடக்கும் போராட்டத்தில் அந்நியச் சக்திகளே முதன்மையான பாத்திரத்தை இலங்கையில் கொண்டிருக்கும்போது, நமக்கான விடுதலை,சுதந்திரம்,சுயநிர்ணயமென்பதெல்லாம் பகற்கனவாகும்.இலங்கைக்கு உதவும் இந்தியாவுக்கு, இலங்கை மக்கள்மீதோ அல்லது இந்திய மக்கள்மீதோ கரிசனை கிடையாது.மாறாக, இந்தியா பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தியத் தரகு முதலாளிகளின் பொருளாதார நலன்களில்மட்டுமே குறிப்பான கரிசனை நிலவுகிறது.
இன்றைய இலங்கை நிலவரப்படி இந்தியாவென்ற தென்னாசியப் பிராந்தியப் பொலிஸ்காரன் தனது நலனுக்காக இலங்கையைக் குட்டிச் சுவராக்கி இன்னொரு பெரும் துயரச் சுமையை இலங்கை மக்களுக்குள் ஏற்படுத்தச் ஸ்ரீலங்கா அரசையும், அதை நிர்வாகிக்கும் மகிந்தா குடும்பத்தையும் குத்தகைக்கு எடுத்திருக்கிறது.
உலகுகளுக்கெல்லாம் காதில் பூ வைக்கும் ஜேர்மனுக்கே இலங்கை தனது வாலைக் கிளப்பிக்காட்டுகிறது.இது, தமிழ்பேசும் மக்களின் நிலைமை எவ்வளவு தூரம் மோசமாகியுள்ளதென்பதற்கு சரியான எடுத்துக்காட்டு.இங்கே,இலங்கை அரசின் தயவில் தமிழருக்குத் தாம்பூலம் காட்டும் தமிழ் அரசியல்வாதிகள் முகத்திலெல்லாம் நன்றாகவே கரியைப் பூசுகிறது இலங்கைச் சிங்களப் பாசிச மகிந்தா குடும்பம்.இந்த நிலையில் இன்னுஞ் சில பொழுதில்,தமிழ் பேசும் மக்களுக்குக் கரிசனையோடு அரசியல் பேசுபவர்களாகக் கருணா மட்டுமல்ல ஆனந்தசங்கரி,டக்ளஸ்கூட பிளேட்டை மாற்றிப் பேசும் காலம் மாறிவரலாம்.யாரை நம்பினாலும் இவர்களை நம்பினால் இன்று நடுத்தெருவில் புலிகளாலும் இந்தியாவாலும் வந்த மக்கள், இறுதியில் நடாற்றில் நிற்கும் நிலையே நெருங்கும்.
மேலும்:
http://srisagajan.blogspot.com/2009/02/blog-post_01.html
யாழ்ப்பாணத்தில் இந்தியத் தூதரக கிளை அலுவலகம் திறக்கப்படுவதற்கும், திலீபனின் நினைவுத்தூண் தகர்க்கப்பட்டதற்கும் தொடர்பு இருப்பதாகவும், இந்தியாவின் தூண்டுதல் காரணமாகவே நினைவுத்தூண் தகர்க்கப்பட்டிருக்கலாம் என்றும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் ‘ஈழமுரசு’ பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
யாழ்ப்பாணத்தில் இந்திய தூதரகத்தின் அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கு இந்திய அரசு முடிவு செய்துள்ளது. அண்மையில் இலங்கை வந்திருந்த இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபாமா ராவ், இதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொண்டிருந்ததுடன், இது தொடர்பான ஆலோசனைகளையும் கொழும்பிலுள்ள தமது தூதரகத்துடன் மேற்கொண்டிருந்தார்.
இதனையடுத்து, யாழ்ப்பாணத்தில் இந்தியத் துணைத் தூதரகத்தை திறப்பதற்கு இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இந்தத் துணைத் தூதரகம் யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் மே மாதம் திறந்துவைக்கப்பட உள்ளதாக கொழும்பிலுள்ள இந்தியத் தூரகம் அண்மையில் உறுதிப்படுத்தியிருந்தது.
இந்நிலையில், யாழ்ப்பாணம் நல்லூர் பருத்தித்துறை வீதியில் அமைந்திருந்த திலீபனின் நினைவு தூண் தகர்க்கப்பட்டு, அலங்கோலப்படுத்தப்பட்டுள்ளது. போர் இடம்பெற்ற காலங்களிலும் சரி, அதன் பின்னரான சமாதான காலத்திலும் சரி சிறிய சேதங்களுக்கு உள்ளான இந்தத்தூண் முற்றாக தகர்க்கப்பட்டிருக்கவில்லை.
ஆனால், போர் முடிவடைந்து விட்டதாக கூறப்பட்டு பத்து மாதங்களை எட்டியுள்ள நிலையில், திலீபனின் நினைவுத்தூபி தகர்க்கப்பட்டுள்ளது. இந்த நினைவுத்தூபித் தகர்ப்பினை எவர் மேற்கொண்டிருந்தாலும் தகர்ப்பிற்கான பின்னணிக் காரணம் வேறு என கருதப்படுகின்றது.
குறிப்பாக இந்தியத் தூதரகம் திறக்கப்படுவதற்கும், இந்த நினைவு தூபி தகர்க்பப்பட்டதற்கும் காரணங்கள் ஒற்றுமையாக இருக்கின்றன என பரவலான குற்றச்சாட்டுக்கள் எழத்தொடங்கியுள்ளன.
திலீபன் இந்திய இராணுவத்தினர் தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்திருந்த காலப்பகுதியில், ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டவர். இறுதிவரை தனது உறுதியில் தளராது போராடிய திலீபனை, இந்தியா கவனத்தில் எடுக்கத் தவறியது. திலீபன் சாவைத் தழுவினார். இதனால், அகிம்சைக்கு பெயர் போன நாடு என தன்னைப் பெருமைப்படுத்திய இந்தியாவிற்கு, பெருத்த அவமானமே மிஞ்சியது.
இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் தூதரகம் அமைத்து தங்கப்போகும் இந்தியாவிற்கு திலீபனின் நினைவுத்தூபி தமது தூதரகத்திற்கு அருகில் அமைந்திருப்பது நெருடலாகவும் ஒரு அவமானச் சின்னமாகவும் இருக்கும் என்ற நிலையிலேயே இந்தத் தகர்ப்பு இடம்பெற்றிருப்பதாக கருதப்படுகின்றது.
திலீபனின் அகிம்சைப் போராட்டம் இலங்கை அரசுக்கு எதிரானதல்ல. அது இந்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிரானது. எனவே, இந்த நினைவுத்தூபி தகர்ப்பிற்கும் இந்தியத் தூதரகத் திறப்பிற்கும் ஒற்றுமையான காரணங்கள் இருக்கின்றன என்பது தெளிவாகின்றது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடு எல்லோருக்குமான கனவு இல்லம் என்றூ தமிழ் அதனை அமைதிகுரிய இடமாக்கியது.இல்ங்கைத் தமிழர் வீட்டிற்கு வாக்குகள் தாருங்கள் தமிழர் வீடெல்லாம் பொங்கும் தமிழ்.
1977ஆம் ஆண்டு “வீட்டைத்” துலைச்சுப் போட்டு உதயசூரியனுக்குப் போடச்சொல்லிக் கேட்டு 1983 ஆம் ஆண்டு சனத்தையும் கைவிட்டுப் போட்டு இந்தியாவுக்கு ஓடிப்போன கூட்டம் புலிவாலைப் பிடிச்செல்லோ பாளிமேந்துக்குப் போச்சுது.
சனம் முல்லைத்தீவிலை அந்தரிச்சுப் போய் வெளியிலை வரத் துடிக்கேக்கை வராதை புலியளோடை நில்லு எண்டு சொன்னவை தானே இவை.
இவைக்கு வீட்டுச் சின்னம் வந்த கதை இன்னொரு பகிடி. ஆனந்தசங்கரி யைக் கழட்டப் போய் ஆள் கோட்டுக்குப் போக நீதவான் கட்சி அவரின்டை எண்டு தீர்க்கச் சட்டம் படிச்ச சம்பந்தர் வேறை வழியில்லாமை எல்லோ வீட்டுச் சின்னத்துக்குத் திரும்பிப் போனவர். இனி வீட்டுச் சின்னக் கட்சியும் இல்லை. உதய சூரியன் கட்சியும் இல்லை.
இப்ப தமிழ் Eelam போய் கனவு Illam கேட்டு வந்து நிக்கினம்.
இவையளிடை கனவு இல்லம் எல்லாம் இந்தியாவிலை தானே கிடக்குது. ஒரேயடியா இந்தியாவுக்குப் போயிட்டினை எண்டா நல்லம்.
வடக்கு கிழக்கு மகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் தலைவருமான அ.வரதராஜப் பெருமாள் மனைவி, மாமன் ஆகியோர் சகிதம் நேற்றுப் பிற்பகல் கொழும்பு சேர்ந்துள்ளார்.
வடக்கு கிழக்கு மகாணசபையின் முதலாவது முதலமைச்சர் பதவியை ஏற்றிருந்த அவர், தமிழீழ விடுதலை புலிகள் தனிநாடு பிரகடனம் செய்ததையடுத்து 1989ஆம் ஆண்டு IPKF இலங்கையை விட்டு வெளியேறியபோது அதனுடன் கூடவே தன்னுடைய புரட்சிகர தோழர்கையும் கூட்டிக்கொண்டு இந்தியாவை சென்று ஒரிசாவில் தங்கியிருந்து, பின்னர் தொடர்ந்தும் இந்திய அரசின் அனுசரணையுடன் புதுடில்லியில் நீண்டகாலம் தங்கியிருந்த சமயம் 2000ஆம் ஆண்டு மீண்டும் இலங்கைக்குச் சென்ற அவர் அன்றைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன் இணைந்து பொதுத் தேர்தல் நடவடிக்கைகளில் அன்றைய ஆளும் கட்சிக்கு வாக்குச் சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார். அந்தத் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க தேர்தலில் வெற்றியீட்டிய பின்னர் நாட்டைவிட்டு மீண்டும் வெளியேறி இந்தியா சென்றார்.
தற்போது மீண்டும் தற்போது இலங்கைக்கான பயணத்தினை மேற்கொண்டுள்ள அவர் ஈபிஆர்எல்எப்பின் “நாபா” (வரதர்) அணியின் பரப்புரைக்காக தேர்தல் களத்தில் செயற்படுவார் என்று இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன, மேலும் யாழ்ப்பாணத்துக்கு ஓரிரு தினங்களில் செல்லவுள்ள அவர், தேர்தல் பிரசாரக் கூட்டங்களிலும், கருத்தரங்குகளிலும் உரையாற்றுவார் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இவரின் ஒரு மகள் ஓர் வட இந்தியரை கோலாகலமாக, ஆடம்பரமான முறையில் புதுடில்லியில் திருமணம் செய்து கொண்ட நிலையில், மற்ற மகள் சினிமாத்துறையில் இருக்கிற நிலையில் இவருடன் இந்தியா சென்று முதலில் ஒரிசாவிலும் பின் இந்தியாவின் பிற பகுதிகளில் பிரிந்து சென்ற பலர் இன்றும் இந்தியாவிலேயே அகதி வாழ்க்கை வாழ்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் கட்சியை கட்டிக் காத்த தோழர் நாபா வழிவந்த தோழர் சுபத்திரன் (Robert) அரசியல் சதியில் இறந்த நேரம் தொடர்ந்து பல இன்னல்கட்கு மத்தியில் கட்சியை கட்டிப்பாதுகாத்தது மட்டுமல்லாமல் இன்றும் மக்கள் முன் ஓர் வேட்பாரளாக தோழர் ஸ்ரீதரன் நிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.