இலங்கை விவகாரம் தொடர்பில்ழ இந்தியா ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைப் பேரவை அமர்வுகளில் கேள்வி எழுப்ப வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகோரிக்கை விடுத்துள்ளது. இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுஅறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் கேள்வி எழுப்ப வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளது.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் டி. ராஜா, இந்தியபிரதமர் மன் மோகன் சிங்கிற்கு இது தொடர்பான கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
குற்றச் செயல்கள் n;தாடர்பில் கேள்வி எழுப்ப வேண்டிய தார்மீகபொறுப்பு இந்திய மத்திய அரசாங்கத்திற்குக் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கை விவகாரம்பற்றி இந்தியா பேச வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்குவது தொடர்பில் காத்திரமான ஒர்பொறிமுறைமையொன்று உருவாக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.