இந்தியா – சீனா இடையேயான உறவை வலுப்படுத்தும்விதமாக கூட்டு இராணுவ பயிற்சியை மேற்கொள்ள இருநாடுகளும் திட்டமிட்டுள்ளதாக இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் சிறப்பு தூதராக, நான்கு நாள் பயணமாக சீனா வந்த இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மேனன், சீன பிரதமர் வென் ஜியாபாவோ உள்ளிட்ட அந்நாட்டு தலைவர்களை சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில் தமது பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா புறப்படும் முன்னர் பீஜிங்கில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது தீர்க்கப்படாமல் இருக்கும் எல்லை பிரச்னை குறித்த அடுத்த சுற்று பேச்சுவார்த்தையை இந்தியாவும், சீனாவும் விரைவில் தொடங்க இருப்பதாகவும், இதற்கான தேதியை விரைவில் இரு நாடுகளும் தூதரகங்கள் வாயிலாக முடிவு செய்யும் என்றார்.
மேலும் இந்தியா – சீனா இடையேயான உறவை வலுப்படுத்தும்விதமாக கூட்டு இராணுவ பயிற்சியை மேற்கொள்ள இருநாடுகளும் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.