22.11.2008.
டெல்லி: சர்வதேச அளவில் பொருளாதார மந்தம் நிலவினாலும், இந்தியா தனது தாராளமயமாக்கலைத் தொடர வேண்டும். இந்தியாவுக்கு மேலும் புதிய வாய்ப்புகள் கதாத்திருக்கின்றன என ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியா காந்தி அரசைக் கேட்டுக் கொண்டார்.
இந்துஸ்தான் டைம்ஸ் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் பங்கேற்ற அவர் கூறியதாவது:
சர்வதேச பொருளாதாரச் சூழலை நினைத்து நாம் கவலைப்பட்டுக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. இந்தியப் பொருளாதாரம் எப்போதும் அரசின் கட்டுக்குள்தான் இருக்கிறது.
எனவே தாராளமயமாக்கலை இந்த அரசு தொடர்வதுதான் நல்லது. வேண்டுமானால் சின்னச் சின்ன கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
இன்றைக்கு நாட்டுக்குத் தேவையானது பெரிய அளவில் உள்கட்டமைப்புத் துறை முதலீடுகள்தான். அதே போல அரசு எந்திரம் இன்னும் உத்வேகத்துடன் செயல்படும் விதத்தில் மாற வேண்டும். பொது செலவினங்களை இன்னும் பயனுள்ள முறையில் நாம் மேற்கொள்ள வேண்டும்.
இந்தியாவுக்கு திறந்த பொருளாதாரம் அவசியம்தான். ஆனால் சில கட்டுப்படுகளுடன் கூடிய திறந்த பொருளாதாரமாக அது இருக்க வேண்டும்.
நமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் கட்டுப்பட்டவர்களாக உள்ளோம். எனவே சிக்கல் என்று வரும்போது, அதை அனைவருமேதான் எதிர்கொள்ள வேண்டும். இன்றைக்கு சர்வதேச அளவில் நிகழும் மோசமான பொருளாதாரச் சூழல் விரைவில் சரியாகும். இந்தியாவுக்கு மேலும் புதிய வாய்ப்புகள் வரும் என்று நம்புகிறேன், என்றார் சோனியா காந்தி.
இந்தியா-நமதுமாபெரும் இந்தியா நமது சொந்தக்காலில் நிற்பதற்கு தகுதிவேண்டும்.
இந்தியா உலகஅறிவைப் பிரதிபலிப்பாதாக இருக்கவேண்டும்.இந்தியவாழ்மக்களின்
வாழ்வுநிலையை உயர்தியாகவேண்டும்.
இன்றைய செய்தியும் இந்தியா அல்லது சீனா வரும்காலத்தில் உலகஅதிகாரத்தை தம்கையில்
எடுத்தே ஆகவேண்டும் இதில் எந்த சந்தேகமும் இல்லை.
இந்தியா எந்த நிலைப்பாட்டை எடுக்கப்போகிறது?
கிராமப்புற வறுமை ஆயிரம்வருடங்களாக தொடர்ந்து வரும் சாதிப்பாகுபாடு இதை தீர்ப்பதற்கு
இந்தியமுதலாளித்துவத்திற்கு எந்த தகுதியும் இருப்பதாகத் தெரியவில்லை.
இந்தியா முன்னேறமுடியும் உலகத்திற்கு ஒரு சூரியன் போல. மற்றவர்களும் எம்போல் வாழந்து காட்ட “யாதும் ஊரே யாவரும் கேளீர்”
நகரப்புறத்திற்குப் போனால் இந்தியாவில் பிறந்த அதிஷ்ரத்திற்காக கடைவாசல்படிகளிலும்
ஒதுங்குமிடங்களிலும் பிள்ளைகுட்டிகளுடன் இரவைக் கழிக்கிறார்கள்.
கிராமப்புறத்திற்குபோனால் சாதிக்கொடுமை நிலமில்லாத கொடுமை விவசாயிகள் தற்கொலை
இதுவா நமது இந்தியா?
உள்ளதெல்லாம் பங்கிடுட்டாக வேண்டும் இதுமாற்ற முடியாத விதி.
தேசியமுதலாளித்துவத்திற்கு முடிவுகட்டாமல் இதைசாதிப்பதென்பது பகல்கனவு.
முன்னூறுவருடங்கள் அடிமையாக இருந்த அனுபவம் இந்தியமக்களின் வாழ்வுதனை கவ்விப்பிடித்திருக்கிறது.அறிவுயீவிகள் இதில்லிருந்து தப்பமுடியாது
ஒருசிலரின் வாழ்வுக்காக முழுஇந்தியமக்களையும் பலிகொடுக்க தயாராகமாட்டார்கள்
இதுதான் நமது இந்தியா நமது உலகம் எமதுமானிடவாழ்வின் அர்த்தம்.
ஜெய் பாரத மாதா!