உலகில் மிக வறிய நிலையில் வாழும் மக்களின் மொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியாவில்தான் இருப்பதாக உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.
இதேவேளை உலகில் இராணுவச் செலவிற்கு அதிகாமாகச் செலவிடும் நாடுகளில் இந்தியா நான் காவது இடம்பெறுகிறது.
இந்தியாவில் உருவாகும் இராட்சத முதலாளிகளையும் அவர்களின் சந்தையையும் பாதுகாக்க பலமான இராணுவத்தை உருவாக்கும் இந்தியா அண்டை நாடுகள் மீது ஆக்கிரமிப்புச் செலுத்துகிறது. இன்றுவரை அரச நிர்வாகங்களே உட்புகாத மக்கள் வாழும் பகுதிகளிலெல்லாம் இராணுவம் புகுந்து மக்களை அகதிகளாக்குகிறது.
மேற்கில் அதிகரித்த உற்பத்திச் செலவை எதிர்கொள்வதற்காக இந்தியாவை நோக்கி ஐரோப்பிய அமரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் நகர்கின்றன. இந்தியாவில் உற்பத்திச் செலவின் அளவை அதிகரிக்காமல் பாதுகாக்க அஙகு வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் அடிமைகளை இந்திய அதிகாரம் பெருக்கி வருகிறது.
‘பசியால் வாடும் இந்தியா’
பூனம் – பசிக்கு உணவில்லாமல் அடிக்கடி புழுதி மண்ணைத் தின்று வந்ததால் மூன்று வயதிலேயே அவளுக்கு சிறுநீரகம் செயலிழக்க ஆரம்பித்து விட்டது. இருமிக்கொண்டே இருக்கும் அவளைப் போலத்தான் அலகாபாத் அருகிலுள்ள கானே என்ற பழங்குடிக் கிராமத்தில் இருக்கும் மற்ற ஏழைச் சிறுவர்களும் மண்ணைத் தின்கிறார்கள்.
உலகில் மிக வறிய நிலையில் வாழும் மக்களின் மொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியாவில்தான் இருப்பதாக உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.
உணவு என்பது மக்களின் அடிப்படை உரிமை என்ற போராட்டம் எழுந்திருக்கும் நிலையில் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களை வரையறுப்பதில் புது வழியைக் கடைப்பிடித்து மானிய விலையில் உணவுப் பொருட்களை பெற்றுக் கொள்ளுவதற்குத் தகுதியான மக்களின் எண்ணிக்கையை பத்துக் கோடியால் அதிகரிக்க இந்திய அரசு எண்ணியுள்ளது.
ஆனால் அரசு வழங்கும் உணவுப் பொருளில் கால் பங்கு தான் உரிய மக்களைப் போய் சேர்கிறது என்றும் மோசடி திருட்டு இல்லாத வகையில் உணவு விநியோக முறை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்றும் இந்திய நிதியமைச்சின் தலைமைப் பொருளியல் ஆலோசகரான முனைவர். கௌஷிக்பாசு கூறுகிறார்.
பூனம் போன்ற பிள்ளைகளும் அவர்களின் குடும்பங்களும் அனுபவிக்கும் அடிப்படை உணவுப் பிரச்சனையையும், அதற்கான போராட்டங்கள், நடவடிக்கைகள், சவால்கள் எனபவற்றையும் ஆராயும் நமது முகவர் கிறிஸ் மொறிஸ் அவர்களின் செய்திப் பொதியை நேயர்கள் இங்குக் கேட்கலாம்.
http://www.bbc.co.uk/mediaselector/check/tamil/meta/dps/2010/05/100515_chrismorris?size=au&bgc=003399&lang=ta&nbram=1&nbwm=1&bbram=1&bbwm=1
– BBC
இந்தியாவில் கிரிக்கெட் மைதானங்களிலும் மானாட மயிலாட அரங்குகளிலும் வாழ்வை; கொண்டாடுவோர் முப்பது கோடிப்பேர். அந்த முப்பது கோடி அடுக்களைப் பக்கம் போவதில்லை. மேசையில் சாப்பாடு வரும். கழிவறைகளை சுத்தம் செய்வதில்லை. நாம் வாழும் புலம்பெயர் தேசங்களில் அயல் வீட்டு எதிர் வீட்டு வெள்ளையர்கள் இந்த வேலைகளை அவர்கள்தான் செய்கிறார்கள். இத்தனைக்கும் இந்த நாடுகள் “வளர்ந்த ” நாடுகள் என பேரெடுத்தவை. காலையில் எழுந்து சென்று இருள் சூழ வீடு வரும் வெள்ளையர்களுக்கும் ஒரு நேர உணவுக்காய் நாள்முழுதும் அல்லாடும் இந்த மக்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை.
கல்யானம் பொன்ட்ர விஷெஷஙலில் வீனாகும் உனவை இது பொன்ட்ரவர்கலுக்கு செலவிட்டாலெ பொதும். ஆடம்பரம் விரும்பாமல் உனவை பசித்திருப்போர்க்கும், ஏழைகலுக்கும் குடுக்க்க வேன்டும் என்கின்ட்ர என்னம் அனைவருக்கும் வர வேன்டும்