02.03.2009.
இலங்கையின் வட போர்முனையில் தற்காலிக மோதல் நிறுத்தம் வேண்டும் என்று இந்தியா விடுத்த கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
விடுதலைப்புலிகள் போர் நிறுத்தம் கோரி விடுத்த கோரிக்கையை ஏற்று, அங்கிருந்து பொதுமக்களின் பாதுகாப்பான வெளியேற்றத்தைக் கருத்தில் கொண்டு, இலங்கை அரசாங்கம் தற்காலிக மோதல் நிறுத்தம் ஒன்றை அறிவிக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இரு தினங்களுக்கு முன்னர் கேட்டிருந்தார்.
ஆனால், இந்தியாவின் அந்தக் கோரிக்கையை இலங்கையின் வெளியுறவு அமைச்சர் றோஹித போகொல்லாகம நிராகரித்துள்ளார்.
முன்னைய காலங்களில் இவ்வாறு மோதல் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்ட தருணங்களை விடுதலைப்புலிகள் தம்மைப் பலப்படுத்திக்கொள்ளவே பயன்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள போகொல்லாகம அவர்கள், ஆகவே தற்போது மோதல் நிறுத்தம் செய்வது சாத்தியமல்ல என்று தெரிவித்துள்ளார்.